கள்ள ஓட்டு கண்டுபிடிக்கும் நவீன மிஷின் சார்.!!

தேர்தல் நெருங்குன நேரத்துல ஒரு இந்திய குடிமகனா(ஆப்ரிக்கால இருந்து தப்பிச்சு வந்ததா சொன்னாங்க..) நாம நம்ம நாட்டுக்கு ஏதாச்சும் பண்ணனுமேனு யோசிச்சுகிட்டு இருந்தேன்.


சரி தேர்தல்னா முக்கிய ப்ரச்சனை என்ன.? அட கள்ள ஓட்டுங்கற கருமாந்திரம் தான். அத தடுக்க நம்மாள ஏதாச்சும் செய்ய முடியுமா அப்படினு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

என்னதான் எழுத்துனு நம்ப ரூட் மாறியிருந்தாலும் அடித்தளத்துல நாம ஒரு கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட் தானே.!! சரி இத மாத்த என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது நான் காலேஜ் இரண்டாமாண்டு செஞ்ச பயோமெட்ரிக்ஸ் பத்திய பேப்பர்ஸ் ஞாபகம் வந்தது.

பயோமெட்ரிக்ஸ்னா அதாங்க கண்ண வச்சு செக் பண்றது, கைரேகை வச்சு செக் பண்றது அந்த மாதிரி. பெரிய பெரிய பேங்க், லாக்கர்லயெல்லாம் இந்த மாதிரி பயோமெட்ரிக் சிஸ்டத்தை உபயோகித்து தான் பாதுகாப்பு ஏற்படுத்துறாங்க.

அத உடுங்க இத வச்சு நாம எப்படி கள்ள ஓட்டை தடுப்பது.? சொல்றேன். பயோமெட்ரிக்ஸ்ல Fingerprint recognitionனு ஒரு பிரிவு இருக்கு. அதாவது கைரேகையை கணிச்சு சரி பாக்குறது.


இப்போ நம்ம ஓட்டு போடுற மெஷின்ல ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஓரமா பட்டன் இருக்கும் பாத்திருக்கீங்களா.? அதாங்க நீல கலர்ல. அந்த எல்லா பட்டனையும் தவிர்த்து அதே மெஷினில் ஒரு பட்டன் போலவே இருக்கும் Fingerprint scannerம் பொருத்தவேண்டும். இந்த ஒரு மாற்றத்தை மட்டும் அந்த மெஷினில் செய்யவேண்டும்.

பின் வாக்காளர் சர்வே எடுக்கும்போதே அந்தந்த குறிப்பிட்டவரின் Fingerprint-ன் specimen-ஐயும் எடுத்து அவருக்கான code-ல் அது பதியபடவேண்டும். ஒரு ஓட்டு சாவடியில் அதிகபட்சமாக 1400பேர் இருக்கலாம். அப்படி இருக்கையில் அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு உரித்தான மக்களின் fingerprint specimen பதியப்பட்ட கம்ப்யூட்டர் அந்தந்த ஓட்டுசாவடிக்கு அனுப்பப்படவேண்டும்.


பின்னர் வாக்காளர்கள் ஓட்டுபோடபோகும்போது control sectionல் இருக்கும் அதிகாரியிடம் அவர்களது code சொன்னால் அவர் அந்த codeக்கு உரித்தானவர் அவர்தானா என உறுதி செய்துவிட்டு அவர்களை polling sectionக்கு அனுப்புவார். இடைபட்ட நேரத்தில் அவர் அந்த codeக்கு உரித்தான fingerprint specimen-ஐ எடுத்து ரெடியாக வைத்திருப்பார். அங்கு போய் வாக்காளர் அவருக்கு விருப்பமான கட்சிக்கு நேராய் இருக்கும் பட்டனை தட்டிவிட்டு ஸ்கேனரில் விரலை வைக்கவேண்டும். அப்போது உருவாகும் specimenம் ஏற்கனவே பதியப்பட்ட specimenம் பொருந்துகிறதா என செக் செய்யணும். அப்படி பொருந்தினால் அவர் அழுத்திய வாக்கு பதியபடும். அப்படி பொருந்தாவிடில் அவரை மேற்படி விசாரணைக்கு உட்படுத்தி அவரது வாக்குகள் ஏற்றுகொள்ளாது செய்யவேண்டும். வாக்கு பதியப்பட்ட பிறகு அந்த குறிப்பிட்ட fingerprint specimen அழிச்சிடலாம்.

இப்படி ஏற்படுத்துவதன் மூலம் ஒருவர் ஒருமுறைக்கு மேல் ஓட்டு போட முடியாது. பொய்யான வாக்காளர் அட்டைகொண்டு யாரும் ஓட்டு போட முடியாது. சரியான தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை குறித்து ஆராயலாம் என்றிருக்கேன்.

இந்த fingerprint scan-கையில் ஏதாவது கீரல் பட்டிருந்தால் சப்போர்ட் செய்யாது. அத்தகைய சமயத்தில் ஒரு டூப்ளிகேட் specimenஆக இன்னொரு விரலையும் எடுத்து வைத்துகொள்ளலாம். ஒருவேளை முதல் specimen உபயோகபடாவிடில், இரண்டாவது டூப்ளிகேட் specimen-ஐ பயன்படுத்தலாம். அதிலும் தவறு ஏற்பட்டால் அவன் கள்ள ஓட்டுகாரன். உள்ள உட்டு லாடம் கட்டலாம்.

இதுக்கு பிறகு வர்றவங்களை மிரட்டி அவிங்களையே இந்த சின்னத்துக்கு தான் ஓட்டுபோடணும்னு சொன்னா என்ன பண்ணலாம்னு கேட்டா பிச்சுபுடுவன் பிச்சி.. ஆள உட்டு கவனிங்கய்யா.!! அழகிரிக்கு ஆப்பு வைக்க என்ன சாப்ட்வேரா கண்டுபுடிக்க முடியும்.? என்னால முடிஞ்சது இங்க.. உங்களால முடிஞ்சா மீதி.இது நல்ல ஐடியாவா.? இதை நான் மேலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தலாமா.? எனக்கு ஸ்பான்ஸர் யாராவது கிடைப்பாகலா.? கிடைச்சாலும் நான் செய்வேணா.? பாப்போம்.

இன்னும் என்னுடைய ப்ராஜெக்ட்ஸ் நிறைய. ஒவ்வொன்னா சொல்லலாம்னு இருக்கேன்.. என்ன சொல்றீங்க.? இதற்கான codings சில எழுத முயற்சித்து எழுதினேன். ஆனா patent காரணமா அதை இங்கே வெளியிடல. patent அளவுக்கு இது வொர்த்தான்னு நீங்க நினைக்கலாம். எனக்கு நான் என்ன செஞ்சாலும் எனக்கு பெரிசு தான். ஹி ஹி..

Comments

 1. சும்மா படிச்சுட்டு மட்டும் போயிட்டா போட்டு தள்ளிடுவன்.. வோட் பண்ணிட்டு.. கமெண்ட் போட்டுட்டு போங்க.. அம்புட்டுதேன்..

  saringa!

  ReplyDelete
 2. சும்மா படிச்சுட்டு மட்டும் போயிட்டா போட்டு தள்ளிடுவன்.. வோட் பண்ணிட்டு.. கமெண்ட் போட்டுட்டு போங்க.. அம்புட்டுதேன்..

  saringa!

  ReplyDelete
 3. வந்துட்டேன்...

  நல்ல ஓட்டு போட்டுட்டேன்...

  ReplyDelete
 4. எனக்கு முதல்லயே தெரியும்.. எங்கண்ணன் மூளைக்காரர்னு...

  ReplyDelete
 5. >>எனக்கு நான் என்ன செஞ்சாலும் எனக்கு பெரிசு தான். ஹி ஹி..


  ஹி ஹி ஹி எனி உள்குத்து?

  ReplyDelete
 6. நம்மாள இன்ட்லி மண்டையிலதான் குத்த முடியும், குத்திட்டேன்....

  ReplyDelete
 7. ராஜ நடராஜன்11 April 2011 at 23:19

  //ஒரு ஓட்டு சாவடியில் அதிகபட்சமாக 1400பேர் இருக்கலாம்.//

  ஒரு ஓட்டு சாவடிக்கு 1200 பேர் மட்டுமே.

  கூர்!இவ்வளவு அடிச்சு ஆடிட்டு கடைசி நேரத்துல இந்த பதிவு போடற நீங்க நல்லவரா?கெட்டவரா:)

  தேர்தல் ஆணையத்துக்கு இதனை சொல்லியிருக்கலாமே:)

  ReplyDelete
 8. ராஜ நடராஜன்11 April 2011 at 23:23

  கூர்!நான் தமிழ்மணத்துல கூட கள்ள ஓட்டுப் போடறதில்லை.என்னை மாதிரியே எல்லோரும் இருந்திட்டா:)

  ReplyDelete
 9. ராஜ நடராஜன்11 April 2011 at 23:26

  //இது நல்ல ஐடியாவா.? இதை நான் மேலும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தலாமா.? எனக்கு ஸ்பான்ஸர் யாராவது கிடைப்பாகலா.? கிடைச்சாலும் நான் செய்வேணா.? பாப்போம்.//

  இதுவேறயா!வழில பார்த்துப் போங்கப்பு.யாராவது வந்து அள்ளிட்டுப் போயிடப் போறாங்க.வாழ்த்துக்கள்.

  சரி!Patent rights வாங்கினா எனக்கு எவ்வளவு கட்டிங்:)

  ReplyDelete
 10. சும்மா சொல்லக் கூடாது...தம்பிக்கு மதி கூர்தான்

  ReplyDelete
 11. (ஆப்ரிக்கால இருந்து தப்பிச்சு வந்ததா சொன்னாங்க..)//

  வணக்கம் சகோ, அதென்ன ஆபிரிக்காவிலை இருந்து தப்பிச்சு வந்ததா ஒரு பல்டி....பிச்சுப் புடுவன், பிச்சு,
  கறுப்பு எம்ஜி ஆரே இப்போ கலரு வார்த்தை பேசும் போது, நாம மட்டும் என்ன கொறைஞ்சா போயிட்டம்.

  ReplyDelete
 12. சரி தேர்தல்னா முக்கிய ப்ரச்சனை என்ன.? அட கள்ள ஓட்டுங்கற கருமாந்திரம் தான். அத தடுக்க நம்மாள ஏதாச்சும் செய்ய முடியுமா அப்படினு யோசிச்சுகிட்டு இருந்தேன்.//

  சகோ, நீங்க ஏதோ மிசினு, என்று தலைப்பை வைச்சதும் நம்ம ஸிமார்ட் சிஸ்டம் வியாபாரக் குழு, பயந்தே போயிட்டு, ஏன் தெரியுமா?
  எங்கடை ஸிமார்ட் கொமண்ட் பவுண்டருக்கு போட்டியா, ,மார்க்கட்டிங்கை வீழ்த்தும் நோக்கில் நீங்க ஏதாச்சும் போலிகளை உருவாக்கி, அசலாக வியாபரப்படுத்தப் போறீங்க என்று ஒரு உள் பயம் தான்.

  ReplyDelete
 13. இப்போத்தான் மல்டி பர்பஸ் நேசனல் ஐடென்டி கார்ட் கொடுக்க போறாங்கள்ல, அதுல கைரேகை பதிஞ்சுதான் எடுக்கறாங்க, அதையே தேர்தலுக்கும் பயன்படுத்தலாம்னு நினைக்கிறேன்!

  ReplyDelete
 14. என்னதான் எழுத்துனு நம்ப ரூட் மாறியிருந்தாலும் அடித்தளத்துல நாம ஒரு கம்ப்யூட்டர் ஸ்டூடண்ட் தானே.!!//

  ஒரே கல்லிலை இரண்டு விளம்பரமா?
  என்ன அது, ஒன்று கள்ள ஓட்டு மெசினுக்கு, இன்னொன்னு, நம்ம டெக்னாலயி, சயண்டிஸ்டு சகோவுக்கு.......
  நீங்க ரொம்ப பெரிய ஆள் சகோ..ஒத்துக்கிறேன். அதுக்காக இப்புடி பப்பிளிக்கா கம்பியூட்டர் விளம்பரம் என்று கச்சேரி
  வேறைய;-)))

  நோ நோ.....சீரியஸ்

  ReplyDelete
 15. ///////தேர்தல் நெருங்குன நேரத்துல ஒரு இந்திய குடிமகனா(ஆப்ரிக்கால இருந்து தப்பிச்சு வந்ததா சொன்னாங்க..) ////////

  வாங்க வாங்க ஜும்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள்................

  ReplyDelete
 16. லாக்கர்லயெல்லாம் இந்த மாதிரி பயோமெட்ரிக் சிஸ்டத்தை உபயோகித்து தான் பாதுகாப்பு ஏற்படுத்துறாங்க.//

  சகோ, நீங்க சீரியஸ்ஸான ஆள் தான், ஒத்துக்கிறேன், அதுக்காக இப்புடி இங்கிபீசிலை, அறிவியலிலை, பயோமெட்ரிக்கிஸை பொளந்து கட்டியா நம்ப வைக்கனும்;-))

  ReplyDelete
 17. அத உடுங்க இத வச்சு நாம எப்படி கள்ள ஓட்டை தடுப்பது.? சொல்றேன். பயோமெட்ரிக்ஸ்ல Fingerprint recognitionனு ஒரு பிரிவு இருக்கு. அதாவது கைரேகையை கணிச்சு சரி பாக்குறது.//

  நம்ம கூட்டாளிங்களுக்கெல்லாம் வேலையே இல்லாம போயிடுமே...
  உங்களுக்குப் போட்டியா நான், கள்ள ஓட்டை தடுக்கும் மெசினை எப்பூடி ஏமாத்தி கள்ள ஓட்டு போடுவது என்று கண்டு பிடிக்கப் போறேன்.

  ஹா...ஹா..

  ReplyDelete
 18. ஒத்துக்கிறேன், நீங்க பெரிய அப்பாடக்கருதான்............!

  ReplyDelete
 19. பின் வாக்காளர் சர்வே எடுக்கும்போதே அந்தந்த குறிப்பிட்டவரின் Fingerprint-ன் specimen-ஐயும் எடுத்து அவருக்கான code-ல் அது பதியபடவேண்டும். ஒரு ஓட்டு சாவடியில் அதிகபட்சமாக 1400பேர் இருக்கலாம். அப்படி இருக்கையில் அந்தந்த ஓட்டுச்சாவடிக்கு உரித்தான மக்களின் fingerprint specimen பதியப்பட்ட கம்ப்யூட்டர் அந்தந்த ஓட்டுசாவடிக்கு அனுப்பப்படவேண்டும்./

  கட்சிக்காரங்க நினைச்சா இலவசமா பத்தாயிரம் கொடுத்து, விரலையே எடுத்து வந்து கள்ள ஓட்டுப் போட்டிட்டுப் போயிடுவாங்க.

  ReplyDelete
 20. இதுக்கு பிறகு வர்றவங்களை மிரட்டி அவிங்களையே இந்த சின்னத்துக்கு தான் ஓட்டுபோடணும்னு சொன்னா என்ன பண்ணலாம்னு கேட்டா பிச்சுபுடுவன் பிச்சி..  ......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... சரி கேட்கலை....

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///////தேர்தல் நெருங்குன நேரத்துல ஒரு இந்திய குடிமகனா(ஆப்ரிக்கால இருந்து தப்பிச்சு வந்ததா சொன்னாங்க..) ////////

  வாங்க வாங்க ஜும்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள்................//

  பாஸ்......நோ...நோ....எங்கள் மூதாதையர்களைத் தாங்கள் அப்படிக் கிண்டல் பண்ணக் கூடாது,
  பண்ணினால் ஆபிரிக்கன் காட்டுப் புலியும் அனகொண்டாவும் என பவர் ஸ்டார் நடிக்கும் அடுத்த படம் வெளியாகும் முன்பே திருட்டு வீசிடி அனுப்பி உண்டு இல்லை என்று ஆக்கிடுவேன்;-))))))))))))

  ReplyDelete
 23. இப்படி ஏற்படுத்துவதன் மூலம் ஒருவர் ஒருமுறைக்கு மேல் ஓட்டு போட முடியாது. பொய்யான வாக்காளர் அட்டைகொண்டு யாரும் ஓட்டு போட முடியாது. சரியான தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை குறித்து ஆராயலாம் என்றிருக்கேன்.//

  வாழ்த்துக்கள் சகோ, ஆனால் இன்னமும் இருப்பது ஓரிரு நாட்களே, அதற்குள் இந்த முறையினை எப்படிச் சாத்தியமாக்குவது?

  ReplyDelete
 24. உங்க கண்டு பிடிப்புக்கு பேஷ்..பேஷ்...
  கோடிங், source code இனை வெளியிடாது, முதலில் ஐரி டெக்னாலயி உடன் தொடர்புடைய ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்தை அணுகிப் பாருங்கள்.

  அவர்கள் உங்களுக்குச் சந்தர்ப்பம் தருவார்கள் என்றால் நீங்கள் முயற்சித்துப் பார்க்கலாம்.

  ReplyDelete
 25. ராஜ நடராஜன் said...
  கூர்!நான் தமிழ்மணத்துல கூட கள்ள ஓட்டுப் போடறதில்லை.என்னை மாதிரியே எல்லோரும் இருந்திட்டா:)//

  சகோ, தமிழ்மணத்திலும் கள்ள ஓட்டுப் போடுறாங்களா? இங்கேயும் ஜனநாயகம் இல்லையா?
  ஆளை விடுங்கோ சாமி.

  ReplyDelete
 26. தம்பி..

  இப்பல்லாம் கள்ளஓட்டே கெடயாது.. காசு குடுத்து வாங்குற ஓட்டுதான்.. :) வாங்குற காசுக்கு எல்லோரும் கரெக்டா ஓட்டு போடுறாங்க.. இல்லன்னா போட்டுட்டு வந்து வாங்கிக்கிறாங்க.. அதனால கைரேகை கால்ரேகை எல்லாம் வேஸ்ட்.. காசு தான் முக்கியம்..

  போடற ஓட்ட காச வாங்கிட்டு போடுவோம்ங்கறது தான் நம்ம மக்களோட பாலிசி.. so all the technology goes back to ground zero :)

  ReplyDelete
 27. ஒத்துக்கறேன் நீ அறிவாளின்னு next மீட் பண்றேன் ஹிஹி!

  ReplyDelete
 28. /ஆப்ரிக்கால இருந்து தப்பிச்சு வந்ததா சொன்னாங்க..)//

  இல்லையே வேற்று கிரகத்தில் வந்தவன்னு சொல்றாங்க

  ReplyDelete
 29. இப்ப கள்ள ஓட்டு எல்லாம் இல்லை. நீ எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்துக்கு மட்டும் வோட்டு பதிவாகர மாதிரி எல்லாத்தையும் மாத்தியாச்சு

  ReplyDelete
 30. இப்ப கள்ள ஓட்டு எல்லாம் இல்லை. நீ எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்துக்கு மட்டும் வோட்டு பதிவாகர மாதிரி எல்லாத்தையும் மாத்தியாச்சு ---------- இது சாத்தியமா?

  ReplyDelete
 31. ராஜ நடராஜன்12 April 2011 at 11:45

  //இப்ப கள்ள ஓட்டு எல்லாம் இல்லை. நீ எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்துக்கு மட்டும் வோட்டு பதிவாகர மாதிரி எல்லாத்தையும் மாத்தியாச்சு ---------- இது சாத்தியமா? //

  கருன்!வில்லங்கமான கேள்வியா இருக்குதே!ஒரு வேளை தி.மு.க தோற்றுவிட்டால்....முக்கியமாக பா.ம.க தோற்றுவிட்டால் ராமதாஸின் அறிக்கை என்னவாக இருக்கும்:)

  கூட்டுத்தொகை கூட்டணியில் தோற்பவர்கள் மெசினைக் கட்டாயமாக குறை சொல்வார்கள்.

  ReplyDelete
 32. ராஜ நடராஜன்12 April 2011 at 11:48

  //சகோ, தமிழ்மணத்திலும் கள்ள ஓட்டுப் போடுறாங்களா? இங்கேயும் ஜனநாயகம் இல்லையா?
  ஆளை விடுங்கோ சாமி.//

  சகோ!நிரூபன!ஒரு சில பதிவர்கள் தமக்கு தாமே திட்டம் வைத்திருப்பதாக...எல்லாம் கேள்வி ஞானம்தான்!நான் என்னத்தக் கண்டேன்:)

  ReplyDelete
 33. @கவிதை வீதி: ஹி ஹி.. வாத்தியார்லாம் கள்ள ஓட்டு போடமாட்டாங்க.. நீங்கலாம் ரொம்ப நல்லநல்லவங்க

  ReplyDelete
 34. @சிபி:என்னது அண்ணனா.?? இல்ல தாத்தா நீங்க அப்படி பேச கூடாது..


  //ஹி ஹி ஹி எனி உள்குத்து?//

  இந்த கமண்ட் படிக்கிற வரைக்கும் ஒண்ணும் தோணல..

  ReplyDelete
 35. @மனோ:உங்களுக்காக நான் கள்ள ஓட்டு போட்டுட்டேன் பாஸ்..

  ReplyDelete
 36. @ராஜ நடராஜன்://தேர்தல் ஆணையத்துக்கு இதனை சொல்லியிருக்கலாமே:)//

  உங்க எண்ணம் என்ன.? நான் ஜெயில்ல களி திங்கணும்னு ஆசையா.?

  //கூர்!நான் தமிழ்மணத்துல கூட கள்ள ஓட்டுப் போடறதில்லை.என்னை மாதிரியே எல்லோரும் இருந்திட்டா:)//

  நீங்க ரொம்ப உத்தமர்னு எனக்கு தெரியும்ங்க..

  //சரி!Patent rights வாங்கினா எனக்கு எவ்வளவு கட்டிங்:)//

  வாங்கினா அத உங்க பேர்லயே வாங்கி இந்த ப்ராஜக்ட்ட நீங்களே பண்ணிடுங்க..

  ReplyDelete
 37. @கோமா://சும்மா சொல்லக் கூடாது...தம்பிக்கு மதி கூர்தான்//

  என் கண்ணுக்கு முன்னாடி என்னை புகழாதீங்க எனக்கு பிடிக்காது.. ஹி ஹி..

  ReplyDelete
 38. @நிரூபன்://நாம மட்டும் என்ன கொறைஞ்சா போயிட்டம்.//

  என்னையேன் உங்களோட சேக்குறீங்க.? நீங்க தான் மாதவன் கலராச்சே!

  // அசலாக வியாபரப்படுத்தப் போறீங்க என்று ஒரு உள் பயம் தான்.//

  ஏதாச்சும் சொல்லிட போறேன்.. காமெடி பண்ணிகிட்டு..

  //இப்புடி பப்பிளிக்கா கம்பியூட்டர் விளம்பரம் என்று கச்சேரி
  வேறைய;-)))//

  எப்படியாவது பிரபலம் ஆகலாம்னு பாத்தா விடமாட்டேங்குறாங்கப்பா..

  //அதுக்காக இப்புடி இங்கிபீசிலை, அறிவியலிலை, பயோமெட்ரிக்கிஸை பொளந்து கட்டியா நம்ப வைக்கனும்;-))//

  இதெல்லாம் எனக்கே தெரியாதுங்க.!!


  //மெசினை எப்பூடி ஏமாத்தி கள்ள ஓட்டு போடுவது என்று கண்டு பிடிக்கப் போறேன்.//

  அதை நானே சொல்லிதர்றேன்..


  //கட்சிக்காரங்க நினைச்சா இலவசமா பத்தாயிரம் கொடுத்து, விரலையே எடுத்து வந்து கள்ள ஓட்டுப் போட்டிட்டுப் போயிடுவாங்க.//

  அய்யோ என் விரல் இருக்கா.?? இருக்கு இருக்கு.. உஷ்ஷ்ஷ்..


  //வாழ்த்துக்கள் சகோ, ஆனால் இன்னமும் இருப்பது ஓரிரு நாட்களே, அதற்குள் இந்த முறையினை எப்படிச் சாத்தியமாக்குவது?//

  அட இது என்னவோ இப்பயே கொண்டு போயி கொடுத்து அப்ரூவ் வாங்கிட்ட மாதிரி காமெடி பண்ணாதீங்க..

  ReplyDelete
 39. @பன்னி://அதையே தேர்தலுக்கும் பயன்படுத்தலாம்னு நினைக்கிறேன்!// உங்க அளவுக்கு எனக்கு புத்தி இல்லைனு தான் நினைக்கிறேன்..


  //ஒத்துக்கிறேன், நீங்க பெரிய அப்பாடக்கருதான்............!//

  நான் மட்டுமா.? நீங்களும் தான்..

  ReplyDelete
 40. @சித்ரா:கேக்காத வரைக்கும் சந்தோசம்..

  ReplyDelete
 41. @இசை:அநேகமா எங்க கிராமம் நிலைமையெல்லாம் உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.. polling sectionல நின்னுகிட்டு வர்றவங்கள வாங்க இந்தாங்க 'மை'ன்னு சொல்லி 'மை' மட்டும் வச்சு அனுப்புற இடமெல்லாம் இன்னமும் இருக்கு தான்..

  ReplyDelete
 42. @விக்கி: ஒரு அறிவாளியே என்னை அறிவாளி என சொல்லும்போது.. வெட்கம் வருது பாஸ்..

  ReplyDelete
 43. @எல் கே: அண்ணா பப்ளிக்..

  //இப்ப கள்ள ஓட்டு எல்லாம் இல்லை. நீ எந்த பட்டனை அழுத்தினாலும் குறிப்பிட்ட சின்னத்துக்கு மட்டும் வோட்டு பதிவாகர மாதிரி எல்லாத்தையும் மாத்தியாச்சு//

  அந்த வதந்திக்கு நீங்க தான் காரணமா?

  ReplyDelete
 44. @கருண்: வாங்க வாங்க.. //இது சாத்தியமா?//

  அட சாத்தியம் தாங்க.. அசால்ட்டா பண்ணலாம்..

  ReplyDelete
 45. @ராஜநடராஜன்: //கூட்டுத்தொகை கூட்டணியில் தோற்பவர்கள் மெசினைக் கட்டாயமாக குறை சொல்வார்கள்.//

  கண்டிப்பா.. கலக்கிட்டீங்க..

  //ஒரு சில பதிவர்கள் தமக்கு தாமே திட்டம் வைத்திருப்பதாக.//

  ஹி ஹி.. உடுங்க பாஸ்..

  ReplyDelete
 46. @இராஜராஜேஷ்வரி:நன்றிங்க..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி