நான் என்ன ஆனேன்.!?விண்ணோடு மிதந்தேன்,
காற்றோடு கலந்தேன்,
இயற்கை எனதானது
எல்லாம் எதனாலே.!?

மரத்தை காதலித்தேன்
மற்ற மனிதரை காதலித்தேன்
வறுமையை காதலித்தேன்
இகழ்ச்சி, புகழ்ச்சி, இன்பம், துன்பம்
என காணும் அனைத்தையும் காதலித்தேன்.!

காரணம் என்னவோ.?
சிந்தனையாளன் என்றனர் சிலர்,
பொதுநலவாதி என்றனர் சிலர்,
மாறுபட்ட விந்தையானவன் என்றனர்,
பித்தன் என்றும் பெயர் வந்தது..

ஆனால்,
உள்ளுக்குள்ளே ஒரு குரல்
'மனிதனானாயடா.!!' என்று உரக்க ஒலிக்கிறது.!!

டிஸ்கி 1: இதுவரை 'கிறுக்கனின் கிறுக்கல்கள்'  என்று இருந்த இந்த வலைப்பூ இனி நண்பர் நிரூபன் சொல்லிய 'யௌவன(ப்)  புலர்வுகள்' என்னும் பெயரில் இயங்கும்.

டிஸ்கி 2: ஒரு முக்கியமான ஆய்வு கட்டூரையில் ஈடுபட்டிருப்பதால் அதிகமாக பதிவுலகிற்கு வரமுடியவில்லை.! மன்னியுங்கள். விரைவில் முன்னர் போலவே வருகிறேன்.

Comments

 1. ராஜ நடராஜன்6 May 2011 at 15:22

  புதுப் பெயர் நன்றாக இருக்கிறது.கூடவே கொஞ்சம் சாண்டில்யன் நடையையும் கலந்துட்டீங்கன்னா நவீன சாண்டில்யன்னு பேரையும் வாங்கி விடலாம்:)வாழ்த்துக்கள் உங்களுக்கும் பட்டப்பெயர் வைத்த நிரூபனுக்கும்.

  ReplyDelete
 2. உண்மையிலே நல்லா இருக்கு பாஸ்..

  ReplyDelete
 3. //மரத்தை காதலித்தேன்//

  கவிஞன்டா நீ

  //பித்தன் என்றும் பெயர் வந்தது..//

  யாருய்யா எனக்கு முன்னாடியே உண்மைய சொன்னது???

  //ஒரு முக்கியமான ஆய்வு கட்டூரையில் ஈடுபட்டிருப்பதால் அதிகமாக பதிவுலகிற்கு வரமுடியவில்லை.! மன்னியுங்கள்//

  அது என்னய்யா கட்டூரை??? கீரை ஆயுரையோ # டவுட்டு

  சரி சரி மன்னிசாச்சு போ போ

  ReplyDelete
 4. புதுப் பெயர் நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. பெயர் நல்லாயிருக்கு...

  ReplyDelete
 6. @ராஜ நட: அந்த அளவுக்கு நான் வொர்த் இல்லீங்க.!! இருந்தாலும் நன்றி.!!

  ReplyDelete
 7. @கந்தசாமி: மத்தது எல்லாம் பொய்யா நல்லா இருக்கா.? ஹி ஹி

  ReplyDelete
 8. @பிரபு: மாப்ள இதோ வந்துட்டன்.. இப்ப பேசுயா பாப்போம்.!!

  ReplyDelete
 9. @மாதவி: நன்றி மாதவி.!!

  ReplyDelete
 10. எதுக்கும் புதுக்கருத்துச் சொல்லி முரண்பாடா ஆனா சரியாகச் சிந்திச்சா பைத்தியம்ன்னுதான் சொல்றாங்க மதி !

  புதுப் பெயரும் கவிதையும் அசத்தல்.கடமைதான் முதலில்.
  முடிச்சிட்டு வாங்க !

  ReplyDelete
 11. மனிதம் சொன்ன
  மந்திர கவிதை
  அமர்க்களம் ............

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!