தமிழக அரசியல்:ஜெயிப்பது இவரே!-குட்டிச்சுவரு அரசியலுங்கோ.!

இன்னும் எண்ணி பார்த்தால் ஒரு வாரம் தான். இந்த ஒரு வாரம் தான் என் அடுத்த ஐந்து வருடத்தின் வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அரசியல் சாணக்கியர்கள் எனக்கு கொடுத்த அவகாசம். இந்த நிலைய கூட்டினோம் எங்க குட்டிசுவர.! என்னதான் அரசியல் பரப்பரப்பா இருந்தாலும் கிரிக்கெட்டில் ஜெயித்ததை பற்றியும், டென்னிஸில் அதே சமயம் பயஸ்-பூபதி சாம்பியன் பட்டம் பெற்றாலும் அது பெரிய அளவில் பேசபடாததை நினைத்து திட்டிவிட்டு பின்னர் அரசியலில் குதித்தோம்.


திமுக-அதிமுக.. இந்த முறை யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் பெரும் சிக்கலே நிலவுகிறது. ஒரு நேரத்தில் ஜெ., பெரும்பான்மையை அள்ளி 1991க்கு பிறகு பெரும் வெற்றியை பெருவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் கலைஞரின் அறிக்கை போட்டது ஒரு சாட்டையடி. அதுவும் 58 வயதுக்கு பிறகு பேருந்தில்இலவசம்னு ஒரு போடு போட்டதும் வைகோ மாதிரியே எல்லாரும் அந்தர்பல்ட்டி அடிச்சிட்டாங்க. அடுத்து வைகோவிடம் ஜெ., முறிவு. இது ஒரு குறிப்பிட்ட அளவு பின்னடைவை அவருக்கு ஏற்படுத்தும். இருந்தாலும் வைகோவின் தனிப்பட்ட ஆதரவாளர்களின் ஓட்டை பறிக்க உட்டாங்க பாருங்க ரெண்டு பேரும் கலைஞர் மறைமுகமா என் கட்சிக்கு வரலாம்னு அறிக்கை உட்டாரு, ஜெ., ஒரு படி மேல போயி நான் உங்க சகோதரின்னு போட்டாங்க.. ஆனா யார் பப்பும் வேகல.. இதுல சிலர் ஓட்டு வேற சுயேட்சைக்கு போடபோறன் எனக்கு காசு வரலன்னு பொலம்புறாங்க(நான் யாரையும் குறிப்பிடலைங்கோ.!!)

இந்த மாதிரி சமயத்துல தான் பொங்கி வருகிறது ஒரு மாபெரும் படை. அது இந்தியா ஜனநாயக கட்சி.(ஹி ஹி) அட என்னங்க முழிக்கிறீங்க. அதாங்க பாரி வேந்தரின் கட்சி. அட இன்னுமுமா தெரியல நம்ம எஸ்.ஆர்.எம்., கல்லூரி ஓனரு பச்சமுத்துங்க.


நம்ம பாரி வேந்தரு கட்சி தொடங்கியதுக்கு முக்கிய காரணம் இருக்கு. அது என்னன்னா திருச்சி எஸ்.ஆர்.எம்., காலேஜ்ல வர்ற பணத்தில ஒரு பெருமளவு பங்கை அகில உலகின் பெண் கவிதை புரட்சியாளர் கனிமொழி பங்கு கேட்டாங்களாம். அதை தடுக்கவே கட்சி ஆரம்பித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன. அது மட்டுமில்லாமல் மொத்த எஸ்.ஆர்.எம்.,மையும் அப்படியே அல்லாக்க தூக்கி மல்லாக்க போட்டுகிடுறதா பேச்சு வர்ற கதிகலங்கி ஆரம்பித்தது தான் நம்ம இந்தியா ஜனநாயக கட்சி.

சரி.. கட்சி தொடங்குறதா முடிவாயிடுச்சு. என்ன செய்தார் நம்ம பாரி வேந்தர்.?  'புதிய தலைமுறை'னு ஒரு தமிழ் பத்திரிக்கையை தொடங்கிட்டார். அதன் அமைப்பாளராக இருப்பவர் சத்தியநாராயண 'உடையார்'. இளைஞர், இளைஞர்களுக்காக அப்படி இப்படி பில்டப் கொடுத்ததால நானும் முதல்ல ஒரு மாசம் வாங்கி படிச்சேன். ஆனா எதிர்பார்த்த அளவு சமாச்சாரம் இல்லாததால அது புஸ்க்..

அடுத்து என்ன பண்ணினார். அட அரசியலுக்கு வரணும்னா டாக்டர் பட்டம் வேணாமா.? அதையும் பக்காவா அடிச்சு புடிச்சு அப்படியே லவட்டிகிட்டாரு நம்ம பாரி. எவ்வளவு காசு கொடுத்தாரோ என்னவோ லண்டன்ல இருந்து டாக்டர் பட்டமாம். ஹி ஹி.. ஓவரா இல்ல.


அப்பரம் ஒருவழியா கட்சிய ஆரம்பிச்சுட்டார்.இவரு இவரோட ஜாதியான பார்க்கவ குல சங்கத்தின் முக்கிய பதவியில் இருந்தார். கட்சி ஆரம்பித்த பாரி வேந்தர் முக்கியமாக நம்புவது தம் சாதி மக்களையே.! அதாங்க சாதியே வேணாம், சாதி கட்சியே கூடாது, சாதி ஓட்டு போடகூடாதுன்னு சொல்லுவாங்களே அதே சாதி தான்.

அங்க வச்சாங்க அவருக்கு ஆப்பு. கட்சி ஆரம்பித்தால பேமஸ் ஆகிடுவாரோன்னு(ஆயிட்டாலும்.!) பயந்து அவருடைய சக ஜாதி முக்கிய பிரமுகர்கள் அவரை சங்கத்திலிருந்து அந்த குறை இந்த குறைன்னு சொல்லி தூக்கிட்டாங்க. வெளியில் அவர் நமது ஜாதியின் நலனுக்காக தானே எனது கட்சி என அவர்களிடம் பில்டப் கொடுத்திருந்தாலும் உள்ளே நம்மை கண்டும் பயப்புடுறாங்களேன்னு அவருக்கு சந்தோசம் தான்.

கட்சி ஆரம்பித்து அவரது சாதி காரர்களை சேத்துகொண்டு கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். ஆனா எல்லோரும் இவரை காமெடி பீஸாகவே பார்த்தார்கள். இதனால் வெகுண்டு எழுந்த பாரி வேந்தர் தனியாக எல்லா தொகுதியிலயும் போட்டியிடுவதாக சொல்லிவிட்டார். (ஹி ஹி.. யாராச்சும் கூட்டணி தந்திருக்கலாம்ல..)

கட்சி பலத்தை அதிகரிக்க பழைய,புதிய என எல்லா எஸ்.ஆர். எம்., மாணவர்களுக்கும் லெட்டர் பறந்திருக்கு. அரசியலில் நாட்டம் உள்ளவர்கள் கட்சியில் சேரலாம்,இல்லாதவர்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கடிதம் வந்திருக்கிறது. இதை படித்த மாணவர்களிடம் என்ன செய்ய போகிறீர்கள் என கேட்டதுக்கு ஒரே சிரிப்பாய் சிரித்தனர்.(இருக்காதா பின்ன.!)


பின்னர் இப்போது கட்சியின் பிரச்சாரம் சூடாக போய் கொண்டிருக்கிறது. அதற்கு வேலை செய்ய தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு OD தருகிறேன் என ஆசைகாட்டி பிரச்சாரத்திற்கு ஊர் ஊராய் அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கே அவர்கள் ஒவ்வொருவருக்கும் மைண்ட் வாஷ் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது தங்கள் கட்சியின் பெருமையை பற்றி ஊக்குவிக்காமல் அவர்களின் சாதியை ஊக்குவித்து அதாவது உடையார் தான் அவர்கள் இவர்கள் என பில்டப் கொடுத்து எல்லோரின் மனதையும் மாற்றுகிறார்கள். பின்னர் சாதியின் பேரை சொல்லி வாக்குகள் சேகரிக்கபடுகிறது. மொத்தமுள்ள அனைத்து தொகுதியிலும் போட்டியிடும் இக்கட்சியின் இலக்கு 20தொகுதிகள் தாம்.

சமீப நாட்களாக எல்லா கட்சிகள் தொடர்பில்லா பத்திரிக்கைகளின் முதல் பக்கத்தில் இவருக்கான விளம்பரம் வந்துகொண்டிருக்கிறது. மோதிரம் சின்னத்தில் வாக்களியுங்கள் என தமிழ் பத்திரிக்கைகளிலும் vote for ring என ஆங்கில பத்திரிக்கைகளிலும் விதவிதமாக விளம்பரம் செய்கிறார்கள். அதில் நான் ஒருநாள் பார்த்தபோது,

"மாறி மாறி இரு கழகங்களும் தமிழ்நாட்டில் ஊழல் செய்தது போதும்.!
அதை தடுக்கு எங்களுக்கு வாக்களியுங்கள்"

என்னும் வாசகம் எழுதியிருந்தார்கள். அப்படியானால் அதற்கு என்ன அர்த்தம்.? கழகங்கள் காசு பார்த்துவிட்டன.. இனி நாங்கள் பார்க்கவேண்டும் என சொல்கிறார்கள். ஹி ஹி.. இவங்க ஊழல் பண்ணபோறோம்னு எப்படி நாசூக்கா சொல்றாங்கப்பா.!!

பச்சமுத்துவை பற்றி தெரிந்த சில. சரியான ஜாதிவெறி பிடித்தவர். ஜாதி பெயர் சொல்லி யார் வந்தாலும் வாரி வாரி வழங்குவார். மேலும் ப்ரச்சாரம் சென்றிருந்த உடையார் மாணவர்களுக்கு பரிட்சைமட்டும் எழுதுங்க பாஸ் ஆக்க வேண்டியது எங்கள் பொறுப்பு என சொல்லியிருக்கின்றனர். என்ன ஒரு பறந்த மனப்பான்மை.!


இப்படிபட்டவர் அல்லவா நம் தமிழகத்தை ஆள வேண்டும்.! எனவே அனைவரும் ஓட்டளியுங்கள் மோதிரம் சின்னம்.!! என்னங்க தேடுறீங்க.? யார் ஜெயிப்பார்னா.? அட நம்ம பாரி வேந்தர் தாங்க.. அப்பரம் எதுக்கு கலைஞர் போட்டோ.? கீழ பாருங்க..

இப்படி நாங்க பேசிட்டிருக்கும் போதே.. ஒருவன் டே மாப்ள கலைஞர் *&%&$&*&*(%*$னு பேச ஆரம்பிச்சுட்டான். காரணம் கேட்டா.!! நேற்று கலைஞர் டிவி(சேனல்ங்க.. அந்த ஓசி டிவி இல்ல) பாத்துட்டு இருந்தப்ப ஒரு விளம்பரம் வந்தது. அதில் மீனவ வேஷங்களில் சிலர் கலைஞரை பாராட்டி பாட ஓட்டு கேட்பது போல இருந்தது. மீனவ ப்ரச்சனைக்கு ஒரு தீர்வு கட்டமுடியாமல் எம் மீனவர் அங்கு செத்து மடிந்திருக்கும்போது எவனாவது ஒருவன் கலைஞர் வாழ்க என சொல்வானா.? இப்படியொரு விளம்பரம் கலைஞருக்கு என்ன கேடா.?*%*&%$#%&%)( என அவன் மேலும் தொடர.. அதிரிபுதிரியாக அடித்தோடினோம் நாலா புறமும். யப்பா.!! ஆட்டோ கீட்டோ வந்திடபோகுது..

Comments

 1. @ஓட்ட வடை: எல்லா பாத்துகிடலாம்னு ஒரு நினப்பு தான்..

  ReplyDelete
 2. தலைப்பே உள்ளுரையைத் தெளிவாக்கி விட்டதே!

  ReplyDelete
 3. நான்தான் செக்கண்டு...

  ReplyDelete
 4. கொய்யால லைக் பட்டன் வேலை செய்ய மாட்டேங்குது கழுதை....

  ReplyDelete
 5. கிழவனின் ஸ்டன்ட்டே ஸ்டண்டு கொய்யால....

  ReplyDelete
 6. கண்டிப்பா எந்த சாதிக் கட்சிக்கும் என் ஓட்டு இல்லை

  ReplyDelete
 7. "...அவருடைய சக ஜாதி முக்கிய பிரமுகர்கள் அவரை சங்கத்திலிருந்து அந்த குறை இந்த குறைன்னு சொல்லி தூக்கிட்டாங்க...."

  எல்லா சாதிகளிலும் இதுதான் நடக்கிறது. சிறப்பாகவே அலசியுள்ளீர்கள். தங்களின் தொகுப்பு அப்படியே அனைத்து வகையான சாதிய அரசியல்வாதிகளுக்கும் பொருந்தக் கூடியது.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. சாதிக்கட்சிக்கு ஓட்டு இல்லை.. எதையாவது சாதிக்கும் கட்சிக்கே..ஓட்டு.. அது சுயேட்சை என்றால் கூட தேவலை.

  ReplyDelete
 9. குட்டிச்சுவரு அரசியலுங்கோ.!//

  வணக்கம் சகோ, தாமதத்திற்கு மன்னிக்கவும், எல்லா ஊரும் ஓடிப் போயி ஒரு சில பதிவுகளைப் படிச்சு வரும் போது களைத்து விட்டேன்;-))

  நீஙக உங்கவூரு குட்டிச் சுவரிலை எலக்சன் வைக்கலியா?
  நல்ல வேளை, கடவுள் காப்பாத்திட்டாரு, இல்லேன்னா எல்லாமே இலவசம் என்று குட்டிச் சுவரிலையே ஒரு கட்சி ஆரம்பித்திடுவீங்க;-)))

  ReplyDelete
 10. ஜெ., ஒரு படி மேல போயி நான் உங்க சகோதரின்னு போட்டாங்க.. ஆனா யார் பப்பும் வேகல.. இதுல சிலர் ஓட்டு வேற சுயேட்சைக்கு போடபோறன் எனக்கு காசு வரலன்னு பொலம்புறாங்க(நான் யாரையும் குறிப்பிடலைங்கோ.!!)//

  கொடுக்கிற எமவுண்டை எல்லோருக்கும் சமனா பங்கிட்டுக் கொடுக்கிறது...

  ReplyDelete
 11. நம்ம பாரி வேந்தரு கட்சி தொடங்கியதுக்கு முக்கிய காரணம் இருக்கு. அது என்னன்னா திருச்சி எஸ்.ஆர்.எம்., காலேஜ்ல வர்ற பணத்தில ஒரு பெருமளவு பங்கை அகில உலகின் பெண் கவிதை புரட்சியாளர் கனிமொழி பங்கு கேட்டாங்களாம். அதை தடுக்கவே கட்சி ஆரம்பித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் சொல்கின்றன.//

  அந்த பணத்தை நல்ல வழியிலை பயன்படுத்துறதை வுட்டிட்டு, வீணாப் போன வேலையிலை மனுசன் இறங்கிட்டாரு...

  இனிமே அவருக்கு ஏழரை கன்போர்ம் தான்.

  ReplyDelete
 12. அங்க வச்சாங்க அவருக்கு ஆப்பு. கட்சி ஆரம்பித்தால பேமஸ் ஆகிடுவாரோன்னு(ஆயிட்டாலும்.!) பயந்து அவருடைய சக ஜாதி முக்கிய பிரமுகர்கள் அவரை சங்கத்திலிருந்து அந்த குறை இந்த குறைன்னு சொல்லி தூக்கிட்டாங்க. வெளியில் அவர் நமது ஜாதியின் நலனுக்காக தானே எனது கட்சி என அவர்களிடம் பில்டப் கொடுத்திருந்தாலும் உள்ளே நம்மை கண்டும் பயப்புடுறாங்களேன்னு அவருக்கு சந்தோசம் தான்.//

  சகோதரம், குட்டிச் சுவத்திலை கூட turning point வைத்து செம திரில்லிங்கா பேசுறீங்களே..

  ச்பாஷ்..
  இந்தப் பாரி வேந்தரைப் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன்.

  ReplyDelete
 13. "மாறி மாறி இரு கழகங்களும் தமிழ்நாட்டில் ஊழல் செய்தது போதும்.!
  அதை தடுக்கு எங்களுக்கு வாக்களியுங்கள்//

  ஆஹா.. ஆடு நனையுது என்று ஓநாய் அழுத கதைமாதிரியெல்லோ இது இருக்கு

  ReplyDelete
 14. ப்ரச்சாரம் சென்றிருந்த உடையார் மாணவர்களுக்கு பரிட்சைமட்டும் எழுதுங்க பாஸ் ஆக்க வேண்டியது எங்கள் பொறுப்பு என சொல்லியிருக்கின்றனர். என்ன ஒரு பறந்த மனப்பான்மை.!.//

  பாஸ் குட்டிச் சுவத்திலை பிரச்சாரம் என்று வரனும் பாஸ்

  ReplyDelete
 15. மோதிரம் சின்னம் ரொம்ப உள் கூத்து விடயமாகத் தெரிகிறது...
  சத்தியமா இந்த உள் கூத்து யாரை வைச்சு பண்ணுறீங்க என்று பதிவின் இறுதி வரை புரியலை.. அந்தளவிற்கு எதிர்பார்ப்பை கூட்டி எழுதியிருக்கிறீங்க..

  இது தான் சஸ்பென்ஸ் வைக்கிற குட்டிச் சுவர் அரசியலா;-))
  வாழ்க உங்கள் ஜனநாயகம்.

  அப்புறம் கலைஞரைப் பற்றியும் மீனவர் சங்கத்தைப் பத்தியும் ஒரு அரிவாளைப் போட்டு, அரங்கத்தையே ஆட வைத்து விட்டீர்கள்..

  குட்டிச் சுவத்திலை கொஞ்சம் சிறு சிறு காமெடி பீசுகளைச் சேர்த்திருந்தால் நன்றாக இருக்கும்.

  என் போன்ற தமிழக அரசியல் கத்துக் குட்டிகளுக்கு குட்டிச் சுவரு, சீனப் பெருஞ் சுவரு பாஸ்!

  ReplyDelete
 16. எக்ஸ் கியூஸ் மீ பாஸ்! ஏன் இந்தாக் கமெண் மாடரேசன்?
  நம்ம குட்டிச் சுவரின் கருத்துச் சுதந்திரத்தை முடக்க கலைஞர் ஆட்டோவிற்கு பதிலா ஆளை அனுப்பிட்டாரோ!

  ReplyDelete
 17. தம்பி...எப்பிடித்தான் சும்மா எகிறினாலும் பயம் இருக்குத்தான்....யாருக்கு ?

  ReplyDelete
 18. அடங்கொன்யா
  இப்பதானே உண்மை தெரியுது.

  ReplyDelete
 19. @இராஜ:ஹி ஹி.. இது கலாய்ப்புங்க..

  ReplyDelete
 20. @மனோ:ஹி ஹி.. ஏங்க தனியா வந்து புலம்பிட்டு இருக்கீங்க.?

  ReplyDelete
 21. @எல் கே:கண்டிப்பா அண்ணா.. இப்படியெல்லாம் இருக்கிறவங்களுக்கு யாருமே ஓட்டு போடகூடாது..

  ReplyDelete
 22. @ஊரான்:நன்றிங்க.. உங்கள் வருகைக்கு..

  ReplyDelete
 23. @சிபி:அட விசயகாந்த் மாதிரி பஞ்ச் எல்லாம் போடுறாருப்பா.. ஹி ஹி

  ReplyDelete
 24. @நிரூபன்:தாமதமா இருந்தாலும் வந்தீர்களானு தான் பாப்பேன்..

  //ச்பாஷ்..
  இந்தப் பாரி வேந்தரைப் பற்றி இன்று தான் அறிந்து கொண்டேன்//

  நல்லா தெரிஞ்சுகிட்டீங்களா.?? தெரிஞ்சுகலாமலே இருந்திருக்கலாம்..


  //பாஸ் குட்டிச் சுவத்திலை பிரச்சாரம் என்று வரனும் பாஸ்//

  குட்டிச்சுவரு இலக்கணம், இலக்கியம் அறியாது பாஸ்..

  //சத்தியமா இந்த உள் கூத்து யாரை வைச்சு பண்ணுறீங்க என்று பதிவின் இறுதி வரை புரியலை..//

  அட இவரு ஓனருன்னு ஒரு காலேஜ் பேரு சொல்றாருல்ல அந்த காலேஜ்ல தான் நான் படிச்சேன்..

  //கலைஞர் ஆட்டோவிற்கு பதிலா ஆளை அனுப்பிட்டாரோ!//

  இல்லை.. கலைஞர் கூட இப்பலாம் அடங்கி இருப்பார்.. ஆனா பச்சமுத்து போல ஆளுங்க அலப்பறைய கூட்டுவாங்க.. அதான்..

  ReplyDelete
 25. //தம்பி...எப்பிடித்தான் சும்மா எகிறினாலும் பயம் இருக்குத்தான்....யாருக்கு ?//

  எனக்கும், கலைஞருக்கும் தான்..

  ReplyDelete
 26. @பலே பிரபு://அடங்கொன்யா
  இப்பதானே உண்மை தெரியுது.//

  பாருடா.. தெரிஞ்சுகிட்டாராம்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!