Skip to main content

அந்த பார்க் பெஞ்சில் அவன்-இறுதி பாகம்


அவள் உன்னதமானவள்..

அந்த நிமிடம் அங்கிருந்து அவன் நிம்மதியோடு விலகியிருந்தாலும் அன்றிரவு அவனுக்கு அங்கே நிம்மதியான உறக்கமில்லை. வாழ்க்கை வாழ்வதெற்கென்று இருக்கையில் எப்படி வாழ்ந்தால் என்ன.? ஒரே வாழ்க்கை அதை சிறப்புற வாழ்ந்திருக்க வேண்டாமா.? என இருமாறுபட்ட கோணங்களில் அவனது மனதின் உள்ளே குடைந்தது.


மனதிற்கும் மூளைக்கும் நடந்த பெருவாரியான யுத்தத்தில் மனம் அவளை நாட வற்புறுத்த மூளை அவளை விலக எச்சரித்தது. இடைப்பட்ட யுத்தத்தில் வீழ சென்ற மனம் வீழாது எழுந்து நின்று மூளையை சரித்துவிட்டது. நாளை காலை முதல் வேலையாக மனதின் மன்னிப்பை ஏந்தி அவளிடத்து ஒப்படைக்க வேண்டும் என எண்ணி முடிவெடுத்து படுத்தான்.

ஆனால் அவனின் அப்போதைய செய்கை அவளை அங்கு வாட்டி எடுத்தது. சென்னை நகரின் தண்ணீர் பைப்புக்கு எதிர்போல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் கரைபுரண்டது.

கண்ணை மூடி யோசித்தாள். இங்கே வராமலே இருந்திருந்தால் ஒருவேளை தட் உயிர் நண்பன் தன்னை உன்னதமானவள் என்றே எண்ணியிருப்பான். இல்லை அவன் கேட்டபோதே உண்மையை சொல்லாமல் மறைத்திருந்தால் அவளது உன்னதம் காக்கப்பட்டிருக்குமே என அவளது மனதின் ஓரம் அங்கங்கே உரசல்கள். ஆனால் உயிரிய நண்பனிடம் எப்படி பொய் சொல்வாள், அதற்கு இறப்பதே மேல் என்று எண்ணினாள். இங்கே வராமல் தான் இருந்திருக்கமுடியுமா.? அவள் இங்கு வந்திருந்த காரணம் தான் வேறு ஆச்சே.. அந்த காரணத்தை மீண்டும் அசைபோடுகிறது அவளது பிஞ்சுப்போன இளம் மனசு.

அவள் உடல் உணர்வு பரிமாற்ற சேவையில் ஈடுபட்ட அடுத்த சில மாதங்களிலே நீங்காத சொத்தாக தன்னோடு உயிர்கொல்லி நோயை கொண்டுவந்த ஒரு தன்மானமிக்க வாடிக்கையாளர் தான் மட்டும் கொள்வது பிடிக்காது அதை இவளுக்கும் உட்செலுத்தி அவளுக்கும் அந்த பாக்கியத்தை அளித்தார்.


அவள் தங்கியிருந்த விடுதியில் மாதம் ஒருமுறை உடல்நல சோதனை மேற்கொள்ளப்படும். அவ்வாறு அந்த மாதத்திற்கான சோதனையில் தாமும் அந்த உயிர்கொல்லியை பரிசாக பெற்றமையை கண்டாள். ஒதுக்கப்பட்டாள். மறிக்கப்பட்டாள். உன்னதம் கெட்டாள். உணர்வும் கெட்டாள். வெளியில் சென்றால் விபச்சார தீண்டாமை, உள்ளே சென்றால் உயிர்கொல்லி தீண்டாமை, உலகை துறந்தால் தாத்தாவை தீண்ட ஆளில்லை என தீண்டாமை அவளை சுற்றி வட்டமிட்ட கழுகானது.

பணமின்மை, உடல் சோர்வு, மெலிவு என பழைய வரவு தொற்றிகொண்டது. உடல்நலமற்ற தாத்தாவுக்கு அவளது நிலை தெரியவந்தது. தம்மால் தானே தன் பாசமிகு பேத்திக்கு இப்படி ஒரு நிலைமை என மனதினுள்ளே வருந்தி வருந்தி சில நாட்களிலே உயிரை விட்டார். தாத்தாவே சென்றபிறகு உயிர்கொல்லியை கொண்டு நாம் மட்டும் என்ன செய்ய என உலகை வெறுத்து உயிர் நீக்கதுணிந்த அந்த சமயத்தில் தனது ஆருயிர் நண்பனை ஒருமுறையாவது கண்டிட வேண்டும் என்னும் எண்ணத்தோடே இப்போது இங்கே அவள்.

தாத்தா இறப்பை சொல்லி அவனை வேதனைக்குள்ளாக்க கூடாது என தாத்தாவின் இறப்பை மறைத்தால். இப்போது அவனை பார்த்துவிட்டாள், அவன்அவளது நிலையை கண்டு வருந்தியிருந்தால் அப்போதே அவள் தற்கொலை கொண்டு உயிர்நீத்திருப்பாள். ஆனால் மாறாய் அவன் செய்த செய்கை, அவனும் அவளை தீண்டதகாதவள் போல பார்த்தது அவளது மனதை இறுக செய்தது.தனது இந்நிலமையை நினைத்து வருந்தியவாறே கண்ணீர் சிந்தியொழுக நீங்காத வெயிலில் காய்ந்துபோன அந்த பார்க் பெஞ்ச் அவளின் கண்ணீரில் குளுமைபெற்றது.

காலையில் முதல் வேலையாக குளித்துவிட்டு அவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்டு தன் வீட்டிற்கு அழைத்துவரவேண்டும் என அவசர அவசரமாக அங்கே சென்ற அவன். அந்த பார்க் பெஞ்சில் அவள் உணர்வற்ற பிணமாக, கையில் இறுகபிடித்த கடுதாசியுடன்.


அந்த கடுதாசியில்..

‘‘அன்பு நண்பனே.!

என் செய்கை உன்னை முகம் சுலிக்க வைத்ததை எண்ணி வருந்துகிறேன். இக்கடிதம் உன்னிடம் கிடைக்கும்போது நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியாது. நானே உயிர் நீக்க எண்ணினாலும் என் உயிரின் உயிரான உயிர்கொல்லி முந்திவிடும் போலிருக்கு. என் வாழ்வில் நான் உன்னதம் துறந்திருக்கலாம். ஆனால் என்றும் மனதில் நான் உன்னதம் மாறவில்லை. இப்பொழுது எழுதுவதே ஓர் ஆத்மா தான். நீ என்னை விலகிய அந்நொடியே என் உயிர் பிரிந்தது. நான் இறந்த பிறகு என்னிடம் சேர்ந்த நீ நினைக்கும் இந்த இழிவான சேர்க்கைகாக எனக்கு இறுதி சடங்குகள் செய்திடுவாயா.? ஆசையா இருக்குடா.. தாத்தா ஏற்கனவே இறந்திட்டார்.. அத உன்கிட்ட சொல்லவேணாம்னு இருந்தன்.  இதே பார்க் பெஞ்ச்ல உன் தோள்ல சாஞ்சுகிட்டு நிறைய விசயம் பேசியிருக்கன். இப்பவும் உன் தோள்ல சாயனும் போல இருக்குடா. எனக்காக ஒண்ணே ஒண்ணு எனக்கு இறுதி சடங்கு செஞ்சா என்னை எரிச்சிடாத.. புதை.. மனிதர்கள் கெட்ட பசிக்கு திண்ற இந்த உடம்பை கொஞ்சம் பூச்சிகளின் உன்னத பசிக்காக திண்ணட்டுமே.!! என்னை புதைக்கும் சமாதியில் ‘இவள் உன்னதமானவள்’ என்று எழுதிவையேன்.. எழுத்துக்காகவாது இருக்கட்டுமே.. உன் தோளில் சாய்ந்ததாக எண்ணிக்கொண்டே செல்கிறேன்..’’ என்றிருந்தது.

அதை படித்த அடுத்த கணமே அவளை தூக்கி அவனது மடியில் படுக்க செய்து, அவளது இரு கரங்களையும் தூக்கி தன் கன்னத்தில் மாறி மாறி அடித்துகொண்டான். கண்ணீர் விட்டு கதறினான். சுற்றார் கூடி இறுதி சடங்குகள் செய்து அவள் விருப்பபடியே புதைத்து, கல்லறையில் செதுக்கினான் ‘‘இவள் உன்னதமானவள். இந்த 6 அடி குழிக்குள்ளே இவள் அகிலம் அடங்கட்டும்..’’

செதுக்கி முடித்த நொடி கல்லறையை முட்டிகொண்டே விட்டத்தை பார்த்து கதறினான் ‘‘நீ உன்னதமானவள்.. உன்னதமானவள்.. உன்னதமானவள்’’என்று.

தினமும் கால்பதிக்கிறான், தவழ்கிறான் அந்த பார்க் பெஞ்சில் அவளது முகத்தை மனதில் கொண்டு தனியொரு ஆளாக.

-அதான் டெய்லியும் வராணாம்ல நமக்கு எங்கே இடம் கிடைக்கபோகுது. இனி வேற பாக்கலாம்.

********முடிவாய் ஒரு தொடக்கம்*******

முந்தைய பதிவின் சுட்டி:
நாகரீக விபச்சாரமா இது.???Comments

 1. முதலாவதாக படித்துக் கொண்டிருக்கிறேன்..

  ReplyDelete
 2. யதார்த்தமான கதை வடிவம்..

  படிப்பதற்கு ஒரு உரைநடை கவிதைப் போன்று உள்ளது.. அருமை..

  அடுத்த கதையில் வாருங்கள்...

  அடுத்த பதிவில் சந்திப்போம்..

  ReplyDelete
 3. >>>
  மனதிற்கும் மூளைக்கும் நடந்த பெருவாரியான யுத்தத்தில் மனம் அவளை நாட வற்புறுத்த மூளை அவளை விலக எச்சரித்தது. இடைப்பட்ட யுத்தத்தில் வீழ சென்ற மனம் வீழாது எழுந்து நின்று மூளையை சரித்துவிட்டது. நாளை காலை முதல் வேலையாக மனதின் மன்னிப்பை ஏந்தி அவளிடத்து ஒப்படைக்க வேண்டும் என எண்ணி முடிவெடுத்து படுத்தான்.

  >>> ரமனி சந்திரன் நாவல் எல்லாம் நிறைய படிச்சா இப்படித்தான்.. ஹி ஹி

  ReplyDelete
 4. >>>>பெற்றமையை கண்டாள். ஒதுக்கப்பட்டாள். மறிக்கப்பட்டாள். உன்னதம் கெட்டாள். உணர்வும் கெட்டாள். வெளியில் சென்றால் விபச்சார தீண்டாமை, உள்ளே சென்றால் உயிர்கொல்லி தீண்டாமை, உலகை துறந்தால் தாத்தாவை தீண்ட ஆளில்லை என தீண்டாமை அவளை சுற்றி வட்டமிட்ட கழுகானது.

  கலைஞரின் பராசக்தி உங்களை ரொம்ப பாதிச்சிடுச்சு போல

  ReplyDelete
 5. >>>முகம் சுலிக்க

  சுளிக்க

  ReplyDelete
 6. ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் 13 இடத்துல இருக்கு. பாருங்க.. சரி பண்ணிடுங்க

  ReplyDelete
 7. நல்ல கதை. இன்னும் முயற்சி செய்யுங்கள்.

  ReplyDelete
 8. கதையின் முடிவு மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு கூர்மதி.நட்பின் இறுக்கமும் தெரியுது !

  ReplyDelete
 9. @சௌந்தர்:முதலாவதாக படித்ததற்கு நன்றி பாஸ்..

  அடுத்த கதை தானே சீக்கிரம் வருவோம்.. கதை எழுதுறதால நம்ம கவிதை தடைபடுது.. கொஞ்சம் இடைவெளி விட்டு கதைக்கு வருவோம்..

  ReplyDelete
 10. @பாரி:வாங்க பாரி.. ரொம்ப நன்றி

  ReplyDelete
 11. @சிபி:ஸ்பெல்லிங்.. ஸ்பெல்லிங்.. ஸ்பெல்லிங்.. இத எப்படியாவது இன்னைக்கு முடிச்சிடுறதுன்னு ஒரு எண்ணத்தோட உக்காந்து வேக வேகமா அடிச்சது.. அப்படி இப்படி தப்பு வர்ற தான் செய்யும்.. ரமணி கதைகள நான் படிக்கிறதில்ல.. எங்கம்மா தான்.. பராசக்தி படம்-எங்க அப்பாவுக்கு புடிச்சது.. திரும்ப என்னோட எழுத்து பிழைகளை திருத்த என் கதையை திரும்ப படிக்கணும்.. அந்த சக்தி என்கிட்ட இல்ல..

  ReplyDelete
 12. @எல் கே:கண்டிப்பாக.. இன்னும் முயற்சித்து சிறப்பான கதை தர முயற்சிக்கிறேன்

  ReplyDelete
 13. @நர்மதன்:பாத்தாச்சு பாஸ்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…