இவருக்கு நான் இதை சொல்லியே ஆகணும்!!


உணர்ச்சிகள் உடம்பில் பாய
சுல்லென்று படர்ந்த வெளிவெப்பத்தில்
குளிர்காய முடியாது கதறிய
என் தாயின் கருவறையை பிரிந்த நொடி
இருக பிடித்து, நெஞ்சோடு அணைத்து
குத்தும் மீசையோடு முத்தமிட்டவரே.!!

இன்றும் ஞாபகத்தில்..

பள்ளி பாடம் முடித்து வீட்டினுள்ளே
வரும் பாதையில் விழி தேங்கி
காத்துகிடப்பேன் உங்கள் வருகைகாக.!!
அந்த காத்திருப்பு..
பாசத்திற்கா இல்லை பண்டத்திற்கா என அறியாவிடிலும்
காத்திருந்த நொடிகள் உண்மைதானே.!

பொய் உரைத்த நொடிதனிலே
கடிந்து ரணத்தின் மேல் உரமாக்காது
அமரவைத்து அன்பு பாராட்டி
வாழ்க்கை நியதியையும் தேவையையும்
எடுத்துரைத்த உங்கள் பண்பு
என்னை சிந்தனையாளனாய் செதுக்கியதே.!!

வண்டி முன்னால் நிற்கவைத்து
அந்த ஒத்தையடி ரோட்டில்
மிதவேகத்தில் நாம் கொண்ட பயணம்.!
உங்கள் நண்பரிடத்து பேசுகையில்
உடனழைத்துவந்த இச்சிறுவனை
மறந்து ஆழ்ந்தும் தருணம்.!
அனைத்தும் கண்ணுள்ளே.!!

ஆனால் சட்டென மாறின நாட்கள்.!!

என் வண்டியில் பின்னால் நீங்கள் அமர
அதிவேகத்தில் நான் பறக்கும் போது
மண்டையில் விழும் நச்சென்ற கொட்டு சொல்லும்
''படவா.! பின்னாலிருந்தாலும் நான் அனுபவசாலிடா.!!''
என்னும் உங்கள் பளிச்சென்ற வார்த்தைகள்.!!

நண்பரிடத்து உரையாடும் என்னை
அவசரத் தேவைக்கு அழைக்கலாமா.?
முக்கிய பேச்சாக இருந்திடுமோ
அழைத்தால் பேச்சு தடைபடுமோ
என தத்திதடுமாறும் உங்கள் தவிப்பு.!!

எல்லாமே பிடிக்கும்
உங்களிடத்தில் எல்லாமே பிடிக்கும்.!!
ஒன்றை தவிர..
சுற்றிலும் எழுத்துக்களாய் பதிக்கும் நான்
எந்தன் எழுத்துகளை உங்கள் கண்கள் பற்றிடாது
ஒதுக்குவது ஏன் அப்பா.?
விருப்பமில்லாவிடிலும் சிறுவயதில்
எந்தன் சிறுவிளையாட்டுக்கு தலையசைத்தவரே.!
எனக்கு மீசை துளிர்விட்டால்
நீங்கள் தேவையற்று போய்விடுவீரா.?
எந்தன் எழுத்துகளில் இருந்து நீங்கள் விலகினாலும்
இந்த எழுத்து உங்களுக்காக தான்..
இதையும் உங்கள் கண்கள் பார்க்காது
அதை நான் அறிவேன்.!!
இருந்தாலும் இன்றைக்கு உங்கள்
பிறந்தநாள் வாழ்த்தை கவியின்றி எங்ஙனம் உரைப்பேன்.?
இந்த பணமற்ற எழுத்தாளன் எங்ஙனம் உரைப்பேன்.?

அடுத்த வருடம் ஓய்வு பெற்று
என்னை முழுபொறுப்பாளனாக மாற்றப்போகும்
என் இனிய அப்பாவுக்கு
வாய் நிறைய சொல்கிறேன் பிறந்தநாள் வாழ்த்தை.!!


அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

டிஸ்கி 1: அப்பாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள். ஒரு சட்டை வாங்கி கொடுத்தேன். இருந்தாலும் கவிதை எழுதனும்னு தோணுச்சு. எழுதிட்டேன்.

டிஸ்கி 2: படத்தில் இருப்பது நானும் என் அப்பாவும். கருப்பு சட்டையில இருப்பது நான். சிலர் வேணும்னே மாத்தி கேப்பாங்கன்னு சொல்றேன்.

டிஸ்கி 2: இன்னைக்கு தமிழக திருநங்கையர் தினமாம்ல. அவங்கள பத்தியும் ஒரு பதிவு போடுவன். ஆனா இன்னைக்கு அப்பா மட்டும் தான் அவுங்க நாளைக்கு. இன்னைக்கு திருநங்கையர்க்கு என் வாழ்த்துக்கள் மட்டும்.

Comments

 1. உங்கள் தந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் அப்பாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. தந்தைக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. அப்பாவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அப்பாவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்தை சொல்லு மக்கா....

  ReplyDelete
 6. //எந்தன் எழுத்துகளில் இருந்து நீங்கள் விலகினாலும்
  இந்த எழுத்து உங்களுக்காக தான்..//

  பாசத்தின் வெளிப்பாடு அருமை....

  ReplyDelete
 7. பிறந்த நாள் அன்று அன்புத் தந்தைக்கு அழகான கவிதை

  ReplyDelete
 8. தங்கள் அப்பாவை வாழ்த்த வயதில்லை.அதனால் வணங்குகிறேன் சகோ

  ReplyDelete
 9. தந்தைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வீட்டுக்கு வீடு வாசல்படிதான் மதி.எங்கள் குடும்பத்தாரும் என் பதிவுகள் பார்ப்பதில்லை.உங்கள் ஆதங்கம் புரிகிறது.நிச்சயம் ஒருநாள் பார்ப்பார் உங்கள் அப்பா.என் அன்பான வணக்கங்கள் அப்பாவுக்கு !

  ReplyDelete
 11. அச்சோ...நான் லேட் ஆ சொல்ல்றேனோ பிறந்தநாள் வாழ்த்துக்கள்....அப்பாக்கு கட்டாயம் என் வணக்கங்களை சொல்லிடுங்க கூர்...பணம் இருக்கும் எழுத்தாளன் கூட தன் அப்பாவை எழுத்து மூலம் இவ்வளவு பெருமை படுத்துவாங்கலானு தெரியலை...உங்கள் அப்பாவும் கொடுத்து வச்சவர் கூர்...இவ்வளவு பாசமான ..பண்பான மகன் கிடைச்சதுக்கு...சுத்தி போடுங்க...நல்லா கண்ணு வச்சிட்டேன்...:-))

  ReplyDelete
 12. அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

  http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

  ReplyDelete
 13. உணர்ச்சிகள் உடம்பில் பாய
  சுல்லென்று படர்ந்த வெளிவெப்பத்தில்
  குளிர்காய முடியாது கதறிய
  என் தாயின் கருவறையை பிரிந்த நொடி
  இருக பிடித்து, நெஞ்சோடு அணைத்து
  குத்தும் மீசையோடு முத்தமிட்டவரே.!!//

  ஆரம்ப வரிகளே, உங்கள் பிறப்பினை, நீங்கள் இவ் உலகில் ஜனனம் செய்த நிகழ்வினையும், உங்களை உங்கள் அப்பா ஆரத் தழுவி உச்சி மோர்ந்து முத்தமிட்டு மகிழ்ச்சியடைந்த இனிமையான தருணத்தையும் அழகாகச் சொல்லி நிற்கிறது.

  ReplyDelete
 14. பள்ளி பாடம் முடித்து வீட்டினுள்ளே
  வரும் பாதையில் விழி தேங்கி
  காத்துகிடப்பேன் உங்கள் வருகைகாக.!!
  அந்த காத்திருப்பு..
  பாசத்திற்கா இல்லை பண்டத்திற்கா என அறியாவிடிலும்
  காத்திருந்த நொடிகள் உண்மைதானே.!//

  கிராமங்களில் ஒரு சில விடயங்களைச் சொல்லுகையில் லயத்துடன் தாள கதியில், சந்த நடையில் தான் சொல்லுவார்கள். ஆனால் இக் கவிதையில் பாசப் பிணைப்புடன் கூடிய நிஜத்தினை உனர்த்துவதற்கு ஒரு வித இழுவையினை.... அல்லது பேச்சு மொழியினைக் கவிதையினுள் புகுத்தியிருக்கிறீர்கள். இது உணர்வினை அழகாக வெளிக்காட்டும் ஊடகமாய் வந்திருக்கிறது சகோ.

  ReplyDelete
 15. பொய் உரைத்த நொடிதனிலே
  கடிந்து ரணத்தின் மேல் உரமாக்காது
  அமரவைத்து அன்பு பாராட்டி
  வாழ்க்கை நியதியையும் தேவையையும்
  எடுத்துரைத்த உங்கள் பண்பு
  என்னை சிந்தனையாளனாய் செதுக்கியதே.!!//

  தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். எனும் வள்ளுவனின் வாக்கினை மெய்பிக்கும் வகையில் உங்களினைச் சிந்தனையாளனாச் செதுக்கிய பண்புதனை இவ் வரிகள் விளக்கி நிற்கிறது சகோ.

  ReplyDelete
 16. தவறு செய்யும் வேளைகளில் கண்டித்து, சாதிக்கும் வேளைகளில் பாராட்டியும், பண்பான பல விடயங்களை அன்பாக ஊட்டும் அப்பாவைப் பற்றிய கவிதையினை லேட்டாகத் தரிசித்த நினைவுகளுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் சகோ.

  ReplyDelete
 17. @எல் கே:வாழ்த்துக்கு நன்றி அண்ணா..

  ReplyDelete
 18. @தோழி பிரஷா: நன்றிங்க.. அது என்னங்க புதுசா ஆங்கிலத்தையும் சேத்துகிட்டீங்க.?

  ReplyDelete
 19. @இராஜராஜேஷ்வரி:ரொம்ப நன்றி மா..

  ReplyDelete
 20. @கல்பனா:ரொம்ப நன்றிங்க..

  ReplyDelete
 21. @மனோ: கண்டிப்பா சொல்றேன் மனோ தாத்தா..

  ReplyDelete
 22. @கோமா: ஆமாங்க.. ரொம்ப நன்றி..

  ReplyDelete
 23. @ராஜி:ரொம்ப நன்றிங்க..

  ReplyDelete
 24. @பிரபு:வா மக்கா.. ரொம்ப நன்றி..

  ReplyDelete
 25. @ஹேமா:ஓ.. சேம் பின்ச்.. நான் பக்கம் பக்கமா எழுதின கவிதை, நான் ஆபிஸ்ல எழுதுற ஆர்ட்டிக்கல்ஸ் எதையுமே எங்கப்பா படிக்கமாட்டாருங்க.. இருந்தாலும் நம்புவோம்.. உங்க வீட்டிலேயும், எங்க அப்பாவும் சீக்கிரம் படிப்பாங்கன்னு..

  ReplyDelete
 26. @ஆனந்தி:லேட்டா வந்தாலும் உண்மையான மதுரைகாரங்க வாழ்த்துறது கொஞ்சம் சந்தோசமா தான் இருக்கு.. ரொம்ப நன்றி.. அப்பரம் எனக்கு சுத்தி போடலாம் வேண்டாம்.. பாசமான தோழியின் கண்கள் ஒன்னும் பண்ணிடாது.. சரிதானே.!

  ReplyDelete
 27. @அருள்:உதவுறது தானே.. உதவுவோம்..

  ReplyDelete
 28. @நிரூபன்:ரொம்ப நன்றி நிரூ.. இதில் அதிகமா கவிநயத்தை உபயோகிக்கவில்லை.. வாழ்த்து கவிதையில் அது தேவையற்றது என நினைத்தேன்.. அதுவும் சாதாரண சொற்களே போதும் என அதீத சொற்களை உபயோகபடுத்தவில்லை.. ரொம்ப நன்றி நிரூ..

  ReplyDelete
 29. அப்பாவுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நல்ல கவிதை. உடனே எங்க அப்பா கிட்ட பேசணும் போல இருக்கு.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..