இந்தியாவிலா இப்படி.? ஆச்சர்யமா இருக்கு டோய்.!


இந்தியாவின் அதிகமான மிதிவண்டி உற்பத்தியாளராகிய முருகப்பா க்ரூப்ஸை சேர்ந்த டி.ஐ., சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய முயற்சியாக இந்தியாவில் கார்பன் சைக்கிளை உற்பத்தி செய்திருக்கிறது.
மான்ட்ரா டெக்னோ(MONTRA techno) என பெயரிடப்பட்டுள்ள இந்த சைக்கிள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கார்பன் சைக்கிள் என்பது குறிப்பிடத்தக்கது. ரூ.10 கோடி முதலீட்டில் இது தொடங்கப்பட்டுள்ளது.

இதனை அறிமுகபடுத்தும் போது அதனின் எடையை சுட்டிகாட்டும் பொருட்டு ஒற்றை கையில் அதனை தூக்கியவாறு நடந்து வந்தார் TI சைக்கிளின் தலைவரான திரு.ரகுராம் அவர்கள்.


சாதாரண சைக்கிளின் எடை 15லிருந்து 18கிலோ இருக்கையில் இந்த சைக்கிளின் எடை 9கிலோவுக்கும் குறைவு. இதன் சட்டம்(frame) எடை 1.37கிலோவாக இருக்கிறது. இதில் வேகத்தை கட்டுபடுத்தும் 10கியர்கள் இருக்கிறது. இதை உபயோகிப்பதன் மூலம் அதிர்வுகள் குறைவாக இருக்கும்.

இதுமட்டுமில்லாது இதேபோல் வேறு இரண்டுவகையான சைக்கிளையும் தயாரித்து உள்ளது இந்நிறுவனம்.அலாய் ஃப்ரேம் மற்றும் கார்பன் ஃபோர்க்குகள் மற்றும் நேரான ஹேண்டில் பார் கொண்ட 8கியர்கள் கொண்ட மான்ட்ரா-ஜாஸ்(Montra jazz) மற்றும் அதே அமைப்புகளோடு கீழ்நோக்கிய ஹேண்டில் பார்களுடன் 9கியர்கள் கொண்ட மான்ட்ரா கன்ட்ரி(Montra country) என்பன.


கூட்டபட்ட விறைப்பு(Stiffness), இந்திய ரோடுகளுக்கு ஏற்றார் போல அதிர்வுகள் குறைக்கும் தன்மை, குறைந்த எடை, அதிக வேகம், இன்டர்நேஷனலுக்கு நிகரான அமைப்பு என அனைத்து சிறப்பம்சம் கொண்ட இந்த சைக்கிள் நடப்பு ஆண்டான 2011-2012ல் 1500 உற்பத்தி செய்து விற்கப்படும்.
தொழிற்முனையில் இதை பிரபலபடுத்தும் நோக்கில் இந்தியாவின் பிரபல ஃபார்முலா ரேஸராகிய கருண் சந்தோக் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக திரு.ரகுராம் குறிப்பிட்டார். இதைபற்றி அவர் கூறுகையில், ‘‘இந்தியாவின் பேமஸ் ஃபார்முலா ரேஸர் கருண் சந்தோக்கை அம்பாசடராக்க பேசியிருக்கிறோம். கூடிய சீக்கிரம் அவரோடு வந்து அறிவிப்புகள் நடக்கும். மேலும் பிரபலமாக்க சோசியல் நெட்வொர்க்கான டிவிட்டர், பேஸ்புக் போன்றவை உபயோகிக்கப்படும். இதை சோதனை செய்யும் பொருட்டு 2000த்திற்கும் மேற்பட்ட கி.மீ., பயணம் நடந்துள்ளது. இறுதி சோதனையாக தில்லி மற்றும் உதய்பூர் நகரங்களில் 700 கி.மீ., சோதனை நடந்தது. அதில் தோன்றிய சிறு சிறு தவறுகளை சரிசெய்து இப்போது உங்கள்முன். சீக்கிரமே நமது மான்ட்ரா சைக்கிள்கள் TI டீலர்களிடம் கிடைக்கும்’’ என்றார்.


மேலும் இந்த உற்பத்தி உள்நாட்டு வாடிக்கையாளர்களை மையமாக கொண்டு ஏற்படுத்தினாலும் தங்களது எண்ணமாக சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்து தங்களது ‘மான்ட்ராஉலக அளவில் எந்த சைக்கிளுக்கும் குறைந்ததில்லை என்பதை நிரூபிப்பதே ஆகும் என்றனர். இதை சர்வதேச அளவில் கொண்டு சென்றால் முழுதும் கார்பனால் செய்யபட்டது 1800 டாலருக்கும், அலாய் ஃப்ரேம் கொண்டது 700 டாலருக்கும் விற்கபடலாம் என்றார்.

அவர்களின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்..

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. அண்ணி கூட கடலை போடறதை விட்டுட்டு இந்த நேரத்துல பதிவா? ஹி ஹி

  ReplyDelete
 2. எடை குறைந்த சைக்கிள், ஆச்சரியமாக இருக்கே...

  ReplyDelete
 3. இந்திய ரோடுகளுக்கு ஏற்றார் போல அதிர்வுகள் குறைக்கும் தன்மை//

  இனி பெண்ட் எடுக்காது என்று சொல்லுறீங்க...

  ReplyDelete
 4. நல்லதொரு முயற்சி,இந்தியாவின் சந்தைப்படுத்தலையும் தாண்டி, உலகச் சந்தைகளிலும் இந்தச் சைக்கிள் விற்பனை கொடி கட்டிப் பறக்க வேண்டும்.

  ReplyDelete
 5. ராஜ நடராஜன்24 April 2011 at 00:50

  கூர்!சுய முயற்சியாக இருக்குறதே என்று பெருமைப்பட்டேன்.ஆனால் யானை விலை சொல்றீங்களே!அம்புட்டு டாலரா?

  ReplyDelete
 6. ராஜ நடராஜன்24 April 2011 at 00:52

  ஆமா!தேர்தல்ல இலவசமா சைக்கிள் யாராவது அறிக்கை கொடுத்தாங்களா?புரமோட் செய்திடலாமே:)

  ReplyDelete
 7. நல்ல விஷயம். பார்ப்போம்

  ReplyDelete
 8. எடை குறைந்த சைக்கிளை ஓட்டினால், எடை குறையும்?

  ReplyDelete
 9. கேள்விப்பட்டிருந்தபோதும் அழகாய் கோர்வையாய், படங்களுடன் விளக்கி சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 10. சீனாவில் உயர்பதவியில் இருப்பவர் கூட கோட் மாட்டிக்கொண்டு சைக்கிளில் செல்கிறார். இங்கே அது பெரும்பாலும் ஏழையின் வாகனமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. குறிப்பாக நகரத்து நெடுஞ்சாலைகளில். பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 11. பாஸ் எடை குறையும் போது வலிமையும் குறையுமே????

  ReplyDelete
 12. ///இதில் வேகத்தை கட்டுபடுத்தும் 10கியர்கள் இருக்கிறது.// நம்மவர்களுக்கு தேவையானது தான் )))))

  ReplyDelete
 13. நல்ல முயற்சி தான் . தெரியப்படுத்திய உங்களுக்கும் நன்றி

  ReplyDelete
 14. இந்த விசயத்த என் இவ்வளவு நாள் சொல்லல

  ReplyDelete
 15. @சிபி: ஹி ஹி.. இந்த நேரத்துல பேய் பிசாசு தான் கடலை போடும் பாஸ்.. நமக்கு இருக்குற ஆயிரம் வேலையில இது வேறயா.?

  ReplyDelete
 16. @நிரூ: //எடை குறைந்த சைக்கிள், ஆச்சரியமாக இருக்கே...//

  இல்லாமலா பின்ன..

  //உலகச் சந்தைகளிலும் இந்தச் சைக்கிள் விற்பனை கொடி கட்டிப் பறக்க வேண்டும்//
  அதெல்லாம் பண்ணிடுவானுங்க.. திருட்டு பயலோ..

  ReplyDelete
 17. @ராஜ நட://கூர்!சுய முயற்சியாக இருக்குறதே என்று பெருமைப்பட்டேன்.ஆனால் யானை விலை சொல்றீங்களே!அம்புட்டு டாலரா?//

  பாஸ் இதுல முக்கியமான விஷயம் இத அதிகமா ரோடுகளில் உபயோகிக்காம ரேஸ்களில் உபயோகிப்பாங்க.. இதிலிருந்தே புரிஞ்சிருக்கும்.!!


  //ஆமா!தேர்தல்ல இலவசமா சைக்கிள் யாராவது அறிக்கை கொடுத்தாங்களா?புரமோட் செய்திடலாமே:)//

  நீங்க ஒரு அரும்பெரும் அரசியல் பதிவர்னு நிரூபிக்கிறீங்க..

  ReplyDelete
 18. @எல் கே: ஆம் அண்ணா.. பாப்போம்..

  ReplyDelete
 19. @ரம்மி: யாருங்க உங்களுக்கு இப்படியெல்லாம் சொல்லி தர்றது.? அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது.. பொதுமக்களே இவர் சொல்லுக்கும் என் பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

  ReplyDelete
 20. @சேட்டை: ஆம்.. கொஞ்சம் பழைய மேட்டர் தான்..

  ReplyDelete
 21. @சிவகுமார்:ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கு பாஸ்..

  ReplyDelete
 22. @கந்தசாமி: இல்லை நண்பரே.! கார்பன் சைக்கிளை பொறுத்தவரையில் அப்படி இல்லை.. வலு சிறப்பான வலுவாகவே இருக்கிறது..

  ReplyDelete
 23. @கார்த்தி: நண்பரே.!! நடுவில் அரசியலில் கொஞ்சம் பிஸியாகிட்டேன்.. அதான் இப்போ..

  ReplyDelete
 24. பயனுள்ள் பகிர்வு.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 25. சைக்கிள் ஓடத் தெரியாது.அதனால பேசவேணாம் இந்தப் பதிவுபத்தி !

  ReplyDelete
 26. @இராஜராஜேஷ்வரி: நன்றிங்க..

  ReplyDelete
 27. @ஹேமா: ஹா ஹா.. நன்றி ஹேமா.!!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி