தமிழக கல்வியில் புதியதோர் அதிர்ச்சி.!!

வணக்கம்.! நம் உலகில் இன்றியமையாதது கல்வியாய் இருந்தாலும் ஒவ்வொரு இடத்திற்க்கும் அந்த கல்வி கற்கும் முறை மாறி மாறி தான் வருகிறது. அண்டை நாட்டின் கல்வி தரத்தை நான் விமர்சனம் செய்யும் அளவு எனக்கு அதில் பக்குவம் இல்லாவிடிலும் இந்திய நாட்டின் குறிப்பாக தமிழ்நாட்டின் கல்வி முறையை நான் கொஞ்சம் அறிவேன் என்பதால் அதை என்னால் சற்று விமர்சிக்க முடியும்.


தமிழகத்தின் கல்வி முறை என்றதும் இப்போது எல்லாருக்கும் ஞாபகம் வருவது சமச்சீர் கல்வி நிலை. ஆனால் நான் இப்போது தேய்ந்து ஓய்ந்து போன வேறு ஒரு பழைய விடயத்தை தான் கையில் எடுத்துள்ளேன்.

புதிதாக ஒன்றுமில்லை. கூடுதல் வகுப்பு எனப்படும் அந்த 'ஸ்பெஷல் க்ளாஸ்' பற்றியே. கூடுதல் வகுப்பு பொது தேர்வு எழுதபோகும் மாணாக்கர்களுக்கு நடத்தி அவர்களை அதிக மதிப்பெண் பெருவதற்காக திட்டமிட்டனர் கழுகு வகை தனியார் பள்ளிகள். இது குரங்கு வாலில் பற்றிய 'தீ' போல எங்கும் பரவிற்று.

இதை தடுக்க சில அமைப்புகள் முற்பட்டாலும் அவர்களுக்கு தோல்வியே மிஞ்சியது. இந்நிலையில் இப்போது இன்னொரு பூகம்பம் உருவெடுத்து உள்ளது. இப்போது என்றால் தற்சமயம் இல்லை. சில வருடங்களாகவே அங்கும் இங்கும் பரவி வருகிறது. அது எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகள் முதல் கொண்டு பள்ளிகள் கூடுதல் வகுப்பை செயல்படுத்துதல்.

விளையாடி திரியும் குழந்தையிடையே கூடுதல் வகுப்பை செயல்படுத்தி அவர்கள் விளையாடும் நேரத்தை பெருமளவில் குறைக்கிறது சில தனியார் பள்ளிகள். சிறு வயது குழந்தைகள் அதிகமாக பள்ளிக்கு செல்வதை விரும்புவதில்லை. அப்படி விரும்பாத விடயத்தை செய்யும் போது பிஞ்சுகளின் மனது பெருமளவில் பாதிக்கப்படும். இதில் விரும்பாத விடயத்தை கூடுதல் நேரம் எடுத்து செய்தால் அவர்களின் நிலை என்ன ஆகும் என்பதை யோசிக்க முடியுதா.? கடினம் முற்றிலும் கடினம்.

இது மட்டுமல்லாது இன்னொரு விடயம் என்னை பெருமளவில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. என் நண்பர் என்னிடத்தில் இதை சொன்னனார். அவரது சொந்தத்தில் இருக்கும் ஒரு குழந்தை கொஞ்சம் அதிகமாக விளையாட்டு புத்தியோடு இருக்குமாம். எல்லா விடயங்களிலும் கருத்தாக செயல்படும் அக்குழந்தைக்கு படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லாமல் இருந்தது. படிப்பதற்கான பக்குவம் அதன் மனதில் ஏற்படவில்லை. இந்நிலையில் எல்.கே.ஜி., முடித்த அக்குழந்தையினை தினமும் திரப்பிஸ்ட்(therapist)இடம் அழைத்து சென்று ஒரு மாதத்திற்கு பயிற்சி அளித்து அவர்களிடம் இருந்து சான்று பெற்று வரவேண்டும் என்றனராம். அப்படி சான்று பெற்றால் தான் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்வோம் என்று கட்டளையும் கூட. ஒரு நாளைக்கு முக்கால் மணிநேரம் தெரப்பி வகுப்பு. அதற்கு பணமோ 200ரூபாய். இப்படி ஒரு மாதம் முழுக்க செய்தால் நடுத்தர குடும்பம் அவர்கள் பணத்திற்கு எங்கு போவார்கள்.


முதலில் எல்.கே.ஜி., குழந்தைகளுக்கு எப்படி அவர்கள் கூடுதல் வகுப்பு எடுக்கலாம்.? தெரப்பிஸ்ட்டிடம் கண்டிப்பாக அழைத்து செல்லவேண்டும் இல்லை தேர்ச்சி கிடையாது என மிரட்டுவதும் சரியா.?

ஆட்சிக்கு வந்ததும் சமச்சீர் கல்வி தடை, புதிய சட்டமன்றம் நிராகரிப்பு போன்ற பல சாதனைகள் செய்த புதிய தமிழக முதல்வர் ஜெயலலிதா கண்களுக்கு இதுபோன்ற சாதாரண விடயங்களை யாராவது எடுத்து செல்லவேண்டும். இதை நான் சாதாரண விடயம் என்று குறிப்பிட்டது அரசியல் செய்வோர் பாணியில். என்னை பொருத்தமட்டில் இது ஒரு பெரிய பிரச்சனை.

அதுவும் ஒருகாலத்தில் மண்ணில் குச்சி வைத்து நான் எழுத பழகினேன். பின்னர் சிலேட் என்னும் கருந்தட்டில் எழுதினேன். நான் பேனா முனை பிடிக்க ஆறாவது வரவேண்டி இருந்தது. இன்றோ பிஞ்சு கைகளின் கைகளிலும், சட்டை பையிலும் சிந்தும் பேனா இங்க் துளிகள். இது எல்லாம் வளர்கிறோம் என்று சொல்கிறதா.? இல்லை மகிழ்ச்சியை இழக்கிறோம் என்று சொல்கிறதா.?

Comments

 1. எல்லா இடத்திலும் ஒரே பிரச்னை தான்....
  (ஒபாமாவே இதைத்தான் விரும்புறார்/)

  ReplyDelete
 2. தம்பீ
  நீண்ட நாளா என் உள்ளத்தில்
  உறுத்திவரும் செய்தி இன்று பூணைக்கு
  மணி கட்டியுள்ளீர்கள் ஆனால் அரசு
  இதைச் செய்தாலும் பெரும்பாலான
  பெற்றோரே இதைத்தானே விரும்புகிறாரகள்
  ஆகவே இது செவிடன் காதில்
  ஊதிய சங்கு தான்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..