உலககோப்பை அலப்பறைகள்..!!

உலககோப்பை முடிஞ்சிடுச்சு.. அடுத்து என்ன ஐ.பி.எல்., தான். ஒழுங்கா உருப்படியா வேலைய பாக்கலாம்னு பாத்தா இவனுங்க மாத்தி மாத்தி மேட்ச் போட்டு என்ன வேலைய உட்டு வெளியே வர வச்சிடுவானுங்க போலிருக்கு.!(இந்த ஐபிஎல் முடியறதுக்குள்ள என்ன வேலைய உட்டு தூக்கலனா உனக்கு கெடா வெட்டுறன் ஆத்தா.!!)


ஐபிஎல் உள்ள போகும் முன்னாடி கடந்த உலககோப்பை.. அட நம்ம இந்தியா கலக்கனாங்களே அதே உலககோப்பை தாங்க. அதில் இந்தியா-ஆஸியை அடிச்சு விரட்டினபிறகு குர்ர்ர்ர் மூஞ்சு கேப்டன் பான்டிங் அவர்கள் இந்தியா ஒரு சிறந்த அணி அப்படினு சொன்னார். இந்தியா-ஆஸின்னு சொன்னாலே வாய்ப்போர் இருக்கிற இடத்தில பான்டிங் இப்படி சொன்னது உண்மையிலே ஆச்சர்யபடவேண்டிய விசயம் தான். பின்ன உலககோப்பையில தோத்துபுட்டு ஒழுங்கா ஆடல அதான் தோத்தோம்னு சொன்னா அவிங்க ஊர்ல பெண்ட கயிட்டிடமாட்டாங்க. அதான் இந்த உட்டாலக்கடி, டபரடக்கா வேலை.


அடுத்து நடந்தது தான் அதைவிட பெரிய காமெடி. அப்ரிதி-ஒரு காலத்தில் இந்தியாவை முறைத்தபடி, ஏதோ அவன் ஆயாவ அபேஸ் பண்ணிய மாதிரியே முறைப்பவர் ஏனோ சரி ஸ்மூத்தா மூவ் பண்ணினார். என்னடா இது ஆச்சர்யம் என இருக்கும் போது இன்னொரு இன்ப அதிர்ச்சி தந்தார். போட்டியில் தோற்றவுடன் பாகிஸ்தான் மீடியாக்கள் 'இந்தியாவிடம் தோற்றார்கள்' என அலப்பறைக்க அதற்கு அப்ரிதி 'ஏன் இந்தியர்களிடம் மட்டும் உங்களுக்கு இவ்வளவு கோபம்' என சீறினார். பயபுள்ளைக்கு அங்க போனதும் என்னா ஆச்சோ.!! எவன் பேச சொன்னானோ.!! இந்திய மீடியாக்கள் பாக்-இந்தியா உறவை விரும்பவில்லை.. எங்களை போன்ற நல்ல குணம் இந்தியர்களுக்கு கிடையாது போன்று நம் வடிவேலு மாதிரி கொஞ்சம் பேசினார். அட இவரு என்ன நம்மள விட பெரிய அப்பாடக்கராய் இருப்பாரோன்னு பான்டிங் யோசித்தார்.


அடுத்தது வந்தது பைனல். இந்தியா வாகை சூடிய போது இலங்கை கேப்டன் சங்ககாரா, ''இந்தியாவுக்கு எதிராய் 350 அடித்தாலும் பத்தாது'' என பேட்டியளித்தார். அவர் முகத்தில் இருந்து அது விரக்தி மற்றும் முழு மனதோடு சொன்னது தெரிந்தது. ஒரு சிறந்த ஆட்டக்காரராய் சங்ககாராவை எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். ஆனால், அன்று டாஸ் போட்ட சமயத்தில் ஒரு குழப்பம் வந்தது. அதில் முதிலில் டாஸ் போட்டபோது கூட்டம் சத்தத்தால் ரெப்ரிக்கு சங்ககாரா சொன்னது காதில் விழாமல் போகவே கேப்டன்களிடம் பரிசீலிக்கப்பட்டு மீண்டும் ஒரு முறை டாஸ் போடப்பட்டது. சங்ககாரா தாம் இதை தான் சொன்னார் என அழுத்தி சொல்லியிருந்தால் கண்டிப்பாக எல்லோரும் ஒத்திருப்பர். ஆனால் அவர் சொல்லாதது, அதிலிருந்து அன்று அவருக்கு டாஸ் சாதகமாக அமையவில்லை என்பது தெரிகிறது. அதனால் மீண்டும் ஒரு முறை டாஸ் போட்டு செயிச்சதால் மேட்ச் தோற்றுவிட்டார்(ஹி ஹி..) கள்ள ஆட்டம் ஆடினல இப்படி தான் ஆகும்..

இதன் பிறகு ராஜபக்ஷே இந்தியாவின் சந்தோசத்துக்கு உட்டோம், அவிங்க ஆயாவுக்கு உட்டோம் அப்படி இப்படினு சில காமெடிகளை தூவியிருந்தாலும் அவரு ஒரு டம்மி பீஸ் என்பது மாறாது.


இப்படி இருக்கையில் நண்பர் ஒருவர் சொன்னார். ஈழத்தில் மக்கள் பலர் வீட்டில் வெடிகளை வாங்கி வைத்துக்கொண்டு இந்தியா செயிச்சதும் வீதியில் வெடித்து மகிழ்ந்தார்கள் என. அப்படி மகிழையில் அருகில் இருக்கும் மிலிட்டரி கேம்ப்பில் இருந்து சிலர் வந்து இலங்கை தோற்றதால் வெடிப்பது ஏன் என மிரட்ட அதற்கு நம் சகாக்கள் இலங்கை செயிக்கும் என வாங்கினோம் ஆனால் செயிக்கல அதனால வாங்கினது வீணாகிடகூடாதுன்னு வெடிச்சதாய் சொல்லியிருக்கின்றனர். அதை இன்னும் ரெண்டு நாட்கள் கழித்து வெடிக்களாமே என கேட்டு நம் ஈழ மக்களை அடித்திருக்கின்றனர் மிலிட்டரி காரங்க. ஈழமக்களே தப்பு பண்ணிட்டீங்க.. வெடிய கொலுத்தி அவனுங்க வாயில போட்டிருக்கணும்.

இப்படிலாம் சில பல விசயங்க இன்டர்நேஷனல் லெவல்ல நடந்திருந்தாலும் இப்போ நம்ம உள்ளூரு கலக்கலு.. அய்யோ மேட்ச் தொடங்கிடுச்சு.. ஐபிஎல் பத்தி சொன்ன அடுத்த பதிவுல பாத்துகிடலாம்.. 

Comments

 1. அடுத்த அலப்பறைகள் ஆரம்பிச்சிட்டாங்கப்பா..
  அதாங்க iPL 20 20

  ReplyDelete
 2. கிரிக்கெட்டுக்கும் எனக்கும் நூறாம் பொருத்தம். ஒரு வணக்கத்தையும் லைக்கையும் போட்டுட்டு கிளம்புறேன் மக்கா...

  ReplyDelete
 3. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்

  http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_08.html

  ReplyDelete
 4. ஈழத்தில் மக்கள் பலர் வீட்டில் வெடிகளை வாங்கி வைத்துக்கொண்டு இந்தியா செயிச்சதும் வீதியில் வெடித்து மகிழ்ந்தார்கள் என. அப்படி மகிழையில் அருகில் இருக்கும் மிலிட்டரி கேம்ப்பில் இருந்து சிலர் வந்து இலங்கை தோற்றதால் வெடிப்பது ஏன் என மிரட்ட அதற்கு நம் சகாக்கள் இலங்கை செயிக்கும் என வாங்கினோம் ஆனால் செயிக்கல அதனால வாங்கினது வீணாகிடகூடாதுன்னு வெடிச்சதாய் சொல்லியிருக்கின்றனர். அதை இன்னும் ரெண்டு நாட்கள் கழித்து வெடிக்களாமே என கேட்டு நம் ஈழ மக்களை அடித்திருக்கின்றனர் மிலிட்டரி காரங்க. ஈழமக்களே தப்பு பண்ணிட்டீங்க.. வெடிய கொலுத்தி அவனுங்க வாயில போட்டிருக்கணும்.

  hi...hi.....hi....

  ReplyDelete
 5. அதை இன்னும் ரெண்டு நாட்கள் கழித்து வெடிக்களாமே என கேட்டு நம் ஈழ மக்களை அடித்திருக்கின்றனர் மிலிட்டரி காரங்க. ஈழமக்களே தப்பு பண்ணிட்டீங்க.. வெடிய கொலுத்தி அவனுங்க வாயில போட்டிருக்கணும் -----சபாஷ்..

  ReplyDelete
 6. கலக்கல் பதிவு..
  http://sakthistudycentre.blogspot.com/2011/04/blog-post_1913.html

  ReplyDelete
 7. தம்பி மதி...
  சிவப்புச்சால்வைக்காரருக்கு இந்தியா மரியாதை குடுக்கலியாம்.என்னமோ இவ்ளோ நாளும் இருந்தமாதிரி.
  கூப்பிட்டு வச்சு கும்மியடிச்சு அனுப்பியிருக்காங்க.சந்தோஷத்துக்கு மேல சந்தோஷம் !

  யாழில் வெடிகொளுத்தினது உண்மைதான்.எங்கள் வீட்டிலும் சொன்னார்கள் !

  ReplyDelete
 8. (இந்த ஐபிஎல் முடியறதுக்குள்ள என்ன வேலைய உட்டு தூக்கலனா உனக்கு கெடா வெட்டுறன் ஆத்தா.!!)//

  கிறிக்கற் என்றால் வேலையினையும் மறந்து போடுவீங்க போல இருக்கே......நாசூக்காக சொல்லுகிறீர்கள் சகோ,

  ReplyDelete
 9. ஆஸின்னு சொன்னாலே வாய்ப்போர் இருக்கிற இடத்தில பான்டிங் இப்படி சொன்னது உண்மையிலே ஆச்சர்யபடவேண்டிய விசயம் தான். பின்ன உலககோப்பையில தோத்துபுட்டு ஒழுங்கா ஆடல அதான் தோத்தோம்னு சொன்னா அவிங்க ஊர்ல பெண்ட கயிட்டிடமாட்டாங்க. அதான் இந்த உட்டாலக்கடி, டபரடக்கா வேலை.//

  சகோ இந்த மேட்டரை இங்கிபீஸிலை நீங்கள் டான்ஸிலேட் பண்ணி, ஆஸ்திரேலிய மக்களுக்கு தெரியும் வண்ணம் பதிவாக்கி, ஆங்கிபீசு திரட்டிகளிலை இணைத்து....நோகடிக்கணும் பாஸ்.

  ReplyDelete
 10. மீடியாக்கள் 'இந்தியாவிடம் தோற்றார்கள்' என அலப்பறைக்க அதற்கு அப்ரிதி 'ஏன் இந்தியர்களிடம் மட்டும் உங்களுக்கு இவ்வளவு கோபம்' என சீறினார்.//

  இவனு ரொம்ப...............................நல்லவன் சகோ, அதான் அப்பீட் ஆயிட்டான்.......

  ஒரு வேளை தோற்றாலும் மீசையிலை மண் ஒட்டவில்லை என்று சிந்தித்திருப்பாரோ;-)))

  நம்ம் தமிழ்ப் பழமொழியை தீவிரவாதிங்க யாராச்சும் உல்டா செஞ்சு கொடுத்திட்டாங்க போல.

  கப்டனோடை அடுத்த படத்திற்கு ஸ்கிறிப்ற் றெடி.

  ReplyDelete
 11. அடுத்தது வந்தது பைனல். இந்தியா வாகை சூடிய போது இலங்கை கேப்டன் சங்ககாரா, ''இந்தியாவுக்கு எதிராய் 350 அடித்தாலும் பத்தாது'' என பேட்டியளித்தார். அவர் முகத்தில் இருந்து அது விரக்தி மற்றும் முழு மனதோடு சொன்னது தெரிந்தது//

  சங்காவின் உள்ளுணர்வை அப்படியே உறிஞ்சி எடுத்திருக்கிறீங்களே
  அது எப்பூடி பாஸ்?

  ReplyDelete
 12. அதனால் மீண்டும் ஒரு முறை டாஸ் போட்டு செயிச்சதால் மேட்ச் தோற்றுவிட்டார்(ஹி ஹி..) கள்ள ஆட்டம் ஆடினல இப்படி தான் ஆகும்..//

  நீங்க விஞ்ஞானி ஆகிட்டீங்க பாஸ்.!

  வாழ்க இளைய விஞ்ஞானி! சகோ தம்பி கூர்மதியன்!

  ReplyDelete
 13. இதன் பிறகு ராஜபக்ஷே இந்தியாவின் சந்தோசத்துக்கு உட்டோம், அவிங்க ஆயாவுக்கு உட்டோம் அப்படி இப்படினு//

  சகோ, இவங்க திருந்தவே மாட்டனுக, தோற்றாலும், தோல்வியை ஒத்துக் கொள்ளாதா நாசக்கார பசங்க.....


  சாரி என் பின்னூட்டத்தில் ஒரு எழுத்து மாறி வந்துவிட்டது என்று நிச்சயமாக சொல்ல மாட்டேன்,

  இவங்களுக்கு எல்லாம் நம்ம லத்திகா டீவிடியை லபக்கென்னு பிடிச்சு கட்டி வைச்சு நாற்பது தடவை பார்க்க வைக்க வேணும்!(வசனம் உபயம் நண்பர் பன்னிக்குட்டி ராம்சாமி)

  ReplyDelete
 14. ஈழமக்களே தப்பு பண்ணிட்டீங்க.. வெடிய கொலுத்தி அவனுங்க வாயில போட்டிருக்கணும்.//

  வெடி கொளுத்தினது உண்மையான விடயம் சகோ,
  ஆனால் ஒரு விசயம், வாயிலை வெடியைக் கொளுத்திப் போட்டால் நம்மளை வெள்ளை வானிலை தூக்கிடுவாங்க சகோ,

  ReplyDelete
 15. சகோ, கிறிக்கற் அலப்பறைகள்......கிறிக்கற்றை வைச்சு, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் தேசப் பற்றுக் கலந்து கிச்சுக் கிச்சு மூட்டியிருக்கிறீங்க.

  ReplyDelete
 16. அப்ரிடி இங்கே அப்படி சொல்லிட்டு...அவிங்க ஊரில் போயி அப்படியே உல்டாவா பேசிய பேச்சு தெரியாதா கூர்...:)) அப்புறம் இலங்கையில் நடந்த அந்த பட்டாசு சம்பவம் ரொம்ப கஷ்டமா இருந்தது....

  ReplyDelete
 17. @சௌந்தர்:அட வடை உங்களுக்கு தாங்கோ.!!ஆனா கொஞ்சம் படிச்சு பாருங்க இது ஐபிஎல் பத்தி இல்லங்க..

  ReplyDelete
 18. @சித்ரா::))))))))))))))))))))))))) எப்படி உங்களை விட பெரிய சிரிப்பா சிரிச்சேனா.??

  ReplyDelete
 19. @மனோ: ஒரு வேண்டுகோள் பாஸ்.. உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்காது என்றால் வோட்டு போடாதீங்க.. புரியாத பதிவுக்கு ஓட்டு வேஸ்ட் தானே!!!

  ReplyDelete
 20. @மக்கா சௌந்தர்: பார்த்தேன் மக்கா.. தேங்க்ஸ்..

  ReplyDelete
 21. @ஓட்ட வடை:தேங்க்ஸ் மாப்பு.. ஹி ஹி

  ReplyDelete
 22. @சிபி: ஹி ஹி.. அப்படிலாம் சொல்லிடமுடியாதுங்க..

  ReplyDelete
 23. @ஹேமா:உங்க சந்தோசம் எனக்கும் சந்தோசம்.. அந்த நிகழ்வை யாழ் நண்பர் தான் சொன்னார்.. உறுதிபடுத்தியதுக்கு நன்றி..

  ReplyDelete
 24. @நிருபன்: //றிக்கற் என்றால் வேலையினையும் மறந்து போடுவீங்க போல இருக்கே......நாசூக்காக சொல்லுகிறீர்கள் சகோ,//

  ஹி ஹி.. சச்சின் ஆடுனா கண்ணு அசையாதுங்க..

  ReplyDelete
 25. //சகோ இந்த மேட்டரை இங்கிபீஸிலை நீங்கள் டான்ஸிலேட் பண்ணி, ஆஸ்திரேலிய மக்களுக்கு தெரியும் வண்ணம் பதிவாக்கி, ஆங்கிபீசு திரட்டிகளிலை இணைத்து....நோகடிக்கணும் பாஸ்.//

  நாளைபின்ன நான் ஆஸி பக்கம் போககூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்க போல

  ReplyDelete
 26. //கப்டனோடை அடுத்த படத்திற்கு ஸ்கிறிப்ற் றெடி.//

  ஹி ஹி.. கிரிக்கெட்டையும் நாசமாக்கனுமா.?

  ReplyDelete
 27. //சங்காவின் உள்ளுணர்வை அப்படியே உறிஞ்சி எடுத்திருக்கிறீங்களே
  அது எப்பூடி பாஸ்?//

  சங்கா எனக்கு பிடிச்ச ப்ளேயர்..

  ReplyDelete
 28. //சகோ, கிறிக்கற் அலப்பறைகள்......கிறிக்கற்றை வைச்சு, கொஞ்சம் காமெடி, கொஞ்சம் தேசப் பற்றுக் கலந்து கிச்சுக் கிச்சு மூட்டியிருக்கிறீங்க.//

  நன்றி சகோ.!!

  ReplyDelete
 29. @ஆனந்தி://அப்ரிடி இங்கே அப்படி சொல்லிட்டு...அவிங்க ஊரில் போயி அப்படியே உல்டாவா பேசிய பேச்சு தெரியாதா கூர்...:)) அப்புறம் இலங்கையில் நடந்த அந்த பட்டாசு சம்பவம் ரொம்ப கஷ்டமா இருந்தது....//

  தெரியும் அதையும் தான் இங்கே போட்டிருக்கேன்..

  ------எவன் பேச சொன்னானோ.!! இந்திய மீடியாக்கள் பாக்-இந்தியா உறவை விரும்பவில்லை.. எங்களை போன்ற நல்ல குணம் இந்தியர்களுக்கு கிடையாது --------

  இதை படிக்கலையா.??

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!