Posts

Showing posts from April, 2011

இசையோடு பயணமும்.! இம்சித்த இரைச்சலும்.!!

Image
என் வேலைகளில் அதிக நேரம் பயணிப்பது என்பது எனக்கு பழக்கப்பட்டதே. அப்படி இருக்கையில் நேற்று ஒரு கோவிலுக்கு செல்ல தாம்பரத்திலிருந்து-பீச் ஸ்டேஷனுக்கு ட்ரெயின்ல ஏறுனேன்.

உறவுகள்,நண்பர்கள் யாருமே இல்லாத என்னை நானே தனிமை படுத்தும் வேளையில் எனக்கு மிகவும் உறுதுணையா இருப்பது படிப்பதும்-எழுதுவதும் தான். ஆனால் அந்த ட்ரெயின் சூழலில் எனக்கு இவ்விரண்டையும் செய்ய வாய்ப்பே இல்லை.

அதனால் என்னின் அடுத்த அபிப்ராயம் இசை. காலை வேலைங்கறதால அப்படியே மிதமிஞ்சிய அருமையான ஜன்னல் ஓர காத்து அப்படியே கலகட்டுச்சு. காதுல ஹெட் போனை எடுத்து மாட்டிகிட்டு பாட்டை போட்டா உள்ள இளையராஜாவும்-ரஹ்மானும் மாறி மாறி போட்டி போட்டாங்க. ஆல் மெலடீஸ்.!! க்யூட் மெலடீஸ்.
பட்டுனு நடுவுல பூந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ். தெய்வ திருமகன் படத்திலிருந்து ''ஆரிரோ ஆராரிரோ'' என்னும் அருமையான பாடல்.  ஹரிசரண் வாய்சுல அப்படியே மிதக்கலாம் போலிருக்கும். புல்லாங்குழலும், பியானாவையும் போட்டு மாறி மாறி கலக்கலா சூப்பரா இருந்தது. அதுவும் அதிகமா  வாய்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்தது கொடுத்தது செம.!!


அடுத்து அப்படியே நம்ம ஜீ.வி.ய அந்தரத்தில விட…

இந்தியாவிலா இப்படி.? ஆச்சர்யமா இருக்கு டோய்.!

Image
இந்தியாவின் அதிகமான மிதிவண்டி உற்பத்தியாளராகிய முருகப்பா க்ரூப்ஸை சேர்ந்த டி.ஐ., சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சியாக இந்தியாவில் கார்பன் சைக்கிளை உற்பத்தி செய்திருக்கிறது.மான்ட்ராடெக்னோ(MONTRAtechno) என பெயரிடப்பட்டுள்ள இந்த சைக்கிள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார்பன் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.10 கோடி முதலீட்டில் இது தொடங்கப்பட்டுள்ளது.
இதனை அறிமுகபடுத்தும் போது அதனின் எடையை சுட்டிகாட்டும் பொருட்டு ஒற்றை கையில் அதனை தூக்கியவாறு நடந்து வந்தார் TI சைக்கிளின் தலைவரான திரு.ரகுராம் அவர்கள்.

சாதாரண சைக்கிளின் எடை 15லிருந்து 18கிலோ இருக்கையில் இந்த சைக்கிளின் எடை 9கிலோவுக்கும் குறைவு. இதன் சட்டம்(frame) எடை 1.37கிலோவாக இருக்கிறது. இதில் வேகத்தை கட்டுபடுத்தும் 10கியர்கள் இருக்கிறது. இதை உபயோகிப்பதன் மூலம் அதிர்வுகள் குறைவாக இருக்கும்.
இதுமட்டுமில்லாது இதேபோல் வேறு இரண்டுவகையான சைக்கிளையும் தயாரித்து உள்ளது இந்நிறுவனம்.அலாய் ஃப்ரேம் மற்றும் கார்பன் ஃபோர்க்குகள் மற்றும் நேரான ஹேண்டில் பார் கொண்ட 8கியர்கள் கொண்ட மான்ட்ரா-ஜாஸ்(Montra jazz) மற்றும் அதே அமைப்புகளோடுகீழ்நோக்கிய …

ஆர்வக்கோளாறால் அவதிப்பட்டேன்.!! அவ்வ்வ்.!!

Image
இரண்டு நாள் முன்னாடி செங்கல்பட்டு வரைக்கும் போக வேண்டிய வேலை. சரின்னு வண்டிய எடுத்துகிட்டு போனா ஹல்மெட் உள்ள ஒரு ஹாட் போராட்டமே ஓடுச்சு. வியர்த்து ஊத்த அங்கங்க வண்டிய நிறுத்திபுட்டு மரத்துக்கு கீழ நின்னு நின்னு தான் போனேன்(அதுக்கு ட்ரெயின் இல்ல பஸ்ல போயிருக்கலாம்ல..) எனக்கு வண்டி ஓட்டுறதுனா ரொம்ப பிடிக்கும் அதனால எங்க போனாலும் வண்டி தான்.(ஹி ஹி)


அப்படி ஒரு மரத்துக்கு கீழ நின்னுகிட்டு இருக்கும் போது போன்ல ஒரு தோழி மதுரையிலிருந்து பேசினாங்க. 
''என்ன மேடம் ஞாபகம் இருக்கா.?'' என்றேன்.
''அட இல்லாமலா.!! இங்க செம க்ளைமேட்.. ஜாலியா இருக்கு''னு சொல்லுச்சு அந்த அம்மா.
உடனே அப்படியே மேல நிமிர்ந்து பாத்தா நம்ம சூரியரு மொரச்சுகிட்டு பாக்குறாரு. ஏன் யா அந்த பக்கம் போக வேண்டியது தானேன்னு சூரியர கேட்டுகிட்டு திரும்ப போன்க்கு வந்து,
''ஏன் மா நீ வேற கடுப்பு ஏத்துற.. கம்முனு வச்சிடு'' அப்படினு கடிஞ்சிட்டு போனை கட் பண்ணிட்டேன். அதுக்கு பிறகு வருசலா அடிச்சாங்க மெசேஜ். ப்ளாக், ஆர்குட், பேஸ்புக், பஸ், டிவிட்டருன்னு இருக்குற நண்பர் கூட்டம் எல்லா சவுத் மக்களும்…

ஈழன் எழுவான் சிங்களனே.!

Image
தூரத்து சிரிக்கும் சிறுவனே.!
உன் சினமற்ற சிரிப்பினை
கொஞ்சம் கடனாக கொடுப்பாயா.?
புன்னகை மறந்த உதடுகள் கொஞ்சம் புசிக்கட்டுமே!

சிரிப்பில்லா வாழ்க்கையா.?
பிறகென்ன கண்டிருப்பான் என்கிறாயா.?

கண்டிருக்கிறேன்..
கூடாரத்தில் நித்திரை கொண்டிருந்தபோது
பொசுங்கி போன என் வீட்டின் முற்றம் கண்டிருக்கிறேன்.!

மண்ணில் பொதிந்த கைகளை நீட்டுமுன்
தலையினை இழந்த
உற்றத்தாரையும்,சுற்றத்தாரையும் கண்டிருக்கிறேன்.!

சந்திக்க வந்த கழுகுகள்
வஞ்சித்து சென்றதை கண்டிருக்கிறேன்.!

அன்பை இழந்த உறவுகள் கண்ணில்
உறைந்த கண்ணீரை கண்டிருக்கிறேன்.!

உதவிக்கு வந்த மாற்றான்கள்
கம்பங்கொல்லையில் காஞ்சமாடுபோல
சுரக்கும் திரவம் கொண்டு
எங்கள் எதிர்பாலரை சீரழித்ததை;
நீதான் கண்டிருக்கியா.?

உணர்ச்சிகள் மறந்து
சுரப்பற்ற வெற்றுடம்பில்
அன்பை கொஞ்சும் தாய்பாலை தேடிடும்
தத்தி தவழும் குழந்தையாய்
என்றாவது நீ இருந்ததுண்டா.?

ஏடுகள் எடுக்க வேண்டிய எதிர்காலம்
உயிர் கொல்லும் சாடிகள் ஏந்திய
சரித்திரம் அங்கே சாத்தியமா.?

வெளி விளையாடிய பிஞ்சுகளின்
செல்லதாய் சீண்டும் கால்கள்
நாலாபுறமும் சிதறிய சாதனை
அங்கு தான் உண்டா.?

உயிராக நினைத்த கால்நடைகள்
உயிரை ஏந்திய சொந்த மணல்
ஒற்றை சீற்றத்தில் இழந்தோம…

சின்ன சின்ன ஆசைகள்.!! என் சிறகை ஒடித்த ஆசைகள்.!!

Image
ஹாய்.!! இன்னைக்கு என்ன சொல்ல வந்திருக்கான் இந்த உருப்புடாதவன்னு பாக்குறீங்களா.? சொல்றேன். எல்லோர் மனதிலும் தீராத ஆசைன்னு ஒண்ணு இருக்கும்ல அந்த ஆசை தான். எனக்கான நிரைவேறாத ஆசைகள். அதுல பெரிய பட்டியலே இருக்கு.!! ரொம்ப பாதிச்ச சில மட்டும் இங்கே.!


நான் ஒரு காலத்தில LKG படிக்கும்போது எங்க ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பஸ் ஏறி போய் தான் படிக்கணும். ஒரு 5 கி.மீ., இருக்கும். பஸ் ஏறுனா அடுத்த ஸ்டாப்புங்கறது என் கணக்கு. அப்பவே தனியா போய் தான் படிச்சிட்டு வருவேன், அப்போ தைரியமா அனுப்புன எங்க வீட்ல இப்ப மாடு மாதிரி வளர்ந்த பிறகு வெளிய அனுப்ப பயப்புடுறாங்க. ஹி ஹி.. எங்க ஸ்கூல் ஸ்டாப்ல பொட்டி கடையில ஒரு தாத்தா இருப்பாரு. அவருகிட்ட எப்படியாவது அந்த ஒரு ரூபாய் மதிப்புள்ள சாக்லேட்ட வாங்கிடனும்னு ரொம்ப ஆசை:)))))) ஆனா சந்தர்ப்பங்களும் சூழ்நிலையும் என்ன அந்த தாத்தாவோட டீல் பேச விடாம பண்ணிடுச்சு. இப்ப டீல் பண்ணலாம்னு பாத்தா தாத்தா செத்துட்டாராம். ஊருக்கு போயிருத்தப்போ சொன்னாங்க.!!
''அநியாயமா என் ஆசைக்கு உலை வச்சிட்டீங்களே தாத்தா.!!''


அடுத்து 2வது படிக்கும் போது. இப்போ வீடு மாறியாச்சு. எங்க ஊ…

திருநங்கையரை வாழ்த்த வேண்டுமா.? வேண்டாமா.?

Image
திருநங்கையர்- ஒரு காலத்தில் ஏச்சுக்கும், கிண்டல், கேலி, நக்கல், நையாண்டினு எல்லாத்துக்கும் பயன்படுத்தியது இவர்களை தான். அன்று இவர்களுக்கு சில பல பெயர்கள் உண்டு. அதை உபயோகபடுத்தி ஒரு காலத்தில் நானும் இவர்களை நக்கலடித்தேன் என நினைக்கும் போது இன்றும் வருந்துகிறேன்.


முதலில் இவர்களை பற்றி ஆழமாக இறங்கும் முன் நேற்று தமிழக திருநங்கையர் தினத்திற்க்கு வாழ்த்துகளை போட்டுகிடுவோம். திருநங்கையரை பற்றி நான் இங்கு தனி பதிவு போடுவது அவர்களை எம்மிடமிருந்து ஒத்திவைத்து பார்க்கிறேன் என யாரும் எண்ண வேண்டாம். மகளிர் தினம், மாணவர்கள் தினம்னா அவங்கள பத்தி பதிவு போடுறோம்ல அப்படிதான் இதுவும் ஆனா கொஞ்சம் லேட்.

திரு-ஆண், நங்கை-பெண். திருநங்கையர். ஆண்கள் மற்றும் பெண்களின் இருபலமும், இருகுணமும், இருசிறப்பும் பெறகூடிய சிறப்பு பெற்றவர்கள். புதிதாக அதீத வளர்ச்சியடைந்து வரும் பால் மக்கள்.

நான் சமீபத்தில் கேள்வியுற்ற ஒரு செய்தி. தன் பத்து வயது மகனுடன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஒரு குடும்பம் அவர்களின் ஆண் பிள்ளையை இழந்திருக்கிறது. பின்னர் எங்கு தேடியும் கிடைக்காமல் போக பல வருடம் சென்றிருக்கிறது. …

இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!

Image
உணர்ச்சிகள் உடம்பில் பாய
சுல்லென்று படர்ந்த வெளிவெப்பத்தில்
குளிர்காய முடியாது கதறிய
என் தாயின் கருவறையை பிரிந்த நொடி
இருக பிடித்து, நெஞ்சோடு அணைத்து
குத்தும் மீசையோடு முத்தமிட்டவரே.!!

இன்றும் ஞாபகத்தில்..

பள்ளி பாடம் முடித்து வீட்டினுள்ளே
வரும் பாதையில் விழி தேங்கி
காத்துகிடப்பேன் உங்கள் வருகைகாக.!!
அந்த காத்திருப்பு..
பாசத்திற்கா இல்லை பண்டத்திற்கா என அறியாவிடிலும்
காத்திருந்த நொடிகள் உண்மைதானே.!

பொய் உரைத்த நொடிதனிலே
கடிந்து ரணத்தின் மேல் உரமாக்காது
அமரவைத்து அன்பு பாராட்டி
வாழ்க்கை நியதியையும் தேவையையும்
எடுத்துரைத்த உங்கள் பண்பு
என்னை சிந்தனையாளனாய் செதுக்கியதே.!!

வண்டி முன்னால் நிற்கவைத்து
அந்த ஒத்தையடி ரோட்டில்
மிதவேகத்தில் நாம் கொண்ட பயணம்.!
உங்கள் நண்பரிடத்து பேசுகையில்
உடனழைத்துவந்த இச்சிறுவனை
மறந்து ஆழ்ந்தும் தருணம்.!
அனைத்தும் கண்ணுள்ளே.!!

ஆனால் சட்டென மாறின நாட்கள்.!!

என் வண்டியில் பின்னால் நீங்கள் அமர
அதிவேகத்தில் நான் பறக்கும் போது
மண்டையில் விழும் நச்சென்ற கொட்டு சொல்லும்
''படவா.! பின்னாலிருந்தாலும் நான் அனுபவசாலிடா.!!''
என்னும் உங்கள் பளிச்சென்ற வார்த்தைகள்.!!

நண்பரிடத்து உரையாடும் எ…

நாளைக்கு தேர்தல்-கலைஞர்.? ஜெ.?

Image
நாளைக்கு தான். புரியுதா.. நாளைக்கு அப்பரம் நான் எழுதுறதுக்கு ஒண்ணுமே இல்லாம கூட போகலாம்(அப்படியே எழுதிட்டாலும்.!).


முதல்ல தேர்தல் ஏன் ஏப்ரல் 13ல வச்சாங்க. அந்த கருமத்தை எல்லாம் அந்த நாளோடு மூட்டை கட்டிட்டு 14ம் தேதி புது வருசத்தை தொடங்கணும்னு காரணத்துக்காக(கண்டுபுடிச்சுட்டாருயா.!!)

இந்த முறை என் ஓட்டு 49o தான் என்று ஏற்கனவே முடிவு செஞ்சுட்டன். போன முறை ஓட்டு போட போனபோது 49o போட்டு ஏன் தம்பி ஒரு ஓட்ட வீணாக்குற.? அந்த பார்ம் இல்ல.? சும்மா ஒரு குத்த குத்திட்டு போ..!! அப்படினு பூத் ஆபிஸர்கள் எனக்கு சிறந்த பதில்களை அளித்தனர். இந்த முறை அந்த ப்ராப்ளம் இல்ல. கண்டிப்பா எல்லா பூத்களிலும் 49oக்கு உரிய பார்ம்கள் தரணும் இல்லாவிடில் தாராளமா கம்ப்ளைன் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க. சரி அத விடுங்க, பதிவுலகுல அந்த பக்கம் இந்த பக்கம்னு கொஞ்சம் அரசல் புரசல்கள் இருக்கு. யாருக்கு ஓட்டு போடலாம்னு. நாம இப்படி குழம்பினாலும் நமக்குள்ளவே சில கருப்பு ஆடுகள் இருக்கு. அதான் ப்ளாக் ஷீப். அந்த கருப்பு ஆடுகள் தான் ஓட்டு போடாத கூட்டம்.

நமக்கான உரிமைகளான பேச்சு, சுதந்திரம் எதுவுமே நாம உட்டு கொடுப்பதில்லை. இருந்தாலும் இந்…

கள்ள ஓட்டு கண்டுபிடிக்கும் நவீன மிஷின் சார்.!!

Image
தேர்தல் நெருங்குன நேரத்துல ஒரு இந்திய குடிமகனா(ஆப்ரிக்கால இருந்து தப்பிச்சு வந்ததா சொன்னாங்க..) நாம நம்ம நாட்டுக்கு ஏதாச்சும் பண்ணனுமேனு யோசிச்சுகிட்டு இருந்தேன்.


சரி தேர்தல்னா முக்கிய ப்ரச்சனை என்ன.? அட கள்ள ஓட்டுங்கற கருமாந்திரம் தான். அத தடுக்க நம்மாள ஏதாச்சும் செய்ய முடியுமா அப்படினு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

என்னதான் எழுத்துனு நம்ப ரூட் மாறியிருந்தாலும் அடித்தளத்துல நாம ஒரு கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட் தானே.!! சரி இத மாத்த என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது நான் காலேஜ் இரண்டாமாண்டு செஞ்ச பயோமெட்ரிக்ஸ் பத்திய பேப்பர்ஸ் ஞாபகம் வந்தது.

பயோமெட்ரிக்ஸ்னா அதாங்க கண்ண வச்சு செக் பண்றது, கைரேகை வச்சு செக் பண்றது அந்த மாதிரி. பெரிய பெரிய பேங்க், லாக்கர்லயெல்லாம் இந்த மாதிரி பயோமெட்ரிக் சிஸ்டத்தை உபயோகித்து தான் பாதுகாப்பு ஏற்படுத்துறாங்க.

அத உடுங்க இத வச்சு நாம எப்படி கள்ள ஓட்டை தடுப்பது.? சொல்றேன். பயோமெட்ரிக்ஸ்ல Fingerprint recognitionனு ஒரு பிரிவு இருக்கு. அதாவது கைரேகையை கணிச்சு சரி பாக்குறது.


இப்போ நம்ம ஓட்டு போடுற மெஷின்ல ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓரமா பட்டன் இருக்கும் பாத்திருக்கீங்களா.? அதாங…

உலககோப்பை அலப்பறைகள்..!!

Image
உலககோப்பை முடிஞ்சிடுச்சு.. அடுத்து என்ன ஐ.பி.எல்., தான். ஒழுங்கா உருப்படியா வேலைய பாக்கலாம்னு பாத்தா இவனுங்க மாத்தி மாத்தி மேட்ச் போட்டு என்ன வேலைய உட்டு வெளியே வர வச்சிடுவானுங்க போலிருக்கு.!(இந்த ஐபிஎல் முடியறதுக்குள்ள என்ன வேலைய உட்டு தூக்கலனா உனக்கு கெடா வெட்டுறன் ஆத்தா.!!)


ஐபிஎல் உள்ள போகும் முன்னாடி கடந்த உலககோப்பை.. அட நம்ம இந்தியா கலக்கனாங்களே அதே உலககோப்பை தாங்க. அதில் இந்தியா-ஆஸியை அடிச்சு விரட்டினபிறகு குர்ர்ர்ர் மூஞ்சு கேப்டன் பான்டிங் அவர்கள் இந்தியா ஒரு சிறந்த அணி அப்படினு சொன்னார். இந்தியா-ஆஸின்னு சொன்னாலே வாய்ப்போர் இருக்கிற இடத்தில பான்டிங் இப்படி சொன்னது உண்மையிலே ஆச்சர்யபடவேண்டிய விசயம் தான். பின்ன உலககோப்பையில தோத்துபுட்டு ஒழுங்கா ஆடல அதான் தோத்தோம்னு சொன்னா அவிங்க ஊர்ல பெண்ட கயிட்டிடமாட்டாங்க. அதான் இந்த உட்டாலக்கடி, டபரடக்கா வேலை.


அடுத்து நடந்தது தான் அதைவிட பெரிய காமெடி. அப்ரிதி-ஒரு காலத்தில் இந்தியாவை முறைத்தபடி, ஏதோ அவன் ஆயாவ அபேஸ் பண்ணிய மாதிரியே முறைப்பவர் ஏனோ சரி ஸ்மூத்தா மூவ் பண்ணினார். என்னடா இது ஆச்சர்யம் என இருக்கும் போது இன்னொரு இன்ப அதிர்ச்சி தந்தார்.…

தமிழக அரசியல்:ஜெயிப்பது இவரே!-குட்டிச்சுவரு அரசியலுங்கோ.!

Image
இன்னும் எண்ணி பார்த்தால் ஒரு வாரம் தான். இந்த ஒரு வாரம் தான் என் அடுத்த ஐந்து வருடத்தின் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அரசியல் சாணக்கியர்கள் எனக்கு கொடுத்த அவகாசம். இந்த நிலைய கூட்டினோம் எங்க குட்டிசுவர.! என்னதான் அரசியல் பரப்பரப்பா இருந்தாலும் கிரிக்கெட்டில் ஜெயித்ததை பற்றியும், டென்னிஸில் அதே சமயம் பயஸ்-பூபதி சாம்பியன் பட்டம் பெற்றாலும் அது பெரிய அளவில் பேசபடாததை நினைத்து திட்டிவிட்டு பின்னர் அரசியலில் குதித்தோம்.


திமுக-அதிமுக.. இந்த முறை யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் பெரும் சிக்கலே நிலவுகிறது. ஒரு நேரத்தில் ஜெ., பெரும்பான்மையை அள்ளி 1991க்கு பிறகு பெரும் வெற்றியை பெருவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் கலைஞரின் அறிக்கை போட்டது ஒரு சாட்டையடி. அதுவும் 58 வயதுக்கு பிறகு பேருந்தில்இலவசம்னு ஒரு போடு போட்டதும் வைகோ மாதிரியே எல்லாரும் அந்தர்பல்ட்டி அடிச்சிட்டாங்க. அடுத்து வைகோவிடம் ஜெ., முறிவு. இது ஒரு குறிப்பிட்ட அளவு பின்னடைவை அவருக்கு ஏற்படுத்தும். இருந்தாலும் வைகோவின் தனிப்பட்ட ஆதரவாளர்களின் ஓட்டை பறிக்க உட்டாங்க பாருங்க ரெண்டு பேரும் கலைஞர் மறைமுகமா என் கட்சிக்கு வரலாம்னு அ…

ஜெயலலிதா-பெருமைகளும், சில கேள்விகளும்.!

Image
தைரியத்தின் விளக்கமானவரே.!
சூழ்ச்சியும் சூச்சமமும் நிறைந்த
மஞ்சள் துண்டார் முன்
அகிலமும் கலங்கும்போது
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அடக்கி ஆண்டீரே.!
உம் தைரியம் மெச்சுகிறேன்.!

பள்ளி படிப்பில் சாதித்து
அரசிடமிருந்தே பாண்டித்யம் பெறும்போது
நினைத்துதான் பார்த்தீரோ.!
அந்த அரசே நாம் ஆவோமென.?

அன்றொரு நாள்,
படிக்கையின் மடியில் தமிழகத்தை ஆண்ட
விசித்திர குரலான் ஞாபகம் உள்ளதா.?
அன்றே,
ராஜூவ்க்கு உம் ஆட்சி வேண்டி
மடல் தொடுத்ததன் தைரியம் எங்ஙனம் வந்தது.?

சிலிர்க்குதே-உங்களை நினைக்கையில்.!
குரலானுக்கு பின்னால் அரசாளுமை கொண்ட
ஆர்.எம்.வீரப்பனையும் ஒதுக்கி முன்னேறுனீர்.!
ராஜூவ்-இன் இறப்பை காட்டி
தமிழக அரசியலில் எட்டிடாத வெற்றியை எட்டினீர்.!
ஒரு பெண்ணுக்கு இப்படியொரு தைரியமா.?
வியக்கிறேன் உங்களை.!

குரலோனின் இறப்புக்கு பின்னர்
உடன் நின்ற உறுதுணை நால்வரை
எட்டி உதைத்த அருமை செயல்.!
உங்களை தவிர்த்து யார் செய்திடமுடியும்.?

கூத்தாடியாய் உள்நுழைந்து
காத்தாடியாய் சுற்றியவரே.!
தமிழகத்தை ஆள தகுதியுள்ளவரா நீங்கள்.?
அனைவருக்கும் உற்ற மதிப்பென்னும் தமிழகத்தில்
அல்லாதாரையும் கால்விழ வைக்கும் பண்பென்ன.?

உம்மை தூற்றியவர் எவரானாலும்
தூசியை போல துடைத்திடும் …

தோனியின் அதிரடி வியூகம்.!! சூப்பரப்பு.!!

Image
ஒவ்வொரு இந்தியனும் என்றுமே மறந்திட நினைக்காத ஒரு நாள். அது ஏப்ரல் 2.! 28 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பையை முத்தமிடும் வாய்ப்பு. எல்லாவற்றையும் சாதித்த ஒருவனின் நீண்ட நாள் கனவு சாதனையான நிமிடங்கள். இன்றும் கண்முன்னே.!!


இதுவரை தோனியை எனக்கு பிடிக்காது. முட்டாள்.! மூடர்.! ராசியை நம்புகிறவர்.! என சாடிக்கொண்டிருந்தேன். இப்போது சமீபகாலமாக அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. தொடக்கத்தில் இருந்ததைவிட சிறப்பாக வியூகம் அமைக்க ஆரம்பித்திருக்கார்.

நேற்று போட்டி தொடங்கிய பொழுதிலிருந்து டிவி முன்னர் இருந்து எழுந்திருக்கவில்லை. அதுவும் சாகீர் கானின் முதல் 5 ஓவர் கண்டு பிரமித்துபோயிருந்தேன். முதலில் டீமில் ஸ்ரீசாந்த் பார்த்ததும் அதிர்ந்தேன். எனக்கு நெஹ்ராவின் இடத்தை யுசஃப் பதான் நிரப்பவேண்டும் என்றிருந்தேன்.


இலங்கை அணியை கண்டு மேலும் மிரண்டேன். பெரேரா, குலசேகரா, முரளி, மலிங்கா அனைவரும் இந்தியாவுக்கு எதிராய் அருமையாக செயல்படகூடிய பௌலர்கள். இருப்பினும் மெண்டிஸை எதற்காக விலக்கினர் என புரியவில்லை. என்ன நிலைமையோ என்று பயந்துகொண்டே மேட்ச் பார்க்கம்போது 250க்குள் என்றால் நமக்கு சுலபம் என்றே நினைத்திருந்தேன…