திமுக-காங்., முறிவு கலைஞரின் சதிதிட்டமா.???

வணக்கம் மக்காஸ்.!!

எல்லாரும் இப்போ அதிகமா பேசுறது. திமுக-காங்., கூட்டணி முறிவு தான். சரி காங்க்ரஸ் இதுவரைக்கும் என்னலாம் பண்ணினாங்க.கார்த்தி சிதம்பரம் திமுக-வின் இதர கூட்டணி கட்சிகளோடு முரண்டுபிடித்தார். காங்கிரஸின் நடவடிக்கை அனைத்தும் அது தனித்து ஆட்சி அமைக்க விரும்புவதாகவே இருந்தது. ராகுல் காந்தி தமிழகத்தில் காங்க்ரஸ் ஆட்சி தனித்து அமைக்கவேண்டும் என வெளிப்படையாகவே சொன்னார்.பின்பு ஸ்பெக்ட்ரம் ராசா ப்ரச்சனை.. அனைத்திலும் அமைதி காத்தார் கலைஞர்.கலைஞரின் பாணி இல்லையே இது என்று பலரும் யோசித்துகொண்டிருந்தனர்.


இது எல்லாத்துலயும் கலைஞர் மௌனமா இருந்ததுக்கு காரணம் காங்க்ரஸ இப்ப வெளிய துரத்தினா மூன்றாவது அணி உருவாகி காங்க்ரஸின் திட்டம் நிறைவேறிடும்னு கலைஞர் நினைத்திருப்பார்.

இப்போ திமுக-காங்., கூட்டணி முறிவை பத்தி கலைஞர் சொல்லும்போது, '' காங்க்ரஸ் 63 சீட்டுகள் கேட்டாங்க.அதுவும் அவங்க விருப்பபடியே அமையணும்னு கேட்டாங்க.எந்த உடன்பட்ட பேச்சுக்கும் ஒத்துவராததால இந்த முடிவு'' என்றார்.


இத்தனை நாளா கம்முனு இருந்துட்டு கலைஞர் இப்போ சொன்னதுக்கு காரணம் தேமுதிகவுக்கு அதிமுக சீட் ஒதுக்கி உறுதியானதால இருக்கும்.. இப்போ காங்க்ரஸ வெளியில அனுப்பினா தேமுதிக கூட கூட்டணி முடியாது.. தன்னோட வெறுப்பையும் வெளிப்படுத்தலாம்..

சரி இதனால திமுக-வின் வெற்றி வாய்ப்பு.??? இருக்கு பலமாவே இருக்குங்க.. நம்ப ஆளுங்க தான் முட்டாள் ஆச்சே.!! கம்யூனிஸ்ட் திமுக உட்டு ஓடினது காங்க்ரஸ் கூட்டணியால தான்..காங்க்ரஸ் அதிமுகல சேந்தா கம்யூனிஸ்ட் இங்கிட்டு வந்திடுவார்.. அப்பரம் மதிமுகவுக்கு அதிக சீட் கிடைக்காது.. சோ அதுவும் திமுக பக்கம் வர்ற சான்ஸ் இருக்கு..

அத விடுத்து இன்னொரு கோணத்துல பாத்தா காங்க்ரஸ் அதிமுகல சேந்தா அது எதிர்பார்த்த சீட் கிடைக்காது.. அதனால அது தனித்து இருக்கலாம்.. இப்போ பாத்தா மதிமுகவுக்கு கம்மியான சீட் தான் அதிமுக கூட்டணியில கிடைக்கும்.. அதுவே திமுகல சேந்தா அதிகமா கிடைக்கும்.. எப்படி இருந்தாலும் கம்யூனிஸ்ட், மதிமுகவ கண்டிப்பா கலைஞர் இழுக்க பாப்பார். அப்படி அவுக ரெண்டு பேரும் திமுகவோடு இணைந்தால் கண்டிப்பா காங்க்ரஸ்ல இருந்து திமுகவுக்கு என்ன சப்போர்ட் கிடைக்குமோ அந்த சதவீதம் கண்டிப்பா கிடச்சிடும்..

இத்தனை நாள் பொறுமையாக இருந்த கலைஞரின் திட்டம் காங்க்ரஸ்-தேமுதிக இணைய கூடாதுங்கறது தான். இன்னும் கூட்டணி முடிவாகுறதுக்கு முன்னாடியே மக்கள் அனைவருக்கும் நாக்கு தள்ளிடும் போலிருக்கே.!!

இன்னும் எடை முள் அதிமுக பக்கம் சாயல.. திமுக-வின் சதிதிட்டமா கூட இருக்கலாம்.. ஓட்டுகள பிரிக்காம விடமாட்டார் கலைஞர்.

Comments

 1. பார்ப்போம் எதுவும் உறுதி இல்லை. காங்கிரஸ் இறங்கி வரும்

  ReplyDelete
 2. @எல் கே:ஆம்.. அப்படியும் நடக்க வாய்ப்பிருக்கு..

  ReplyDelete
 3. யப்பா எப்பிடியோ நான் தப்பிச்சென்....
  கலைஞர் மாட்டிக்கிட்டார் கூர்மதியன்'கிட்டே.....ஹே ஹே ஹே ஹே.....ஜாலி...

  ReplyDelete
 4. என் சக மக்களுக்கு 1 ரூபாய்க்கு புழுத்த அரிசி போடுறாப்புல.. கலர் டீவி கொடுத்து சோம்பேறி ஆக்குறாப்புல.. கலர் டிவுக்கு பதில் ஒவ்வொரு கிராமத்துக்கும் மருதுவ உபகரணங்கள் இலவசமா கொடுத்திருக்கலாம்ல

  ReplyDelete
 5. @மனோ:அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க முடியுமா..??? நாளைக்கு இருக்கு மக்கா உங்க பதிவு..

  ReplyDelete
 6. kalaignar is like a chess player. his every movement has a meaning

  ReplyDelete
 7. ஹி ஹி.. கொஞ்ச நாள்லயே என் மிச்ச நாளா நாசமாக்கிடுவார் போலிருக்கே.!!

  ReplyDelete
 8. அடுத்த தமிழக முதல்வர பாத்து சிரிக்கலாமா.??

  ReplyDelete
 9. @மனோ:இது உங்களுக்கு தான் பாஸ் தோணும்.. மத்த அரசியல்வாதிக்கு தோணாது.. இதெல்லாம் கொடுத்தா எவனும் ஓட்டு போட மாட்டான்ல அதான் காரணம்.. இருந்தாலும் நீங்க இப்படி யோசிச்சது உங்க மேல எனக்கு மரியாத வர வச்சிடுச்சு..

  ReplyDelete
 10. //தம்பி கூர்மதியன் said...
  @மனோ:அவ்வளவு சீக்கிரம் தப்பிக்க முடியுமா..??? நாளைக்கு இருக்கு மக்கா உங்க பதிவு..//

  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

  ReplyDelete
 11. //ஹி ஹி.. கொஞ்ச நாள்லயே என் மிச்ச நாளா நாசமாக்கிடுவார் போலிருக்கே.!//

  அப்படி என்னங்க உங்களுக்கு கஷ்டம்..??


  //அடுத்த தமிழக முதல்வர பாத்து சிரிக்கலாமா.??//

  முதல்ல தமிழகத்துக்கு வாங்க..

  //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

  ஹி ஹி

  ReplyDelete
 12. அவரும் தம்பி கூர்மதி ஓடி வா ஓடோடி வா பறந்தோடி வான்னு கூப்பிட்டு இருப்பார் ஹா ஹா ஹா...

  ReplyDelete
 13. //அவரும் தம்பி கூர்மதி ஓடி வா ஓடோடி வா பறந்தோடி வான்னு கூப்பிட்டு இருப்பார் ஹா ஹா ஹா... //

  நீங்க வர்றதுக்கு அவரு ஏன் என்னைய கூப்பிடனும்.???

  ReplyDelete
 14. இந்த மாதிரி ப்ளான்ன பாத்தா நான் கலைஞர் ரசிகனாயிடுவன் போலிருக்கு..!!

  ReplyDelete
 15. ஓஹோ அப்போ பிளானோடுதான் இருக்காங்க..!!!

  ReplyDelete
 16. //இந்த மாதிரி ப்ளான்ன பாத்தா நான் கலைஞர் ரசிகனாயிடுவன் போலிருக்கு..!! //

  எப்படி பாஸ்.. உங்களால இப்படியெல்லாம் பேச முடியுது.. போயும் போயும் அருக்கா ரசிகனாக போறீங்க..???

  ReplyDelete
 17. ஹா ஹா ஹா ஹா...
  அழகிரி ஒத்துழைப்பு குறைவாதான் இருக்கும் போல...

  ReplyDelete
 18. இப்போதைக்கு வரையில் தோற்பதற்கான விகிதம் தான் அதிகம்.. இன்னும் கடைசிகட்ட கூட்டணி முடிவுக்கு பிறகு தான் எதையும் உறுதியாக கூற முடியும்..

  ReplyDelete
 19. அவரு மொத்த எடையும் மூளையாதான் இருக்கணும்.. இல்லைனா இவ்வளவு ப்ரச்சனை பிறகும் காங்., கழட்டி விடாமா நேரம் பாத்து கயிட்டி விட்டிருப்பாரா.???

  ReplyDelete
 20. @சிபி:நான் உங்களது கருத்துக்கு மிகவும் ஒத்துபோகிறேன்...

  ReplyDelete
 21. அதனால மதிமுகவும் திமுகவோட சேர வாய்ப்பிருக்கு

  மதிமுக-கம்யூனிஸ்ட் சேந்தா காங்., ஓட்ட பிடிங்கிடலாம்..
  இதுதான் கலைஞரின் கணக்கா இருக்கும்....

  ReplyDelete
 22. ம்ம்.. இந்த கூட்டணி முறிவுல பயங்கர உள்குத்து இருக்குங்க...

  ReplyDelete
 23. தேர்தல் முடியட்டும் கலைஞரின் திறமைய பாருங்க...

  ReplyDelete
 24. அப்படா இனி ஆ ராசாவுக்கு ஆப்புதான் இல்லியா...

  ReplyDelete
 25. @மனோ:வருகைக்கு நன்றி.. வேற என்னாத்த சொல்ல.!!

  ReplyDelete
 26. இன்னும் கூட்டணி முடிவாகுறதுக்கு முன்னாடியே மக்கள் அனைவருக்கும் நாக்கு தள்ளிடும் போலிருக்கே.!!

  ReplyDelete
 27. ஓட்டுகள பிரிக்காம விடமாட்டார் கலைஞர்//
  ராஜதந்திரின்னா சும்மா இல்ல மக்கா

  ReplyDelete
 28. அட... வித்தியாசமான கோணத்துல அலசி இருக்கீங்களே

  ReplyDelete
 29. @இராஜராஜேஷ்வரி: அதே அதே அதே தாங்க..

  ReplyDelete
 30. @சதீஷ்: ஒத்துகிறன்.. கண்டிப்பா ஒத்துகிறன்..

  ReplyDelete
 31. @பார்வையாளன்: நன்றிங்க.. ரொம்ப நாளுக்கு பிறகு வர்றீங்க போல.!! தோணுனத எழுதிட்டன்..

  ReplyDelete
 32. இந்த நாயிங்க எங்க போக போரானுங்க. திருப்பி தி.மு.க. கூடதான்.

  ReplyDelete
 33. @பிரபு: நீங்க உண்மையில பலே தாங்க.. பலே பலே.!! திரும்பவும் இப்ப ஆரம்பிச்சிருக்காங்க.. கண்டிப்பா சேர்ந்திடுவாங்கன்னு தான் நினைக்கிறேன்..

  ReplyDelete
 34. DMK MEENDUM CONGRESS KOODA SENRTHATHU PINNADAIVU THAAN.. VEERA VASANAM PESINA MATHIRI THANIYA NINNU IRUNTHA OTTU ATHIGAM KIDAICHU IRUKKUM... IPPA ETHIR KATCHIGAL OOLA PATTRI SOLLI PIRACHAARAM PANNA THEVA ILLA.. ITHA SOLLIYE NAKKAL ADIPAANGA

  தம்பி கூர்மதியன் - உதவிக்கு மிக்க நன்றி .... verification எடுக்கப்பட்டது. ஆனால்
  Followers
  Experimental -Displays a list of users who follow your blog.This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon! என்று வருகிறது.. எனினும் உதவிக்கு மிக்க நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!