நாளைக்கு தேர்தல்-கலைஞர்.? ஜெ.?

நாளைக்கு தான். புரியுதா.. நாளைக்கு அப்பரம் நான் எழுதுறதுக்கு ஒண்ணுமே இல்லாம கூட போகலாம்(அப்படியே எழுதிட்டாலும்.!).


முதல்ல தேர்தல் ஏன் ஏப்ரல் 13ல வச்சாங்க. அந்த கருமத்தை எல்லாம் அந்த நாளோடு மூட்டை கட்டிட்டு 14ம் தேதி புது வருசத்தை தொடங்கணும்னு காரணத்துக்காக(கண்டுபுடிச்சுட்டாருயா.!!)

இந்த முறை என் ஓட்டு 49o தான் என்று ஏற்கனவே முடிவு செஞ்சுட்டன். போன முறை ஓட்டு போட போனபோது 49o போட்டு ஏன் தம்பி ஒரு ஓட்ட வீணாக்குற.? அந்த பார்ம் இல்ல.? சும்மா ஒரு குத்த குத்திட்டு போ..!! அப்படினு பூத் ஆபிஸர்கள் எனக்கு சிறந்த பதில்களை அளித்தனர். இந்த முறை அந்த ப்ராப்ளம் இல்ல. கண்டிப்பா எல்லா பூத்களிலும் 49oக்கு உரிய பார்ம்கள் தரணும் இல்லாவிடில் தாராளமா கம்ப்ளைன் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க. சரி அத விடுங்க, பதிவுலகுல அந்த பக்கம் இந்த பக்கம்னு கொஞ்சம் அரசல் புரசல்கள் இருக்கு. யாருக்கு ஓட்டு போடலாம்னு. நாம இப்படி குழம்பினாலும் நமக்குள்ளவே சில கருப்பு ஆடுகள் இருக்கு. அதான் ப்ளாக் ஷீப். அந்த கருப்பு ஆடுகள் தான் ஓட்டு போடாத கூட்டம்.

நமக்கான உரிமைகளான பேச்சு, சுதந்திரம் எதுவுமே நாம உட்டு கொடுப்பதில்லை. இருந்தாலும் இந்த ஓட்டுரிமையை மட்டும் அசால்ட்டா தூக்கி எரிந்திடுவோம். இந்த மாதிரி படிக்காதவனைவிட படித்தவனே அதிகமா சுத்துறான்னு நினைக்கும்போது மனசு இன்னும் கொஞ்சம் வருத்தமா இருக்கு.

இந்த முறை தேர்தல் ஆணையம் கொஞ்சம் அதீத கெடுபிடியோட தான் நடக்குது. ஆனா சிலர் தேலர்தலுக்கு முன்னர் இரண்டு நாட்கள் தேர்தல் ஆணையம் கண்டுகிடாது அன்னைக்கு பண பட்டுவாடா நடக்கும்னு சொன்னாங்க. ஆனா அதுவும் இப்போ பொய்யா போச்சு. இருந்தாலும் நம்ம கலைஞர் இதை சும்மா விடமாட்டார். அவரின் அடுத்த ஆயுதம் மகளிர் சுய உதவி குழு. ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் ரூ.200 மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்படும் கடன் தொகையையும் கூட்டி சலுகைகள் செய்துள்ளார்.


என்னடா இது மகளிர் சுய உதவி குழுவுல போய் சேர்ந்து அந்த 200ஆவது வாங்கலாம்னு பாத்தா அது மகளிர்க்கு மட்டும்தானாம். அட கொடுமையே.! இந்த நிலைமையில் தன்மான சிங்கம் சீமான் விசயகாந்த் அளவுக்கு கூட்டி கழித்து 42ன்னு நினைக்கிறேன்;42000த்துக்கு கீழ யாராவது பணம் கொடுத்தா மீதி பணம் எங்கேன்னு கேக்கணுமாம். அடங்கொன்னியான்..!! ஒத்த ரூபா கிடைக்கலன்னு புலம்புற சமயத்துல இது வேறயா.?

இந்த முறை வாக்காளர் வெரிஃபிகேஷன் சீட்டும் வித்யாசப்பட்டிருக்கு. அதாவது, எந்த கட்சியின் முத்திரையும் இல்லாமல், வாக்காளரின் முகப்படத்தோடு சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு துளி அளவு கள்ள ஓட்டு தடுக்கப்படலாம். துளி அளவு மட்டும் தாங்க.


அப்படியே நமது பேரில் யாராவது கள்ள ஓட்டு போட்டாலும் உரிய ஆவணங்களை காட்டி நாமும் ஓட்டு போடலாம். அவ்வாறு போடும் ஓட்டு மிஷினில் இல்லாமல் வாக்குச்சீட்டில் பெறப்படும். இது போட்டியாளர்களிடப் பெருத்த வித்யாசம் இல்லாமல் போனால் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்பது இதனில் இருக்கும் பெரிய சங்கடம். இப்படி இருக்கையில் வாக்கு பதிவுக்கும், எண்ணிக்கைக்கும் இடையில் வேற ஒரு மாசம் இடைவெளி. அதுல எவன் எவனெல்லாம் பூந்து விளையாடபோறானோ.!

என்னைபோல 49o பக்கம் நிக்கிறவங்கள நினச்சா ரொம்ப சந்தோசம். அதே சமயம் ரொம்ப திறமையாக ஓட்டளிக்க போறவங்களே! தயவு செஞ்சு பேனருக்காக ஓட்டு போடாதீங்க. திமுக எனக்கு பிடிக்கும் அதிமுக எனக்கு பிடிக்கும் அதனால என் ஓட்டு அவுங்களுக்கு தான் அப்படினு தயவு செஞ்சு யாரும் முடிவெடுக்க வேண்டாம். நீங்க அவுங்க பெருமையை ஒற்றை வரியில சொன்னா அவுங்கள பத்தி குறை சொல்ல எங்ககிட்ட ஆயிரம் வரிகள் இருக்கு. உங்க பகுதியில இருக்கிற நல்லவர், அவர் சுயேட்சையாக இருந்தாலும் சரி இல்ல ஏதாவது பெரிய ஊழல் கட்சியாக இருந்தாலும் சரி தாராளமா ஓட்டு போடுங்க.


ஜெ., அல்லது கலைஞர் சிறந்தவர்னு பாத்து அவுங்களுக்காக ஓட்டு வேண்டாம். நீங்க உங்களுக்காக ஓட்டு போடுங்க. அவுங்களுக்காக வேண்டாம். ஒவ்வொரு நாளும் உங்களுக்காக வாழணும். சிலர் காசை வாங்கிகொண்டு நேர்மையாக நடப்பர் அதாவது நாம தான் காசு வாங்கிட்டோமே அப்ப யோக்கியனா அவனுக்கே ஓட்டு போட்டுடுவோம்னு ஓட்டு போடுறது. புரிஞ்சிக்கோங்க.. உங்க யோக்கியத்தை காட்ட இது இடமில்ல.!!


வாக்களிக்காம இருக்காதீங்க.!! பெரிய தலைவர்களுக்காக அவர்களின் கட்சிக்கு ஓட்டு போடாதீங்க.!! காசு வாங்கிக்கோங்க.. ஆனா யோக்கியமா அவரது கட்சிக்கு தான் ஓட்டுபோடுவேன்னு திரியாம நல்லவனுக்கு ஓட்டுபோடுங்க.. உங்களால யார் நல்லவன்னு கண்டுபிடிக்கமுடியாம போனா தைரியமா 49o பக்கம் வாங்க.!!

அப்பரம் ஒரு விசயம்.. தேர்தலுக்கு பிறகு இந்த பதிவுலகத்துக்கு டா டா சொல்லிடலாம்னு இருக்கேன்.. அதென்ன தேர்தலுக்கு பிறகு நாளைக்கு தானே தேர்தல்.. ஓ.. ஆமாம்ல.. ஓகே டாடா.. முடிஞ்சா எப்பவாவது வந்து உங்க பதிவுகளை படிக்கிறேன். ஆனா நான் பதிவு போடுறது டவுட்டு தான். யாருப்பா அங்க பெருமூச்சு உடுறது.!! பிச்சுபுடுவன் பிச்சி.. எனக்கு பிடிச்ச எழுத்தான அரசியல் பதிவை எழுதிட்டு தான் போகணும்னு இருந்தேன். இப்போ எழுதிட்டேன்.. நான் கிளம்புறன்.. ரொம்ப சந்தோசபடாதீங்க.. நான் ஒரு முட்டாள்.. அரை கிறுக்கன்.. அப்படிதான் இருப்பேன். உங்களுக்கா முகநூலில் இருப்பேன். என்றும் தொடர்பில் தான் இருப்பேன். யாருப்பா அது தலையில அடிச்சிகிடுறது..!!! உடுங்கப்பா.. இன்பம் வந்தா துன்பமும் வரும் தானே..

அண்ணன் எல்.கே.வின் கருத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். பலர் கருத்துரைகளை படிக்காமல் போவதால் இங்கே சேர்க்கிறேன்.


எல் கே said...

யாரும் தயவு செய்து 49o உபயோகிக்க வேண்டாம். அதை தேர்வு செய்வதும் ,ஓட்டுப் போடாமல் இருப்பதும் ஒன்றுதான் .

In December 2008, the Election Commission said in a press release -

“It has been brought to the notice of the Commission that various misleading reports are being circulated though the Press, the electronic media, emails and through SMS to the effect that if the number of voters who choose to exercise their option not to vote for any contesting candidate as provided in Rule 49-O of Conduct of Elections Rules, 1961, exceeds the margin of votes secured by the winning candidate over the runner up, this will invalidate the election and a repoll will be held. It is clarified that under Rule 49-O, the voter has an option not to vote at the election after he has been identified at the polling station and his name has been registered in Registers of voters (Form -17A). The Presiding Officer shall thereupon make a note to that effect against the name of that voter and obtain his signature (thumb impression in the case of an illiterate). In such case, the voters who exercise the option of not voting at the election under Rule 49-O would only be deemed to have abstained themselves from voting and under the law, the candidate who secures highest number of valid votes polled, irrespective of his winning margin, is declared elected.”


Comments

 1. யாரும் தயவு செய்து 49o உபயோகிக்க வேண்டாம். அதை தேர்வு செய்வதும் ,ஓட்டுப் போடாமல் இருப்பதும் ஒன்றுதான் .

  ReplyDelete
 2. In December 2008, the Election Commission said in a press release -

  “It has been brought to the notice of the Commission that various misleading reports are being circulated though the Press, the electronic media, emails and through SMS to the effect that if the number of voters who choose to exercise their option not to vote for any contesting candidate as provided in Rule 49-O of Conduct of Elections Rules, 1961, exceeds the margin of votes secured by the winning candidate over the runner up, this will invalidate the election and a repoll will be held. It is clarified that under Rule 49-O, the voter has an option not to vote at the election after he has been identified at the polling station and his name has been registered in Registers of voters (Form -17A). The Presiding Officer shall thereupon make a note to that effect against the name of that voter and obtain his signature (thumb impression in the case of an illiterate). In such case, the voters who exercise the option of not voting at the election under Rule 49-O would only be deemed to have abstained themselves from voting and under the law, the candidate who secures highest number of valid votes polled, irrespective of his winning margin, is declared elected.”

  ReplyDelete
 3. அப்பரம் ஒரு விசயம்.. தேர்தலுக்கு பிறகு இந்த பதிவுலகத்துக்கு டா டா சொல்லிடலாம்னு இருக்கேன்.. அதென்ன தேர்தலுக்கு பிறகு நாளைக்கு தானே தேர்தல்.. ஓ.. ஆமாம்ல.. ஓகே டாடா.. முடிஞ்சா எப்பவாவது வந்து உங்க பதிவுகளை படிக்கிறேன். ஆனா நான் பதிவு போடுறது டவுட்டு தான். யாருப்பா அங்க பெருமூச்சு உடுறது.!! பிச்சுபுடுவன் பிச்சி.. எனக்கு பிடிச்ச எழுத்தான அரசியல் பதிவை எழுதிட்டு தான் போகணும்னு இருந்தேன். இப்போ எழுதிட்டேன்.. நான் கிளம்புறன்.. ரொம்ப சந்தோசபடாதீங்க.. நான் ஒரு முட்டாள்.. அரை கிறுக்கன்.. அப்படிதான் இருப்பேன். உங்களுக்கா முகநூலில் இருப்பேன். என்றும் தொடர்பில் தான் இருப்பேன். யாருப்பா அது தலையில அடிச்சிகிடுறது..!!! உடுங்கப்பா.. இன்பம் வந்தா துன்பமும் வரும் தானே..

  இதை வன்மையாக கண்டிக்கிறேன்! வலையுலகில் இருந்து யார் ஒதுங்கினாலும் அவர்கள் மீது எனக்கு கோபம்தான் வரும்! நீங்கள் ஒதுங்கிப் போக நாங்கள் விடுவோமா? எதுக்கும் சற்று முன்னர் நான் போட்டிருக்கும் பதிவை படியுங்கள்! ஊடகம் பத்திதான் எழுதியிருக்கேன்!!

  ReplyDelete
 4. பெரியப்பா எல் கே சொல்றது சரி தான்.. 49 ஓ போடாம சுயேச்சகள்ல நல்லவருக்கு போடலாம்

  ReplyDelete
 5. பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

  ReplyDelete
 6. நாளைக்கு தான். புரியுதா.. நாளைக்கு அப்பரம் நான் எழுதுறதுக்கு ஒண்ணுமே இல்லாம கூட போகலாம்(அப்படியே எழுதிட்டாலும்.!).//

  சகோ, இதென்ன வேலை.. உங்க கிட்ட எழுத நிறைய விசயம் இருக்கும் போது, நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி?

  ReplyDelete
 7. முதல்ல தேர்தல் ஏன் ஏப்ரல் 13ல வச்சாங்க. அந்த கருமத்தை எல்லாம் அந்த நாளோடு மூட்டை கட்டிட்டு 14ம் தேதி புது வருசத்தை தொடங்கணும்னு காரணத்துக்காக(கண்டுபுடிச்சுட்டாருயா.!!)//

  தேர்தல் முடிவுகளே ஒரு மாசம் பின்னாடி தான் வருமுன்னே சொல்லுறாங்களே, ஏன் பாஸ்... அதுக்கெல்லாம் காரணம் கண்டு பிடிக்கலையா?

  ReplyDelete
 8. அப்பரம் ஒரு விசயம்.. தேர்தலுக்கு பிறகு இந்த பதிவுலகத்துக்கு டா டா சொல்லிடலாம்னு இருக்கேன்.. அதென்ன தேர்தலுக்கு பிறகு நாளைக்கு தானே தேர்தல்.. ஓ.. ஆமாம்ல.. ஓகே டாடா.. முடிஞ்சா எப்பவாவது வந்து உங்க பதிவுகளை படிக்கிறேன். ஆனா நான் பதிவு போடுறது டவுட்டு தான். யாருப்பா அங்க பெருமூச்சு உடுறது.!! பிச்சுபுடுவன் பிச்சி.. எனக்கு பிடிச்ச எழுத்தான அரசியல் பதிவை எழுதிட்டு தான் போகணும்னு இருந்தேன். இப்போ எழுதிட்டேன்.. நான் கிளம்புறன்.. ரொம்ப சந்தோசபடாதீங்க.. நான் ஒரு முட்டாள்.. அரை கிறுக்கன்.. அப்படிதான் இருப்பேன். உங்களுக்கா முகநூலில் இருப்பேன். என்றும் தொடர்பில் தான் இருப்பேன். யாருப்பா அது தலையில அடிச்சிகிடுறது..!!! உடுங்கப்பா.. இன்பம் வந்தா துன்பமும் வரும் தானே..//

  உங்களிடம் திறமை இருக்கிறது சகோ, ஏனைய பதிவர்களை கண்டு ஊக்கப்படுத்தும் பண்பிருக்கிறது.
  விமர்சித்து, அழகான கருத்துக்களை வழங்கக் கூடிய திறமையும் இருக்கிறது,

  இப்பேர்பட்ட ஒராளை அவ்வளவு சீக்கிரம் பதிவுலகத்தை விட்டு போக விடமாட்டோம். கண்டிப்பாக எழுதுங்க பாஸ்... தொடர்ந்தும் எழுதுங்க...

  அரசியல் பதிவுகளுக்கு இந்த ப்ளாக்குடன் ஒரு முற்றுப் புள்ளி அமையலாம். ஆனால் உங்கள் ஏனைய ப்ளாக்குகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி நிச்சயமாக எழுதுங்கோ சகோ.

  இந்தப் பதிவிற்கு வேறு கருத்துக்கள் கூற முடியவில்லை. ))))))))));

  ReplyDelete
 9. முதல்ல தேர்தல் ஏன் ஏப்ரல் 13ல வச்சாங்க. அந்த கருமத்தை எல்லாம் அந்த நாளோடு மூட்டை கட்டிட்டு 14ம் தேதி புது வருசத்தை தொடங்கணும்னு காரணத்துக்காக(கண்டுபுடிச்சுட்டாருயா.!!)
  >
  அட இது புது விளக்கமா இருக்கே

  ReplyDelete
 10. என்னைபோல 49o பக்கம் நிக்கிறவங்கள நினச்சா ரொம்ப சந்தோசம். அதே சமயம் ரொம்ப திறமையாக ஓட்டளிக்க போறவங்களே! தயவு செஞ்சு பேனருக்காக ஓட்டு போடாதீங்க. திமுக எனக்கு பிடிக்கும் அதிமுக எனக்கு பிடிக்கும் அதனால என் ஓட்டு அவுங்களுக்கு தான் அப்படினு தயவு செஞ்சு யாரும் முடிவெடுக்க வேண்டாம். நீங்க அவுங்க பெருமையை ஒற்றை வரியில சொன்னா அவுங்கள பத்தி குறை சொல்ல எங்ககிட்ட ஆயிரம் வரிகள் இருக்கு. உங்க பகுதியில இருக்கிற நல்லவர், அவர் சுயேட்சையாக இருந்தாலும் சரி இல்ல ஏதாவது பெரிய ஊழல் கட்சியாக இருந்தாலும் சரி தாராளமா ஓட்டு போடுங்க.

  >>
  எனக்கு திமுக தான் பிடிக்கும். ஆனாலும், நானும் இதுப்போல சுயேட்சைக்குதான் என் வோட்டை போட்டு வந்துட்டேன் நண்பரே.

  ReplyDelete
 11. @எல் கே: சரிங்க அண்ணா.. 49o நான் போடல.. இளைஞர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிச்சாங்க.. ஒவ்வொருத்தரும் படே சூப்பரானவங்க.. நேத்தி சாயங்காலம் எங்க தொகுதி போட்டியாளர வச்சு ஆராஞ்சப்ப தான் உண்மை தெரிஞ்சது.. சோ நோ 49o..

  ReplyDelete
 12. @ரஜி://வலையுலகில் இருந்து யார் ஒதுங்கினாலும்// அப்போ என்னை யாரோ ஒருவர்னு தான் பாக்குறீங்களா.?? ரஜி ஆனா நான் உங்கள ரொம்ப நல்ல தோழரா பாக்குறன்.. சோ பேட்..

  ReplyDelete
 13. @சிபி: அதே தான்.. நான் சூயேட்சைக்கு தான் ஓட்டு போட்டேன்.. ஆனா எல் கே அண்ணனை பெரியப்பா என சொல்வது.!! ஹி ஹி.. ஓவரு..

  ReplyDelete
 14. @நிரூபன்: அட இருப்பேன் பாஸ்.. தான் போறத நினச்சு இங்கு தனிப்பட்ட முறையில ஒரு ஜீவன் கூட வருத்தப்படல.. அதுக்கு ஏன் நான் போகணும்.?

  ReplyDelete
 15. @ராஜி:நீங்க அப்படியே என்னைபோல.. எனக்கும் திமுக தான் பிடிக்கும்.. இந்த முறை நானும் சுயேட்சைக்கு தான் போட்டேன்.. சேம் பின்ச்..

  ReplyDelete
 16. ஓட்டு போட்டாச்சு அண்ணா.
  நல்லவேளை 49ஓ போடல.

  ReplyDelete
 17. என்னது பதிவு எழுத மாட்டீங்களா?
  வீட்டு அட்ரஸ் சொல்லுங்க, நாலு அடியாள் அனுப்பறேன்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி