Skip to main content

ஜெயலலிதா கழிக்கும் திருஷ்டி.!!

பெரிதும் பல பல எதிர்ப்பார்ப்புகள் நடுவே கலைஞரை தூக்கி தூர எரிந்துவிட்டு ஜெ.,வை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்க நினைத்தனர் நம் தமிழகத்தின் பதிவுலக அன்பர்கள் குறிப்பிட்ட வகையில் புத்திசாலி மக்கள். ஆனால் இப்போது அது அழகாக தெரியவில்லை. இதுவரை நம் தமிழக முதல்வர் பதவிக்கு மஞ்சள் துண்டான் மூலம் திருஷ்டி கழித்தோம், இப்போது பச்சை சீலக்காரியை பிடித்து தொங்குகிறோம்.

இது ஒரு பக்கம் இருந்து பாத்தா நம்ம கவுண்டர் மாதிரி இல்ல.!?

கர்ம வீரர் என்று சிறந்ததொரு ஆட்சியாளர் இருந்தார் என்று இந்தியாவே ஒரு காலத்தில் வியந்தது, பின்னர் ஒரு நடிகரை ஆட்சியை விட்டு இறக்கவே முடியவில்லை என்று இந்தியாவே ஆச்சர்யம் கொண்டது. இதனால் கண்ணு பட்டுடுச்சு கண்ணு பட்டுடுச்சுனு சொல்வாங்களே அது தான் இப்ப நமக்கு நடந்திருக்குனு முன்னோர்கள் சொன்னாங்க. நம்ம ஆளுக மூடநம்பிக்கைகள்ல கொஞ்சம் தெளிவானவங்க தான் அதுக்காக இந்த தெளிவு ஆகாதுங்கோ.!! அப்போ நடந்த நல்லாட்சிக்கு இன்னுமும் திருஷ்டி கழிக்கிறாங்க போல.

ஒரு காலத்துல ஓ.பன்னீர் செலவம் தமிழகத்தில் ஒரு சிறப்பான ஆட்சி செய்தபோதே திருஷ்டியெல்லாம் போயிடும்னு இருந்தேன். அப்போ இந்தியாவிலே எது சிறப்பான செயல்பாடு கொண்ட நிர்வாகம்னு கணித்த போது ஓ.பன்னி கடைசி இடத்தில் இருந்து நமக்கு பெருமை தேடி தந்தார். அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சியை பன்னி செய்தும் கலைஞர் கடன் வாங்கி, குடும்ப ஆட்சி நடத்தி திருஷ்டி கழிக்க பார்த்தார். அவரது பொதுநல தொண்டு எடுபடாது போக இப்போ ஜெ., அந்த தொண்டை செய்கிறார் போலும்.


என்ன ஒரு சிறப்பான ஆட்சி.!? கண்கள் கலங்குகிறது அவர்களை காணும் போது. தமிழகத்துக்காக மாறி மாறி உழைக்கின்றனர். சரி ஜெ., இப்போது என்ன செய்கிறார். அதே புலம்பல் தாங்க., சட்டமன்றம் மாற்றம், சமச்சீர் கல்வி நிறுத்தம், கலைஞரின் பெயரில் இருந்ததை எல்லாம் பொது என்று மாத்துவது, கலைஞர் நகர் கே.கே., நகராக மீண்டும் உருமார போகிறது, திரும்பவும் ஜே.ஜே.,நகர் உருவாக்கம், மெட்ரோ ரயில் போகி மோனோ ரயில் உருவெடுக்க போகிறது, கூவம் சீறமைப்பு திட்டத்தில் மாற்றம் என்று பல பல அறிய வகை திட்டத்தை அறிமுக படுத்தும் ஜெ.,வை வாழ்த்த எனக்கு வார்த்தைகளை அகராதியில் தேடவேண்டும்.

ஜெ., இதனால் மக்களை மட்டும் தான் கவனிக்கிறார் கட்சியை இல்லை என்று அதிமுக உறுப்பினர் கார்டு வைத்திருப்பவர் யாரும் கவலை கொள்ள வேண்டாம். ஜெ., அவர்களையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார். பல்லு உடைந்த காங்., கமான் கமான் என்று தன் பக்கம் இழுக்க பாக்கிறார். ஆனால் பல்லே இல்லாமல் பெப்பப்பே என்று இருக்கும் திமுக.,வால் காங்கிரசை தார வாத்துவிட்டு இருக்க முடியாது.

சரி இப்போ என்ன.? கண்டிப்பா ஜெ., திருஷ்டி தான் கழிப்பாரு போலிருக்கு.!! இதே இடத்துல கலைஞர் இருந்தார் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருப்பார் என்று தான் சொல்லணும். ஹலோ.! நான் திமுக சப்போர்ட் இல்லீங்க. இந்த இடத்துல கலைஞர் இருந்திருந்தாலும் இதே தான் செஞ்சிருப்பார். ஆனா அதுல ஒரு நேர்த்தி இருக்கும்.


நல்லது செஞ்சு ரொம்ப கலைச்சுப்புட்டாங்களாம்.!!

அவருக்கு போக புடிக்காத சட்டமன்றத்தை,சட்டமன்றத்திற்காக அத்துனை பெரிய இடத்தை வீணாக்குவது எனக்கு பிடிக்கவில்லை. அதை வைத்து அரிய பெரிய அப்படி இப்படி ஏதாவது பில்டப் கொடுத்து வாயடைத்து இருப்பார். அடுத்தது என்ன.? சமச்சீர் கல்வி. அதற்கு என்ன செய்திருப்பார். புத்தகங்கள் அச்சிடுவதில் கோளாறு, ஒத்துக்கொள்ளாத சில மெட்ரிக்., பள்ளிகளுடன் பேச்சுவார்த்தை என்று இழுத்தே இந்த ஆண்டை ஓட்டிவிட்டு அடுத்த ஆண்டு அவருக்கு பிடிக்காத பாகங்களை நீக்கிவிட்டு அச்சடித்திருப்பார். அதே போல் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு விதமாக தந்திரமாக செயல்பட்டிருப்பார்.

இன்னமும் அங்கங்கே சிலர் பொருத்திருந்து பார்ப்போம் என்று கூவிக்கொண்டு திரிகின்றனர். பொருப்பதற்க்கு இனி என்ன இருக்கு.? ஆட்சிக்கு வந்து இன்னும் ஒரு மாதமே ஆகாத நிலையில் எத்தனை கோடிகள் இழப்பு.!? கலைஞர்- காசை வாங்கி கட்டிடமும், பாலமுமா கட்டி கடுப்பேத்துனா, இந்த அம்மா அந்த காசையெல்லாம் சின்னா பின்னமா ஆக்குறாங்க. இவுங்க ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்யவா.? இல்ல கலைஞர எதிர்க்கவா.?

பதவி ஏற்பு விழாவில் நடந்துகொண்டதும், பல வருடங்களாக தங்கத்தை ஒதுக்கி வைத்திருந்து இந்த முறை தங்கத்தை ஏற்றதும், போயஸ் கார்டனில் மக்களை அனுமதித்ததும் என்னையே ஒரு நிமிடம் ஆஹா ஜெ., மாறிவிட்டார் போலும் என்று தோன்றியது. இருந்தாலும் இப்போது அவர் நிரூபிக்கிறார். ஜெ., ஜெ., தான். ஜெ.,க்கு ஒரு ஜே., போடுங்க.!!

ஏ.! ஏ.!! யாருடா அங்க கத்துறது.!? என்னடா சொல்லுறீங்க.? ஏ யாரு.? சொல்லுங்கப்பா.. 

~ ~ ~''எங்களுக்கு நல்லது எப்ப செய்வாங்க.?''~ ~ ~

ஹி ஹி ஹி.. பாத்துகிடுங்க மக்களே.!! இந்த மாதிரி மூடநம்பிக்கைகள நான் ஊக்குவிக்கிறதே இல்ல. கத்துன தம்பி.. நீ இன்னும் வளரணும்.!!!

டிஸ்கி 1: மைனஸ் ஓட்டு போடுறவங்க, போன் பண்ணி மிரட்டுறவங்க, வீட்டுக்கு ஆள் அனுப்புறவங்க ஆல் வெல்கம்டு.!! என் பின்னாடி தமிழகமே இருக்கு.!! ஹி ஹி..(சும்மா சொன்னேங்க.. மைனஸ் ஓட்டு வேணா போட்டுகிடுங்க.. அடுத்த ரெண்டு நோ.. நோ..)

டிஸ்கி 2: எங்கள் தமிழகத்தின் முதல்வர் என்ற உரிமையில் ஆங்காங்கே கலாய்ப்புகள் செய்திருக்கிறேன். ரொம்ப சீரியஸான தொண்டர்கள் யாரும் இதை சீரியஸா எடுத்துகிட வேண்டாம். அவ்வ்வ்..

Comments

 1. Jeya better than kalaingar. But it is not best one.

  ReplyDelete
 2. ம்ம் இருந்து பார்ப்போம் பாஸ் என்ன தான் நடக்குதுன்னு

  ReplyDelete
 3. பார்ப்போம்...இப்பதானே ஆரம்பிச்சிருக்காங்க.......என்ன செய்ராங்கன்னு.....

  ReplyDelete
 4. இதுவரை நம் தமிழக முதல்வர் பதவிக்கு மஞ்சள் துண்டான் மூலம் திருஷ்டி கழித்தோம், இப்போது பச்சை சீலக்காரியை பிடித்து தொங்குகிறோம்.//

  ஹையோ....ஹையோ....என்ன ஒரு தத்துவம்.

  ReplyDelete
 5. இது ஒரு பக்கம் இருந்து பாத்தா நம்ம கவுண்டர் மாதிரி இல்ல.!?//

  உங்க ஊரில் ஊடகச் சுதந்திரம் இருக்கென்பதற்கு இந்தக் கமெண்டே சாட்சி மாப்பு.

  ReplyDelete
 6. அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சியை பன்னி செய்தும் கலைஞர் கடன் வாங்கி, குடும்ப ஆட்சி நடத்தி திருஷ்டி கழிக்க பார்த்தார். அவரது பொதுநல தொண்டு எடுபடாது போக இப்போ ஜெ., அந்த தொண்டை செய்கிறார் போலும்..//

  மாப்பிளை பார்த்தயா...,ரோட்டில் போகும் போது யாராச்சும் அருவாவுடன் நிற்கப் போறாங்க...

  ReplyDelete
 7. இன்னும் காலம் இருக்கு.. என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.


  தமிழ்வாசியில்: அட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்

  ReplyDelete
 8. ராஜ நடராஜன்9 June 2011 at 00:01

  கூர்மதியன்!நீங்களும் நானும் கருணாநிதியையும்,ஜெயலலிதா மொண்டிக்குதிரையையும்,சண்டிக்குதிரையையும் அய்...அய்ன்னு விரட்டுறோம்:)

  நீங்க சொன்ன கலைஞர் நேர்த்தி திட்ட அறிவித்தலோடு சரி!பின் சறுக்கிய குதிரை.

  கொள்கை மாற்றத்திற்கு ஒவ்வொரு சாக்கு சொன்னாலும் கருணாநிதியின் மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கைன்னு இப்ப வாங்கி கட்டிக்கிற போது கூடாநட்பு பற்றி தெரிகிறது.

  செயல் திட்டம் பற்றி இன்னும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்றாக இருந்தாலும் ஜெயலலிதாவின் இன்றைய சட்டசபையில் இலங்கைக்கு பொருளாதார தடை தீர்மானம் வரவேற்க தக்கது.

  தமிழக அரசியலில் கலைஞரை நம்பினோர் கைவிடப்பட்டதும்,எதிர்ப்பு நிலை கொண்ட ஜெயலலிதா ஆதரவு தருவதும் விசித்திரமாக இருக்கிறது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…