கனிமொழிக்கு ஆதித்யனின் கடிதம்.!!

வணக்கம் அம்மா,

நான் ஆதி எழுதுறன். நீ நல்லா இருக்கியாமா.? நல்லா சாப்புட்டியாமா.? நல்லா தூங்குனியாமா.? இப்படி எல்லாம் கேகணும்னு தோணுது ஆனா என்னால கேட்க முடியல. எனக்கு உன்னோட நிலைமை தெரியும். புரியுது.!!

எனக்கு நீ என்ன செஞ்சன்னு புரியல. நீ வீட்டுக்கு வராத சமயத்துல இன்டர்நெட் பக்கம் போயிருந்தேன். பேஸ்புக், டிவிட்டர்னு எல்லா social networkலயும் உன்ன கைது செஞ்சத நினச்சு மக்களெல்லாம் அவ்வளவு கொண்டாடிட்டு இருந்தாங்க. நீ என்ன அவ்வளவு கொடுமை காரரா அம்மா.? அமெரிக்காவிற்கு கொடும் பாவம் செய்த ஒசாமா இறந்த போது கூட அங்கங்கே சிலர் வருத்தப்பட்டாங்களே! உனக்கென வருத்தப்பட நான், தாத்தா, பாட்டி, அப்பரம் நம்ம குடும்பம் மட்டும் தானே இருக்கு. நீ ஒசாமாவை விட கேவலமானவரா.? குடும்பம் மட்டும் தான் இருக்குனு சொன்னப்ப தான் ஞாபகம் வருது. இது குடும்பமா.? யார் உண்மை பாசமா இருக்கார், யார் நடிக்கிறார்னே தெரியலமா.

சமீபத்துல தாத்தா உன்ன பாத்து அழுதாராம். அது கூட எனக்கு பாசமானு சந்தேகமா இருக்குமா. அவரு உண்மையிலே உன்னோட இந்த நிலைமையை நினைத்து அழுதாரா இல்ல ஆட்சி பறிபோனத மனசுலயே வச்சிகிட்டு இது ஒரு வாய்ப்புனு அழுதிட்டாரானு தெரியலமா. நீ தான் அடிக்கடி சொல்லுவியே தாத்தா தந்திரம் வாய்ந்தவர்னு.

இங்க பரமேஸ்வரி ஆன்ட்டி என்ன நல்லா பாத்துகிடுறா மாதிரி நடிக்கிற மாதிரியே இருக்குமா. என்னன்னே புரியல.? பாக்குற எல்லார்கிட்டயும் என்ன நல்லா பாத்துக்க சொல்லிவிடுறீயாமே.! எதுக்காக.? பாசத்தை காமிச்சாச்சும் வெளிய வந்திடலாம்னு பாக்குறீயா.? என் மேல் உண்மையிலே பாசமிருந்தா தப்பு செஞ்சுட்டு அங்க போயிருப்பீயா.?

எனக்கு பக்கத்துல நீ இல்ல. இப்ப உன்னோட கவிதைகளும் எழுத்துக்களும் மட்டும் தான் துணை. நீ என்ன எழுதி இருக்கன்னு எனக்கு ஒண்ணுமே புரியல. அதை என்னால புரிஞ்சிக்க முடியலயா.? இல்ல உனக்கு புரியிற மாதிரி எழுத தெரியலையானு எனக்கு தெரியல. புரியுதோ இல்லையோ இப்பவும் உன்னுடைய எழுத்துக்களை கஷ்டபட்டு படிச்சு நீ பக்கத்துல இருக்குறதா நினச்சுக்கிறேன்.

நீ ஒரு நல்ல அரசியல்வாதியாவோ, எழுத்தாளராவோ, பேச்சாளராவோ எதுவாகவும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு நல்ல அம்மாவாக கூட இல்லாமல் போயிட்டீயே.!?

அம்மா.. கேட்க மறந்துட்டேன். வெயில் ரொம்ப அதிகமா இருக்கே! சொகுசு மெத்தை, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்த உனக்கு அது எப்படி இருக்கிறது.? வெளியில் 'வந்தால்' அதையும் ஒரு கவிதையாக எழுதுவியா.?
இல்லை தாத்தாவிடம் சொல்லி ஏதாவது அறிக்கை விட சொல்லுவியா.?

ஒரு காலத்துல சினிமா, அரசியல், பொது இடம்னு எல்லாத்திலும் நம்ம குடும்பம் மட்டுமே இருந்ததுல மா. அப்ப எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும். ஆனா நீ இப்ப என் பக்கத்துல இல்லாதப்போ தான் வெளி உலகத்த பாக்குறன். அவங்களும் மனுசங்க தானே.! அவங்களுக்கும் நாம இடம் கொடுத்திருக்கணும்ல.! நாம அப்படி இருந்ததால தான் நமக்கு சப்போர்ட் பண்ணி பேசின வடிவேலு அங்கிள கூட காணும்.

ஜெயிலுக்குள்ள போகும் போது உன்னுடைய மூக்குத்தி மொத கொண்டு வாட்ச் வரை எல்லாத்தையும் கழட்ட சொல்லிட்டாங்களாமே! கஷ்டமா இல்லையாமா.? உனக்கு இதெல்லாம் எதிர்பார்ததா இருந்திருக்கலாம், இல்ல தாத்தாவ நினச்சு நீ தைரியத்துல இருந்திருக்கலாம் ஆனால் என்னால ஜீரணிக்க முடியலமா. தள்ளாடி இருக்கும் அல்லாடும் வயசுல அவர எப்படிமா நம்பி நீ இருந்த.?

நம்ம குடும்பம் பண்ணாத ஊழலா இல்ல நம்மகிட்ட இல்லாத தந்திரமா.? எப்படிமா இந்த முறை இந்த பாதிப்பு. நாம ஊழல் பண்ணியதில் யாருக்காவது பங்கு கொடுத்துட்டீங்களா.? பங்கு கொடுக்காம ஜெ., ஆன்ட்டி மாதிரி இருந்திருந்தா இந்த ப்ராபளம் வந்திருக்காதோ.!?

சரி நம்ம குடும்ப ஆட்சிக்கு கீழ இருந்த தமிழக மக்கள் மட்டும் தான் நம்ம மேல கடுப்பா இருப்பாங்கன்னு நினச்சு இருந்தேன். ஆனா ஈழ மக்களும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கும் நீ கைதானதுல சந்தோசம் தான் போலிருக்கே! உன்னுடைய புகழ் உலகம் முழுக்க பரவிகிடக்கு போலிருக்கே! என்னாத்த சொல்ல.!?

நீ வெளிய வருவியா.? உன்னுடைய ஒரு பிள்ளையா நீ வெளிய வரணும்னு நினச்சாலும் நானும் இந்த தமிழகத்துல ஒருத்தன்னு நினச்சு பாத்தா மக்கள் கோபம் சரிதான்னு தோணுது. அதுக்காக நீ வரக்கூடாதுனு சொல்லல. நீ எனக்கு வேணும் மா. ஆனா என்னுடைய அம்மாவா மட்டும் வேணும் கிடைப்பியா.?

எனக்கு ஏன் எதுவுமே புரியமாட்டேங்குதுனு பரமேஸ்வரி ஆன்ட்டிகிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க நான் சின்ன பையன்னு சொன்னாங்க. சின்ன பையனா இருந்தா நல்ல எண்ணமும் எதுவுமே தெரியாமலும் தான் இருக்குமா மா..? அப்படினா நான் சின்ன பையனாவே இருக்கலாம்னு நினைக்கிறேன். ஏனா நான் பெரியவனா ஆயிட்டா நீ என்ன தப்பு செஞ்சேனு எனக்கு தெரிந்து உன்னை வெறுக்க ஆரம்பிச்சுடுவன், இல்லனா, என்னையும் உன்ன போலவே மாத்தினாலும் மாத்திடுவீங்க. எனக்கு அது இரண்டிலும் விருப்பமில்ல. நான் இப்படியே இருந்திடுறேன் மா.

நீ முழுக்க முழுக்க என் அம்மாவா மட்டுமே திரும்ப வருவ என்னும் நம்பிக்கையோடு முடிச்சுகிடுறேன் மா. அழுதுகிட்டே இருந்தாலும் தமிழக மக்கள நினச்சு எங்கோ ஒரு மூலையில சந்தோசமும் இருக்கு. கண்ணீரோடு ஒரு சின்ன புன்னகை.!!

கண்ணீருடன்,
அன்பை ஏங்கும்-ஆதித்யன்.
டிஸ்கி: சமீபத்தில் ஆனந்த விகடனில் தோழர் இரா.சரவணன் அவர்களது ஆர்டிக்கலை படித்த போது இப்படி ஒன்று எழுதணும்னு தோணுச்சு. எழுதிட்டேன்.

Comments

 1. சகோ மொத கை குடு....இல இத நான் எழுதனும்னு நினைச்சேன்....நீ முந்திக்கிட்ட

  ReplyDelete
 2. ஒரு பிஞ்சுக்குழந்தையின் மனதில் இருப்பதை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கே நண்பா, கடிதம் மிகவும் உருக்கமா இருக்கு!

  தமிழ்மணத்துலயும், இண்டிலியிலும் ஓட்டு போட்டிருக்கேன்!

  ReplyDelete
 3. எனக்கு நீ என்ன செஞ்சன்னு புரியல. நீ வீட்டுக்கு வராத சமயத்துல இன்டர்நெட் பக்கம் போயிருந்தேன். பேஸ்புக், டிவிட்டர்னு எல்லா social networkலயும் உன்ன கைது செஞ்சத நினச்சு மக்களெல்லாம் அவ்வளவு கொண்டாடிட்டு இருந்தாங்க. நீ என்ன அவ்வளவு கொடுமை காரரா அம்மா.?

  இல்லையா பின்ன, ஆனாலும் பாவம் கனிமொழி, அம்மா அப்பா சொன்னதை செய்தார்....வம்பில் தனியே மாட்டிக்கொண்டார்....

  ReplyDelete
 4. சமீபத்துல தாத்தா உன்ன பாத்து அழுதாராம். அது கூட எனக்கு பாசமானு சந்தேகமா இருக்குமா. அவரு உண்மையிலே உன்னோட இந்த நிலைமையை நினைத்து அழுதாரா இல்ல ஆட்சி பறிபோனத மனசுலயே வச்சிகிட்டு இது ஒரு வாய்ப்புனு அழுதிட்டாரானு தெரியலமா. நீ தான் அடிக்கடி சொல்லுவியே தாத்தா தந்திரம் வாய்ந்தவர்னு

  என்ன இருந்தாலும் பெத்த பாசம் சும்மா இருக்குமா?.....அந்த மவ ராசன் தான் பாவம்

  ReplyDelete
 5. இங்க பரமேஸ்வரி ஆன்ட்டி என்ன நல்லா பாத்துகிடுறா மாதிரி நடிக்கிற மாதிரியே இருக்குமா.

  நெஜமாவே இந்த வரிகள் ரொம்ப டச்சிங் சகோ

  ReplyDelete
 6. எனக்கு பக்கத்துல நீ இல்ல. இப்ப உன்னோட கவிதைகளும் எழுத்துக்களும் மட்டும் தான் துணை

  ஆனா ஒண்ணுமே தெரியாத இந்த கொழந்த ரொம்ப பாவம் தானே...((நான் ஆதித்யன் பத்தி சொன்னேன்..)))

  ReplyDelete
 7. நீ முழுக்க முழுக்க என் அம்மாவா மட்டுமே திரும்ப வருவ என்னும் நம்பிக்கையோடு முடிச்சுகிடுறேன் மா. அழுதுகிட்டே இருந்தாலும் தமிழக மக்கள நினச்சு எங்கோ ஒரு மூலையில சந்தோசமும் இருக்கு. கண்ணீரோடு ஒரு சின்ன புன்னகை.!!

  கண்ணீருடன்,
  அன்பை ஏங்கும்-ஆதித்யன்.

  சகோ கடிதம் முழுமையும் படிக்கும் போது ஏதோ ஒரு வலி தொற்றிக் கொள்கிறது.ஆனாலும் எதார்த்தம் எத்தனை பெரியது....தப்புக்கு இன்று தண்டனை...ஆனாலும் தவறு செய்யாத குழந்தையில் மனதில், தான் தாய் பற்றிய இது போன்ற எண்ணம் பரவாமல் இருந்தால் நல்லது...உணர்ச்சிக் கடிதம்...நான் எழுதி இருந்தால் அழுவாச்சியா இருந்திருக்கும், நீ எழுதி இருந்தாதால் சுடும் உண்மைகள் கொஞ்சம், நிதர்சனத்தை உணரவைக்கிறது...வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 8. பயபுள்ள இதுவும் கருணாநிதி வாரிசுன்னு நிரூபிச்சுடுச்சு. இப்பவே கடிதம் எழுதுது. (ஹி ஹி ஹி சூப்பர் டா மாப்பு. கவலைபடாதே உண்மையா எழுதுனாலும் எழுதும்.)

  ReplyDelete
 9. கண்ணீருடன்,
  அன்பை ஏங்கும்-ஆதித்யன்.
  நீங்க நல்லவரா?கெட்டவரா?
  சொல்லு அம்மா....

  ReplyDelete
 10. என்னதான் இருந்தாலும் பாவம் ஆதித்தியா....

  ஆனாலும் பெரியவர்கள் செய்த தவரு பிள்ளைகளை பாதிக்கும் என்று தெரியாமலா சொன்னார்கள்

  ReplyDelete
 11. நெசமாவே அந்த குழந்தை பாவம் தான் பாஸ்...

  ReplyDelete
 12. அந்தப் புள்ளைய நினைச்சா பாவமா இருக்குது, ம்ம்ம்ம் , விம்முகிறேன்

  ReplyDelete
 13. அவரு உண்மையிலே உன்னோட இந்த நிலைமையை நினைத்து அழுதாரா இல்ல ஆட்சி பறிபோனத மனசுலயே வச்சிகிட்டு இது ஒரு வாய்ப்புனு அழுதிட்டாரானு தெரியலமா.//

  அவ்..ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறியா மச்சி..
  கலைஞரையும் கடிச்சு, கனியையும் கடிச்சிட்டாய் எல்லே...
  திமுக காரங்க இங்கே இல்லையா.

  ReplyDelete
 14. வெளியில் 'வந்தால்' அதையும் ஒரு கவிதையாக எழுதுவியா.?//
  மாப்பிளை ஆபிச்சுக்குப் போகும் போது பார்த்துப் போய்யா,
  வாசலிலை அருவாளோடை ஆளுங்க நிற்கப் போறாங்க;-)))

  ReplyDelete
 15. பங்கு கொடுக்காம ஜெ., ஆன்ட்டி மாதிரி இருந்திருந்தா இந்த ப்ராபளம் வந்திருக்காதோ.!?//

  சைட் கப்பில் அதிமுக அம்மையாரையும் போட்டுத் தள்ளுறீங்க இல்லே.

  ReplyDelete
 16. ஒரு குழந்தையின் உணர்வுகளைப் பிரதிபலித்து, சந்தர்பம் சூழ் நிலைக்கேற்ற மாதிரி, கொஞ்சம் மொக்கை, காமெடி கலந்து கடிதத்தை அழகாக எழுதியுள்ளீர்கள்.

  கலக்கல் மாப்பு.

  ReplyDelete
 17. நல்ல கற்பனை நண்பரே.

  //என் மேல் உண்மையிலே பாசமிருந்தா தப்பு செஞ்சுட்டு அங்க போயிருப்பீயா.?//

  சூப்பர்.

  ReplyDelete
 18. ஆச்சரியமா இருக்கே.. இந்த போஸ்ட்டுக்கு 3 மைன்ஸ் ஓட்டாவது வந்திருக்கனுமே? ஹி ஹி

  ReplyDelete
 19. சூப்பர் நண்பா!

  ரெண்டுமே பண்ணியாச்சு. ஓட்டும் போட்டு கருத்தும் சொல்லியாச்சு. இப்பத்தான் இரண்டிலுமே நம்பிக்கை வர ஆரம்பிக்கிறது.

  பாரதிராஜா

  ReplyDelete
 20. @ரேவா:
  //சகோ மொத கை குடு....இல இத நான் எழுதனும்னு நினைச்சேன்....நீ முந்திக்கிட்ட//

  உன் சிந்தனையும் செயலும் என்னை போலவே இருக்கு.. ஹி ஹி

  ReplyDelete
 21. @ரஜீவன்:

  //ஒரு பிஞ்சுக்குழந்தையின் மனதில் இருப்பதை அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கே நண்பா, கடிதம் மிகவும் உருக்கமா இருக்கு!

  தமிழ்மணத்துலயும், இண்டிலியிலும் ஓட்டு போட்டிருக்கேன்!//

  தேங்க்ஸ் மச்சி.!!

  ReplyDelete
 22. @ரேவா://இல்லையா பின்ன, ஆனாலும் பாவம் கனிமொழி, அம்மா அப்பா சொன்னதை செய்தார்....வம்பில் தனியே மாட்டிக்கொண்டார்....//

  ஹி ஹி.. வீட்டு கதவை நல்லா மூடிக்கோ.!! ஆட்டோ யாராவது அனுப்ப போறாங்க.

  ReplyDelete
 23. @ரேவா://என்ன இருந்தாலும் பெத்த பாசம் சுமமா இருக்குமா?.....அந்த மவ ராசன் தான் பாவம்//

  ரொம்ப ஃபீல் பண்ணாத.. திமுக கட்சினு நினச்சிட போறாங்க

  ReplyDelete
 24. @ரேவா://நெஜமாவே இந்த வரிகள் ரொம்ப டச்சிங் சகோ//

  ரொம்ப நன்றி ரேவா

  ReplyDelete
 25. @ரேவா://ஆனா ஒண்ணுமே தெரியாத இந்த கொழந்த ரொம்ப பாவம் தானே...((நான் ஆதித்யன் பத்தி சொன்னேன்..)))// நல்ல வேளை நீ வேற யாரையோ சொன்னேனு நினச்சன்..

  ReplyDelete
 26. @ரேவா://சகோ கடிதம் முழுமையும் படிக்கும் போது ஏதோ ஒரு வலி தொற்றிக் கொள்கிறது.ஆனாலும் எதார்த்தம் எத்தனை பெரியது....தப்புக்கு இன்று தண்டனை...ஆனாலும் தவறு செய்யாத குழந்தையில் மனதில், தான் தாய் பற்றிய இது போன்ற எண்ணம் பரவாமல் இருந்தால் நல்லது...உணர்ச்சிக் கடிதம்...நான் எழுதி இருந்தால் அழுவாச்சியா இருந்திருக்கும், நீ எழுதி இருந்தாதால் சுடும் உண்மைகள் கொஞ்சம், நிதர்சனத்தை உணரவைக்கிறது...வாழ்த்துக்கள் சகோ//

  ஹி ஹி.. நீ எழுதி இருந்தா இத விட நல்லா இருந்திருக்குமே.!!ரொம்ப நன்றி சகோ.!!(என்ன பண்ண சகோவா போய்டியே.!! என்ன என்ன பொய்யெல்லாம் சொல்ல வேண்டியதா இருக்கு!!)

  ReplyDelete
 27. @பிரபு://பயபுள்ள இதுவும் கருணாநிதி வாரிசுன்னு நிரூபிச்சுடுச்சு. இப்பவே கடிதம் எழுதுது. (ஹி ஹி ஹி சூப்பர் டா மாப்பு. கவலைபடாதே உண்மையா எழுதுனாலும் எழுதும்.)//

  நான் ஏன்டா கவலைபட போறேன்.. ஹி ஹி.. நான் உன் ப்ளாக் பக்கம் எட்டி கூட பாக்குறது இல்ல.. ஆனா நீ மறக்காம வந்து என் பதிவ படிக்கிறது.. கண்ணு கலங்குது டா..

  ReplyDelete
 28. @இராஜராஜேஷ்வரி://நீங்க நல்லவரா?கெட்டவரா?
  சொல்லு அம்மா....//

  ஆஹா கடிதத்துக்கு பினிஷிங் டச் கொடுத்துட்டாங்க பா.. நன்றி

  ReplyDelete
 29. @கோமா://என்னதான் இருந்தாலும் பாவம் ஆதித்தியா....

  ஆனாலும் பெரியவர்கள் செய்த தவரு பிள்ளைகளை பாதிக்கும் என்று தெரியாமலா சொன்னார்கள்//

  உண்மைதான் முற்றிலும் உண்மை.. நன்றி..

  ReplyDelete
 30. @கந்தசாமி://நெசமாவே அந்த குழந்தை பாவம் தான் பாஸ்...//

  ஆஹா.. சொன்னத கரெக்டா புரிஞ்சுகிட்டீங்களே.!! நன்றி நன்றி

  ReplyDelete
 31. @நாய்குட்டி மனசு://அந்தப் புள்ளைய நினைச்சா பாவமா இருக்குது, ம்ம்ம்ம் , விம்முகிறேன்//

  அட அழுகாதீங்க.. கண்ண துடைங்க.. துடைங்க.. சிரிங்க சிரிங்கப்பா.. ஹி ஹி.. நன்றி..

  ReplyDelete
 32. @ப்ரகாஷ்://தம்பி....அருமைடா...//

  தேங்க்ஸ் அண்ணாத்த..

  ReplyDelete
 33. @நிரு://அவ்..ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறியா மச்சி..
  கலைஞரையும் கடிச்சு, கனியையும் கடிச்சிட்டாய் எல்லே...
  திமுக காரங்க இங்கே இல்லையா.//

  ஏன் உனக்கு இந்த வேலை.? அவுக இருந்தா என்ன இல்லாட்டி என்ன.? அதுமட்டுமில்லாம நான் பிரபல பதிவர் இல்லைல.. அதனால எஃபெக்ட் இருக்காது..

  ReplyDelete
 34. @நிரு://மாப்பிளை ஆபிச்சுக்குப் போகும் போது பார்த்துப் போய்யா,
  வாசலிலை அருவாளோடை ஆளுங்க நிற்கப் போறாங்க;-)))//

  நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லயா..

  ReplyDelete
 35. @நிரு:

  //சைட் கப்பில் அதிமுக அம்மையாரையும் போட்டுத் தள்ளுறீங்க இல்லே.//

  அய்யோ.! அப்படினா என்ன என்றே எனக்கு தெரியாதே..

  ReplyDelete
 36. @நிரு:

  //ஒரு குழந்தையின் உணர்வுகளைப் பிரதிபலித்து, சந்தர்பம் சூழ் நிலைக்கேற்ற மாதிரி, கொஞ்சம் மொக்கை, காமெடி கலந்து கடிதத்தை அழகாக எழுதியுள்ளீர்கள்.

  கலக்கல் மாப்பு.//

  ரொம்ப நன்றி நிரூ.. ஏதோ உங்க அளவுக்கு இல்லாட்டியும் என்னால முடிஞ்சது.. ஹி ஹி..

  ReplyDelete
 37. @சிவகுமார்://நல்ல கற்பனை நண்பரே.//

  மிக்க நன்றி நண்பரே.!!

  ReplyDelete
 38. @சிபி: //ஆச்சரியமா இருக்கே.. இந்த போஸ்ட்டுக்கு 3 மைன்ஸ் ஓட்டாவது வந்திருக்கனுமே? ஹி ஹி//

  அதெல்லாம் பிரபல பதிவர்க்கு தான் போடுவாங்க பாஸ்.. ஹி ஹி.. நான் எழுதின இந்த முக்குல நாலு பேர் அந்த முக்குல நாலு பேர் தான் படிப்பாங்க.. அதுமட்டுமில்லாம எனக்கு ப்ளஸ் ஓட்டே விழாது இதுல மைனஸ் வேறயா.. ஹி ஹி.. குட் காமெடி..

  ReplyDelete
 39. @பாரதி:

  //சூப்பர் நண்பா!

  ரெண்டுமே பண்ணியாச்சு. ஓட்டும் போட்டு கருத்தும் சொல்லியாச்சு. இப்பத்தான் இரண்டிலுமே நம்பிக்கை வர ஆரம்பிக்கிறது.

  பாரதிராஜா//

  அட புதுசா வந்திருக்கீங்க போல.. வாங்க வாங்க.. ரொம்ப நன்றி பாரதி..

  ReplyDelete
 40. கூர்மதியான், நல்லா இருக்கு எழுத்து நடை. கனிமொழி திருமணமானவர் என்று அவர் கைதான பின்னர் தான் எனக்குத் தெரியும். அதுவும் மகன் இருக்கிற விடயம் போன வாரம் தான் தெரியும். எது எப்படியோ அந்த பொடியனை பார்க்க பாவமாய் இருக்கு.

  ReplyDelete
 41. இந்த பதிவை கனிமொழி படித்தால் கண்டிப்பாக கண்கலங்குவார் ,செய்த குற்றம் அவரை துளைத்தெடுக்கும்

  ReplyDelete
 42. @வானதி: நீங்க ஏன் உலக நடப்பை இவ்வளவு சீக்கிரமா தெரிஞ்சுகிடுறீங்க.? ஹி ஹி.. மத்தவங்க விடயம் நமக்கு ஏன் என்று இருந்திட்டீங்க போலும்.. ஹி ஹி.. விடுங்க..

  ReplyDelete
 43. @ஸ்ரீ: அப்படி நினைத்து தான் எழுதினேன்.. அவர்கள் படித்தால் தானே.!! படிச்சாலும் பெரிய எஃபெக்ட் இருக்காது என்பது என் கருத்து.. ஹி ஹி..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!