Posts

Showing posts from June, 2011

தண்டவாளத்தை விட்டு டிரெயின் ஓடுதுனு சொன்னாங்க..!!

Image
மீடியா என்பது ஒண்ணுமே இல்லாத ஒருவனை உச்சத்துக்கு கொண்டு போகவும் எல்லாமும் இருப்பவனை கீழே தள்ளவும் சக்தி வாய்ந்த கலியுக மந்திரவாதி என்றே சொல்லலாம். ஒரு பேனாவை கையில் வைத்துக்கொண்டு உச்சி குடுமியை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிடலாம். அப்படிபட்டது தான் நம் ஊடகம்.

உயிரென்று இதற்குள் வந்தவர்களும் இருக்கிறார்கள், வேறு எதுவுமே இல்லையே என்று இதனுள் வந்தவர்களும் இருக்கிறார்கள். இதில் முதல் ரகத்தை சார்ந்தவர்களிடம் நாம் பல சமயங்களில் உண்மையை எதிர்பார்க்கலாம், இரண்டாவது ரகத்தை சார்ந்தவர்களிடம் உண்மையை எப்போதாவது தான் எதிர்பார்க்க முடியும். உள்ளே காலடி எடுத்துவைத்ததும் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு போதை போன்று உள் இறக்கி பண்ணாத வேலை எல்லாம் பண்ண சொல்லும்.
அன்னா ஹசாரே உயர்ந்ததுக்கும் மீடியா ஒரு பெரிய காரணம், திமுக.,வின் கொடுமையான ஆட்சி மாறுவதற்கும் மீடியா தான் காரணம். வெளியே தெரியவேண்டாம் என்று நினைத்திருக்கும் செயலை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டி பல சமையங்களில் உயிரிழப்புக்கு வித்திடுவதும் மீடியா தான். அரசன் கையிலிருக்கும் கோல் மாதிரி இந்த மீடியா துறை. அதை கையில் வைத்து நல்லது செய்தால் நாடு செழிக்க…

உதிர்த்த உணர்ச்சி மங்கிவிட்டதா மக்களே.!!?

Image
உலகம் வெப்பமயமாதல் என்னும் விடயம் சில வருடங்களாக நம்மை ஆட்டி படைக்கும் ஒன்று. புவியியலில் ஆர்வம் இல்லாத பலருக்கும் இப்போது ஓசோன் படலத்தை பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்தும் நன்கு அறிந்திருப்பர். உலகம் வெப்பமயமாதலை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு சில அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று நாடெங்கும் மரம் வளர்ப்போம் என்பது.


வீட்டுனுள் தூங்கிகொண்டிருந்த இளைஞர்களை எல்லாம் தட்டி எழுப்பும் வகையில் உரக்க சொல்லப்பட்டது. புதிதாய் முளைத்த உணர்ச்சி ஒன்று புது புது அமைப்புகளை உருவாக்கி, அமைப்புகள் மூலம் மரக்கன்றுகளாய் நடப்பட்டது.

மரம் வளர்ப்பதை பற்றி பெரிய பிரச்சாரங்களும், இன்னும் பல விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. உண்மையில் இந்த ஆண்டுகளில் மக்களின் மனதில் மரம் வளர்ப்பதை பற்றி ஒரு பெரிய உணர்ச்சி ஏற்பட்டது உண்மை தான்.

ஆனால், இந்த உணர்ச்சியின் விளைவு என்ன ஆயிற்று.!? இங்கே ஒரு மரம் நடும் போது பல இடங்களில் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன. இது தான் நாம் விரும்புவதா!? இதை நாம் கண்டிப்பாக விரும்பமாட்டோம். காட்டுத்தீ, ஊர் மேம்பாடு என்று 7:3 விகிதத்தில் மரம் அழித்தலும் உருவாக்குதலு…

ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்.!!

Image
உலகத்தில் சந்திக்க வேண்டிய பல பல சமாச்சாரங்களுக்கு இடையே நம்மை நோகாமல் வழிநடத்தி போவது எது என்று கேட்டால் பட்டென சொல்லலாம் காதல் என்று. காதல் மட்டும் தானா.!? அதை விட ஒரு பெரிய விசயம் இருக்கிறது. ஆம். அது பக்தி.!!


பக்தி-அப்படீனா என்ன.!? இங்கிருக்கும் ஆன்மீகவாதிகள் என்னைவிட இதில் தலை சிறந்தவர்கள். அதனால் அவர்களுக்கு நான் இதை சொல்லி புரியவைக்க தேவையில்லை. நாத்திகவாதிகள் இதை பற்றி தெரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள். சரி..!! இப்போது எதற்கு இதெல்லாம்.!?

சமீபத்தில் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக திருப்பதி சென்றிருந்தேன். என்னிடம் நெருங்கி பழகுபவர்களுக்கு என்னை பற்றி தெரியும். பொதுவாக கோவில்களுக்கு செல்ல நான் விரும்புவேன். ஆனால் உருவ வழிபாடை விரும்பாதவன் நான். சடங்கு, சம்பிரதாயத்தை விரும்பாத என்னை நாத்திகன் என்று அழைப்பர். ஆனால் நான் அதிகமாக எழுதியது கோவில்களை பற்றி, நான் ஆராயும் தலைப்புகளில் ஒன்று-கோவில், பக்திக்கு அடையாலமாக சொல்லப்படும் ருத்திராட்சம் என் கழுத்தை 15 வருடமாக நீங்காமல் பிடித்து இருக்கிறது, சுற்றுலா என்று எங்கு சென்றாலும் அது கோவிலாக தான் இருக்கும்.

திருப்பதி ஏழுமலையான் நம்…

ஜெயலலிதாவின் கையிற்கு காத்திருக்கும் விலங்கு!

Image
அடடா, தேர்தல் முடிஞ்சு இன்னைக்கு ரெண்டு மாசம் ஆச்சு. நம்ம தலைவியோ பொறுமையின் சிகரம் எனும் ரேஞ்சில் பதவியேற்ற காலம் தொடக்கம் நொண்டிச் சாட்டுச் சொல்லி மக்களோடை பணிகளைத் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறா.

இதே வேலையைத் தான் முன்னாடி கலைஞர் ஜி அவர்களும் பண்ணினாரு,
இப்போ பதவியேற்ற ஒரு மாத காலத்திற்குள் ஜெயலலிதாவின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது மக்களுக்கு ஆத்திரத்துடனும், கோபத்துடனும் கூடிய விசனம் தான் ஏற்படுகிறது.

கலைஞரை ஆட்சியை விட்டுத் தூக்கனும் என்ற நோக்கத்திற்காகத் தான் ஜெயலலிதாவை இந்த முறை எலக்சனில தெரிவு செய்தார்களே தவிர, மக்களுக்குத் நன்றாகவே தெரியும், தலைவி வந்தாலும் தலைவர் முன்னாடி செஞ்ச அதே பணிகளைத் தான் பண்ணுவாங்க என்று. இப்போ சமச்சீர் கல்வியைப் புறக்கணிக்கும் நோக்கில் நம்ம தலைவி பல கோடி ரூபாகளைச் செலவழித்து பாட நூல்களை அச்சடிக்க முயற்சி தொடங்கும் போது, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினை சமச்சீர் கல்வி மாற்றத்திற்கு வழங்கியிருக்கிறது. இந் நிலையில் ஆப்பிளுத்த குரங்காக இப்போ தலைவி!

இது தான் முன்னாடியே யோசிக்கனும் என்று சொல்வது. தலைவி இந்த ரேஞ்சில போய்க்கிட்டிருந்தா நம்ம தமிழ்…

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

Image
வர வர காலத்துல செல்ஃப் ஸ்டார்ட் இல்லாம வண்டிகள் இல்லாமலே போயிடுச்சு. சிக்னல்ல வண்டி நிக்கும் போது பலர் வண்டிய நிறுத்துறதுக்கும் இந்த செல்ஃப் ஸ்டார்ட்டின் வருகை ஒரு முக்கிய காரணம் தான். சிக்னல் பச்சை விளக்கு எரிஞ்சதும் சல்லுனு செல்ஃப் அடிச்சு பறக்குறவங்க அடுத்த கொஞ்ச நாள்ல நிக்குறது மெக்கானிக் கடை முன்னடி தான்.


செல்ஃப் வண்டி எல்லாமே கொஞ்சம் மக்கர் பண்ண கூடியதுதான். ஆனா அத கவனிக்கிற விதத்துல கவனிச்சா அதைவிட நமக்கு பெஸ்ட்னு எதுவுமே கிடையாதுன்னு சொல்லலாம். ஆனா அதிகமா செல்ஃப்ல இடைஞ்சல் பண்ண கூடிய வண்டினு பாத்தா அது ஸ்கூட்டி பெப் வண்டி தான்.
முக்கியமா செல்ஃப் வண்டிகள்ல கவனிக்க வேண்டிய விசயங்கள்னா எந்த சமயத்துல நாம செல்ஃப் அடிக்கிறோம், பேட்டரி எப்படி மெயின்டெய்ன் பண்றோம் அப்படிங்கறது தான். முதல்ல பெரும்பானவர்களுக்கு தெரிஞ்ச ஒண்ணு. அது காலைல வண்டிய எடுத்து செல்ஃப் தட்டுவது ரொம்ப தப்பு. ரொம்ப நேரம் வண்டி ஓடாம இருக்கும் போது இன்ஜின் கூலா இருக்கும் அந்த மாதிரி சமயத்துல வண்டியில செல்ஃப் தட்டுனா அவ்வளவு சீக்கிரம் பர்ன் ஆகாது. அதிகமா எனர்ஜி உரிஞ்சி பேட்டரி வேஸ்ட் ஆயிடும். இதுவே அந்த சமயத்துல கிக் யூஸ…

காரை பார்க் செய்ய முக்கல் முனகல் இனி இல்லை..

Image
திருச்சி அண்ணா பல்கலைகழகத்தை சார்ந்த மாணவர்கள் கார் ஓட்டுபவர்களின் முக்கிய பிரச்சனையான பார்க்கிங் ப்ராப்ளத்திற்கு ஒரு முடிவு கொண்டு வந்திருக்கிறார்கள். திருச்சி அண்ணா பல்கலைகழகம் ஆட்டோமொபைல் துறையை சார்ந்த மாணவர்கள் பழநிவேந்தன், கார்த்திகேயன், சேக் முகமது ஹாசிம் ஆகிய மூவரும் கண்டுபிடித்தது தான் ’90 degree wheel turningmechanism’ என்னும் கார். இந்த கார் தான் இக்கால பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமைய கூடியது.

எப்படி.? இந்த காரில் 90 டிகிரி திரும்பகூடிய சக்கரம் செயல்பாட்டில் இருப்பதால் இதை எளிதாக எந்தவித நெரிசலிலும் பார்க்கிங் செய்துவிடலாம். இந்த காரில் பேட்டரி, வழிப்படுத்தலான்(sprockets),  ஆறு மோட்டார்கள், மின்னழுத்த அளவி(potentiometer),ப்ராக்ஸிமிட்டி சென்சார்(proximity sensor),செயின் முறை செலுத்தி ஆகியவை முக்கிய உறுப்புகள். முழுக்க முழுக்க பேட்டரிகளாலே இயங்ககூடிய கார்.
இருக்கும் ஆறு மோட்டார்களில் இரண்டு செயின் முறையால் இணைக்கப்பட்டு காரின் முன்னால் இருக்கும் இரு சக்கரங்களிலும், மற்றும் இரண்டு செயின் முறையால் இணைக்கப்பட்டு காரின் பின்னால் இருக்கும் சக்கரங்களிலும் பொருத்தப்பட மீதி இரண்டு மோட்டர…

90cc கார்.!! சூப்பர்ல..

Image
அவசர அவசரமா ஓடுற வாழ்க்கையில எல்லாரும் ஓடுறத விடுத்து ஓட்டுறதையே விரும்புறாங்க. கார், பைக்னு எல்லாமே எரிப்பொருள்களை அதிகமா உபயோகபடுத்துற அதிக CC கார்கள் வர்ற இந்த காலத்தில கம்மியான ccஇல் இன்ஜினில் ஒரு சில மாற்றங்களை மட்டும் ஏற்படுத்தி எப்படி எரிப்பொருளை குறைப்பது என்ற கேள்விக்கான விடைதான் இந்த “D” motto 90 .


இதை வடிவமைத்தவர் சென்னை தாகூர் இன்ஜீனியரிங் கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கும் தனசேகர். இதில் சாதாரண கார்களில் இருப்பது போல இன்ஜின், க்ளச் லிவர், கியர் பாக்ஸ் போன்று அனைத்தும் இருக்கிறது. காரை ரேஸ் கார் மாடலாக வைத்து வடிவமைத்து உள்ளார்.

இதில் ஸ்பீடோமீட்டர், சஸ்பென்ஷன், சைலன்சர் போன்ற அமைப்புகளும் இருக்கிறது. முன்னர் இருக்கும் அச்சு(axle)ல் இருக்கும் ஹப் சக்கரங்களை திருப்ப உதவும். அந்த ஸ்டீயரிங் பெட்டி மற்றும் இணைக்கும் கம்பிகள் Tata Indica விலிருந்து எடுக்கப்பட்டது. பின்னாலிருக்கும் அச்சு செயின் வழிப்படுத்தலான்(chain sprocket) மூலம் இன்ஜினோடு இணைக்கப்பட்டுள்ளது.

ப்ரேக்குகளை பொருத்த வரையில் பல்சர் 220க்கான இரண்டு டிஸ்க் ப்ரேக்குகளை ஒரு சில மாற்றங்களோடு பொருத்த…

ஜெயலலிதா கழிக்கும் திருஷ்டி.!!

Image
பெரிதும் பல பல எதிர்ப்பார்ப்புகள் நடுவே கலைஞரை தூக்கி தூர எரிந்துவிட்டு ஜெ.,வை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்க நினைத்தனர் நம் தமிழகத்தின் பதிவுலக அன்பர்கள் குறிப்பிட்ட வகையில் புத்திசாலி மக்கள். ஆனால் இப்போது அது அழகாக தெரியவில்லை. இதுவரை நம் தமிழக முதல்வர் பதவிக்கு மஞ்சள் துண்டான் மூலம் திருஷ்டி கழித்தோம், இப்போது பச்சை சீலக்காரியை பிடித்து தொங்குகிறோம்.

இது ஒரு பக்கம் இருந்து பாத்தா நம்ம கவுண்டர் மாதிரி இல்ல.!?
கர்ம வீரர் என்று சிறந்ததொரு ஆட்சியாளர் இருந்தார் என்று இந்தியாவே ஒரு காலத்தில் வியந்தது, பின்னர் ஒரு நடிகரை ஆட்சியை விட்டு இறக்கவே முடியவில்லை என்று இந்தியாவே ஆச்சர்யம் கொண்டது. இதனால் கண்ணு பட்டுடுச்சு கண்ணு பட்டுடுச்சுனு சொல்வாங்களே அது தான் இப்ப நமக்கு நடந்திருக்குனு முன்னோர்கள் சொன்னாங்க. நம்ம ஆளுக மூடநம்பிக்கைகள்ல கொஞ்சம் தெளிவானவங்க தான் அதுக்காக இந்த தெளிவு ஆகாதுங்கோ.!! அப்போ நடந்த நல்லாட்சிக்கு இன்னுமும் திருஷ்டி கழிக்கிறாங்க போல.

ஒரு காலத்துல ஓ.பன்னீர் செலவம் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சி செய்தபோதே திருஷ்டியெல்லாம் போயிடும்னு இருந்தேன். அப்போ இந்தியாவிலே எது சிறப்பா…

தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!

Image
வணக்கம்.! நம் உலகில் இன்றியமையாதது கல்வியாய் இருந்தாலும் ஒவ்வொரு இடத்திற்க்கும் அந்த கல்வி கற்கும் முறை மாறி மாறி தான் வருகிறது. அண்டை நாட்டின் கல்வி தரத்தை நான் விமர்சனம் செய்யும் அளவு எனக்கு அதில் பக்குவம் இல்லாவிடிலும் இந்திய நாட்டின் குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி முறையை நான் கொஞ்சம் அறிவேன் என்பதால் அதை என்னால் சற்று விமர்சிக்க முடியும்.


தமிழகத்தின் கல்வி முறை என்றதும் இப்போது எல்லாருக்கும் ஞாபகம் வருவது சமச்சீர் கல்வி நிலை. ஆனால் நான் இப்போது தேய்ந்து ஓய்ந்து போன வேறு ஒரு பழைய விடயத்தை தான் கையில் எடுத்துள்ளேன்.

புதிதாக ஒன்றுமில்லை. கூடுதல் வகுப்பு எனப்படும் அந்த 'ஸ்பெஷல் க்ளாஸ்' பற்றியே. கூடுதல் வகுப்பு பொது தேர்வு எழுதபோகும் மாணாக்கர்களுக்கு நடத்தி அவர்களை அதிக மதிப்பெண் பெருவதற்காக திட்டமிட்டனர் கழுகு வகை தனியார் பள்ளிகள். இது குரங்கு வாலில் பற்றிய 'தீ' போல எங்கும் பரவிற்று.

இதை தடுக்க சில அமைப்புகள் முற்பட்டாலும் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில் இப்போது இன்னொரு பூகம்பம் உருவெடுத்து உள்ளது. இப்போது என்றால் தற்சமயம் இல்லை. சில வருடங்களாகவே அங்கும் இங…