Skip to main content

ஜெயலலிதா எதற்காக நல்லது செய்ய வேண்டும்.?

நம் தமிழகத்தில் மட்டுமல்ல உலகநாடுகளில் இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் ஒரே கவனிப்பாக இருந்தது அந்த எண்ணம் மட்டுமே இருந்தது அன்றைய தினத்தில். தினமும் சுள்ளென சூரியன் சுட்டெரிக்கும் போதும் அயர்ந்து போய் மப்பு மந்தாரமாய் கிடக்கும் கட்சி தொண்டர்கள் அன்று காலையிலே நெற்றி நிறைய விபூதி சூழ கட்சி ஆபிஸில் தஞ்சம் புகுந்தனர். அதற்கு காரணமாக இருப்பது இரண்டு. ஜெயித்தால் கொண்டாட்டம் வேண்டும். தோற்றால் அடி, தடியிலிருந்து தப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சூழ்ந்திருந்த சூழலில் தேர்தல் ஆணையத்தில் கெடுக்குப்பிடியில் நடந்தேரிய அந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட போகிற நாள் அது. தன் பிள்ளையின் தேர்வு முடிவு தெரியும்போது கூட இவ்வளவு பதற்றம் கொண்டிடாத என் தொண்டர் சகோதரர்களின் முகத்தில் பெரிய கலவரமே நடந்தது.

என் வீட்டின் எதிர்புறம் இருக்கும் பெரியவர்-டிவி முன்னர் உட்கார்ந்துகொண்டு திமுக-வுக்கு ஒரு புள்ளி குறையவும், அதிமுக ஏறவும் குதியாய் குதித்தார். ஒரு நேரத்தில் அதிமுக முன்னிலையிலிருந்த ஒன்றில் திமுக முன்னேறியது. உடனே அவர் முன்னால் இருந்த கண்ணாடி 'டமால்'. எனக்கு காலம் பின்னோக்கியது. சில நாட்களுக்கு முன்னர் நான் தொலைக்காட்சியில் கிரிக்கெட் உலககோப்பை பைனல் மேட்ச் பார்த்து கத்திக்கொண்டிருந்தேன். அப்போது உள்ளே புகுந்த இதே பெரியவர் ''எவனோ அடிக்கிறான், எவனோ காசு வாங்குறான் இதுக்கு போய் இந்த ஆட்டமா'' என்றார். இன்று எனக்கும் அவரை பார்த்து இதைதான் கேட்க தோன்றுகிறது. ''எவனோ நிற்கிறான், எவனோ ஜெயிக்கிறான், எவனோ காசை அடிக்கபோகிறான்..நமக்கு என்ன நடக்கபோகிறது'' என்று. ஆனால் இதை சொல்லியிருந்தால் நையாண்டியாக, இல்லை நாசூக்காக, இல்லை தந்திரமாக நான் கேட்க விரும்பாத பதில் என் காதில் விழுந்திருக்கும்.

அப்படி என்ன திமுக செய்தது.? ஏன் எல்லோருக்கும் திமுக மீது இப்படியொரு கொலைவெறி.? மாற்றம் மாற்றம் என்று நாம் தினமும் மாற்றம் தேடிக்கொண்டே தான் இருக்கிறோம். விடிவு என்பது நமக்கு பிறக்காதா.? திமுக தோற்றதுக்கு காரணம் முதலில் ஸ்பெக்ட்ரம், விலைவாசி உயர்வு, மீனவர் பிரச்சனை, ஈழ விவகாரம். எல்லாம் திமுக தலைவர் தலையில் இடியாக விழுந்து வழுக்கியது. இந்த தேர்தலில் அதிமுக-வை விரும்பி யாரும் அழைக்கவில்லை, திமுக-மீதான வெறுப்பே அதிமுக-வின் இம்மாபெரும் வெற்றிக்கு காரணம் என்பது நமக்கு மட்டுமல்லாது, அதிமுக-வின் அனைத்து அங்கத்தினருக்கும் தெரியும்.


இனி ஐந்து வருடத்துக்கு திமுக-வின் ஆட்டம் அடங்கிடும் என எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அதிமுக-வின் ஆட்டம்.? நம்மால் தாங்க முடியுமா.? சென்ற முறையோடு இம்முறை ஜெயலலிதாவின் முகத்தில் ஒரு ஒளிவட்டம் தெரிகிறது. அது எதை உணர்த்தும் ஒளி என்பது இப்போது வரை புரியவில்லை. பொறுத்திருக்க நாங்கள் தயார் அம்மையாரே. எங்களை காப்பாற்றிவிடுங்கள். நீங்கள் இப்போது செயல்படும் திறம் பொறுத்தே திமுக-விற்கு உங்கள் மதிப்பை உணர்த்த முடியும். உங்களுக்கு உண்மையில் மதிப்பு இல்லாமலே இருக்கலாம். இருந்தாலும் மதிப்பு என்று ஒன்றை உருவாக்க இதுவே சமயம். எங்களுக்காக என்று இல்லாவிடும் உங்கள் விரோதி திமுக-வை சீர்குலைக்கவாவது எங்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.

நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று நான் இங்கு சொல்லப்போவதில்லை. ஏனென்றால் உடனிருப்பவர் சொன்னாலே கேட்கமாட்டீர்கள் நான் சொல்லியா கேட்கபோகிறீர்கள் என்று உங்கள் மீது எனக்கொரு அதீத நம்பிக்கை. மாறி மாறி வந்த பதவியில் இனியும் மாறாமல் இருக்க உங்கள் ஆசைகளோ, இல்லை அன்பர்களோ தூண்டினால் இந்த ஐந்து வருடம் எப்படி இருக்கவேண்டும் என நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். வார்த்தையில் சித்தரிக்கமுடியா அளவில் உண்மை சிறப்போடு இருக்கவேண்டும். திமுக-மீதான அதிர்ப்தியால் இம்முறை ஆட்சி பெற்ற நீங்கள், அடுத்து உங்கள் மேல் உள்ள விருப்பத்தால் ஆட்சி பெறுமாயின் மிக்க மகிழ்ச்சி. எனக்கு நீங்கள் வரவேண்டும் என்பது விருப்பமில்லை. சிறப்பானவர் வரவேண்டும் என விழைகிறேன். இம்முறை நீங்கள் இல்லாவிடில் என் வேண்டுகோள் பயணம் நீளும்.

அன்புடன்,
ஈரி.

Comments

 1. முதல் மழை எனை நனைத்ததே

  ReplyDelete
 2. >>அப்படி என்ன திமுக செய்தது.? ஏன் எல்லோருக்கும் திமுக மீது இப்படியொரு கொலைவெறி.? மாற்றம் மாற்றம் என்று நாம் தினமும் மாற்றம் தேடிக்கொண்டே தான் இருக்கிறோம்

  இக்கரைக்கு அக்கரை பச்சை

  ReplyDelete
 3. ///இனி ஐந்து வருடத்துக்கு திமுக-வின் ஆட்டம் அடங்கிடும் என எல்லாருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அதிமுக-வின் ஆட்டம்.? நம்மால் தாங்க முடியுமா.? /// இது தான் இப்போதைய பெரும் கேள்வி...

  முதல் இடுகையிலே நல்ல அலசல் தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. முதல் பதிவே முத்தாய்பாய்

  தொடருங்கள்
  தொடர்கிறேன்

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
  இன்று நம் பதிவுலகில் விருது வழங்கபட்டுள்ளது, விழாவில் கலந்து கலக்குங்கள்

  நாமே ராஜா, நமக்கே விருது-7

  http://speedsays.blogspot.com/2011/05/award-7.html

  ReplyDelete
 5. முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்!!

  ReplyDelete
 6. முதல் பதிவே அதிரடி, அமர்க்கள அரசியல் பதிவாக இருக்கிறது.
  வாழ்த்துகளோடு, வருக வருக என்று வரவேற்கிறேன் சகோ.

  ReplyDelete
 7. தமிழகத்திற்கு யார் மூலமாவதும் நல்ல எதிர்காலம் கிடைத்தால், நாடு அபிவிருத்தியடைந்து பொருளாதாரப் பாதையில் முன்னேறினால் போதும் என்பதே மக்களின் இன்றைய தேர்தல் முடிவாக இருக்கிறது.

  ReplyDelete
 8. தேர்தல் முடிவின் பின்னரான கள நிலமை, தேர்தலில் ஏற்பட்ட வெற்றி, தோல்விக்கான காரணிகள் முதலியவற்றை உள்ளடக்கிய நடு நிலையான அலசல் அருமை.

  ReplyDelete
 9. முதல் பதிவு...முத்தான பதிவு.

  ReplyDelete
 10. திமுகவுக்கு எதிர்ப்பாக விழுந்த ஓட்டுகளே ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்தது....இனி ஜெயின் நடவடிக்கைகளே இந்த வெற்றியை தக்க வைத்து கொள்ள உதவும்....பார்ப்போம் என்ன செய்ய போகிறார் என்று...

  ReplyDelete
 11. முதல் பதிவுபோலவே தெரியவில்லை! அவ்வளவு நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்! பெரும்பாலானவர்கள் எடுத்த எடுப்பிலேயே அரசியல் எழுதுவதில்லை!நீங்கள் அசத்தியிருக்கிறீர்கள்! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!!

  ReplyDelete
 12. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் இவர் புதிய பதிவர் இல்லை........

  ReplyDelete
 13. //சி.பி.செந்தில்குமார்
  இக்கரைக்கு அக்கரை பச்சை//

  எப்படி அடுத்த தேர்தலிலும் இப்படியே தான் சொல்வீங்களா.? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 14. // நிகழ்வுகள் said...

  முதல் இடுகையிலே நல்ல அலசல் தொடர வாழ்த்துக்கள்..//

  நன்றி நண்பரே.! வருகைக்கும் கருத்துக்கும் இனி தொடர போகும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 15. //Speed Master said...

  முதல் பதிவே முத்தாய்பாய்

  தொடருங்கள்
  தொடர்கிறேன்//

  நன்றி நண்பரே.!

  ReplyDelete
 16. // மைந்தன் சிவா said...

  முதல் பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்!!//

  நன்றி சிவா நண்பரே

  ReplyDelete
 17. நிரூபன் said...

  தமிழகத்திற்கு யார் மூலமாவதும் நல்ல எதிர்காலம் கிடைத்தால், நாடு அபிவிருத்தியடைந்து பொருளாதாரப் பாதையில் முன்னேறினால் போதும் என்பதே மக்களின் இன்றைய தேர்தல் முடிவாக இருக்கிறது.//

  அப்படியா.! அப்படியானால் இதன் மூலம் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்கிறீர்களா.? நடந்தால் நல்லா தான் இருக்கும்

  ReplyDelete
 18. // நிரூபன் said...

  தேர்தல் முடிவின் பின்னரான கள நிலமை, தேர்தலில் ஏற்பட்ட வெற்றி, தோல்விக்கான காரணிகள் முதலியவற்றை உள்ளடக்கிய நடு நிலையான அலசல் அருமை.//

  நன்றி நிரூபன் அவர்களே!

  ReplyDelete
 19. //தமிழ்வாசி - Prakash said...

  முதல் பதிவு...முத்தான பதிவு.//

  நன்றி பிரகாஷ் நண்பரே

  ReplyDelete
 20. // ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

  முதல் பதிவுபோலவே தெரியவில்லை! அவ்வளவு நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்! பெரும்பாலானவர்கள் எடுத்த எடுப்பிலேயே அரசியல் எழுதுவதில்லை!நீங்கள் அசத்தியிருக்கிறீர்கள்! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!!//

  நன்றி நாராயணன் நண்பரே

  ReplyDelete
 21. //akulan said...

  இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் இவர் புதிய பதிவர் இல்லை.....//

  ஆஹா என் எழுத்துக்கள் தேர்ந்த ஒரு பதிவரது போல் இருக்கா.? மிக்க நன்றி மிக்க நன்றி.. முதல் பதிவிலே எனக்கு இப்படியொரு அங்கீகாரம் எதிர்பார்க்கவில்லை..

  ReplyDelete
 22. //விக்கி உலகம் said...

  வாழ்த்துக்கள்!//

  நன்றி விக்கி உலகம் நண்பரே

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…