ரஜினி, சூர்யாலாம் இங்க வருவாங்கலாமே..!!!சமீபத்தில் என் காதுகளுக்கு வந்த செய்தி, “எங்க ஊர்ல சுர்யா, ரஜினி போல பெரிய ஆளுங்க வந்து ஆசிர்வாதம் வாங்குற ஒரு சாமி இருக்கார்.. அவரு இப்போ ஜீவசமாதி ஆகபோறார்..”. யார் அவர்..? நேரில் சென்று பார்ப்போம்..சென்னை தாம்பரத்தை அடுத்த சிங்கபெருமாள் கோவிலிலிருந்து 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது ஆப்பூர் என்னும் அழகிய கிராமம்.. அந்த கிராமத்தின் ஒரு பகுதியில் அமைதியே உருவான ஒரு மடம் போன்று ஒரு இடம் இருந்தது.. அங்கிருந்த பலரும் அவரை தெரியாது என்று சொல்ல, வயதில் முதிர்ந்த பெரியவர் ஒருவர் மட்டும், “ஆமா தம்பி.! அவரு பேரு ஓம்நாதர்.. அவரு இங்க தான் இருக்கார். அவரு வெளியேவும் வரமாட்டார்.. அவருக்கு விளம்பரமும் இல்ல.. அதனால இங்க இருக்கற சிலருக்கு அவரு பேரு கூட தெரியாது..” என்றார்.


உள்ளே சென்றதும் அறைக்கு வெளியே அமைந்திருந்த பலகையில் “சுவாமிகளை ஞாயிறுகளில் மட்டுமே காணமுடியும்.. சுவாமிகள் காலில் விழுவதோ, தங்கள் குறைகளை கூறுவதோ தவிர்க்கப்படவேண்டும்.. உள்ளே சென்று அமைதியாக அமர்ந்திருந்து தியானம் செய்துவிட்டு செல்லவேண்டும்..” என்றிருந்தது.


உள்ளே சென்று அமர்ந்ததும் வெளியே எழுதியிருந்ததுக்கு நேர்மாறாக அவரே மக்களின் குறைகளை கேட்டார்.. குறைகளை கேட்டு அதற்கான மூலிகை மருந்தையும் சொல்கிறார்.அதை பற்றி நாம் கேட்கையில் அவர் பேச மறுத்துவிட்டார்.. அவர் கூறுகையில், “எனக்கு உடம்பு முடியாம போகுது.. வர்ற யாரும் என்ன பத்தி கவல படுறது இல்ல.. அவங்க அவங்க சுயநலம் தான் முக்கியம்னு நடந்துகிறாங்க.. ஏற்கனவே இந்த மாதிரி ஒரு பத்திரிக்கைக்கு நான் பேட்டி கொடுத்து என்னமோ நான் தான் நடிகர் சூர்யாவுக்கு நடிக்க கத்துகொடுத்ததா சொல்லி எனக்கும் அவருக்கும் ஒரு இடைவேளியே வரவச்சிட்டாங்க.. தயவு செஞ்சி போயிடுங்க தம்பி..” என்று அவரது தழுதழுத்த குரலில் நம்மை கையெடுத்து கும்பிட மனசை சாந்தபடுத்திகொண்டு அவரது இருப்பிடத்தை சற்றே விலகிவந்தோம்..


அவரை பற்றி மேலும் அறிய இன்னும் அந்த இடத்தை சுற்றி உள்ளவரை ஆழமாக விசாரிக்க தொடங்கினோம்.. முன்பு கிடைத்த மாதிரியே தெரியாது என பல பதில் வந்தாலும் தெரிந்த சிலரையும் காண முடிந்தது..


அவர்கள், “இங்க ஔசதகிரினு ஒரு மலை இருக்கு அதுல எல்லா விதமான நோய்களுக்கும் உண்டான மூலிகை மருந்து இருக்கு.. அந்த மூலிகைகளை பயன்படுத்தி எந்த நோய வேணும்னாலும் அழிச்சிடலாம்.. இவரு இங்க 50 வருசமா இருக்கறதால அவருக்கு இந்த மலையே அத்துப்படி.. எங்கங்க என்னன்ன மூலிகை இருக்குன்னு அவருக்கு தெரியும்.. ஞாயித்துகிழமை ஆச்சுனா நாள் பூரா நிறையா பேர் வருவாங்க.. அவருக்கு பொறந்த நாள் வந்துச்சுன்னா போதும் கார் மேல காரா நிக்கும்.. நிரைய பெரிய ஆளுங்களா வருவாங்க.. அதுமட்டுல்லாம, அவரு ஜீவசமாதியாகபோறார்னு சொல்றாங்க.. அதுக்கான ஏற்பாடு எல்லாம் தயாரா இருக்குன்னும் பின்னாடி ஒரு மண்டபத்த கூட இதுக்காக கட்டியிருக்கறதா சொல்றாங்க.. அவருக்கு எப்ப உத்தரவு வருதோ அப்ப அவரு ஜீவசமாதி ஆயிடுவார்.. இத யாருக்கும் தெரியாம ரகசியமா வச்சிருக்காங்க.. அதுமட்டுமில்லாம 3 இல்ல 4 வருசத்துக்கு முன்னால சூர்யா இங்க வந்துபோறதாவும் ஏதோ பத்திரிக்கையில தப்பா எழுதிட்டாங்கன்னும் அதனால அவரு இங்க வர்றதில்லையினும், இப்போ திரும்பவும் வர தொடங்கியிருக்கார்னும் சொல்றாங்க.. ரஜினி சார் கூட வருஷத்துக்கு ஒரு தடவ நடுராத்திரியில யாருக்கும் தெரியாம வர்றதாவும் சொல்றாங்க.. ராகவேந்திரா சுவாமியும் இந்த மாதிரி தான் ஜீவசமாதி ஆனார்னுங்கறத்தால ரஜினி சார் வருவார்னு சொல்றாங்க..” என்றார்.


இது உண்மைதானா என்று தெரிந்துகொள்ள மீண்டும் அவரை அணுகியபோது நமக்கு உள்செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.. அது உண்மையாகுமானால் ஒரு பெரிய கேள்வி நம் மனதில் எழுகிறது.. நம் உயிரை அழிப்பதற்கு நமக்கு உரிமை உண்டா..?

 இதில் குறிப்பிட்டுள்ள ஔசதகிரி மலைமீது ஒரு கோவில் இருக்கிறது. அதைப்பற்றி அறிய 

 ஸ்ரீ நித்திய கல்யாண ப்ரசன்ன வெங்கடேச பெருமாள் 

Comments

 1. முதல் மழை.. என் மனசுக்குள் புகுந்திட்ட ..

  ReplyDelete
 2. ஆன்மீகப்பதிவுக்குக்கூட கிளாமர் டைட்டில் வைப்பது எப்படி? அணுகவும் அண்ணன் கூர்மதியன் பிளாக் ஸ்பாட்

  ReplyDelete
 3. பாஸ்...ஒரு டவுட்டு....இவரு சாமியாரா??? இல்ல மூலிகை மருத்துவரா????

  ReplyDelete
 4. @சிபி: முதல் மழை உங்களையே நனைத்தது..

  //ஆன்மீகப்பதிவுக்குக்கூட கிளாமர் டைட்டில் வைப்பது எப்படி? அணுகவும் அண்ணன் கூர்மதியன் பிளாக் ஸ்பாட்//


  ஹி ஹி.. இல்லீனா எவரும் கடைபக்கம் வரமாட்டேங்குறாங்க பாஸ்..

  ஆனால் என்னை 'அண்ணன்' என்று சொன்னதின் உள்நோக்கம் தெரிந்தாகவேண்டும்.. உங்களை இளமையாக காட்டுகிறீர்களா இல்லை என்னை முதியவனாகவா.???

  ReplyDelete
 5. @பாரி: எதுவுமே புரியாம அவர பாத்ததிலிருந்து குழம்பி போயிருக்கன்.. நான் எழுதுன பதிவ ரெண்டு நிமிசம் படிச்சா உங்களுக்கு புரிஞ்சிடுமா.??? ஐ திங்.. அவரு சாமியார பாதி மருத்துவர் பாதி..(அபிராமி அபிராமி)

  ReplyDelete
 6. இவர்போல வெளியுலகத்துக்கு வராத, வர விரும்பாத சில சித்தர்கள்/துறவிகள் இருக்கிறார்கள். அதில் சிலரை நான் திருவண்ணாமலையிலும், குற்றாலத்திலும் சந்தித்திருக்கிறேன். சென்ற மாதம் கூட சந்தித்தேன். நன்று!

  ReplyDelete
 7. இந்து மதத்தில் சில நல்ல சாமியார்களும் இருந்து ஏதோ நன்மை செய்தால் சரிதான்.. எல்லோரும் நித்தி, பிரேமானந்தா போல் இல்லாமல்.. நல்ல பதிவு, நன்றி.

  ReplyDelete
 8. இதை அவரே சொன்னாதான் நம்பணும்.

  சூர்யாவுடன் தனது உறவு கெட்டுப் போனதில் வருத்தமாக இருக்கும் அவர் ஜீவ சமாதி பற்றி எல்லாம் நினைக்கக்கூடியவரல்ல என தோன்றுகிறது

  ReplyDelete
 9. @சேட்டை:நன்றி சேட்டை.. ஆனா எல்லாரையும் நல்ல துறவிகள்னு சொல்லிடமுடியாது.. துறவிங்கிற போர்வையில சில(பல) கெட்டவர்களும் இருக்கின்றனர்..

  ReplyDelete
 10. @வசந்தா:வாங்க வசந்தா.. சாமியாருங்க நமக்கு நல்லது செய்வாங்கன்னு வெயிட் பண்ணாதீங்க மேடம்.. நமக்கு நாம என்ன செய்யலாம்னு யோசிங்க..(எங்கயோ போய்ட டா கூர்..)

  ReplyDelete
 11. @தேனம்மை:இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்.. கிடைத்த செய்தியை பகிர்ந்தேன்.. இவர ஃபாலோ பண்ணவேணாம்னு இருந்தன்.. உங்க பின்னூட்டத்தால அவர ஃபாலோ பண்ணவேண்டியதா போச்சு.. பாக்குறன்.. அவரு எப்படி சாகுறார்னு பாக்குறன்..

  ReplyDelete
 12. ஆன்மிகம் என்பதை தவறாக கையாளதா அவரது நல்ல எண்ணம் பிடித்து உள்ளது.

  ஜீவ சமாதியை அவர்கள் ஒரு நிலையாக(மோட்சம் அடைய???) நினைப்பதால், இது பற்றி என்ன கூற.....
  ஆனால் எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை.

  ReplyDelete
 13. @பிரபு:ரொம்ப வயசானவருங்க அவரு.. இன்னும் உட்டா 5 வருசத்துல அவரே செத்துடுவாரு.. இதுக்கெதுக்கு ஜீவசமாதிலாம்.. ஆன்மிகம இப்ப அவரு தப்பா கையாளாம இருந்திருக்கலாம்.. ஆனா அவரோட இளமை காலங்கள் எப்படி இருந்ததோ..

  உங்களுக்கு எப்படி இதிலெல்லாம் நம்பிக்கை இல்லையோ எனக்கும் அப்படிதான்.. நண்பேன்டா!!!!!!

  ReplyDelete
 14. @ரவி:நன்றி ரவி அவர்களே!!!

  ReplyDelete
 15. ஆப்பூர் ?ரைட்டு பேரே விவகாரமா இருக்கே...
  எஸ்.பி.கோயிலா? அது நம்ம ஏரியா ஆச்சே..
  சுவாரசியமான இடுகை..பகிர்வுக்கு நன்றி பாஸ்

  ReplyDelete
 16. அன்பு நண்பர்களே...
  எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
  எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி,
  டக்கால்டி.

  ReplyDelete
 17. @டக்கால்டி:அட உம்மை பாக்கணுமே!!! நான் தாம்பரம் தாம் யா..

  அதான் பழைய ப்ளாக் கிடச்சிடுச்சில்ல ஏன் யா வயித்தெரிச்சல கூட்டுற???

  ReplyDelete
 18. அதான் பழைய ப்ளாக் கிடச்சிடுச்சில்ல ஏன் யா வயித்தெரிச்சல கூட்டுற???

  March 20, 2011 11:26 PM//

  வடை கொடுத்தது வீணா போச்சில்ல...ஹி ஹி ...சிரமத்துக்கு மன்னிக்கணும் நண்பா...நான் இப்போ பேரிக்காவுல அடச்சே அமெரிக்காவுல கீறேன்...சென்ற அஞ்சு வருஷமா மறைமலை நகர்ல தான் இருந்தேன்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!