ஈழன் எழுவான் சிங்களனே.!


தூரத்து சிரிக்கும் சிறுவனே.!
உன் சினமற்ற சிரிப்பினை
கொஞ்சம் கடனாக கொடுப்பாயா.?
புன்னகை மறந்த உதடுகள் கொஞ்சம் புசிக்கட்டுமே!

சிரிப்பில்லா வாழ்க்கையா.?
பிறகென்ன கண்டிருப்பான் என்கிறாயா.?

கண்டிருக்கிறேன்..
கூடாரத்தில் நித்திரை கொண்டிருந்தபோது
பொசுங்கி போன என் வீட்டின் முற்றம் கண்டிருக்கிறேன்.!

மண்ணில் பொதிந்த கைகளை நீட்டுமுன்
தலையினை இழந்த
உற்றத்தாரையும்,சுற்றத்தாரையும் கண்டிருக்கிறேன்.!

சந்திக்க வந்த கழுகுகள்
வஞ்சித்து சென்றதை கண்டிருக்கிறேன்.!

அன்பை இழந்த உறவுகள் கண்ணில்
உறைந்த கண்ணீரை கண்டிருக்கிறேன்.!

உதவிக்கு வந்த மாற்றான்கள்
கம்பங்கொல்லையில் காஞ்சமாடுபோல
சுரக்கும் திரவம் கொண்டு
எங்கள் எதிர்பாலரை சீரழித்ததை;
நீதான் கண்டிருக்கியா.?

உணர்ச்சிகள் மறந்து
சுரப்பற்ற வெற்றுடம்பில்
அன்பை கொஞ்சும் தாய்பாலை தேடிடும்
தத்தி தவழும் குழந்தையாய்
என்றாவது நீ இருந்ததுண்டா.?

ஏடுகள் எடுக்க வேண்டிய எதிர்காலம்
உயிர் கொல்லும் சாடிகள் ஏந்திய
சரித்திரம் அங்கே சாத்தியமா.?

வெளி விளையாடிய பிஞ்சுகளின்
செல்லதாய் சீண்டும் கால்கள்
நாலாபுறமும் சிதறிய சாதனை
அங்கு தான் உண்டா.?

உயிராக நினைத்த கால்நடைகள்
உயிரை ஏந்திய சொந்த மணல்
ஒற்றை சீற்றத்தில் இழந்தோமே.!
கிடைத்தது கிடைத்ததென
துடிக்கும் சொந்தங்களை விட்டுவிட்டு
மிதந்தோடிய படகில் மூழ்கி தொலைத்தோமே
எங்கள் உற்றத்தை.!
பின்னே குண்டடி கண்டோமே.!!

கண்முன்னே சீரழியும் சொந்தங்கள்
கேட்பாரற்று கதறும் செவ்வை உதடுகள்
நடைபழகா கால்களும் நஞ்சிக்கபடும் துயராக
கண்டும் காணாத கோழை நானாக
உன்னால் தான் இருந்திட முடியுமா.?

எங்கோ ஒரு மூலையில் உதித்திட்ட சூரியன்
ஒளி மங்கி ஆற்றங்கரையோரம் தவியாய் தவிக்கவிட்டது.!
சிகப்பு துண்டான் ஆட்டமோ பெரும் ஆட்டமாகிவிட்டது..

ஆளட்டும்.!! அவர் எமை ஆளட்டும்.!!
தூரத்தில் ஒரு விடிவெள்ளி தோன்றும் வரை ஆளட்டும்.!!
உதிரங்களை மணல் ஏற்க
உச்சந்தியில் அவர் குரல் கதற
மீண்டும் வருவோம்.!! மீண்டு வருவோம்.!!
அதுவரை எமை ஆளும்.!!
அதன்பின்னே ஆளுமைக்கு எடுத்துக்காட்டாய்
எமக்கென்று தோன்றும் தேசத்தில் காட்டுகிறேன்
வேற்றுமையில்லா தேசம் என்ன என்பதை.!!

சிரிக்கும் சிறுவனே சிரித்துக்கொள்
உன் சிரிப்பு எனக்கு வேண்டாம்
வஞ்சகம் இல்லா சிரிப்பை நானாக கொண்டு
கோட்டை ஏறி சிரிப்பேன் ஒய்யாரமாக.!!

டிஸ்கி: CONFIDENCE MAKES A MAN PERFECT.!!!

Comments

 1. ராஜ நடராஜன்19 April 2011 at 22:13

  வலிமையான கவிதை.அப்படியே மனதோடு ஒட்டிக்கொள்ளும் வார்த்தைகள்.

  ReplyDelete
 2. மனதை ரணமாக்கும் வரிகள்....

  ReplyDelete
 3. ராஜ நடராஜன்19 April 2011 at 22:15

  நம்பிக்கைதான் வாழ்க்கையென்று பின்னூட்டமிட நினைத்தேன்.ஆங்கிலத்தில் அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.

  இணைவோம்!

  ReplyDelete
 4. ஈழன் எழுவான் சிங்களனே.!//

  நம்பிக்கை நிறைந்த வரிகளோடு, கொஞ்சம் வீராவேசமாய் சவாலும் செய்கிறீர்கள் தலைப்பினூடு.

  ReplyDelete
 5. ராஜ நடராஜன்19 April 2011 at 22:18

  வாசகர் பரிந்துரைக்கு வருமென்ற நம்பிக்கையுடன் முதல் ஓட்டு.

  ReplyDelete
 6. தூரத்து சிரிக்கும் சிறுவனே.!
  உன் சினமற்ற சிரிப்பினை
  கொஞ்சம் கடனாக கொடுப்பாயா.?
  புன்னகை மறந்த உதடுகள் கொஞ்சம் புசிக்கட்டுமே!//

  முதல் வரிகளோடு அல்லது முதற் பந்திகளோடு கொஞ்சம் முரண்பட வேண்டியுள்ளது சகோ,

  தூரத்தில் சிரிக்கும் சிறுவனின் புன்னகையினை வாங்கி நாங்கள் சிரிப்பதால் ஏதும் ஆகி விடாது தானே? நமக்காக நாம், நம் வாயால் தானே சிரிக்க வேண்டும். சிரிப்பைத் தொலைத்தவர்கள் தாங்களாக அச் சிரிப்பைத் தேடிப் பெற்றுக் கொள்வதா அல்லது பிறரிடமிருந்து கடன் வாங்கி, இரவல் சிரிப்பைப் பெற்றுச் சிரிப்பதா சிறந்தது?

  ReplyDelete
 7. ராஜ நடராஜன்19 April 2011 at 22:20

  //நம்பிக்கை நிறைந்த வரிகளோடு, கொஞ்சம் வீராவேசமாய் சவாலும் செய்கிறீர்கள் தலைப்பினூடு.//

  நிருபன்!ஊதி தள்ளிவிடும் வலு இருந்தும் வஞ்சகங்கள் எம்மை சூழ்ந்து கொண்டன.கூடவே பிரிந்து நிற்கும் சூழலும்.

  ReplyDelete
 8. கூடாரத்தில் நித்திரை கொண்டிருந்தபோது
  பொசுங்கி போன என் வீட்டின் முற்றம் கண்டிருக்கிறேன்.!

  மண்ணில் பொதிந்த கைகளை நீட்டுமுன்
  தலையினை இழந்த உற்றத்தாரை கண்டிருக்கிறேன்.!//

  இது எங்களின் போர்க்கால நிஜங்களை, கண் முன்னே கவியூடாக கொண்டு வரும் வார்த்தைகள். அத்தனையும் நிஜங்கள். அனுபவத்தவனின் வார்த்தைகளை விட உங்களின் வார்த்தைகளில் வலியினை உணர்ந்ததற்காய், உடலை மட்டும் உங்கள் ஊரில் வைத்துக் கொண்டு, மூச்சுக் காற்றினை எம் ஈழத்தில் சுவாசித்ததற்கான ஆதாரம் தெரிகிறது சகோ.

  ReplyDelete
 9. சந்திக்க வந்த கழுகுகள்
  வஞ்சித்து சென்றதை கண்டிருக்கிறேன்.!//

  சமாதானம் பேச வந்தவர்களையும், சதி செய்தவர்களையும் உரைக்கிறீர்கள். இவை கழுகுகளல்ல.... நரிகள்..!

  ReplyDelete
 10. ராஜ நடராஜன் said...
  //நம்பிக்கை நிறைந்த வரிகளோடு, கொஞ்சம் வீராவேசமாய் சவாலும் செய்கிறீர்கள் தலைப்பினூடு.//

  நிருபன்!ஊதி தள்ளிவிடும் வலு இருந்தும் வஞ்சகங்கள் எம்மை சூழ்ந்து கொண்டன.கூடவே பிரிந்து நிற்கும் //

  தலை வணங்குகிறேன் உங்கள் உணர்வுகளிற்கு என்று ஒற்றை வார்த்தையினை உதிர்த்து, உங்கள் அன்பினை எடை போட முடியாது சகோ. யாவும் நாமறிவோம். படகில் வக்கீல்கள் உட்பட பல பேர் எமக்காக வர முயற்சி செய்ததுவு, இடை நடுவில் கைது செய்யப்பட்டதனையும் அறிவோம் சகோ.

  ReplyDelete
 11. ராஜ நடராஜன் said...
  வாசகர் பரிந்துரைக்கு வருமென்ற நம்பிக்கையுடன் முதல் ஓட்டு.//

  அஃதே...அஃதே.. இந்த உணர்வுகள் அனைத்து ஈழத் தமிழனையும் சென்று சேர வேண்டும் எனும் நம்பிக்கையினையும் சேர்த்துக் கொள்ளவும் சகோ.

  ReplyDelete
 12. உதவிக்கு வந்த மாற்றான்கள்
  கம்பங்கொல்லையில் காஞ்சமாடுபோல
  சுரக்கும் திரவம் கொண்டு
  எங்கள் எதிர்பாலரை சீரழித்ததை;
  நீதான் கண்டிருக்கியா.?//

  இறந்த பிணங்களையே புணர்ந்து மகிழ்ந்தன எங்களூர் காவல் மாடுகள் சகோ..

  காட்சிகள் மீண்டும் கண் முன்னே...

  ReplyDelete
 13. வலியை உணர்த்தும் வலிமையான கவிதை

  ReplyDelete
 14. எங்கோ ஒரு மூலையில் உதித்திட்ட சூரியன்
  ஒளி மங்கி ஆற்றங்கரையோரம் தவியாய் தவிக்கவிட்டது.!
  சிகப்பு துண்டான் ஆட்டமோ பெரும் ஆட்டமாகிவிட்டது..//

  இறுதி நேரங்களில் இமைகளை மூடச் செய்த நிகழ்வுகளையும், அதன் பின்னரான தற்போதைய நிகழ்வுகளையும் அழகாகச் சுட்டியிருக்கிறீர்கள்.
  சூரியன்- உருவகம் என்பதை விட எங்கள் அனைவருக்கும் உயிராக இருந்த காவியன் என்று கூறலாம்!

  ReplyDelete
 15. சிரிக்கும் சிறுவனே சிரித்துக்கொள்
  உன் சிரிப்பு எனக்கு வேண்டாம்
  வஞ்சகம் இல்லா சிரிப்பை நானாக கொண்டு
  கோட்டை ஏறி சிரிப்பேன் ஒய்யாரமாக.!!//


  //தூரத்து சிரிக்கும் சிறுவனே.!
  உன் சினமற்ற சிரிப்பினை
  கொஞ்சம் கடனாக கொடுப்பாயா.?
  புன்னகை மறந்த உதடுகள் கொஞ்சம் புசிக்கட்டுமே!//

  கவிதையின் முதல் அடி எமக்காக சிரிப்பினை பிறரிடம் கடன் கேட்கும் உறவொன்றின் உணர்வாக ஆரம்பித்திருக்கிறது, ஆனாலும் எங்கள் கடந்த கால வாழ்க்கையினையும், அவலங்களையும் கண் முன்னே கொண்டு வந்து, சிரிப்பினை கடன் வாங்கிச் சிரிப்பதோ எனும் இறுமாப்புடன், புன்னகையை நாமாக வென்றெடுப்போம் எனும் உணர்வுடன் முடிவடைகிறது கவிதை.

  ReplyDelete
 16. கவிஞனின் உணர்வுகள் அல்லது உள்ளக் கிடக்கை:

  ஆரம்ப வரிகளில் புன்னகையைக் கடன் வாங்கியாவது இவர்கள் சிரித்து மகிழலாமே எனும் உணர்வுடன் ஆரம்பிக்கிறது, ஆனாலும் அவன் கவிஞனின் மனதில் கடந்த கால அவலங்களும், அக்கிரமங்களும் கண் முன்னே வந்து போனதும், நம்பிக்கை எனும் அச்சாணி கொண்டு, மீண்டும் வலிமையுடையவராய் இயல்பாக எங்கள் முகங்களெல்லாம் புன்னகையினை ஒரு நாள் உதிர்க்கும் எனும் வைராக்கியத்துடன் கவிதையில் புலப்படுகிறது.

  ReplyDelete
 17. ஒரு கால் இன்றி நிமிர்ந்து ஐ நாவிற்கு முன்பதாக இருக்கும் நாற்காலிப் படம்......கவிதையின் நெஞ்சுரத்திற்கு அழகு தருகிறது.

  ReplyDelete
 18. டிஸ்கி: CONFIDENCE MAKES A MAN PERFECT.!!!//

  What does this mean? How long we should have to wait for this one?
  Any way, definitely we should trust your intuition. But We will have to wait another? (I can't say right now, how long it will take)

  ReplyDelete
 19. வலிகள் நிறைந்த கவிதை நம்பிக்கை நிறைந்த வரிகள் அருமை..

  ReplyDelete
 20. கண்ணீரை வரவழைக்கும் வரிகள். மறக்க நினைத்தாலும் முடியாத படி இன்னும் வலிகள் நெஞ்சில் இருக்கு. அருமை.

  ReplyDelete
 21. சக்சஸ் சக்சஸ்..........
  ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
  இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

  ReplyDelete
 22. ராஜ நடராஜன்20 April 2011 at 23:15

  கூர்மதியன்!நேற்று நீங்க போட்ட கவிதை பரிந்துரைக்கு வரும்ன்னு இன்றைக்குத் தேடிப்பார்த்தேன்.காணோமே!

  ReplyDelete
 23. ம்...நல்லதே நடக்கணும்ன்னு நினைப்போம்.ஐநா புலம் பெயர் தமிழர்கிட்ட லஞ்சம் வாங்கிடிச்சாம்.
  எங்க போய்ச் சொல்லியழ.எங்களை அநாதைகளா ஆக்கிட்டுப் போய்ட்டாங்களே !

  ReplyDelete
 24. எம் வலிகளை உணர்த்தும் கவிதை. புகைப்படமும் நினைவில் நிற்கிறது.

  ReplyDelete
 25. காலம் மாறும் கொடியவர்களின் சிரிப்பும் மாறும்

  ReplyDelete
 26. @ராஜ நடராஜன்://வலிமையான கவிதை.அப்படியே மனதோடு ஒட்டிக்கொள்ளும் வார்த்தைகள்.//

  மனதிலிருந்து எழுந்தது தானே மனதோடு ஒட்டிக்கொண்டால் தவறில்லை..


  //கூர்மதியன்!நேற்று நீங்க போட்ட கவிதை பரிந்துரைக்கு வரும்ன்னு இன்றைக்குத் தேடிப்பார்த்தேன்.காணோமே!//

  ஹி ஹி.. அதுக்கு உங்க அளவுக்கு எனக்கு திறமை வேணுமே.!!

  ReplyDelete
 27. @மனோ: அவர்கள் வாழ்க்கை மனதை ரணமாக்ககூடியவை..!! அதனால் வரிகளும் அப்படி அமைந்திட்டது போலும்..

  ReplyDelete
 28. @நிரூபன்://நம்பிக்கை நிறைந்த வரிகளோடு, கொஞ்சம் வீராவேசமாய் சவாலும் செய்கிறீர்கள் தலைப்பினூடு.//

  ஆம் நிரூ.. ஆம்.. உங்களுக்கு இல்லாத நம்பிக்கை.. என்னிடத்தில் இருக்கும் அதே நம்பிக்கை..

  ReplyDelete
 29. // இரவல் சிரிப்பைப் பெற்றுச் சிரிப்பதா சிறந்தது?//

  ஹி ஹி.. படிங்கப்பா படிங்கப்பா புரியும்..

  ReplyDelete
 30. //உடலை மட்டும் உங்கள் ஊரில் வைத்துக் கொண்டு, மூச்சுக் காற்றினை எம் ஈழத்தில் சுவாசித்ததற்கான ஆதாரம் தெரிகிறது சகோ//

  எனது அம்மாவும் அப்பாவும் சகோக்களும் சகாக்களும் சுவாசிக்கும் மூச்சுகாற்றையே நானும் சுவாசிக்கிறேன்.. சரியாக சொல்கிறீர்கள்..

  ReplyDelete
 31. //சூரியன்- உருவகம் என்பதை விட எங்கள் அனைவருக்கும் உயிராக இருந்த காவியன் என்று கூறலாம்//

  கண்டிப்பாக.. எனக்கு உங்கள் ப்ரச்சனையில் அதீத ஈடுபாடு வந்ததில் இவரும் ஒரு காரணம் என சொல்லலாம்..

  ReplyDelete
 32. @சிபி: ஆம் நண்பரே.!! உங்களின் வலி தான் இங்கே.!! நமது வலி..

  ReplyDelete
 33. @பிரஷா: நன்றிகள் பிரஷா..

  ReplyDelete
 34. @ஹேமா:உங்கள் வார்த்தை எனக்கு கவலை இருக்கிறது.. நாங்கள் இருக்கையில் இன்னும் அனாதைகள் என புலம்புவது ஏன்.?

  ReplyDelete
 35. @ராஜீவன்: ம்ம்.. நன்றிகள்..

  ReplyDelete
 36. @கந்தசாமி:நன்றிகள் தோழரே.!!

  ReplyDelete
 37. @சதீஷ்:கண்டிப்பாக.. நம்புவோம்..

  ReplyDelete
 38. ராஜ நடராஜன்22 April 2011 at 23:24

  கூர்மதியன்!இன்றைக்குப் பின்னூட்டப் பகுதியில் மீண்டும் கண்ட போது மீண்டும் மனதை அள்ளிக்கொண்டது கவிதை.

  ReplyDelete
 39. @ராஜ நட: அட நானே இத ஒரு முறை தான் படிச்சேன் பாஸ்.. இருந்தாலும் ரொம்ப நன்றி..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி