இதெல்லாம் எங்கயா போச்சு.???


இயற்கை விவசாயம் இயற்கையோடு ஒன்றிபோகும் வாழ்க்கை என எல்லாமே இயற்கையை சார்ந்ததாக மனிதர்கள் மாற்றம் கொண்டுவருகின்றனர். அப்படி மாறும் மனிதர்கள் ஆங்காங்கே சிலரை கண்டாலும் இயற்கையின் பெருமைகளை அறியாத பல மக்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை விவசாய உணவு பயிர்களின் கண்காட்சியும் அது குறித்து கருத்துகளும் பகிர்வதற்கு வசதியாக பாதுகாப்பான உணர்விற்கான கூட்டமைப்பு சென்னை செம்மொழி பூங்காவில் ‘ஆர்கானிக் மேலா’வை கடந்த 19ம் தேதி மாலை 4மணி முதல் 8 மணிவரையில் நடந்தது.


இயற்கை உற்பத்தியை முனைப்படுத்தும் நோக்கில் இயற்கை சாயம், ராகி, சோளம், குதிரைவாலி, கம்பு, வரகு முதலான சிறுதானியங்களும், இயற்கை விவசாயத்தில் பூச்சுகொல்லியின்றி தயாரிக்கப்பட்ட பண்டங்களும், பல்லுயிரியம் காக்கும் பல விசயங்களை குறித்த நூல்களும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது.

கையால் தைத்து,தேங்காய் மட்டையால் பட்டன் செய்யப்பட்டு, இயற்கை சாயம் பூசப்பட்ட சட்டைகள் கண்காட்சியில் விற்பனைக்காக இடம்பெற்றது. பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு இயற்கை சாயம் உபயோகப்படுத்தும் மகத்துவத்தை எடுத்து சொல்லி சாயம் பூசப்படும் முறையையும் விளக்கினர். குழந்தைகளையும், பெரியவர்களையும் இது வெகுவாக கவர்ந்தது.

பின்னர் சீர்காழி வியாபாரிகள் சங்கத்தை சார்ந்தோர் இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் நன்மைகளை பற்றி விளக்கினர். மாப்பிள்ளை சம்பா குழந்தைபேறுக்காகவும், பூங்கார அவல் கஞ்சி காய்ச்சலுக்காகவும், கடுங்குறுவை மூட்டுவலிக்காகவும், குழிஅடிச்சான் பிரசவமான பெண்களுக்கு தாய்பால் சுரக்கவும் பயன்படும் என்றும் மனிதனின் தீராத ப்ரச்சனைகள் அனைத்திற்கும் இயற்கையிலே மகத்துவம் இருக்கிறது அதை துறந்து செயற்கையை நாடி போவதால் தான் மனிதனுக்கு தீங்கு ஏற்படுகிறது என்பதனை விளக்கினர்,


இயற்கை விவசாயம், இயற்கையினால் ஏற்படும் நன்மைகள், இயற்கையை கையாளும் விதம் பற்றியெல்லாம் குவிக்கப்பட்டிருந்த புத்தகங்கள் இயற்கை விரும்பிகளை கவர்ந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இயற்கை விவசாயத்தையும் அதன் நன்மைகளை மட்டும் சுட்டிகாட்டாமல் இயற்கை மூலமே தயாரிக்கப்பட்ட தானியங்கள் கொண்டு சமைக்கப்பட்ட உணவும் விற்கப்பட்டது. ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருந்த நெற்கதிர்களை கண்டு சிறுசிறு குழந்தைகள் அது என்ன என்று கேட்டபோது எதிர்கால சந்ததிகளுக்கு இதுபோன்ற கண்காட்சி மிகவும் அவசியமானது என்பது புலப்படுகிறது.

‘எண்டோசல்ஃபேன்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கினர். இயற்கையாகவே தயாரிக்கப்படும் உரங்களையும் அதனால் நமக்கு என்னென்ன நன்மைகள் உண்டு என்பதையும் விளக்கினர். பார்வையாளராக வந்திருந்த ஒரு விவசாயி கூறுகையில், ‘‘மக்கள் எல்லாரும் இப்ப செயற்கைய நாடி போயிடுறாங்க. அதுக்கு அவங்க காரணமா சொல்றது விலை கம்மிங்கறது தான். ஆனா அதனால ஹாஸ்பிடலுக்கு போயி அவங்க இஷ்டத்துக்கு செலவு பண்ணுவாங்க. இயற்கையா பண்ற துணிகள்ல எந்த பாதிப்பும் வராது. சாப்பாடுகள்லையும் தான். ஆனா அஞ்சு ரூபா கம்மியா கிடைக்குதுன்னு மக்கள் தானா போய் புதைகுழில விழுறாங்க. இந்த காலத்து மக்களுக்கு இது போன்றவை அவசியம் வேணும்’’ என்றார்.

இயற்கையோடு வாழ்க்கை ஒன்றிவிட்டால் மாசுகளும் அண்டாது, நோய்களும் அண்டாது.  இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பின் அமைப்பாளர் திரு.அனந்து கூறுகையில், ‘‘ எல்லாரும் செயற்கைய உபயோகபடுத்தினா வர்ற பாதிப்புகளையும், உபயோகபடுத்தாதீங்க என்னும் கோஷத்தை மட்டுமே போடுறாங்க. அத தாண்டி என்ன செய்யிணும்.??? செயற்கை இல்லைனா என்ன செய்யலாம்னு யாரும் சொல்றதில்லை. அதை சொல்லணும்னு தான் இந்த விழா. இது எங்கள் முதல் படி இது இன்னும் மென்மேலும் வளர்ந்து பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்’’என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.

இப்படி இயற்கையால் உருவான அனைத்தையும் இழந்துட்டு நாம இங்கென்ன கிழிக்கிறோம். இதெல்லாம் நம்ம வாழ்க்கையில எங்கதான் போச்சு???

Comments

 1. இயற்கையோடு வாழ்க்கை ஒன்றிவிட்டால் மாசுகளும் அண்டாது, நோய்களும் அண்டாது. //
  அருமையான கருத்து.மேலான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நிறைய இயற்கையின் கொடைகள் அழிந்துவிட்டது...அல்லது அழிக்கப்பட்டு விட்டது நண்பரே...

  ReplyDelete
 3. டும்டும்...டும்டும்...

  செயற்கை என்பது இயற்கையாய் போய் விட்டது..

  ReplyDelete
 4. இதை எல்லாம் நடக்கறதுக்கு முன்னாடி சொல்ல மாட்டீரா ??

  ReplyDelete
 5. நாம் கொஞ்சம் விழிப்போடு இருப்பது நல்லது இல்லையா....

  ReplyDelete
 6. இயற்கையை நாங்களே அழிச்சிட்டு வரோம்.அப்புறம் எப்பிடி அதோட ஒன்றிப்போறது !

  ReplyDelete
 7. ஒவ்வொரு முறை செம்மொழிப்பூங்காவைக் கடக்கும்போதெல்லாம் அடுத்த முறை என்று தோன்றியதுண்டு. இந்த இடுகையை வாசித்தபோதும் அதே தோன்றியது. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 8. இப்படி எல்லாம் நல்ல பதிவு போட்டா நான் எப்படி கும்மி அடிக்கறது..அப்புறம் டெம்ப்ளேட் கமெண்ட் தான் போடனும்.. ஹி ஹி

  ReplyDelete
 9. @இராஜராஜேஷ்வரி:நன்றிங்க.. உங்க புது பதிவுகள் என் டேஷ்போர்டில் தெரியமாட்டேங்குது..

  ReplyDelete
 10. @ரஹீம்:உண்மையான கருத்து.. அழிக்கப்பட்டுவிட்டது.. அதை மீட்டெடுக்க வேண்டும்..

  ReplyDelete
 11. @நையாண்டி:அடடே சூப்பரா சொல்லிட்டீங்களே

  ReplyDelete
 12. @எல் கே: எனக்கு இது கடைசி நேரத்தில் தான் தெரியவந்ததிங்க.. சொன்ன உடனே வண்டிய எடுத்துட்டு போயி நியூஸ் கேட்டுட்டு வர்ற தான் நேரம் சரியா இருந்துச்சு.. இருந்தாலும் என் போன்ல கான்டாக்ட்ஸ்ல இருக்குற சென்னை நண்பர்களுக்கு அனுப்பினேன்.. யாரும் வரல.. இனி முன்னரே சொல்ல முயற்சி செய்கிறேன்..

  ReplyDelete
 13. @மனோ:இல்லாமலா பின்ன.. சீக்கிரமே வெளிநாடு வாழ் இந்தியர்கள திட்டி ஒரு பதிவு போடலாம்னு இருக்கன் என்ன சொல்றீங்க..???

  ReplyDelete
 14. @ஹேமா:ஏங்க பிரிச்சு பேசுறீங்க.. நாமளே அழிச்சிட்டு வர்றோம்னு சொல்லுங்க..

  ReplyDelete
 15. @சேட்டை:உண்மைதாங்க.. என்ன ஒரு அருமையான இடம்ல..

  ReplyDelete
 16. @சிபி:அதுக்கு தான் ஐ ஆம் சீரியஸ்னு ஒரு வலைப்பூ வச்சிருக்கன்.. அங்க வாங்க பாஸ்

  ReplyDelete
 17. மதி...சத்தியமா பிரிக்கலப்பா.நாம....நாங்க ரெண்டுமே ஒண்ணுதான்.எங்க பேச்சு வழக்கு இயல்பு.இந்த இடத்தில மத்தவங்க கிட்டயும் திட்டு வாங்கியிருக்கேன்.இன்னும் திருந்தல.ஆனா என் மனசில என்னோட உறவுதான் நீங்க !

  ReplyDelete
 18. இயற்கையினை எதிர்த்து வாழ்வதால்தான் ஏகப்பட்ட புதிய நோய்களுடன் மக்கள் அவஸ்தை படுகிறோம்.நல்ல பதிவு.

  ReplyDelete
 19. @ஹேமா:ரொம்ப நன்றிங்க.. இதை தான் நான் எதிர்பார்த்தேன்..
  //நாம....நாங்க ரெண்டுமே ஒண்ணுதான்.//
  என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் செம்மேனி(சரியா.!?) பகுதியில் இருக்கிறார்.. அவர் இதெல்லாம் எனக்கு சொல்லவில்லை..

  ReplyDelete
 20. @அமுதா:ஐ டீச்சருக்கு நான் புரியவச்சிட்டன்.. சாலி சாலி..

  ReplyDelete
 21. செம்மணியைத்தான் சொல்றீங்க போல...செம்மேனி இல்ல !

  ReplyDelete
 22. @ஹேமா:அதேதான்.. அவரது குரல் தெளிவுபட இருக்காது.. சாதாரணவர்கள் போல அவரது பேச்சில் தெளிவு இருக்காது.. அதனால் நான் தவறாக புரிந்திருப்பேன் என நினைக்கிறேன்..

  ReplyDelete
 23. அன்பின் தம்பி கூர்மதியன் - இயற்கையோடு இணைந்து வாழ்வது தான் சிறப்பு - ஆனால் விளைநிலங்கள் வீடுகளாவதும், மலைகள் கிரானைட்டாவதும், போக்குவரத்திற்காக சாலையோர மரங்கள் வெட்டப்படுவதும் நம்மை நாமே அழித்துக்கொள்வதற்கு உதவுகின்றன. என்ன செய்வது .... காலத்தின் கட்டாயம். நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகல் - நட்புடன் சீனா

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!