பதிவுலகையே கலங்கடிக்கும் அந்த மெயில்.!!

பதிவுலகமே சிக்கி சின்னாபின்னமாக போகும் நாள் நெருங்கிவிட்டது. ஆம்.!! இதுவரை என்னுடைய மெயிலுக்கு அது வந்ததே இல்லை. இது வரலாம் என நான் நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் வந்துவிட்டது. பட்டென எனக்கு பெருத்த ஆச்சர்யம்.


எனக்கு இப்படி ஒரு மெயிலா. பட்டென நண்பர்களுக்கு போன் அடித்து இது உண்மைதானா என்று கேட்டுகொண்டேன். இந்த மெயிலில் குறிப்பிட்டது போல நடந்தால் பதிவுலகமே பெரிய ஆட்டம் கண்டிடுமே என்றிருந்தேன்.

என்னை போலவே எனக்கு இந்த மெயில் வந்த விசயம் தெரிந்த என் நண்பர்கள் சிலர் என்னிடம் கலந்து பேசினர். அந்த மெயிலில் குறிப்பிட்டது போல செயல்பட வேற நான் அந்த மெயிலை பார்த்த போதே ஒத்துகொண்டுவிட்டேன்.

அதில் குறிப்பிட்ட படி நான் செய்வதற்கு சில காலங்கள் அவகாசம் இருந்தது. அந்த அவகாச காலம் முடியும் தருவாய் வந்துவிட்டது. அய்யோ.!! பதிவுலகமே என்ன ஆக போகிறது என்று தெரியலையே.!! கிட்டதட்ட நெருங்கிவிட்டேன் என்று சொல்வதுக்கு பதில் அதன் விளிம்பில் இருக்கிறேன். இப்போது இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கிடபோறேன் என்றே சொல்லலாம். ஆம்!! அந்த மெயிலில் குறிப்பிட்ட படி நான் செய்யும்போது பதிவுலகில் பெருத்த சேதாரம் வரலாம்.


என்னடா இவன் இப்படி சொல்லுறானே என்னன்னே புரியலையேனு பாக்குறீங்களா.? சரி சரி. சொல்லுறேன். மனசை இறுக பிடித்துக்கொள்ளுங்கள். கண்களை நன்கு விரித்துக்கொள்ளுங்கள். ஏ வானமே.! ஏ பூமியே.! ஏ காற்றே.! ஏ கடலே.! ஏ மரமே, செடியே, கொடியே, புல்லே, அதன் நுனியே.!!! எல்லாரும் கேளுங்கள். நான் அதை சொல்ல போகிறேன்.

ஆம். நான் வலைச்சரத்தில் வரப்போகும் வாரத்தில் ஆசிரியராக இருக்க போகிறேன். ஹி ஹி. நோ நோ.!! கடுப்பாகாதீங்க. என் மேல கோபத்துல யாராவது கம்ப்யூட்டர உடச்சிடாதீங்க. நான் அங்கே செயல்படும் போது பதிவுலகில் பெரிய பிரச்சனையே உருவாகலாம். பிரச்சனை தீ கொழுந்துவிட்டு எரியலாம். எல்லாரும் திக்குமுக்காடி போகலாம். ஆனால் ஒன்று மட்டும் சொல்லிகிடுறன். அதுல எதுக்குமே எனக்கு சம்பந்தம் இருக்காது. எல்லாரை போலவும் சாதாரணமா வந்து சாதாரணமா எழுதிட்டு கம்முனு கிளம்பிடுவன். ஹி ஹி.

இதுவரை எனக்கு இங்கு ஆதரவு(!?) தந்த நண்பர்கள் இனி ஒரு வாரம் வலைச்சரத்திலும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதுவரை எனக்கு இங்க ஆதரவு தரவில்லை என்றாலும் அங்கு வந்து ஆதரவு தாங்கோ.! பாருங்க இது என் சொந்த வீடு என்னை நீங்க இங்க என்ன வேணா அசிங்க படுத்தலாம். ஆனா சொந்தகாரனா ஒரு இடத்துக்கு போகும்போது அங்கு வந்து யாரும் அசிங்க படுத்திடாதீங்க. ஓகே.!! சரி கடைசிய ஒண்ணு கேக்குறன். நான் அதுக்கு சரிபட்டு வருவேனா.?

Comments

 1. பில்டப் ஜாஸ்தி.. தான் ஆனாலும் ரசித்தேன்

  ReplyDelete
 2. >>நான் அதுக்கு சரிபட்டு வருவேனா.?

  hi hi ஹி ஹி அண்னே.. நீங்க அதுல மன்னன்னே..

  ReplyDelete
 3. ///ஆம். நான் வலைச்சரத்தில் வரப்போகும் வாரத்தில் ஆசிரியராக இருக்க போகிறேன். ஹி ஹி./// யோவ் ...........ஏன்யா இந்த கொல வெறி :P

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் பாஸ் !

  ReplyDelete
 5. . இதுவரை எனக்கு இங்க ஆதரவு தரவில்லை என்றாலும் அங்கு வந்து ஆதரவு தாங்கோ.! //
  வாழ்த்துக்கள் !!

  ReplyDelete
 6. மக்கா ... எல்லாரும் ஒடுங்க ஒடுங்க விஷ ஜந்து ஒன்னு துரத்திக்கிட்டு வருது ... எல்லாரும் அவங்க அவங்க லைப்ப சேவ் பண்ணிக்குங்க ....

  ReplyDelete
 7. ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல!!!!

  நம்ம கையிலே என்ன்ன இருக்கு?

  எல்லாம் 'அவன்' செயல்:-)

  ReplyDelete
 8. இருந்தாலும் இப்படி சுயபுராணம் அதிகமாக இருக்கக்கூடாது தாத்தா!

  ReplyDelete
 9. I'm at out sight. I will type in Tamil later.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் நண்பா! வலைச்சரம் களைகட்டட்டும்!!!

  ReplyDelete
 11. ஏ யப்பா ஓடுகலெய் ஒடுங்கலேய்....

  ReplyDelete
 12. வலைச்சரத்தில் நன் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்பரே...

  ReplyDelete
 13. //பிரச்சனை தீ கொழுந்துவிட்டு எரியலாம்.// வேண்டாம். தீயா வேலை செய்யுங்க. வாழ்த்துக்கள். அப்புறம் அங்கே வந்து பிரச்சினை பண்றமாதிரி வேண்டாம்.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. இதுக்கு யார்யா மைனஸ் ஓட்டு போட்டது. யாருக்கோ கொலவெறி.... (பயபுள்ள எனக்கு முன்னாடியே போட்டுட்டு போயிடுச்சே)

  ReplyDelete
 16. தம்பீ
  நீங்க இங்கிருதாலும் சரி
  எங்கிருந்தாலும் சரி ஆனா
  என்னமட்டும மறந்திடாதிங்க
  சரியா

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. நீங்க அதுல மன்னன்னே..


  paavam valaicharam and cheena sir

  ReplyDelete
 18. ராஜ நடராஜன்29 May 2011 at 18:42

  அதுக்குத்தான் இந்த பில்டப்பா:)

  எப்படியோ நல்லா இருந்தா சரி!

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. கடுப்படிக்காதிங்க...வந்து தொலையறோம்..

  ReplyDelete
 20. ஒரு வாரம் ஆசிரியரா எப்படி சமாளிக்க போறீங்களோ

  ReplyDelete
 21. என்னாது வலைச்சர ஆசிரியர் நீயா நீயா நீயா...ஹி ஹி சகோ இப்போவே ரெண்டு மைனஸ் ஓட்டுப் போட்ட அந்த நல்லவங்க யாரு சகோ.....

  ReplyDelete
 22. கண்களை நன்கு விரித்துக்கொள்ளுங்கள். ஏ வானமே.! ஏ பூமியே.! ஏ காற்றே.! ஏ கடலே.! ஏ மரமே, செடியே, கொடியே, புல்லே, அதன் நுனியே.!!! எல்லாரும் கேளுங்கள். நான் அதை சொல்ல போகிறேன்.


  இம்ம்க்கும் சீக்கிரம் சொல்லேன்...

  ReplyDelete
 23. ஆம். நான் வலைச்சரத்தில் வரப்போகும் வாரத்தில் ஆசிரியராக இருக்க போகிறேன். ஹி ஹி

  ஐ சூப்பர் சூப்பர்...அப்போ நெறைய மைனஸ் ஒட்டு விழும்னு சொல்லு...

  ReplyDelete
 24. இதுவரை எனக்கு இங்கு ஆதரவு(!?) தந்த நண்பர்கள் இனி ஒரு வாரம் வலைச்சரத்திலும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


  உனக்கிருக்கிற ஆதரவு நல்லாத் தெரியுது...3 /5...

  ReplyDelete
 25. ஆனாலும் சகோ தூள் கிளப்பு...ஹி ஹி.... உன் ஆசிரியர் பணி சிறக்க என்.வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 26. வலைச் சரம் ஒரு வாரம் உங்கள் வசம், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. பாஸ், ம்..எம்மாம் பெரிய அதிர்ச்சி வர்ணனை,
  நான் கூடப் பயந்தே போயிட்டேன் சகோ.

  வாழ்த்துக்கள் சகோ,
  கல கல எனக் கலக்குங்க மாப்பு.

  ReplyDelete
 28. ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 29. மங்கிஸ்தான்..கிங்கிஸ்தான்..

  கவுண்டமணி பாஷையில் வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 30. என்ன கொடுமை கூர்மதியன் இது??????????

  ReplyDelete
 31. @சிபி:hi hi ஹி ஹி அண்னே.. நீங்க அதுல மன்னன்னே..//

  உங்க அளவுக்கு இல்லாட்டியும் ஏதோ பண்ணியிருக்கேன் அண்ணே

  ReplyDelete
 32. @கந்து:யோவ் ...........ஏன்யா இந்த கொல வெறி :P//

  ஹி ஹி.. நன்றி பாஸ்..

  ReplyDelete
 33. மன்னியுங்கள்.. எல்லோருக்கும் தனியாக சொல்ல முடியவில்லை.. பொதுவாக நன்றி..

  ReplyDelete
 34. உங்களை வலைச்சரத்தில் அறி
  முகம் செய்திருக்கேன். நேரம்
  கிடைக்கும் போது பார்க்கவும்.
  http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

  ReplyDelete
 35. //கடைசிய ஒண்ணு கேக்குறன். நான் அதுக்கு சரிபட்டு வருவேனா.?
  //

  சீரியசாவா கேக்குரீங்க..?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி