Skip to main content

90cc கார்.!! சூப்பர்ல..

அவசர அவசரமா ஓடுற வாழ்க்கையில எல்லாரும் ஓடுறத விடுத்து ஓட்டுறதையே விரும்புறாங்க. கார், பைக்னு எல்லாமே எரிப்பொருள்களை அதிகமா உபயோகபடுத்துற அதிக CC கார்கள் வர்ற இந்த காலத்தில கம்மியான ccஇல் இன்ஜினில் ஒரு சில மாற்றங்களை மட்டும் ஏற்படுத்தி எப்படி எரிப்பொருளை குறைப்பது என்ற கேள்விக்கான விடைதான் இந்த “D” motto 90 .


இதை வடிவமைத்தவர் சென்னை தாகூர் இன்ஜீனியரிங் கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவில் நான்காம் ஆண்டு படிக்கும் தனசேகர். இதில் சாதாரண கார்களில் இருப்பது போல இன்ஜின், க்ளச் லிவர், கியர் பாக்ஸ் போன்று அனைத்தும் இருக்கிறது. காரை ரேஸ் கார் மாடலாக வைத்து வடிவமைத்து உள்ளார்.


இதில் ஸ்பீடோமீட்டர், சஸ்பென்ஷன், சைலன்சர் போன்ற அமைப்புகளும் இருக்கிறது. முன்னர் இருக்கும் அச்சு(axle)ல் இருக்கும் ஹப் சக்கரங்களை திருப்ப உதவும். அந்த ஸ்டீயரிங் பெட்டி மற்றும் இணைக்கும் கம்பிகள் Tata Indica விலிருந்து எடுக்கப்பட்டது. பின்னாலிருக்கும் அச்சு செயின் வழிப்படுத்தலான்(chain sprocket) மூலம் இன்ஜினோடு இணைக்கப்பட்டுள்ளது.


ப்ரேக்குகளை பொருத்த வரையில் பல்சர் 220க்கான இரண்டு டிஸ்க் ப்ரேக்குகளை ஒரு சில மாற்றங்களோடு பொருத்தப்பட்டுள்ளன. இரண்டுமே பின் சக்கரங்களுக்கு மட்டுமே பொருத்தப்பட்டிருக்கின்றன. பஜாஜ் ஸ்கூட்டரின் சஸ்பென்ஷனை முன் சஸ்பென்ஷனுக்காகவும், பல்வேறு மாடல்களின் சஸ்பென்ஷன் கலவையாக பின் சஸ்பென்ஷனும் உருவாக்கப்பட்டுள்ளது.

IND SUZUKI AX-100ன் இன்ஜின் உபயோகிக்கப்பட்டுள்ளது. நான்கு ஸ்பீடு கியர் பாக்ஸ் இருக்கிறது மற்றும் இது 87கி.மீ., வேகம் வரை செல்லக்கூடியது.  ஒரே ஒரு சீட்டை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.


இதை பற்றி இதை தயாரித்த தனசேகர் கூறுகையில், ‘‘ நம்ம சாதாரண அதிக CC கார்கள் நகர்புறத்துல ஓட்டினா அதிக எரிப்பொருள் வேஸ்ட் ஆகும். அதை குறைக்க என்ன வழின்னு யோசிச்சப்போ இப்படி டிசைன் பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. இது கண்டிப்பா சிறப்பாக இருக்கும்.’’ என்று கண்ணில் நம்பிக்கையோடு பேசினார். 


தொடர்புக்கு:9790234116 


அன்புடன்,
தம்பி கூர்மதியன்Comments

 1. @ராஜா: நன்றி ராஜா.. புது கடை இன்னும் நண்பர்கள முழுசா போய் சேரல.. ஸோ.. உங்களுக்கு தான் வடை போண்டா எல்லாம்..

  ReplyDelete
 2. ராஜ நடராஜன்10 June 2011 at 23:36

  கூர்!மார்க்கெட்டிங்க செய்யும் உங்களுக்கும் தனசேகரின் புதிய முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.

  எந்த வாகனத்துக்கும் அடிப்படையாக எரிபொருள்,வேகம்,நீண்ட கால உழைப்பு இவற்றுடன் பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்று.நகர்ப்புறங்களுக்கு சரிப்பட்டு வரனுமின்னா இன்னும் கொஞ்சம் மாற்றங்கள் தேவை.அடிப்படை வலுவாக இருப்பதால் மாற்றங்கள் பிரச்சினையில்லை.

  என்ன விலைக்கு விற்கிறீங்க:)

  ReplyDelete
 3. @ராஜ நட: பாஸ் நான் புதுசா மார்க்கெட்டிங் பிஸினஸ் பக்கம் போகல.. நான் எனது வேலைக்காக இவரை சந்தித்தேன்.. இது இவரின் பைனல் செமஸ்டர் ப்ராஜெக்ட்.. நான் tagல் வெளிகொணர்தல்னு போட்டிருப்பேன்.. இது நான் விளம்பரத்துக்காக செய்யல.. இத இவரு செஞ்சிருக்கார்னு காட்டிறதுக்காக போட்டிருக்கேன். இவருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இவரின் நம்பர் கொடுத்தால் வேறு சந்தேகம் இருந்தால் இவரை தொடர்புக்கொள்ளலாம் என்றே கொடுத்தேன்.. இப்படி கதையை கட்டிடாதீங்க பாஸ்..

  ReplyDelete
 4. இப்பவும் சொல்லுறேன் இது விக்கிறதுக்கு இல்ல.!! இத வித்தாலும் யாரும் வாங்கமாட்டாங்க.. இது ஜஸ்ட் ஒரு மாடல் தான் பாஸ்..

  ReplyDelete
 5. நல்ல முயற்சி.....

  ReplyDelete
 6. ம்ம் புது முயற்சி

  ReplyDelete
 7. நல்ல கண்டுபிடிப்பு முயற்சி வெற்றியாக மாற வாழ்த்துக்கள் தனசேகர்

  ReplyDelete
 8. பிந்திய வருகையுடன், நிரூ!
  மாப்பிளை புதுக் கடை தொடங்கியிருக்கிறீங்க. என்னை நினைவிருக்கா:-))

  ReplyDelete
 9. தனசேகரின் முயற்சிக்கு வாழ்த்துக்களையும், இத் தகவலை வலை உலகிற்கு அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  மாணவன் தனசேகரின் முயற்சிக்கு நல்ல நிறுவனங்கள் யாராவது ஊக்கமளித்து, அவரின் முயற்சியினை அடிப்படையாக வைத்து
  நல்ல முறையில் இம் மாடலினைக் கொண்டு பாதுக்காப்பு உத்தரவாதத்தோடு நல்ல கார்களைத் தயாரிக்க முன் வர வேண்டும், அப்படி யாராவது செய்வார்களாயின் இந்த இளம் மாணவனின் முயற்சிக்கு இன்னமும் சிறப்பாக இருக்கும்,

  ReplyDelete
 10. பாஸ், நித்திரை தூக்கத்தில
  நல்ல நல்ல. என்று தொடர்ந்து டைப் செய்து விட்டேன், சாரி பாஸ்.

  ReplyDelete
 11. @கந்தசாமி: ஆம் நண்பரே.! நன்றி..

  ReplyDelete
 12. @சிவா: நானும் அப்படி தான் நினைக்கிறேன்.. நன்றி

  ReplyDelete
 13. @தினேஷ்: மிக்க நன்றி தினேஷ்..

  ReplyDelete
 14. @நிரூ: கண்டிப்பாக நிரூ.. இது அந்த மாணவனுக்கு மட்டுமில்லாது பலருக்கும் ஊக்குவிப்பாக இருக்கும்.. பார்ப்போம்.. நன்றி..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…