Posts

Showing posts from May, 2011

மங்கையாதாக செய்தொழியவேண்டும்.?

Image
பொறியென உலகில் பொதிந்த நற்கரங்கள்
புறமதை நாட மறித்து உயிர்க்கொல்லிவால் வீச
எங்ஙனம் கொணர்வேன் அம்மங்கையென
சிந்தையில் சிற்பட்டமாக்க-தோன்றுதலின்
உடன்கொண்ட மூன்றும் பட்டமரமாக
காலம் நாடினான் காமுகன்
உருகொண்ட வஞ்சகத்தை வஞ்சித்தொழிகவே.!

மோகமொழிந்தொழுக-பிதற்றல் கூடாரம்
வஞ்சகனின் வாய்ச்சொல்லை நிரப்பிற்று
அண்டம் அறியாதொரு காதலிது.!!

சூச்சமம் கொழுத்த அந்தி ஆற்றலை
வர்ணித்திருந்த கொடியோனை சாடிய
சிவந்த கண்ணுடையா செவ்வை கொவ்வாய்
நோக்கும் காளான் அறிந்திட்டாள்.!

செய்வதறியாள் என்செய்ய விழித்திட்டாள்
கண்ணீரேங்கும் ஒற்றை சுவரா-அற்று காமுகனின்
வஞ்சகத்தின் ஊன்றை வஞ்சித்தொழிவதா.?

பின்தொடர்ந்த தேர்வு எனதாகும்-மங்கை
பொன்செயல் மார்க்கம் தடுத்திட்டால்
நான் பொங்கிட மறுத்தலன்.!
இன்றே அவ்வஞ்சகன் அழித்திடன்..!!

பதிவுலகையே கலங்கடிக்கும் அந்த மெயில்.!!

Image
பதிவுலகமே சிக்கி சின்னாபின்னமாக போகும் நாள் நெருங்கிவிட்டது. ஆம்.!! இதுவரை என்னுடைய மெயிலுக்கு அது வந்ததே இல்லை. இது வரலாம் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் வந்துவிட்டது. பட்டென எனக்கு பெருத்த ஆச்சர்யம்.


எனக்கு இப்படி ஒரு மெயிலா. பட்டென நண்பர்களுக்கு போன் அடித்து இது உண்மைதானா என்று கேட்டுகொண்டேன். இந்த மெயிலில் குறிப்பிட்டது போல நடந்தால் பதிவுலகமே பெரிய ஆட்டம் கண்டிடுமே என்றிருந்தேன்.

என்னை போலவே எனக்கு இந்த மெயில் வந்த விசயம் தெரிந்த என் நண்பர்கள் சிலர் என்னிடம் கலந்து பேசினர். அந்த மெயிலில் குறிப்பிட்டது போல செயல்பட வேற நான் அந்த மெயிலை பார்த்த போதே ஒத்துகொண்டுவிட்டேன்.

அதில் குறிப்பிட்ட படி நான் செய்வதற்கு சில காலங்கள் அவகாசம் இருந்தது. அந்த அவகாச காலம் முடியும் தருவாய் வந்துவிட்டது. அய்யோ.!! பதிவுலகமே என்ன ஆக போகிறது என்று தெரியலையே.!! கிட்டதட்ட நெருங்கிவிட்டேன் என்று சொல்வதுக்கு பதில் அதன் விளிம்பில் இருக்கிறேன். இப்போது இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கிடபோறேன் என்றே சொல்லலாம். ஆம்!! அந்த மெயிலில் குறிப்பிட்ட படி நான் செய்யும்போது பதிவுலகில் பெருத்த சேதாரம் வரலாம்.


என்னடா இவன் …

கனிமொழிக்கு ஆதித்யனின் கடிதம்.!!

Image
வணக்கம் அம்மா,

நான் ஆதி எழுதுறன். நீ நல்லா இருக்கியாமா.? நல்லா சாப்புட்டியாமா.? நல்லா தூங்குனியாமா.? இப்படி எல்லாம் கேகணும்னு தோணுது ஆனா என்னால கேட்க முடியல. எனக்கு உன்னோட நிலைமை தெரியும். புரியுது.!!

எனக்கு நீ என்ன செஞ்சன்னு புரியல. நீ வீட்டுக்கு வராத சமயத்துல இன்டர்நெட் பக்கம் போயிருந்தேன். பேஸ்புக், டிவிட்டர்னு எல்லா social networkலயும் உன்ன கைது செஞ்சத நினச்சு மக்களெல்லாம் அவ்வளவு கொண்டாடிட்டு இருந்தாங்க. நீ என்ன அவ்வளவு கொடுமை காரரா அம்மா.? அமெரிக்காவிற்கு கொடும் பாவம் செய்த ஒசாமா இறந்த போது கூட அங்கங்கே சிலர் வருத்தப்பட்டாங்களே! உனக்கென வருத்தப்பட நான், தாத்தா, பாட்டி, அப்பரம் நம்ம குடும்பம் மட்டும் தானே இருக்கு. நீ ஒசாமாவை விட கேவலமானவரா.? குடும்பம் மட்டும் தான் இருக்குனு சொன்னப்ப தான் ஞாபகம் வருது. இது குடும்பமா.? யார் உண்மை பாசமா இருக்கார், யார் நடிக்கிறார்னே தெரியலமா.

சமீபத்துல தாத்தா உன்ன பாத்து அழுதாராம். அது கூட எனக்கு பாசமானு சந்தேகமா இருக்குமா. அவரு உண்மையிலே உன்னோட இந்த நிலைமையை நினைத்து அழுதாரா இல்ல ஆட்சி பறிபோனத மனசுலயே வச்சிகிட்டு இது ஒரு வாய்ப்புனு அழுதிட்டாரானு தெ…

மரணத்தின் பிடியில்-மௌன கூற்றாக நான்.!!

Image
நான் சில நாட்களாக பதிவுலகம் பக்கம் வராம இருந்தது எல்லாருக்கும் தெரியும்(அதான் வந்துட்டியே). நெருங்கியவர்களுக்கு அதற்கான காரணம் தெரியும். நான் ஒரு முக்கியமான ஆராய்ச்சியில்(பெரிய விஞ்ஞானி) ஈடுபட்டிருந்தேன்.

என் கணிணி தொடர்பிலும்-எழுத்து தொடர்பிலும் வெவ்வேறு ஆராய்ச்சிகளில் இருந்தேன்(ஒண்ணுக்கே வழியில்லையாம்.!!).  இங்கே இந்த பதிவிட காரணம் அந்த எழுத்து தொடர்பான ஆராய்ச்சியில் நடந்த ஒரு இனிமையான சம்பவத்தை உங்களிடம் பகிரவே(சொல்லும் சொல்லித் தொலையும்.!!).

எழுத்து தொடர்பில் நடத்தப்பட்ட இரண்டு ஆராய்ச்சிகளில் நான் யார் சொல்லையும் கேட்காமல் விரும்பி எடுத்த தலைப்பு ''மரண தருவாய் மாற்றங்கள்'' என்னும் தலைப்பு. பெயரே விவகாரமா இருக்கா.? ஹி ஹி.. இதேபோன்ற ஆராய்ச்சிகள் ஏற்கனவே நிறைய நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால் என்னுடைய எண்ணம் என்னவென்றால் வெவ்வேறு வயதுடைய ஒரே பாணியில் வாழ்ந்த மக்களின் இறப்பின் விளிம்பு எப்படி இருக்கும் என்பதை கணிப்பதே.! நான் தொடங்கி வருத்தத்தோடு கைவிட்ட முதல் ஆராய்ச்சி இது என்பதை பெருமையுடன் சொல்கிறேன்.
இந்த ஆராய்ச்சிக்காக பெருவாரியான நேரம் ஹாஸ்பிடல், கிராமங்கள், நகரங்கள்…

ஜெயலலிதா எதற்காக நல்லது செய்ய வேண்டும்.?

Image
நம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகநாடுகளில் இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் ஒரே கவனிப்பாக இருந்தது அந்த எண்ணம் மட்டுமே இருந்தது அன்றைய தினத்தில். தினமும் சுள்ளென சூரியன் சுட்டெரிக்கும் போதும் அயர்ந்து போய் மப்பு மந்தாரமாய் கிடக்கும் கட்சி தொண்டர்கள் அன்று காலையிலே நெற்றி நிறைய விபூதி சூழ கட்சி ஆபிஸில் தஞ்சம் புகுந்தனர். அதற்கு காரணமாக இருப்பது இரண்டு. ஜெயித்தால் கொண்டாட்டம் வேண்டும். தோற்றால் அடி, தடியிலிருந்து தப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சூழ்ந்திருந்த சூழலில் தேர்தல் ஆணையத்தில் கெடுக்குப்பிடியில் நடந்தேரிய அந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட போகிற நாள் அது. தன் பிள்ளையின் தேர்வு முடிவு தெரியும்போது கூட இவ்வளவு பதற்றம் கொண்டிடாத என் தொண்டர் சகோதரர்களின் முகத்தில் பெரிய கலவரமே நடந்தது.

என் வீட்டின் எதிர்புறம் இருக்கும் பெரியவர்-டிவி முன்னர் உட்கார்ந்துகொண்டு திமுக-வுக்கு ஒரு புள்ளி குறையவும், அதிமுக ஏறவும் குதியாய் குதித்தார். ஒரு நேரத்தில் அதிமுக முன்னிலையிலிருந்த ஒன்றில் திமுக முன்னேறியது. உடனே அவர் முன்னால் இருந்த கண்ணாடி 'டமால்'. எனக்கு காலம் பின்னோக்கியது. சில நாட்களுக்கு முன…

தமிழக ஆட்சி மாற்றம்.! காரணம் என்ன.?

Image
வெளியில போனா ஆயிரம் கொண்டாட்டாம்-என்னடா ஆச்சுனு கேட்டா அதிமுக செயிச்சுடுச்சாம். இன்னொரு பக்கம் கொண்டாடுறவங்கள வெறிக்க வெறிக்க பாக்குது ஒரு கூட்டம். மூஞ்சுல 'ஈ' ஆடல.! என்னயா னு கேட்டா திமுக தோத்துடுச்சாம்.!! அப்படியே லெப்ட்டுகா திரும்பி பாத்தா வேகமா வந்த வண்டியில இருந்து ஒரு பேமிலி தொம்முனு கீழ விழுந்தாங்க. என்னடானு பாத்தா செயிச்சுப்புட்டாராம்-செயிச்சுப்புட்டாராம்னு வெடி வெடிச்சு வண்டி ஓட்டடுனவரு பயந்து போய் வண்டிய கீழ போட்டு-சிராய்ப்புகள்; வண்டிக்கில்ல அந்த பேமிலிக்கு. வெறிக்க பாத்தவெங்களுக்கு சண்டைய போட நேரம் வந்திடுச்சு. சொந்த ஆயா அடிப்பட்டாலே கண்டுகிடாத பயலோ விழுந்த பேமிலிக்கு சப்போர்ட்டா கொண்டாட்ட கும்பலோட சண்டை.!! என்ன பயன்.? விழுந்ததில் ஏற்பட்ட சிராய்ப்புகள், பெரிய காயமாகி போச்சு.!! இது நேற்று சாயங்காலத்து ஒரு ஏரியாவின் நிலைமை.!!


நானும் எவ்வளவோ பிட்ட போட்டு பாத்தேன்.!! எங்கடா அவன் வாக்குறுதி கொடுத்து அழகிரி பய.!!
மிஸ்டர் கலைஞர் ஜி தோத்துபுட்டாரு ஜி.!! வடிவேலு ஜி காணாம போயிட்டாரு.!! அநேகமா இனி சிங்கமுத்து தான் தமிழ் சினிமா உலகின் டாப் நகைச்சுவை ஆக்டரா இருப்பார் போலிருக்கு.!…

நான் என்ன ஆனேன்.!?

Image
விண்ணோடு மிதந்தேன்,
காற்றோடு கலந்தேன்,
இயற்கை எனதானது
எல்லாம் எதனாலே.!?

மரத்தை காதலித்தேன்
மற்ற மனிதரை காதலித்தேன்
வறுமையை காதலித்தேன்
இகழ்ச்சி, புகழ்ச்சி, இன்பம், துன்பம்
என காணும் அனைத்தையும் காதலித்தேன்.!

காரணம் என்னவோ.?
சிந்தனையாளன் என்றனர் சிலர்,
பொதுநலவாதி என்றனர் சிலர்,
மாறுபட்ட விந்தையானவன் என்றனர்,
பித்தன் என்றும் பெயர் வந்தது..

ஆனால்,
உள்ளுக்குள்ளே ஒரு குரல்
'மனிதனானாயடா.!!' என்று உரக்க ஒலிக்கிறது.!!

டிஸ்கி 1: இதுவரை 'கிறுக்கனின் கிறுக்கல்கள்'  என்று இருந்த இந்த வலைப்பூ இனி நண்பர் நிரூபன் சொல்லிய 'யௌவன(ப்)  புலர்வுகள்' என்னும் பெயரில் இயங்கும்.

டிஸ்கி 2: ஒரு முக்கியமான ஆய்வு கட்டூரையில் ஈடுபட்டிருப்பதால் அதிகமாக பதிவுலகிற்கு வரமுடியவில்லை.! மன்னியுங்கள். விரைவில் முன்னர் போலவே வருகிறேன்.