காரை பார்க் செய்ய முக்கல் முனகல் இனி இல்லை..


 திருச்சி அண்ணா பல்கலைகழகத்தை சார்ந்த மாணவர்கள் கார் ஓட்டுபவர்களின் முக்கிய பிரச்சனையான பார்க்கிங் ப்ராப்ளத்திற்கு ஒரு முடிவு கொண்டு வந்திருக்கிறார்கள். திருச்சி அண்ணா பல்கலைகழகம் ஆட்டோமொபைல் துறையை சார்ந்த மாணவர்கள் பழநிவேந்தன், கார்த்திகேயன், சேக் முகமது ஹாசிம் ஆகிய மூவரும் கண்டுபிடித்தது தான் 90 degree wheel turning mechanism என்னும் கார். இந்த கார் தான் இக்கால பிரச்சனைக்கு ஒரு தீர்வாக அமைய கூடியது.


எப்படி.? இந்த காரில் 90 டிகிரி திரும்பகூடிய சக்கரம் செயல்பாட்டில் இருப்பதால் இதை எளிதாக எந்தவித நெரிசலிலும் பார்க்கிங் செய்துவிடலாம். இந்த காரில் பேட்டரி, வழிப்படுத்தலான்(sprockets),  ஆறு மோட்டார்கள், மின்னழுத்த அளவி(potentiometer),ப்ராக்ஸிமிட்டி சென்சார்(proximity sensor),செயின் முறை செலுத்தி ஆகியவை முக்கிய உறுப்புகள். முழுக்க முழுக்க பேட்டரிகளாலே இயங்ககூடிய கார்.

இருக்கும் ஆறு மோட்டார்களில் இரண்டு செயின் முறையால் இணைக்கப்பட்டு காரின் முன்னால் இருக்கும் இரு சக்கரங்களிலும், மற்றும் இரண்டு செயின் முறையால் இணைக்கப்பட்டு காரின் பின்னால் இருக்கும் சக்கரங்களிலும் பொருத்தப்பட மீதி இரண்டு மோட்டர்களும் சக்கரங்களை 90 டிகிரிகளுக்கு திருப்புவதற்கு ஏதுவாக பொருத்தப்பட்டுள்ளது.

கட்டுபடுத்தும் பிரிவில் மூன்று பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவை முன்செலுத்தி, பின்செலுத்தி, நிறுத்தம் ஆகிய மூன்றையும் குறிப்பதாகும்.
ஸ்டீயரிங் பகுதி மின்னழுத்த அளவியோடு இணைக்கப்பட்டுள்ளது.  அந்த மின்னழுத்த அளவி, வழிப்படுத்தலானோடு இணைக்கப்பட்டு அதனால் ஓட்டுனர் திருப்பும் திசையில் திரும்ப ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்டீயரிங்கின் கட்டுபாடை ப்ராக்ஸிமிட்டி சென்சார் கவனித்துகொள்கிறது. இந்த ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் செயின் முறை செலுத்தும் அமைப்பின் அருகில் இருக்கிறது. அந்த செயின் முறை செலுத்தும் அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளேட்டுகளை ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் கணித்து ஸ்டீரிங்கை கட்டுப்பாட்டை முடிவுசெய்கிறது.


கார் முன்னே செல்வதும்,பின்னே செல்வதும் அந்த காரின் கட்டுப்பாட்டு பிரிவில் கொடுக்கப்பட்டிருக்கும் முன்செலுத்தி,பின்செலுத்தி ஆகிய பட்டன்களை கொண்டு மாற்றப்படும்.

இப்போ இந்த காரை பார்க் செய்ய பார்க்கிங் என்னும் பட்டனை தட்டினால் இட புறமாக சக்கரத்தை 90 டிகிரி திருப்பும். அதனால் இந்த கார் பக்கவாட்டிலும் செல்வதாக இருக்கிறது. இதன் வேக செலுத்தி MOSFET driver உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நான்கு மோட்டார்களையும் ஒன்றாக கட்டுபடுத்த உதவுகிறது.

இந்த காரின் முக்கிய அம்சங்களாக ஹைட்ராலிக் ஸ்டீயரிங்கை விட இதில் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக்கல் ஸ்டியரிங் குறைந்த சக்தியை உபயோகிக்கும். வீச்சுகள்(emission) இருக்காது. இதை பற்றி உருவாக்கிய மாணவர்களில் ஒருவரான பழநிவேந்தன் குறிப்பிடுகையில்,கூட்டமான இடங்களில் சுலபமாக நுழைந்து வரவும், சுலபமாக பார்க் செய்யவும் அதுமட்டும் இல்லாம பாதுகாப்புக்கான ராணுவங்களிலும் பயன்படுத்தலாம் என்றார்.

டிஸ்கி: இது இறுதி ஆண்டு ப்ராஜெக்ட்டுக்காக இம்மாணவர்கள் செய்தது. இதேபோல் முன்னரே நாம் பார்த்திருந்தாலும் இது இயல்பாக மற்றும் ஊக்குவிக்ககூடிய ஒன்று தான். இது போன்ற செய்கைகள் அவர்களை ஊக்குவிக்க கூடும். 


அன்புடன்,
தம்பி கூர்மதியன்

Comments

 1. உண்மைதான் நண்பரே.. பலரின் பாராட்டு இவர்களுக்கு மேலும் பல கண்டுபிடிப்புகளை காண தூண்டும்..

  ReplyDelete
 2. நல்ல முயற்சி நண்பரே இவர்களின் கண்டுபிடிப்புகள் அரசியல் கலக்காமல் நடைமுறைக்கு பயன் படுத்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. நல்ல முயற்சி கூர்மதியன் உங்கள் தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. நல்லமுயற்சி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. வரவேற்கப் பட வேண்டிய விடயம் மாப்ளே,
  உள்ளூர் மாணவர்களின் முயற்சிக்கு அரசும், அமைப்புக்களும் ஆதரவு வழங்குவதன் மூலம் தான் இத்தகைய மாணவர்கள் பலரை உருவாக்க முடியும்.

  ReplyDelete
 6. தம்பீ கூர்மதி
  ஆக்கம் கண்ட மாணவரை
  ஊக்கப்படுத்தும் உங்கள் பதிவு. நன்றி
  வாழ்க மாணவர்கள்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 7. எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்!நல்ல முயற்சிகளை வரவேற்பது எமது கடமை!

  ReplyDelete
 8. மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. @கருண்: உண்மை தான் நண்பரே.! நன்றி

  ReplyDelete
 10. உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.  Share

  ReplyDelete
 11. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. @தினேஷ்: ஏடாகூட அரசியல் இல்லாமல் இந்தியாவே இல்லையே தினேஷ்.. இருந்தாலும் நன்றி..

  ReplyDelete
 13. @ராஜா:மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 14. @இராஜராஜேஷ்வரி: நன்றிங்க

  ReplyDelete
 15. @நிரூ: கண்டிப்பாக மாப்ள.. ஆதரவு தானே கொடுத்திடுவோம்.. நன்றி

  ReplyDelete
 16. @இராமாநுசம்: மிக்க நன்றி அய்யா..

  ReplyDelete
 17. @ரஜீ: உண்மை தான் ரஜீ.. மிக்க நன்றி

  ReplyDelete
 18. @கருணாகரசு: நன்றி நண்பரே.!!

  ReplyDelete
 19. @குமார்: நன்றி குமார்..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி