மங்கையாதாக செய்தொழியவேண்டும்.?பொறியென உலகில் பொதிந்த நற்கரங்கள்
புறமதை நாட மறித்து உயிர்க்கொல்லிவால் வீச
எங்ஙனம் கொணர்வேன் அம்மங்கையென
சிந்தையில் சிற்பட்டமாக்க-தோன்றுதலின்
உடன்கொண்ட மூன்றும் பட்டமரமாக
காலம் நாடினான் காமுகன்
உருகொண்ட வஞ்சகத்தை வஞ்சித்தொழிகவே.!

மோகமொழிந்தொழுக-பிதற்றல் கூடாரம்
வஞ்சகனின் வாய்ச்சொல்லை நிரப்பிற்று
அண்டம் அறியாதொரு காதலிது.!!

சூச்சமம் கொழுத்த அந்தி ஆற்றலை
வர்ணித்திருந்த கொடியோனை சாடிய
சிவந்த கண்ணுடையா செவ்வை கொவ்வாய்
நோக்கும் காளான் அறிந்திட்டாள்.!

செய்வதறியாள் என்செய்ய விழித்திட்டாள்
கண்ணீரேங்கும் ஒற்றை சுவரா-அற்று காமுகனின்
வஞ்சகத்தின் ஊன்றை வஞ்சித்தொழிவதா.?

பின்தொடர்ந்த தேர்வு எனதாகும்-மங்கை
பொன்செயல் மார்க்கம் தடுத்திட்டால்
நான் பொங்கிட மறுத்தலன்.!
இன்றே அவ்வஞ்சகன் அழித்திடன்..!!

Comments

 1. மாப்பிளை, மரபில் எழுத முயன்றிருக்கிறீங்க. ஆனால் எல்லா வரிகளிலும் அடியும், எதுகை மோனையும் ஒத்து வரவில்லையே.

  இன்னொன்று இக் காலத்திற்கு ஏற்றாற் போல இலகு தமிழில் முயற்சி செய்யலாமே சகோ.

  வலையில் உள்ள எல்லோருக்கும் இலக்கணத் தமிழ் புரியாதல்லவா சகா.

  ReplyDelete
 2. /////வஞ்சகனின் வாய்ச்சொல்லை நிரப்பிற்று
  அண்டம் அறியாதொரு காதலிது.!!
  /////

  ஆழமாயிருக்கு சகோதரம் நன்றி..

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

  ReplyDelete
 3. உருகொண்ட வஞ்சகத்தை வஞ்சித்தொழிகவே.!
  //
  நன்றி..Interesting.

  ReplyDelete
 4. மரபுக் கவிதை எழுத நல்ல முயற்சி. ஆனால் எதுகை மோனை பிரச்சனை அப்புறம் தலை தட்டுது சில இடங்களில் அப்புறமா ஒரு சில லிங்க் தரேன். நம்ம நண்பர் துறை அவர்களோட பதிவு லிங்க். மரபுக் கவிதை அட்டகாசமா இருக்கும்

  (கொஞ்சம் பொருள் விளக்கமும் எழுதினா அனைவருக்கும் புரியும்)

  ReplyDelete
 5. @நிரூ://ஆனால் எல்லா வரிகளிலும் அடியும், எதுகை மோனையும் ஒத்து வரவில்லையே. //

  எதுகை, மோனை ஒத்து வந்தால் தான் மரபு கவிதையா.? சொல்லவேயில்ல.?


  //இன்னொன்று இக் காலத்திற்கு ஏற்றாற் போல இலகு தமிழில் முயற்சி செய்யலாமே சகோ.//

  இது நான் ஸ்கூல் படிக்கும்போது எழுதினது மக்கா.. அப்போ ஏதோ நியூஸ் பாத்து எழுதினேன்.. இதை அப்படியே இலகு தமிழிலும் எழுதமுடியும். ஆனால் அர்த்தம் பலருக்கு புரியவேண்டாம் என்றிருந்தேன்..

  ReplyDelete
 6. @ம.தி.சுதா: மிக்க நன்றி நண்பரே.!

  ReplyDelete
 7. @இராஜராஜேஷ்வரி: மிக்க நன்றி..

  ReplyDelete
 8. @எல் கே://அப்புறமா ஒரு சில லிங்க் தரேன். நம்ம நண்பர் துறை அவர்களோட பதிவு லிங்க். மரபுக் கவிதை அட்டகாசமா இருக்கும்//

  கண்டிப்பாக அனுப்புங்கள் அண்ணா.. பார்க்க ஆவலாக இருக்கிறேன்..

  விளக்கம் கேட்டதால் அடுத்த கமண்ட்டில் விளக்கத்தை கொடுத்திடுறேன்..
  நன்றி அண்ணா..

  ReplyDelete
 9. பொறி போன்று சிக்குதல் வகையறா கொண்ட உலகில் அவனது கைகள் சிக்கிற்று. மங்கையினை அடைய எண்ணி திரிந்த போது உயிர்க்கொல்லி நோயால் அவன் பாதிக்கப்பட்டது தெரிந்தது. அவளை எப்படி அடைவேன் என அவன் மூளையில் ஒரு சிற்பமாக உருவாக்க, அவன் பிறக்கையில் அவனோடு பிறந்த அச்சம், மடம், நாணம் அனைத்தும் அவனை விட்டு விலகியது. காலம் நாடி காத்திருந்தான்-உற்ற காலம் வந்ததும் ஆசை தீர்த்திட்டான்.

  அவன் மோகம் அடங்க கூடியது ஒற்றை கூடாரத்தில் அந்த பஞ்சாயத்து.. யாரையும் பேசவிடாமல் அவன் மட்டும் கத்திகொண்டிருந்தான்.. என் காதல் உலகம் அறியாதது என்று..

  ரொம்ப கொடுமையான அந்த மாலை நேரத்தை வருத்தம் இல்லாமல் சொன்ன அவனை கோபம் கொண்டு சிவந்த கண்ணுடையாளாய் அவள் அழகிய வாய் திட்டி தீர்த்தது.. அவனது உயிர்கொல்லி நோய் இவளையும் ஏத்து இவளது உயிர் போகும் என இவள் அறிவாள்..

  என்ன செய்யுறதுனு புரியாமல் இருக்கிறா.. அவ என்ன செய்யணும்.? கண்ணீரோடு ஒரு சுவராய் சாய்திடவேணுமா, இல்ல அவனது மோகத்தின் உருவாகிய அந்த உயிர்நாடியை அழித்திடுவதா.?

  இரண்டாவது சொன்னது என் விருப்பம்.. அவளின் நல்ல பண்பும், வாழ்ந்த நல்விதமும் அவளை அவ்வாறு செய்வதை தடுத்திட்டால் எனக்கு கோபத்துக்கு தடையில்லை.. நான் பண்பும், நல்விதத்தையும் பாக்கமாட்டேன்.. அவளுக்காக இப்போதே நான் அவனது உயிர்நாடியை அழிக்க துணிந்திடுவேன்..


  இது தான் இந்த கவிதையின் விளக்கம்..

  டிஸ்கி: நான் 12வது படிக்கும்போது நடந்த மரபு கவிதை போட்டியில், தமிழ் இலக்கிய மன்றம் எனக்கு இந்த கவிதைக்கு முதல் பரிசு தந்தது.

  ReplyDelete
 10. விளக்கத்தோடு கவிதை நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 11. அருமையான கவிதையும் விளக்கமும்.சத்தியமா எனக்கு இப்பிடி எழுத வராது !

  ReplyDelete
 12. கலக்கல் தாள...இன்னமும் மெருகேற்றலாம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!