ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்.!!

உலகத்தில் சந்திக்க வேண்டிய பல பல சமாச்சாரங்களுக்கு இடையே நம்மை நோகாமல் வழிநடத்தி போவது எது என்று கேட்டால் பட்டென சொல்லலாம் காதல் என்று. காதல் மட்டும் தானா.!? அதை விட ஒரு பெரிய விசயம் இருக்கிறது. ஆம். அது பக்தி.!!


பக்தி-அப்படீனா என்ன.!? இங்கிருக்கும் ஆன்மீகவாதிகள் என்னைவிட இதில் தலை சிறந்தவர்கள். அதனால் அவர்களுக்கு நான் இதை சொல்லி புரியவைக்க தேவையில்லை. நாத்திகவாதிகள் இதை பற்றி தெரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள். சரி..!! இப்போது எதற்கு இதெல்லாம்.!?

சமீபத்தில் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக திருப்பதி சென்றிருந்தேன். என்னிடம் நெருங்கி பழகுபவர்களுக்கு என்னை பற்றி தெரியும். பொதுவாக கோவில்களுக்கு செல்ல நான் விரும்புவேன். ஆனால் உருவ வழிபாடை விரும்பாதவன் நான். சடங்கு, சம்பிரதாயத்தை விரும்பாத என்னை நாத்திகன் என்று அழைப்பர். ஆனால் நான் அதிகமாக எழுதியது கோவில்களை பற்றி, நான் ஆராயும் தலைப்புகளில் ஒன்று-கோவில், பக்திக்கு அடையாலமாக சொல்லப்படும் ருத்திராட்சம் என் கழுத்தை 15 வருடமாக நீங்காமல் பிடித்து இருக்கிறது, சுற்றுலா என்று எங்கு சென்றாலும் அது கோவிலாக தான் இருக்கும்.

திருப்பதி ஏழுமலையான் நம் அனைவருக்கும் தெரிந்தவரே. ஏழுமலையானை தரிசிக்க கோடான கோடி மக்கள் பெருகி கொண்டே வருகின்றனர். அவ்வாறு பக்தி பெருகி வரும் மக்கள் கூட்டத்தை அடக்க பல விதிமுறைகளையும், பல யுக்திகளையும் கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு ஒன்று, வயதானவர்களும் உடம்புக்கு முடியாதவர்களும் தனியாக கூட்ட நெரிசலின்று சென்று தரிசிக்க ஏதுவாய் வழிவகுக்கப்பட்ட விதி. இவ்விதிப்படி தாங்கள் சொல்லும் காரணத்திற்கு சான்று ஒன்றை சம்பந்தபட்டவர் சமர்பிக்க வேண்டும்.


இவ்வாறு தரிசிக்க செல்லும் பக்தர்களை அவர்கள் கொண்டு வரும் சான்றை சரிபார்த்து உள்ளே அனுமதிப்பர் காவலாளிகள். அப்படியானவர்களை சரிபார்த்து அவர்களின் சான்று ஏற்றுக்கொள்ள தகுந்ததன்று என்று தெரியவரும்போது அவர்கள் மரியாதை அற்று வெளியே தள்ள படுகின்றனர். மேலும் முரண்டு பிடிக்கும் மாற்று திறனாளி ஆண்களுக்கு அடி விழுந்ததை கண்களிலும் கண்டேன். மானம் இழந்து, மரியாதை இழந்து, கண்டவனிடம் அடி வாங்கி, அசிங்கபட்டு அந்த இடத்திற்கு தான் செல்லவேண்டும் என யார் கட்டளையிட்டார்.!?

இட்டு இடுக்கு முட்டு முடிச்சு அவிழ்ந்து அந்த ஒற்றை தங்க கோபரத்தின் உள்ளே நுழைந்ததும் ''ஜருகண்டி ஜருகண்டி'' என்று ஒரு நிமிட தரிசனத்திற்கு கூட விடாமல் தள்ளுகின்றனர்.

அன்பான ஆன்மீகவாதிகளே! இதை தான் நீங்கள் விரும்புகிறீர்களா.!!? உள்ளார்ந்து நோக்கும் ஒவ்வொரு சிறு குழந்தை கூட சொல்லுமே கடவுள் தூணியிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று. அது ஏன் உங்கள் செவிகளை அடையளையா.!? இல்லை உங்கள் பக்தி உங்களை தடுக்கிறதா.!?

கூட்ட நெரிசலை பார்த்து நான் பயந்தேன். என்னால் அதிக நாள் விடுப்பில் இருக்கமுடியாத காரணத்தால் என் பெற்றோரை இலவச தரிசனத்தில் இருக்க சொல்லிவிட்டு நான் தரிசனம் இல்லாமல் புறப்படலாம் என்றிருந்தேன். இதுவரை என் வேலை நிமித்தமாக எக்கசக்க கோயில் பயணம் செய்திருக்கிறேன். இதுவரை எந்த கோவிலிலும் உருவ வழிபாடு நான் மேற்கொண்டதில்லை. இந்த நெரிசலில் சென்று பத்து மணிநேரத்துக்கு மேல் நின்று வழிபடாமல் இருப்பது தான் நான் காணுவதா.!? எதற்காக இது என்று நான் கிளம்பலாம் என்று இருக்கும்போது வீட்டினர் சிறப்பு தரிசனம் என்று 300 ரூபாய் கொடுத்து சீக்கிரமாக சென்றிடலாம் என வற்புறுத்தி அழைத்து சென்றுவிட்டனர். வழிப்பாட்டில் விருப்பம் இல்லாத என்னை வற்புறுத்தி அழைத்து சென்றது வீண் தானே.!!


இவர்கள் மட்டுமல்ல.!! ஊரில் இருக்கும் பல ஆன்மீக வாதிகள் நாத்திகர் மேலும், நாத்திகவாதிகள் ஆன்மீகர் மீதும் தங்கள் கருத்தை திணிக்க நினைக்கின்றனர்.

ஆனால், இங்கு நாம் ஒன்று கவனிக்கவேண்டும். திருமலையில் சுத்தத்திற்கு பஞ்சமே இல்லை. காரணம் மனிதர்களின் கடவுள் நம்பிக்கை அங்கே மேலோங்கி நிற்கிறது. கடவுள் நம்பிக்கை என்று மனதில் கொண்டு அவ்வளவு சுத்தம், அவ்வளவு அற்புதமான செயல்பாடு அங்கே! அங்கு உள்ள மக்களுக்கு கடவுள் மீது அதீத பக்தி என்பதற்கு NTR-ஐ விடுத்து நான் வேறு யாரை எடுத்துக்காட்டுக்காக சொல்ல முடியும்.!?

சரி.. இப்போ என்ன.!? இது ஒரு சுதந்திரமான தேசம். அவர் அவர்களுக்கு அவரவர் உரிமைகள், எண்ணங்கள் இருக்கிறது. இதை தான் செய்ய வேண்டும் என்னும் நிர்பந்தம் யாருக்கும் இல்லை. விருப்பமே இல்லாத ஒருவனை வற்புறுத்தி அந்த ஒற்றை விநாடி காட்சிக்காக நிற்க வைப்பதில் என்ன லாபம் கண்டிடமுடியும்.!? அல்ல, கடவுள் மீது அதீத நம்பிக்கை கொண்டவனிடம் கடவுளை எதிர்த்து பேசி, ஏலனம் செய்வதால் தான் என்ன உபயோகம்.!?

நாத்திகனின் எண்ணம் உருவ வழிபாடை எதிர்ப்பதும், மூடநம்பிக்கைகளை அழிப்பதுமே.! தங்களை தாங்களே நாத்திகன் என சொல்லித்திரிபவர் அவர்களின் கருத்தை ஆன்மீகவாதிகளிடத்து திணிக்காமல் இருப்பதே நல்லது. ஆனால், நாத்திகர்களைவிட ஆன்மீகவாதிகளே இங்கு அதிகம். அவர்களில் பலர் நாத்திகர்களை ஒரு மனிதர்களாக கூட நினைக்கமாட்டர். தமக்கு தான் எல்லாம் தெரிந்ததாகவும், நாத்திகம் பேசுபவன் முட்டாள் என்பது போலும் அவர்களின் பேச்சு இருக்கும்.!!

நான் என் எழுத்துக்கள் மூலம் இதுவரை பல கோவில்களுக்கு பலரை அழைத்து சென்றிருக்கிறேன்.!! எனக்கு பழங்கால கோயில்களோடு ஒரு தீராத ஆவல் உண்டு. அதனால் நாத்திகம்-ஆன்மீகம் இரண்டுமே வேறு வேறு மன ஓட்டம். யாரும் யாரையும் ஏத்தியோ, தாழ்த்தியோ எண்ணவேண்டாம், பேச வேண்டாம். நாம் நாமாக இருப்போம். நமக்கு வேண்டும் நேரத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.!!

''20 வயசுல கம்யுனிசம் பேசாதவனும்.. 50 வயசுல ஆன்மீகம் பேசாதவனும் உருப்புடமாட்டான்''- யாரோ சொன்னதா ஞாபகம். ஹி ஹி..


---கொஞ்ச நாளா மனசு சரியில்ல என்ன வென்றே தெரில.!! வலையுலகத்தை விட்டு தள்ளி இருக்கலாம்னு முடிவு பண்ணியி வலையுலக பக்கமே வரல. தப்பா நினைக்காதீங்க மக்கா.!! இன்னும் முழுசா மனசு சரியாகல. கொஞ்ச நாள்ல திரும்ப நல்ல ஃபார்ம்ல வர்றேன்.!!---


அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. ராஜ நடராஜன்21 June 2011 at 16:48

  பின்னூட்டம் போடலாமுன்னு வந்தா கருன் கூட கோர்த்து விட்டுடீங்களே!அவரும் என்னை மாதிரியே பதிவு போட்டிருக்கார்ங்கிறது 1 hour ago பேர் படிச்சுத்தான் தெரிஞ்சது.

  எனக்கும் மனசே சரியில்ல.நான் அப்புறமா வாரேன்:)

  ReplyDelete
 2. ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்.!!

  உனக்கென்ன பீலிங்க்ஸ் சகோ...

  ReplyDelete
 3. காதல் மட்டும் தானா.!? அதை விட ஒரு பெரிய விசயம் இருக்கிறது. ஆம். அது பக்தி.!!


  ஹோஓஓஓஓஓ...வெங்கட் ரமணா. ஏழு குண்டலவாளா, கோவிந்தா, கோவிந்தா..பக்தி பக்தி

  ReplyDelete
 4. பக்தி-அப்படீனா என்ன.!? இங்கிருக்கும் ஆன்மீகவாதிகள் என்னைவிட இதில் தலை சிறந்தவர்கள்.

  என்னாமா எஸ்கேப் ஆகுற...

  ReplyDelete
 5. அதை விட ஒரு பெரிய விசயம் இருக்கிறது. ஆம். அது பக்தி.!!//

  அப்படியா மச்சி...???

  ReplyDelete
 6. ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்.!! ///

  கரெட்டா சொன்ன மச்சி ஆமா என்னா பீலிங்க்ஸ்...???

  ReplyDelete
 7. சமீபத்தில் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக திருப்பதி சென்றிருந்தேன்.

  ஐயோ பாவம்...மனதில பாதிப்பாமே, சௌந்தர் உனக்கு இத பத்தி ஏதாவது தெரியுமா

  ReplyDelete
 8. ''20 வயசுல கம்யுனிசம் பேசாதவனும்.. 50 வயசுல ஆன்மீகம் பேசாதவனும் உருப்புடமாட்டான்''-///

  ஒத்துக்குறேன் உனக்கு 50 வயசு ஆகுதுன்னு.... !!!

  ReplyDelete
 9. ரேவா said...
  சமீபத்தில் என் மனதில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக திருப்பதி சென்றிருந்தேன்.

  ஐயோ பாவம்...மனதில பாதிப்பாமே, சௌந்தர் உனக்கு இத பத்தி ஏதாவது தெரியுமா///


  தெரியும் தெரியும் :)) நான் தான் அவனை திட்டிடேன் ஒழுங்கா வேலைக்கு போடா சொன்னேன் அதான்

  ReplyDelete
 10. இவ்விதிப்படி தாங்கள் சொல்லும் காரணத்திற்கு சான்று ஒன்றை சம்பந்தபட்டவர் சமர்பிக்க வேண்டும்.

  இப்படி சான்றுகள் சமர்பித்து தான் சாமியக் கும்பிடனுமா?....அப்போ அன்பே கடவுள்னு சொல்லுறாங்களே?....

  ReplyDelete
 11. முரண்டு பிடிக்கும் மாற்று திறனாளி ஆண்களுக்கு அடி விழுந்ததை கண்களிலும் கண்டேன். மானம் இழந்து, மரியாதை இழந்து, கண்டவனிடம் அடி வாங்கி, அசிங்கபட்டு அந்த இடத்திற்கு தான் செல்லவேண்டும் என யார் கட்டளையிட்டார்.!?

  உண்மை தான்...பக்தியில் லயிக்கும் மனிதர்கள் இவர்கள்...நானும் இது போன்ற சம்பவங்களை கண்டு இருக்கிறேன் சகோ...

  ReplyDelete
 12. நான் என் எழுத்துக்கள் மூலம் இதுவரை பல கோவில்களுக்கு பலரை அழைத்து சென்றிருக்கிறேன்.!!///


  சொல்லவே இல்ல மச்சி அவ்வளவு நல்லவனா நீ...???

  ReplyDelete
 13. உள்ளார்ந்து நோக்கும் ஒவ்வொரு சிறு குழந்தை கூட சொல்லுமே கடவுள் தூணியிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று. அது ஏன் உங்கள் செவிகளை அடையளையா.!? இல்லை உங்கள் பக்தி உங்களை தடுக்கிறதா.!?

  சரியான கேள்வி...காற்று எல்லா இடத்திலும் இருக்கும் போது, ஏன் மின் விசிறியின் உதவியை நாடுகின்றோம்...அது போல தான் கடவுளும்னு, யாராவது இந்த பழைய forward மெசேஜ் சொல்லுறதுக்கு முன்னாடி நானே இத சொல்லிடுறேன்..

  ReplyDelete
 14. மனசு சரியில்லையா? என்னாதிது ? கவலைப்படாதீங்க அடுத்த பதிவர் சந்திப்புக்கு வந்திரலாம்

  ReplyDelete
 15. சிறப்பு தரிசனம் என்று 300 ரூபாய் கொடுத்து சீக்கிரமாக சென்றிடலாம் என வற்புறுத்தி அழைத்து சென்றுவிட்டனர்.

  பணத்திற்கு இருக்கும் மதிப்பு, மனிதர்க்கு இல்லையே

  ReplyDelete
 16. எனக்கு பழங்கால கோயில்களோடு ஒரு தீராத ஆவல் உண்டு. அதனால் நாத்திகம்-ஆன்மீகம் இரண்டுமே வேறு வேறு மன ஓட்டம். யாரும் யாரையும் ஏத்தியோ, தாழ்த்தியோ எண்ணவேண்டாம், பேச வேண்டாம். நாம் நாமாக இருப்போம். நமக்கு வேண்டும் நேரத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.!!

  சரியா சொல்லி இருக்க கூர்...நமக்கு வேண்டும் நேரத்தில் மாற்றங்கள் வந்து சேரும்.!!super

  ReplyDelete
 17. கொஞ்ச நாளா மனசு சரியில்ல என்ன வென்றே தெரில.!! வலையுலகத்தை விட்டு தள்ளி இருக்கலாம்னு முடிவு பண்ணியி வலையுலக பக்கமே வரல.

  ஸ்ஸ்ஸப்பா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியல டா நாராயாணா

  ReplyDelete
 18. கொஞ்ச நாள்ல திரும்ப நல்ல ஃபார்ம்ல வர்றேன்.!!

  பதிவில உன் ஆதங்கமும், அதற்காய் நீ வார்த்தை கொண்டு போர் தொடுத்த விதமும் அருமை கூர்...வாழ்த்துக்கள்...இருப்பினும், மாற்றத்தை விரும்புகிறேன் உன் இடத்தில்(ஹி ஹி புரியும்னு நினைக்கிறேன்)

  ReplyDelete
 19. நாய்க்குட்டி மனசு said...
  மனசு சரியில்லையா? என்னாதிது ? கவலைப்படாதீங்க அடுத்த பதிவர் சந்திப்புக்கு வந்திரலாம்////


  ஹா ஹா ஹா ஹா ஹா நீங்க வேற....

  ReplyDelete
 20. கொஞ்ச நாளா மனசு சரியில்ல என்ன வென்றே தெரில.!! வலையுலகத்தை விட்டு தள்ளி இருக்கலாம்னு முடிவு பண்ணியி வலையுலக பக்கமே வரல.///

  மச்சி கை கொடு டா உன்னை இந்த நிலைமைக்கு தள்ளிய அந்த ஜீவன் யாரு டா கொஞ்சம் காட்டு வாழ்த்து சொல்வோம்

  ReplyDelete
 21. கொஞ்ச நாள்ல திரும்ப நல்ல ஃபார்ம்ல வர்றேன்.!!---///

  டேய் இப்போ தானே நல்ல விஷயம் சொன்னே அதுக்குள்ள என் டா கெட்ட விஷயம் சொல்றே...!!!

  ReplyDelete
 22. டேய் நீ இதையே நினைச்சுட்டு இருந்தே உனக்கு அடி தான் டா...!!! ஒழுங்க இரு..... இல்ல இன்னும் மனசு வருத்தப் படுவே...!!!

  ReplyDelete
 23. எனக்கும் மனசு கொஞ்சம் சரியில்லை

  ReplyDelete
 24. பக்தி, உருவ வழிபாடு தொடர்பான உங்களின் உணர்வுகளைப் பகிர்ந்திருக்கிறீங்க.

  எனக்கு இவை இரண்டிலுமே ஈடுபாடு குறைவு பாஸ்.
  ஏனோ தெரியலை.

  ReplyDelete
 25. //20 வயசுல கம்யுனிசம் பேசாதவனும்.. 50 வயசுல ஆன்மீகம் பேசாதவனும் உருப்புடமாட்டான்//

  இப்ப உங்க வயசு என்ன..கூர்?

  ReplyDelete
 26. ''20 வயசுல கம்யுனிசம் பேசாதவனும்.. 50 வயசுல ஆன்மீகம் பேசாதவனும் உருப்புடமாட்டான்''- யாரோ சொன்னதா ஞாபகம்.
  யார் சொன்னா என்ன தம்பீ
  நாட்லே இதானே நடமுறை
  நல்ல பதிவு, நன்றி
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 27. @ராஜ நட: அட இதுக்கெல்லாமா கவலை படுவாங்க.. சோ பேட்.. பரவால.. எப்ப வேணா வாங்கோ..

  ReplyDelete
 28. @ரேவா:


  உனக்கென்ன பீலிங்க்ஸ் சகோ....//

  முழுசா படி.. குதர்க்கமா கேக்காத..  //ஹோஓஓஓஓஓ...வெங்கட் ரமணா. ஏழு குண்டலவாளா, கோவிந்தா, கோவிந்தா..பக்தி பக்தி//

  உன்னய கூட்டிட்டு போயி மலையில இருந்து உருட்டி விட்டிருக்கணும்..


  என்னாமா எஸ்கேப் ஆகுற...//

  பப்ளிக் பப்ளிக்.. ஹி ஹி

  ReplyDelete
 29. @ரேவா & சௌந்தர்: இங்கிட்டு வந்து கும்மி போட்டிருக்கீங்களே டா.. ஒரு நன்றிய மட்டும் போட்டுகிடுறன்.. ஹி ஹி.. எஸ்கேப்பு ஆயிட்டோம்ல..

  ReplyDelete
 30. @நாய்க்குட்டி மனசு: அட.. உங்களுக்கு எப்படிமா இதெல்லாம் தெரியுது.. என் மனசுல இருக்குற பல விடயம் உங்களுக்கு லீக் ஆயிடுதே.. சரியில்ல.. ம்ம்

  ReplyDelete
 31. @சந்ரு:


  எனக்கும் மனசு கொஞ்சம் சரியில்லை//

  நண்பேன்டா..!!

  ReplyDelete
 32. @நிரூ: எனக்கும் தான் ஈடுபாடு குறைவு.. ஹி ஹி.. இருந்தாலும் வந்ததுக்கு நன்றி..

  ReplyDelete
 33. @சிவகுமார்: ரொம்ப ஆர்வமா வயச கேக்குறீங்களே.!!


  சரி சொல்லுறேன்.. பிறக்கும் குழந்தையை விட பெரியவன்.. இறக்கும் பெரியவரை விட சிறியவன்.. ஹி ஹி

  ReplyDelete
 34. @இராமாநுசம்: ஆமாம் ஐயா.. நீங்க இப்ப ஆன்மீகம் பேசணுமே.!! ஹி ஹி.. நன்றி ஐயா..

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!