Skip to main content

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!



வர வர காலத்துல செல்ஃப் ஸ்டார்ட் இல்லாம வண்டிகள் இல்லாமலே போயிடுச்சு. சிக்னல்ல வண்டி நிக்கும் போது பலர் வண்டிய நிறுத்துறதுக்கும் இந்த செல்ஃப் ஸ்டார்ட்டின் வருகை ஒரு முக்கிய காரணம் தான். சிக்னல் பச்சை விளக்கு எரிஞ்சதும் சல்லுனு செல்ஃப் அடிச்சு பறக்குறவங்க அடுத்த கொஞ்ச நாள்ல நிக்குறது மெக்கானிக் கடை முன்னடி தான்.



செல்ஃப் வண்டி எல்லாமே கொஞ்சம் மக்கர் பண்ண கூடியதுதான். ஆனா அத கவனிக்கிற விதத்துல கவனிச்சா அதைவிட நமக்கு பெஸ்ட்னு எதுவுமே கிடையாதுன்னு சொல்லலாம். ஆனா அதிகமா செல்ஃப்ல இடைஞ்சல் பண்ண கூடிய வண்டினு பாத்தா அது ஸ்கூட்டி பெப் வண்டி தான்.

முக்கியமா செல்ஃப் வண்டிகள்ல கவனிக்க வேண்டிய விசயங்கள்னா எந்த சமயத்துல நாம செல்ஃப் அடிக்கிறோம், பேட்டரி எப்படி மெயின்டெய்ன் பண்றோம் அப்படிங்கறது தான். முதல்ல பெரும்பானவர்களுக்கு தெரிஞ்ச ஒண்ணு. அது காலைல வண்டிய எடுத்து செல்ஃப் தட்டுவது ரொம்ப தப்பு. ரொம்ப நேரம் வண்டி ஓடாம இருக்கும் போது இன்ஜின் கூலா இருக்கும் அந்த மாதிரி சமயத்துல வண்டியில செல்ஃப் தட்டுனா அவ்வளவு சீக்கிரம் பர்ன் ஆகாது. அதிகமா எனர்ஜி உரிஞ்சி பேட்டரி வேஸ்ட் ஆயிடும். இதுவே அந்த சமயத்துல கிக் யூஸ் பண்ணுனீங்கனா ஹீட் இக்னீஷன் இன்னும் அதிகமா கிடைக்கும். அதனால பேட்டரி வேஸ்ட் ஆகாது.


சின்ன பசங்கள முன்னாடி உட்கார வச்சிருக்கும் போதும் அவங்க சும்மா இல்லாம செல்ஃப் சுவிட்ச போட்டு அமுக்கிகிட்டே இருப்பாங்க. சில பெரியவங்களும் இப்படி செய்வதுண்டு. அப்படி செய்யும்போது செல்ஃப் மோட்டார் அதிகமா வேலசெஞ்சு காயில் சீக்கிரமா போயிடும். சொல்ல போனா நம்ம வீட்டுல ஓடுற ஃபேன்ல எப்படி அதிக வோல்டேஜ் ஏறுனா காயில் போயிடுதோ அந்த மாதிரி தான். ஒரு முறை ஜென்டிலா அமுக்கிட்டாலே அது ஸ்டார்ட் ஆகிடும்.

ஏற்கனவே சொன்னது போல ஸ்கூட்டி பெப் வண்டி ஓட்டுறவங்க ரொம்ப கவனமா இருக்கணும். அதுல ப்ரேக்குக்கும்,செல்ஃப் ஸ்விட்ச்சுக்கும் ஒரு ப்ரஷ் போன்ற ஒரு இணைப்பு இருக்கும். அது வீணாயிடுச்சுனா அது ரெண்டும் உரசி செல்ஃப் ஒர்க் ஆகாமலே போயிடும். அது வீணாகாம இருக்க வண்டி ஓனர்கள் அவங்களே இறங்கி வேலை செய்யாம இருந்தாலே போதும்.

முன்னடி இருந்த வண்டிகள் எல்லாம் பழைய டெக்னிக் ஈசியா புரிஞ்சிடும். ஆனா இப்போ இருக்குறது எல்லாம் எலக்ட்ரானிக். புரியிறது கஷ்டம். அதனால மக்கள் அவங்களே வண்டிய சரி பாக்காம எதுவாயிருந்தாலும் மெக்கானிக் பேச்சு படி நடந்தா சரியாகும். வண்டி ஒரு நேரம் ஸ்டார்ட் ஆகாது. அந்த சமயத்துல அவங்களே கயிட்டி ஏதாவது ரெண்டு ஒயர ஜாயின்ட் பண்ணி விட்டுடுவாங்க. அப்படி பண்ணும் போது அப்போதைக்கு வண்டி ஸ்டார்ட் ஆகும் ஆனா அதுக்கு பின்னால பெரிய ப்ராப்ளம் ஆகி போகும்.


அடுத்து வண்டியில செல்ஃப் மக்கரே பண்ணாம இருக்க முக்கியமா செக் பண்ண வேண்டியது பேட்டரிகள. வழக்கமா எல்லா வண்டியினத்தவருக்கும் பேட்டரி ஒரே மாதிரி இருக்கும்னு சொல்லமுடியாது. ஆளாளுக்கு ஒரு ஒரு மாதிரி யூஸ் பண்ணுவாங்க. அப்படி பண்ணும்போது வண்டி ஸ்பீடோமீட்டர்கிட்ட இருக்குற பச்ச லைட் ஒரு மாதிரி டிம்மா எரியும். ஹார்ன் அடிக்கும்போது அப்படியே அமிஞ்சு திரும்ப எரியும். அந்த மாதிரி சமயத்துல பட்டுனு போய் பேட்டரிய செக் பண்ணனும். இது அதிகமா வண்டி ஓட்டுறவங்களுக்கு மட்டும் தான். ஒரு சில பேர் தினமும் 5 இல்ல 6 கி.மீ., மட்டும் தான் வண்டி ஓட்டுவாங்க. அவங்க வண்டி பேட்டரி தானா சார்ஜ் ஆகாது. அந்த மாதிரி ஓட்டுறவங்க அவங்க வண்டிய கண்டிப்பா மாதம் ஒரு முறை செக் பண்ணனும்.

பேட்டரிக்கான டிஸ்டில்லுடு வாட்டர்(distilled water) மாதம் ஒரு முறை செக் பண்றது நல்லது. அப்படி அதுல வாட்டர் தீந்து போனா பேட்டரி பட்டை அதிகமா உரிஞ்சி சீக்கிரமா ட்ரை ஆகிடும். இதெல்லாம் பண்ணினாலே வண்டியில செல்ஃப் பக்காவா இருக்கும். அதுமட்டுமில்லாம டிஜிட்டல் மீட்டர்கள் உள்ள வண்டிகள வீட்டுல வாட்டர் வாஷ் பண்றது பெரும் ஆபத்துன்னும் மக்கள் புரிஞ்சிகிடணும். 



Comments

  1. நல்ல ஐடியா தலைவா. என்னோட pep+ உங்க தகவல்படி பாத்துக்கிறேன்

    ReplyDelete
  2. அவசியமான தகவல்கள் கூர்! பைக் வைத்திருப்போரில் எத்தனை பேர் அதை பற்றி சரியாக தெரிந்து வைத்திருக்கிறோம்? உங்கள் பதிவு நல்ல பல விஷயங்களை எடுத்துக் கூறியுள்ளது

    ReplyDelete
  3. அவசியமான தகவல்கள்

    ReplyDelete
  4. உபயோகமான தகவல்கள் .

    ReplyDelete
  5. பாஸ், பைக் வைத்திருப்போருக்கேற்ற பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்திருக்கிறீங்க..
    இது பற்றி மேலதிகமா சொல்ல முடியலை.
    காரணம் பைக் பற்றித் தெரிந்தால் தானே சொல்ல முடியும்?
    ஹி...ஹி...

    ReplyDelete
  6. கலக்கல் பக்கங்கள்.. பயனுள்ள தகவல்..

    ReplyDelete
  7. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete
  8. //எனர்ஜி உரிஞ்சி//

    உறிஞ்சி

    பிழை இன்றி எழுதுங்கள்.

    ReplyDelete
  9. நல்ல பயனுள்ள தகவல் நண்பா

    ReplyDelete
  10. நல்ல பதிவு கூர்........ இதுல காமெடி பண்றதுக்கு ஒண்ணுமில்ல...ஹி..ஹி..!

    ReplyDelete
  11. நல்ல தகவல்கள். ஆனால், என் மண்டைக்கு தான் கொஞ்சம் விளங்கவில்லை. இதெல்லாம் ஆண்கள் சமாச்சாரமோ???

    ReplyDelete
  12. நல்ல பதிவு

    ReplyDelete
  13. நல்ல பகிர்வு.. நன்றி...

    வலைப்பக்கத்தின் வடிவமைப்பு வாசிக்க மிகவும் இலகுவாய் உள்ளது... நல்ல டெம்ப்ளேட்...

    ReplyDelete
  14. நேற்று தான் சுசுகி ஆச்செச்ஸ் 125 CC Self Starter வண்டி வாங்கினேன்

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி
    கணேசன்/கோயம்புத்தூர்

    ReplyDelete
  15. மிகவும் பயன்னுள்ள தகவல்!. பகிர்ந்தமைக்கு நன்றி


    நன்றி,
    ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

    ReplyDelete
  16. நன்றி நண்பரே. மிகவும் பயனுள்ள தகவல். நீங்கள் சொல்வது அனைத்தும் சாத்தியமே. நான் எனது ஹீரோ ஹோண்டா கிளாமர் பைக்கில் மிகச்சரியாக 28மாதங்கள் பேட்டரியை மாற்றாமல் பயன்படுத்தியிருக்கிறேன். காலையில் கிக் ஸ்டார்ட்,6மணிநேரத்திற்கும் மேல் பயன்படுத்தப்படா விட்டாலும், தேவையில்லாமல் பாஸ் லைட் பயன்படுத்துவதில்லை (பாஸ் லைட்டுக்கு பாட்டரி டைரக்ட்) சிக்னல்களில் ஹெட்லைட் ஆஃப் செய்வது, எக்ஸ்ட்ரா ஹார்ன் தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்துவது, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பாட்டரி ஆசிட், வாட்டர் செக்கப் என பரமரித்ததில் 28மாதங்கள்
    வரை பாட்டரி சிறப்பாக செயல்திறன் காண்பித்தது.

    ReplyDelete
  17. தம்பி... அருமையான பகிர்வு.

    ReplyDelete
  18. அன்பானவரே, இப்போது தங்கள் வலைபதிவின் வாசகர்கள் தமிழிலேயே கமெண்ட் இட வசதியாக பிளாக்கருக்காக தமிழ் யூனிகோடு வந்துவிட்டது, இதைப் பயன்படுத்துவதன் மூலம் அதிக மறுமொழிகளை தமிழில் பெறமுடியும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  19. நானும் பெப் பிளஸ் தான் வச்சிருக்கேன்...:(( இதே மண்டையடி தான் எனக்கும்..:((( நல்ல டிப்ஸ்..நன்றி கூர்...

    ReplyDelete
  20. @ஜெய்: பாத்துக்கோங்க பாத்துக்கோங்க.. நன்றி..

    ReplyDelete
  21. @ரஜீ:மிக்க நன்றி ரஜீ..

    ReplyDelete
  22. @எல் கே: நன்றி அண்ணா..

    ReplyDelete
  23. @இராஜராஜேஷ்வரி: மிக்க நன்றி

    ReplyDelete
  24. @நாய்க்குட்டி மனசு: ஆமாம் மா.. நன்றி

    ReplyDelete
  25. @நிரூ: பைக் பத்தியே தெரியாத ஒரு மனிதரா.. ஹி ஹி.. உங்களுக்கு பைக் பத்தி தெரியாது ஆனா உங்களுக்கு தெரிந்த எதுவும் எனக்கு தெரியாது.. ஹி ஹி.. நன்றி..

    ReplyDelete
  26. @சிபி: ஹி ஹி.. பாஸ்.. இதையும் விட்டு வைக்க மாட்டீங்களா.!? சுட்டி விகடன் கூட படிப்பீகளோ.!?

    ReplyDelete
  27. @கருணா: ஹா ஹா.. உபயோகமா இருந்திருக்கும்னு நம்புறேன்.. நன்றி

    ReplyDelete
  28. @தமிழ் ஈட்டி: அவசரத்தில் எழுதும் போது அப்படி வந்திருக்கும்.. இருந்தாலும் தவறு தவறு தான்.. மன்னியுங்கள்.. இனி தவறில்லாமல் எழுத முயற்சிக்கிறேன்.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  29. @பன்னி: இல்லீனா மட்டும் காமெடி பண்ணிட்டு தான் போய்டுவீங்க.. போங்க பாஸ்.. நன்றி..

    ReplyDelete
  30. @வானதி:அட என்னங்க.. எதுவுமே ஆண்கள் சமாச்சாரம் கிடையாது.. எல்லாமே எல்லாருக்கும் தான்.. இது நல்ல தகவல் என்ற அளவுக்கு உங்களுக்கு புரிந்திருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.. ஹா ஹா.. நன்றி..

    ReplyDelete
  31. @கூல்: மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  32. @சிவகாமி கணேசன்: நல்லா மெயிடெயின் பண்ணுங்க.. கண்டிப்பா நல்ல வண்டி தான்..

    ReplyDelete
  33. @சாஜஹான்: உங்களை போன்ற ஆட்களை காண்பது அரிது.. இவ்வளவு பேசும் நானே என்னுடைய வண்டியை சரியாக பராமரிக்க முடியவில்ல..யு ஆர் க்ரேட்.. நன்றி

    ReplyDelete
  34. @ப்ரகாஷ்: நன்றி அண்ணா..

    ReplyDelete
  35. @ஆனந்தி: ஹி ஹி.. பெப் +.. ஹா ஹா.. ஸ்மால் ஸ்மால் வண்டி.. இருப்பதிலே அதிக ப்ராப்ளம் பண்ணும் வண்டியாக அனைவரும் கருதுவது.. ஆனால், பராமரிக்கும் படி பராமரித்தால் குறைதூர பயணத்துக்கு மிகவும் ஏதுவான வண்டி.. நன்றி ஆனந்தி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…