ஜெயலலிதாவின் கையிற்கு காத்திருக்கும் விலங்கு!

அடடா, தேர்தல் முடிஞ்சு இன்னைக்கு ரெண்டு மாசம் ஆச்சு. நம்ம தலைவியோ பொறுமையின் சிகரம் எனும் ரேஞ்சில் பதவியேற்ற காலம் தொடக்கம் நொண்டிச் சாட்டுச் சொல்லி மக்களோடை பணிகளைத் தாமதப்படுத்திக் கொண்டிருக்கிறா.

இதே வேலையைத் தான் முன்னாடி கலைஞர் ஜி அவர்களும் பண்ணினாரு,
இப்போ பதவியேற்ற ஒரு மாத காலத்திற்குள் ஜெயலலிதாவின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது மக்களுக்கு ஆத்திரத்துடனும், கோபத்துடனும் கூடிய விசனம் தான் ஏற்படுகிறது.

கலைஞரை ஆட்சியை விட்டுத் தூக்கனும் என்ற நோக்கத்திற்காகத் தான் ஜெயலலிதாவை இந்த முறை எலக்சனில தெரிவு செய்தார்களே தவிர, மக்களுக்குத் நன்றாகவே தெரியும், தலைவி வந்தாலும் தலைவர் முன்னாடி செஞ்ச அதே பணிகளைத் தான் பண்ணுவாங்க என்று. இப்போ சமச்சீர் கல்வியைப் புறக்கணிக்கும் நோக்கில் நம்ம தலைவி பல கோடி ரூபாகளைச் செலவழித்து பாட நூல்களை அச்சடிக்க முயற்சி தொடங்கும் போது, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவினை சமச்சீர் கல்வி மாற்றத்திற்கு வழங்கியிருக்கிறது. இந் நிலையில் ஆப்பிளுத்த குரங்காக இப்போ தலைவி!

இது தான் முன்னாடியே யோசிக்கனும் என்று சொல்வது. தலைவி இந்த ரேஞ்சில போய்க்கிட்டிருந்தா நம்ம தமிழ் நாட்டோட அடுத்த முதல்வர் விஜயகாந்த் தான் என்பதில் சந்தேகமே இல்ல பாருங்க.

அப்புறம் என்ன பார்க்கிறீங்க, நம்ம சிந்தனையில உதித்த விடயங்களை டுவிட்ஸ் ஆக்கியிருக்கேன். உங்க கருத்துக்களையும் சொல்லிட்டுப் போகலாமில்ல.

ஆட்சிக்கு வந்ததும் மக்கள் மனம் மறந்து போகும்
அம்மாவை நம்பியதன் பலன் இப்போ தெரிஞ்சிருக்கும்!

அடுத்த தேர்தலில காத்திருக்கு விலங்கு
ஜெயா பணி செய்யலைன்னா
வீட்டிற்கு அனுப்புவோம் என்று முழங்கு!

Comments

 1. ///
  அடுத்த தேர்தலில காத்திருக்கு விலங்கு
  ஜெயா பணி செய்யலைன்னா
  வீட்டிற்கு அனுப்புவோம் என்று முழங்கு!
  ///

  ரொம்ப சரி

  ReplyDelete
 2. என்னது அம்மாவும் மாறிட்டாங்களா? அப்போ அங்க என்னதான் நடக்குது?

  ReplyDelete
 3. மன்னிக்க வேணும் படம் அருமையா இருக்கு மத்த விசயத்த நா படிக்கவே இல்லீங்க சொன்னா நம்பணும்.ஓக்கேவா!....

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி