இசையோடு பயணமும்.! இம்சித்த இரைச்சலும்.!!

என் வேலைகளில் அதிக நேரம் பயணிப்பது என்பது எனக்கு பழக்கப்பட்டதே. அப்படி இருக்கையில் நேற்று ஒரு கோவிலுக்கு செல்ல தாம்பரத்திலிருந்து-பீச் ஸ்டேஷனுக்கு ட்ரெயின்ல ஏறுனேன்.

உறவுகள்,நண்பர்கள் யாருமே இல்லாத என்னை நானே தனிமை படுத்தும் வேளையில் எனக்கு மிகவும் உறுதுணையா இருப்பது படிப்பதும்-எழுதுவதும் தான். ஆனால் அந்த ட்ரெயின் சூழலில் எனக்கு இவ்விரண்டையும் செய்ய வாய்ப்பே இல்லை.


அதனால் என்னின் அடுத்த அபிப்ராயம் இசை. காலை வேலைங்கறதால அப்படியே மிதமிஞ்சிய அருமையான ஜன்னல் ஓர காத்து அப்படியே கலகட்டுச்சு. காதுல ஹெட் போனை எடுத்து மாட்டிகிட்டு பாட்டை போட்டா உள்ள இளையராஜாவும்-ரஹ்மானும் மாறி மாறி போட்டி போட்டாங்க. ஆல் மெலடீஸ்.!! க்யூட் மெலடீஸ்.

பட்டுனு நடுவுல பூந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ். தெய்வ திருமகன் படத்திலிருந்து ''ஆரிரோ ஆராரிரோ'' என்னும் அருமையான பாடல்.  ஹரிசரண் வாய்சுல அப்படியே மிதக்கலாம் போலிருக்கும். புல்லாங்குழலும், பியானாவையும் போட்டு மாறி மாறி கலக்கலா சூப்பரா இருந்தது. அதுவும் அதிகமா 
வாய்ஸ்க்கு முக்கியத்துவம் கொடுத்தது கொடுத்தது செம.!!அடுத்து அப்படியே நம்ம ஜீ.வி.ய அந்தரத்தில விட்டுபுட்டு ஒரு 'யு'டர்ன் போட்டு ராஜா நடுவுல பூந்தார். மூடுபனி படத்திலிருந்து 'என் இனிய பொன் நிலாவே'. இந்த பாட்டு ஆரம்பிச்சவுடனே ஜன்னலோரம் லைட்டா காலை சாரல். ராஜா உங்க பாட்டுக்கு மழை கொண்டு வர சக்தி கூட இருக்கா.? செம செம.!! அதுவும் அந்த பாட்டின் ஆரம்பத்தில் வரும் கிட்டார் ஒலி, நடுவுல எழும்பும் கிட்டதட்ட இரண்டாவது நிமிடத்துக்கு பிறகு வரும் பியானோ செம கெத்து..  கோரஸ் செமயா யூஸ்..!! இந்த படம் தான் ராஜாவின் 100வது படம்னு நினைக்கிறேன். 

அப்படியே சாரலும் பாடலும் போய்கிட்டு இருக்கையில கூட்டத்தோட கூட்டமா நம்ம ஹாரிஸ் உள்ள புக பாத்தாரு. ஆனா அந்த க்ளைமேட் செமயா இருந்ததால ராஜாவை விட மனசு வராம ராஜாவின் பாடல் மட்டுமே கேட்க தொடங்கினேன். அடுத்து தொடங்கியது முல்லும் மலரும் படத்திலிருந்து செந்தாழம் பூவில் பாடல். இந்த பாட்டில் எனக்கு ராஜாவை விட யேசுதாஸை ரொம்ப பிடிக்கும். என்ன மாதிரி வாய்ஸ்.!! சூப்பர்ல.. ராஜாவும் நான் உனக்கு எந்த அளவுக்கு சளைச்சவன் இல்லனு மியூசிக்ல அப்படியே மிதக்க வைப்பார். நடுவுல குருவிகள் சத்தத்தோட வர்ற புல்லாங்குழலோசை.!! கண்ணை மூடி கேட்டு பாருங்கப்பா.. அப்படியே உங்கள சுத்தி இருப்பது எல்லாம் அப்படியே மறைந்திடும். ரெண்டு பேருக்கும் நடந்த போட்டியில யேசுதாஸ் தான் ஜெயிச்சார்னே சொல்லலாம்.!! 


அப்படியே மியூசிக்கோடு அப்படியே லயித்து போயிகிட்டு இருந்தபோது சடார்னு ஒரு சத்தம். பக்கத்துல ஒரு நடுத்தர வயது ஆண் வந்து உக்காந்தார்.  அப்படியே ஜன்னல் ஓரம் சாய்ந்தபடியே பாட்டை கேட்டுகொண்டு அவரையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பாக்கெட் உள்ளே இருந்து ஒரு ஃபோனை எடுத்தார். வச்சாரு ஒரு பாட்டை. ''லலாக்கு டோல் டப்பி மாலு மய்யா மாலு'' அப்படினு அந்த பாடல் தொடங்குச்சு. பயபுள்ள காலையில ராஜாவோட பயணிக்கும் போது ஏன்யா இந்த மாதிரி பாட்டெல்லாம் போடுறீங்க.? அப்படி கேக்கணும்னு தோணினா ஹெட் போன்ல என்னைய மாதிரி போட்டு கேக்க வேண்டியது தானே.!! அதுவும் கொரியன் மொபைல். பாட்டு போட்டாலே அதிரும். அதுல பாட்டு போட்டதால என் ஹெட் ஃபோன்ல என்னால ராஜாவ கண்டே பிடிக்க முடியல. ம்ம்..!! 

யோவ் அது என்ன கொரியன் மொபைல் வச்சிருந்தா பெரிய அப்பாடக்கரா நீ.? என்னை அந்த க்ளைமேட்டையும் பாட்டையும் ரசிக்க விடாம என்ன பாட்டு நீ கேட்ட.. லலாக்கு டோல் டப்பி.. போடாங்க.. அப்படி என்னதான்யா அந்த கானா பாட்டுல இருக்கு.? கொச்சையான சொல்லையும், நாராம்சமா ட்ரம்ஸை போட்டு குத்திட்டா அது இசையாகுமா.? நாலு ட்ரம் குத்தி குத்தி கொடுத்தா குழந்தை கூட அதுக்கு ஏத்தமாதிரி வார்த்தைகள் போட்டு பாட்டா பாடும். இப்படி பாடுறதுக்கு பேரு திறமையா.? இத சத்தமா வச்சது மட்டுமில்லாம அதுக்கு அவரு காலுல தாளம் வேற.. யோவ் உன் ஃபோனை கொண்டு போயி ட்ரெயினுக்கு முன்னாடி கட்டி விட்டா ஊருக்கே கேக்குமில்ல.!! போங்கயா நீங்களும் உங்க பாட்டும்.!! கேக்குறத யாருக்கும் தொந்தரவு இல்லாம கேக்கணும்னு உங்கள மாதிரி ஆளுக்கு தெரியாதா.?

இந்த ஆளு பண்ணின டென்ஷனால அடுத்து எனக்கு பிடிச்ச இங்கேயும் ஒரு கங்கை படத்திலிருந்து சோலை புஷ்பங்களே பாட்டை என்னால அப்போ ரசிக்க முடியாம போச்சு. கடுப்புல ஹெட் ஃபோனை கழட்டிட்டு அந்த ஆளை நாலு விடு விட்டேன். முதல்ல கொஞ்சம் பம்பினான். அப்பரம் அப்படியே மக்கால்ட்டி பண்ணிடுவேன்னு சொல்லி இறக்கிவிட்டுட்டேன். எனக்கு அப்போ சப்போர்ட் பண்ணின பொதுமக்களுக்கு நன்றி..!! அப்போ என்னால ரசிக்க முடியாம போன அந்த பாடலை இப்போ ரசிக்கிறேன். நீங்களும் ரசிங்களேன்.


என்ன நான் கேட்ட பாடலை கேட்டீங்களா.? இனிமே எனக்கு பிடித்தமான க்ளைமேட்டில், நல்ல மூடில் எப்பவாவது இசையோடு பயணம் செஞ்சா உங்க கிட்ட பகிர்ந்துகிறேன்.!! இப்ப ஆணிய புடுங்கணும் அப்பரம் நான் பாட்டு கேக்கணும் டா டா..!!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. இசைப் பயணம் அருமை.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. நீங்க கேட்டு ரசித்தபாடல்கள் எல்லாமே சுகம். ஆரிரோ, ஆராரிரோ
  முதல் முறை கேட்டேன் சூப்பர். மற்றபாடல்களும் கெட்டிருக்கேன் .எல்லாமே நல்லா இருக்கு. நானும் காதில் இயர்போன் மாட்டிட்டுதான் கேட்டேன் நன்றி.

  ReplyDelete
 3. ஹ ஹ...கூர்..கூர்...ம்ம்...என்ன கமேண்டனும்னே தெரியல...பட் சிரிச்சுட்டே போறேன்...

  ReplyDelete
 4. தம்பி கூர்மதி... இன்னைக்கு பதிவு தரமா இருக்கு. நானும் இசை என்னும் இன்ப வெள்ளத்தில் மிதந்தேன்...ஹி...ஹி...ஹி..

  ReplyDelete
 5. சோலை புஷ்பங்களே பாட்டை என்னால அப்போ ரசிக்க முடியாம போச்சு. //
  எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. என் பெரிய பொண்ணுக்கு நான் பாடும் தாலாட்டே இந்த பாட்டு தான்

  ReplyDelete
 6. இசைதான் சுவாசம்.இல்லாவிட்டால் எப்போதோ தொலைந்திருப்பேன்.நான் தான்.வேலை செய்துகொண்டே பாட்டுக் கேட்கலாம்.வேலையின் சுமையே தெரியாது !

  ReplyDelete
 7. தங்கள் ரசனை மிகவும் ரசிக்க வைக்கிறது கூர்மதியன்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

  ReplyDelete
 8. இசை பயணம் அருமை. வாழ்துக்கள்!

  ReplyDelete
 9. @இராஜராஜேஷ்வரி: நன்றிங்க..

  ReplyDelete
 10. @ஆனந்தி: ஹி ஹி.. விடுங்க.. பப்ளிக் பப்ளிக்

  ReplyDelete
 11. @ப்ரகாஷ்: ரொம்ப உணர்ச்சிவச படாதீங்க பாஸ்..

  ReplyDelete
 12. @நாய்குட்டி மனசு: ஸோ ஸ்வீட்.!! அருமையான பாடல்..

  ReplyDelete
 13. @ஹேமா: அருமையாக சொன்னீர்கள் ஹேமா.!! நானும் உங்களை போன்று தான்..

  ReplyDelete
 14. @ம.தி.சுதா: நன்றி சுதா..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!