திருநங்கையரை வாழ்த்த வேண்டுமா.? வேண்டாமா.?

திருநங்கையர்- ஒரு காலத்தில் ஏச்சுக்கும், கிண்டல், கேலி, நக்கல், நையாண்டினு எல்லாத்துக்கும் பயன்படுத்தியது இவர்களை தான். அன்று இவர்களுக்கு சில பல பெயர்கள் உண்டு. அதை உபயோகபடுத்தி ஒரு காலத்தில் நானும் இவர்களை நக்கலடித்தேன் என நினைக்கும் போது இன்றும் வருந்துகிறேன்.


முதலில் இவர்களை பற்றி ஆழமாக இறங்கும் முன் நேற்று தமிழக திருநங்கையர் தினத்திற்க்கு வாழ்த்துகளை போட்டுகிடுவோம். திருநங்கையரை பற்றி நான் இங்கு தனி பதிவு போடுவது அவர்களை எம்மிடமிருந்து ஒத்திவைத்து பார்க்கிறேன் என யாரும் எண்ண வேண்டாம். மகளிர் தினம், மாணவர்கள் தினம்னா அவங்கள பத்தி பதிவு போடுறோம்ல அப்படிதான் இதுவும் ஆனா கொஞ்சம் லேட்.

திரு-ஆண், நங்கை-பெண். திருநங்கையர். ஆண்கள் மற்றும் பெண்களின் இருபலமும், இருகுணமும், இருசிறப்பும் பெறகூடிய சிறப்பு பெற்றவர்கள். புதிதாக அதீத வளர்ச்சியடைந்து வரும் பால் மக்கள்.

நான் சமீபத்தில் கேள்வியுற்ற ஒரு செய்தி. தன் பத்து வயது மகனுடன் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஒரு குடும்பம் அவர்களின் ஆண் பிள்ளையை இழந்திருக்கிறது. பின்னர் எங்கு தேடியும் கிடைக்காமல் போக பல வருடம் சென்றிருக்கிறது. பின் அந்த தொலைந்து போன சிறுவனின் அக்காவுக்கு திருமணம் நடக்கும் சூழலில் ஒரு நாள் அந்த குடும்பமே தொலைந்து போன சிறுவனை நினைத்து அழுதுகொண்டு இருந்தது. அன்றே அந்த சிறுவன் பெரியவனாக அவர்கள் முன்னர் வந்து நின்றான். ஆனால் சிறுவன்-திருநங்கையாக இருந்தான். அதுவரை ஏங்கிகிடந்த பெற்றோர் அவன் வேண்டவே வேண்டாம் என ஒதுக்கிவிட்டனர்.


தொலைந்து போன சிறுவன், மும்பைக்கு சென்றிருக்கிறான். அங்கே சிலரின் தவறான வழிகாட்டுதலால் பால் முறை மாற்றத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கான். அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாய் அவன் திருநங்கையாகவே இருந்திட்டான். அவனை உபயோகபடுத்துவது எப்படி என்பது தெரியாமல் அவனை மும்பை வீதியில் அனாதையாக ஆக்கப்பட்டு,பின்னர் ஒவ்வொரு இடமாக தேடி அலைந்து அவனின் வீடை கண்டுபிடித்த அவனுக்கு இப்படியொரு அதிர்ச்சி. திருநங்கையர் கூட்டத்தோடு கூட்டமாக பின்னர் அவன் சேர்ந்துவிட்டானாம். ஏதோ ஒரு சமூக பத்திரிக்கையில் இந்த செய்தியை படித்தேன். பத்திரிக்கை பெயர் மறந்துவிட்டேன். இப்படிபட்ட பெற்றோர் ஏன் இன்னும் இருக்கிறார்கள். நான் என் தவறை உணர்ந்தது போல் அவனது பெற்றோரும் அவர்களது தவறை புரிந்திருப்பார்களா.?

ஆண்பாலர்,பெண்பாலர் இருவரை விட அதிக அக்கறை அல்லது அதிக பற்று கொண்டவர்கள் என்பது இந்த திருநங்கையர் தான். இருந்தாலும் இன்றும் மக்கள் இவர்களை ஒதுக்குவதன் காரணம் என்ன.?

எல்லாரும் டிஷ்யும் படம் பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறன். அதில 'அமிதாப்' என்கிற குள்ள மனிதரை மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் யாரை பார்த்தாலும் அமிதாப் கடன் கேட்பார். அதற்கு காரணமாய் எல்லோரும் தன்னை குள்ளமாக இருப்பதாய் சொல்லி கிண்டல் செய்வதால் இப்படி ஒரு முயற்சியை கொண்டதாய் சொல்வார். அதேதான்.. அதேதான் இப்ப திருநங்கையர் பிரச்சனையும்.!!

ஒருகாலத்தில் திருநங்கையரை யார் பார்த்தாலும் கிண்டல்,நக்கல் தான். சிலர் கல்லால் அடிப்பது கூட நடந்திருக்கு. அதிலிருந்து அவர்களை காத்துகொள்ள, அவர்களை கண்டவுடன் எல்லாரும் பயந்துஓட அவர்கள் மேற்கொண்ட பாதை தான் நெருங்கி பழகுதல் என்பது. பெரும்பாலும் திருநங்கையர்கள் பெண்கள் உடுத்தும் ஆடைகளையே உடுத்துவர். ஏனென்றால் அவர்களை அதிகமாக எள்ளி நகையாடியது ஆண்கள் தான். எனவே அவ்வாறு யாராது நகையாடும்போது அவர்களை கொஞ்சி, தடவி அவர்களை பயந்து ஓட செய்வர். இதன் மூலம் அவர்கள் கண்ணெதிரே கிண்டலிப்பவர்கள் குறைந்தது. தமக்கென்று பாதை வகுத்து வாழ ஆரம்பித்தனர்.பின்பு என்ன ஆனது.? அவர்களும் தங்களுக்கென்று இயக்கம்,சிறப்பு எல்லாவற்றையும் பெற்றனர். நன்கு கற்ற திருநங்கையர்கள் தலைமை ஏற்று சிறப்பாக நடந்தனர். நானும் அவர்களும் நம்மவர் போல தானே என மாறிவிட்டேன். இருந்தாலும் அவர்கள் அன்றைய காலத்தில் கொண்ட ஒரு பாதுகாப்பு கருவியை இன்னும் சிலர் கையாண்டு வருகிறார்கள். அதுவும் சென்னை மின்சார ரயிலில் பயணிக்கும் போது இந்த கொடுமை அதிகம். உட்காந்திருக்கும் போது வந்து கன்னத்தை தடவுவது, சில பல சில்மிஷங்களில் ஈடுபட்டு காசு கேட்பது என்று அவர்களிடமிருந்து தப்பிக்கவே பலர் காசை கொடுத்திடுவார்கள். பின்பு இவர்கள் மீது வழக்கு பதிக்கப்பட்டது. பின்னர் சென்னை-திருவள்ளூர் பாதைகளில் இருக்கும் ரயில்களில் இவர்கள் ஆட்டம் காட்ட தொடங்கினர். இதனால் திருந்த வேண்டும் என நினைக்கும் ஆணும், பெண்ணும் கூட திருந்த மறுக்கின்றனர்.

திருநங்கையர்களே.! நீங்கள் உங்கள் பாதுகாப்பிற்காக கையாண்ட விதம் ஓகே.! ஆனால் இன்றும் உங்களை போன்றவர்கள் இப்படி செயல்படுவதை கண்டுகொள்ளாமல் இருப்பது சரியா.? என்று நான் கேட்ட போது எனக்கு தெரிந்த திருநங்கையர் ஒருவர் சொன்னார்.''நாங்கள் கையை தட்டி காசு கேப்போம். எங்களை வேற்றுமையா பாக்குறது குறஞ்சாலும் வேலைன்னு யாரும் தருவது இல்லை. அதனாலே நாங்க காசு கேக்குறோம். நாங்க கையை மட்டும் தான் தட்டி கோப்போம். கொஞ்சல், சீண்டலோடு நாங்க கேட்டதெல்லாம் இப்ப இல்ல. மானங்கெட்ட உங்களை போன்ற ஆண்கள் தான் காசுக்காக எங்களை போலவும் வேஷம் கட்டி காசு வாங்கி எங்க மானத்தை வாங்குகின்றனர்.'' என்றார்.

அவர் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருந்தாலும் மொத்த திருநங்கையரும் இன்னும் திருந்தவில்லை என்பது உண்மை. இப்போது சொல்கிறேன் திருநங்கை மக்களே.! உங்களை போன்றவர்களை திருத்துங்கள், உங்கள் போலிகளை நீக்குங்கள். உங்களுக்காக, உங்கள் உரிமைக்காக மேலும் வளர்ச்சிக்காக குரல் கொடுக்க நான் இருப்பேன்..!!

அப்பரம் என்ன இவர்களை ஏங்க வாழ்த்த கூடாது. இவர்களும் நாமும் ஒண்ணுதாங்க. தாமதமான திருநங்கையர் தின வாழ்த்துக்கள் சொல்லிடுவோம்.!! எல்லாரும் சொல்லுங்க பாப்போம்..

"திருநங்கையர் தின நல்வாழ்த்துக்கள்"

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

டிஸ்கி1: முதல் படத்தில் இருப்பவர் சகோதரி என்ற பவுண்டேஷனை நடத்தி வரும் திருநங்கை கல்கி. எம்.ஏ படித்தவரான இவர் திருநங்கைகளுக்கான திருமண இணையதளத்தையும் நடத்தி வருபவர்.

டிஸ்கி 2:இரண்டாம் படத்தில் இருப்பவர் முன்னர் பார்த்த அவரே தான். நர்த்தகி என்னும் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். பின்னர் இந்த தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட விண்ணப்பித்தவர்

டிஸ்கி 3:மூன்றாவது படத்தில் இருப்பவர் சுதா. 5க்கும் மேறபட்ட படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர். மிஸ் திருநங்கை போன்று பல பட்டம் பெற்றவர்.

Comments

 1. கண்டிப்பாக அவர்கள் உணர்வுகளை மதிக்க வேண்டும்...

  ReplyDelete
 2. மிகவும் அருமையான, அவசியமான விஷயம் எழுதிருக்கீங்க கூர்

  !!

  ReplyDelete
 3. திருநங்கையர்- ஒரு காலத்தில் ஏச்சுக்கும், கிண்டல், கேலி, நக்கல், நையாண்டினு எல்லாத்துக்கும் பயன்படுத்தியது இவர்களை தான். அன்று இவர்களுக்கு சில பல பெயர்கள் உண்டு. அதை உபயோகபடுத்தி ஒரு காலத்தில் நானும் இவர்களை நக்கலடித்தேன் என நினைக்கும் போது இன்றும் வருந்துகிறேன்.//

  இந்தச் செயலை நானும் பக்குவப் படாத பருவ வயதில் செய்திருக்கிறேன் என்பதனை, இப்போது நினைத்துப் பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது சகோ.

  ReplyDelete
 4. எல்லாரும் டிஷ்யும் படம் பாத்திருப்பீங்கன்னு நினைக்கிறன். அதில 'அமிதாப்' என்கிற குள்ள மனிதரை மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் யாரை பார்த்தாலும் அமிதாப் கடன் கேட்பார். அதற்கு காரணமாய் எல்லோரும் தன்னை குள்ளமாக இருப்பதாய் சொல்லி கிண்டல் செய்வதால் இப்படி ஒரு முயற்சியை கொண்டதாய் சொல்வார். அதேதான்.. அதேதான் இப்ப திருநங்கையர் பிரச்சனையும்.!!//

  இந்தத் திரு நங்கையரின் பிரச்சினைகளை விளக்க நீங்கள் கையாளும் மொழி நடையும், உதாரணமும் உங்கள் ஆய்வுக் கட்டுரைக்குப் பக்க பலம்.

  ReplyDelete
 5. நானும் அவர்களும் நம்மவர் போல தானே என மாறிவிட்டேன்.//

  நானும் உங்களைப் போலத் தான், புத்தி வந்ததும் தான் தெளிந்தேன் சகோ.

  ReplyDelete
 6. மானங்கெட்ட உங்களை போன்ற ஆண்கள் தான் காசுக்காக எங்களை போலவும் வேஷம் கட்டி காசு வாங்கி எங்க மானத்தை வாங்குகின்றனர்.'' என்றார்.//

  இது சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு சம்மட்டியால் உச்சிப் பொட்டில் அடிப்பது போன்ற உணர்வினைத் தரும் சகோ. உங்கள் கட்டுரையினூடாகப் பல விடயங்களை அறியக் கிடைத்தது, எமது நாட்டில் இத் திருநங்கைகள் குறைவாகவே காணப்படுகின்றார்கள் சகோ.

  ReplyDelete
 7. இந்தத் திரு நங்கைகளை, எங்கள் உறவுகள் இன்னும் ஒரு குறுகிய வட்டத்தினுள் வைத்தே பார்க்கிறார்கள் என்று நீங்கள் சொல்வது வேதனையைத் தருகிறது சகோ.
  வேலை கொடுகாமையே அவர்கள் வீதிகளில் சில்மிசங்களில் ஈடுபடுவதற்கான முதற் காரணம் என்பதனை ஏற்றுக் கொள்கிறேன்.

  உங்கள் கட்டுரையின் அடிப்படையில், இவர்களுக்கான சமூக அமைப்புக்கள், கழகங்கள் இருந்தாலும் அவற்றின் செயற்பாடுகள் இன்னமும் மந்த கதியில் தான் இருக்கின்றன என்று எண்ணவும் தோன்றுகிறது,

  ReplyDelete
 8. உங்கள் பதிவை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சமூகத்தில் அவர்களை முழுமையாக அங்கீகாரம் செய்யும் வரை அவர்களுக்கு இந்தக் கொடுமை மாறப்போவதில்லை. விகடனில் அவர்கள் பற்றிய ஒரு ஆர்ட்க்கிள் படித்தேன். அவர்கள் திருநங்கையாக மாறுவதன் காரணம் அறிந்து கொண்டேன். அந்தப் பதிவை படித்த பின்னர் மனம் கனத்துப் போனது.

  ReplyDelete
 9. Present Sir...Naanum Vaazthugal sollikiren

  ReplyDelete
 10. @மனோ:கண்டிப்பாக.. அவர்கள் ரொம்ப நல்லவர்கள்..

  ReplyDelete
 11. @ரஜீ:ரொம்ப நன்றிங்க.. எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டியது தானே.!

  ReplyDelete
 12. @நிரூ://இந்தச் செயலை நானும் பக்குவப் படாத பருவ வயதில் செய்திருக்கிறேன் என்பதனை, இப்போது நினைத்துப் பார்க்கும் போது வெட்கமாக இருக்கிறது சகோ.//

  ம்ம்.. இப்போது திருந்தினோமே என மகிழ்ச்சியடைவோம்..

  ReplyDelete
 13. //இந்தத் திரு நங்கையரின் பிரச்சினைகளை விளக்க நீங்கள் கையாளும் மொழி நடையும், உதாரணமும் உங்கள் ஆய்வுக் கட்டுரைக்குப் பக்க பலம்.//

  இதை சுட்டி காண்பித்தால் நன்கு ஏதுவாக இருக்கும் என தோன்றியது.. அதான்.. ரொம்ப நன்றி..

  ReplyDelete
 14. //எமது நாட்டில் இத் திருநங்கைகள் குறைவாகவே காணப்படுகின்றார்கள் சகோ//

  இங்கும் ரொம்ப அதீத அளவு என சொல்லிடமுடியாது.. ஆனால் உங்கள் நாட்டினைவிட அதிகம் தான்..

  ReplyDelete
 15. //உங்கள் கட்டுரையின் அடிப்படையில், இவர்களுக்கான சமூக அமைப்புக்கள், கழகங்கள் இருந்தாலும் அவற்றின் செயற்பாடுகள் இன்னமும் மந்த கதியில் தான் இருக்கின்றன என்று எண்ணவும் தோன்றுகிறது,//

  ஆம்.. அவர்கள் நன்கு தெளிந்த திருநங்கையின் நலனை மேம்படுத்துவதிலே இருக்கின்றனர்.. சரிவர தெளியாத திருநங்கைகளை தெளியபடுத்த அவர்கள் முயற்சி பெரிதும் கம்மி..

  ReplyDelete
 16. @வானதி: உங்கள் கருத்தை நான் முற்றிலுமாக ஏற்கிறேன்..ஆனால் நீங்கள் கூறிய அதே கருத்தோடு தான் நானும் இந்த பதிவு எழுதியிருக்கிறேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.. கருத்துக்கு நன்றி..

  ReplyDelete
 17. @டக்கால்டி:ரொம்ப நன்றிங்க.. வாழ்த்துக்களுக்கு..

  ReplyDelete
 18. அவர்களின் மாற்றமும் அவர்களைப் பற்றிய கருத்துக்கள் சமூகத்திலும் மாறியது சந்தோஷமே.இப்படிக்கு றோஸ் என்கிற ஒரு நிகழ்ச்சி சின்னத்திரையில் முன்பு பார்த்திருக்கிறேன்.இதை நடத்தியவர் ஒரு திருநங்கை.அதன்பிறகே இவர்களளின் மாற்றங்கள் வேதனைகள் புரிந்துகொண்டேன்.

  என்பக்கத்தில் இவர்களுக்கான ஒரு கவிதைகூட அவ(ன்)(ள்)எழுதியிருக்கிறேன்.
  வாழ்த்துகள் !

  ReplyDelete
 19. @ஹேமா:நன்றி ஹேமா.. நானும் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தேன்.. நல்லா ப்ரோக்ராம் பண்ணுவாங்க..

  கவிதையை வந்து படிக்கிறேன்..

  வாழ்த்துகளுக்கு நன்றி..

  ReplyDelete
 20. சில வருத்தப்படும் செயல்களை செய்யாமல் இருப்பின் அவர்களுக்கு சமூகத்தில் ஆதரவு மேலும் கூடும்.

  ReplyDelete
 21. @சிவகுமார்: கண்டிப்பாக நண்பரே.!! மிக்க நன்றி

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..