Skip to main content

உதிர்த்த உணர்ச்சி மங்கிவிட்டதா மக்களே.!!?

உலகம் வெப்பமயமாதல் என்னும் விடயம் சில வருடங்களாக நம்மை ஆட்டி படைக்கும் ஒன்று. புவியியலில் ஆர்வம் இல்லாத பலருக்கும் இப்போது ஓசோன் படலத்தை பற்றியும் அதன் செயல்பாடுகள் குறித்தும் நன்கு அறிந்திருப்பர். உலகம் வெப்பமயமாதலை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று ஒரு சில அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று நாடெங்கும் மரம் வளர்ப்போம் என்பது.


வீட்டுனுள் தூங்கிகொண்டிருந்த இளைஞர்களை எல்லாம் தட்டி எழுப்பும் வகையில் உரக்க சொல்லப்பட்டது. புதிதாய் முளைத்த உணர்ச்சி ஒன்று புது புது அமைப்புகளை உருவாக்கி, அமைப்புகள் மூலம் மரக்கன்றுகளாய் நடப்பட்டது.

மரம் வளர்ப்பதை பற்றி பெரிய பிரச்சாரங்களும், இன்னும் பல விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது. உண்மையில் இந்த ஆண்டுகளில் மக்களின் மனதில் மரம் வளர்ப்பதை பற்றி ஒரு பெரிய உணர்ச்சி ஏற்பட்டது உண்மை தான்.

ஆனால், இந்த உணர்ச்சியின் விளைவு என்ன ஆயிற்று.!? இங்கே ஒரு மரம் நடும் போது பல இடங்களில் பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டன. இது தான் நாம் விரும்புவதா!? இதை நாம் கண்டிப்பாக விரும்பமாட்டோம். காட்டுத்தீ, ஊர் மேம்பாடு என்று 7:3 விகிதத்தில் மரம் அழித்தலும் உருவாக்குதலும் இருந்தது. ஆனால் காலம் கடக்க கடக்க மரம் உருவாக்கும் சதவிகிதம் குறைந்துகொண்டே வருகிறது. என்ன செய்தாலும் ஒண்ணும் நடக்காது என்னும் மனப்பான்மை மக்கள் மத்தியில் மீண்டும் வர தொடங்குகிறது.


அது தவறு என்று மக்கள் உணரவேண்டும்.! இருட்டான இடத்தில் சிறு தீக்குச்சியே பெரும் பங்கு வகிக்கும். அதுபோல சுற்றிலும் வெப்பமாக இருக்கும்போது நமது ஒற்றை மரம் அரவணைக்கும் தாயாக ஆகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இதை பற்றி நான் பலதரப்பட்ட மக்களிடம் பேசினேன். அவர்கள் மீண்டும் பொங்கி வரவேண்டும் என்ற எண்ண மிகுதியும் வேண்டும் என்று பேசினேன். சில கிராம மக்கள்-இன்றும் வியப்போடு ''அப்படியா தம்பி'' என்று கேட்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இதை பற்றி தெரியாமல் மக்கள் எப்படி இருக்கின்றனர்.!? பலர் எனக்கு இருக்கும் வேலையில் இதுவேறையா என்னும் பாணியில் பார்த்துவிட்டு நகர்ந்தனர்.

நகரத்து மக்கள் சொல்லும் போது, '' எங்களால் பல இடங்களுக்கு சென்று மரங்களை நட முடியாது. வீட்டின் முன்னே மரம் நடும் போது அது வளரும் போது கேபிள் காரங்களும், EB காரங்களும் வெட்டி வெட்டி விட்டுடுறாங்க. இப்படியே பண்ணிகிட்டு இருந்தா எங்களுக்கு எப்படி மரம் வளர்ப்பதுல இன்ட்ரஸ்ட் வரும்.'' என்றனர்.

உண்மை தான். மரம் வளர்ப்பது ஒரு கலை. ஆர்வம் இருந்தால் தான் அதை செய்யமுடியும். EB பொருத்த வரையில் மரம் வளர்ந்து அது மின் கம்பிகளை முட்டும் போது பாதிப்புகள் ஏற்பட கூடும், அதுமட்டுமின்றி மரத்திற்காக அதை நகர்த்தி வைப்பது போன்றதால் பண செலவுகளும் சில குழப்பங்களும் ஏற்பட கூடும்.

ஆனால், கேபிள் கம்பிகளை எங்கு வேண்டுமானாலும் மாற்றலாம். சுலபமாக மாத்தகூடிய இந்த கம்பிகளை மாற்றலாம் அல்லவா.!? அதற்கு ஏன் செழுக்கும் மரத்தை பட்டமரமாக்க வேண்டும். உங்கள் ஊர்களில் இது போல கேபிள் காரர்கள் மரங்களை வெட்டும் சம்பவம் நடந்தால் அவர்களிடத்து அது போல செய்யவேண்டாம் என்னும் கோரிக்கை வையுங்கள். அதையும் மீறி அவர்கள் செய்தால் புகார் கொடுப்பேன் என்று மிரட்டுங்கள் தவறில்லை. அதையும் அவர்கள் மதிக்காது போனால் தைரியமாக துணிந்து யாராவது புகார் தெரிவித்து விடுங்கள். இந்த செய்கையை எதிர்த்து நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு உரிமை உண்டு.


மரம் நடுவதை மீண்டும் தொடர்வோம். செயலை மறந்து போன இயக்கங்களே விழித்தெழுங்கள். ஒன்றிணைவோம்.!!!

மங்கிப்போன நினைப்பு
மீண்டும் உதிர்த்தெழுமோ.!
காத்து கிடப்பது எதற்காக.!?
சோர்ந்த போவது நமக்கு சரியோ.!?
போராடி காப்பதறியா தாய் உயிர்
பின்பும் போராட்டம் ஓயாது.!!
இதுவும் அதுபோன்றே.!
போராடுவோம்.! எதிர்காலத்துக்காக.!!!


அன்புடன்,
தம்பி கூர்மதியன்

Comments

 1. முதலில் வாழ்த்துக்கள் சகோ...இந்த சமூக விழிப்புணர்வு பதிவுக்கு.....உண்மையான விஷயம்தான்..உலக வெப்பமயமாதலை தடுக்க வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்தல் அவசியமான ஒன்று தான்...
  என்ன செய்தாலும் ஒண்ணும் நடக்காது என்னும் மனப்பான்மை மக்கள் மத்தியில் மீண்டும் வர தொடங்குகிறது.இதுவும் உண்மைதான் சகோ...எனக்கும் இந்த கன்றுகள் நடுதலில் ஆர்வம் உண்டு...கல்லூரி காலங்களில், சில கிராமங்களை தத்தெடுத்து, அந்த கிராமங்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை செய்து தருவதில் இருந்து, பல விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி உள்ளோம்...அதில் மரம் நடு விழாவும் ஒன்று...எங்களைப் போன்ற மாணவியரின் பங்களிப்பில் சிறு தொகைகளைத் திரட்டி, அதில் முதலில் நூறு மரக்கன்றுகளை வாங்கி, மதுரையில் ஒரு பகுதியில் நட்டோம்...நாங்கள் இருக்கும் வரை, நன்றாக பராமரித்த மக்கள், நாங்கள் சென்றவுடன், கன்றுகளை கவனிக்க தவறி விட்டனர்..என்னில் இருந்து, அவர் அவர் வேலையில் தான், அனைவரின் கவனமும் இருக்கிறதே அன்றி, சமுகத்தைப் பற்றி நம்மக்கென்ன கவலை என்ற எண்ணமே இங்கு பலருக்கும்....மாற்றம் முதலில் எல்லோர் மனதிலும் வரவேண்டும்...மாற்றத்தை வரவேர்ப்போர் இணைந்து செயல்பட்டால் தான் மாறுதல் வரும்...மரம் நடுவதை மீண்டும் தொடர்வோம்.இயன்றவரையில் இணைந்திடுவோம்...மனமார்ந்த பாராட்டுக்கள் இந்த பதிவுக்கு.....

  ReplyDelete
 2. @ராஜா: மிக்க நன்றி நண்பரே.!!


  Sharp+ brain=koormathiyan//

  எப்படி பாஸ் கண்டுபிடிச்சீங்க.. நீங்க ரொம்ப புத்திசாலி.. ஹி ஹி..

  ReplyDelete
 3. @ரேவா:ஆத்தி.. ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு கமண்ட் அடிச்ச போல.. ஹி ஹி.. நீ காலேஜ் படிக்கும் போது என்னவெல்லாம் செஞ்சேனு நைசா சொல்லிட்டியே.. கெத்து போ..!! ஹி ஹி.. ஊர் மக்கள் பராமரிக்கலனு வருத்தப்படாத.. என்றா உதிக்கும் சூரியன்.!!!!!!!

  இயன்றவரையில் இணைந்திடுவோம்//

  இது என் டயலாக் ஆச்சே!!

  ReplyDelete
 4. நல்ல எண்ணம் - வாழ்த்துக்கள்.

  கான்கிரீட் காடுகளுக்கு இடையே மரமும் வளர்ப்போம்!

  ReplyDelete
 5. நாம்தான் மறதியின் மன்னர்கள் ஆயிற்றே எப்படி செய்வோம் இதனை. மக்கள் உணராதவரை எத்தனை கோபன்ஹெஹன் மாநாடு போட்டாலும் சாத்தியம் இல்லை. நாமாக உணர வேண்டும்.

  ReplyDelete
 6. தம்பீ
  தரமான பதிவு மட்டுமல்ல,
  மக்களுக்குத் தரவேண்டிய பதிவு.
  ஆளுக்கொரு மரம் நடுவோம்
  என்ற முழக்கம் மறந்தே போயிற்று
  ஏன் மறைந்தே போயிற்று என்றே
  சொல்ல வேண்டும்
  நீங்களும் என் வலைப் பக்கத்தை மறந்த மாதிரி
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…