தண்டவாளத்தை விட்டு டிரெயின் ஓடுதுனு சொன்னாங்க..!!


மீடியா என்பது ஒண்ணுமே இல்லாத ஒருவனை உச்சத்துக்கு கொண்டு போகவும் எல்லாமும் இருப்பவனை கீழே தள்ளவும் சக்தி வாய்ந்த கலியுக மந்திரவாதி என்றே சொல்லலாம். ஒரு பேனாவை கையில் வைத்துக்கொண்டு உச்சி குடுமியை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிடலாம். அப்படிபட்டது தான் நம் ஊடகம்.


உயிரென்று இதற்குள் வந்தவர்களும் இருக்கிறார்கள், வேறு எதுவுமே இல்லையே என்று இதனுள் வந்தவர்களும் இருக்கிறார்கள். இதில் முதல் ரகத்தை சார்ந்தவர்களிடம் நாம் பல சமயங்களில் உண்மையை எதிர்பார்க்கலாம், இரண்டாவது ரகத்தை சார்ந்தவர்களிடம் உண்மையை எப்போதாவது தான் எதிர்பார்க்க முடியும். உள்ளே காலடி எடுத்துவைத்ததும் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு போதை போன்று உள் இறக்கி பண்ணாத வேலை எல்லாம் பண்ண சொல்லும்.

அன்னா ஹசாரே உயர்ந்ததுக்கும் மீடியா ஒரு பெரிய காரணம், திமுக.,வின் கொடுமையான ஆட்சி மாறுவதற்கும் மீடியா தான் காரணம். வெளியே தெரியவேண்டாம் என்று நினைத்திருக்கும் செயலை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டி பல சமையங்களில் உயிரிழப்புக்கு வித்திடுவதும் மீடியா தான். அரசன் கையிலிருக்கும் கோல் மாதிரி இந்த மீடியா துறை. அதை கையில் வைத்து நல்லது செய்தால் நாடு செழிக்கும், தீங்கு விளைவித்தால் நம்மோடு சேர்ந்து நாடும் நாதியற்று போகும்.

இன்று(ஜூன் 27) காலை சுமார் 11.30 மணியளவில் தாம்பரம் சானடோரியத்தில் தாம்பரத்திலிருந்து-சென்னை பீச் செல்லும் மின்சார ரயில் ப்ளாட்பாரத்தில் உரசிற்று. சட்டென அதிகாரிகள் வரும் முன்னே விரைந்தனர் மீடியா குழுவினர். ஆனால் உரசிய ஐந்து நிமிடத்தில் அது பிரச்சனை இல்லை என்று தெரிந்து மின்சார ரயில் புறப்பட்டுவிட்டது. அங்கு வந்த பிரபல தொலைகாட்சி நிறுவனத்தார் அவசர அவசரமாக ‘‘சானடோரியத்தில் மின்சார ரயில் தடம் புரண்டது.. போக்குவரத்து ஸ்தம்பித்தது’’ என்று ஒளிபரப்பிவிட்டனர்.


ஊடகத்தின் நோக்கம் என்ன.!? உண்மையான செய்தியை கொண்டு செல்வதா இல்லை விரைவாக செய்திகளை கொண்டு செல்வதா.!? பெருமை அடித்துக்கொள்ள இது ஒன்றும் அவர்கள் வீட்டு ஆடம்பர விசேசம் அல்ல. இப்படிபட்ட செய்தி ஒளிபரப்பு ஆனதால் மேலிடத்திலிருந்து சம்பந்தபட்ட ஆபிஸர்க்கு பிரஷர் வந்திருக்கிறது. இதனால் அவர் சற்று நேரம் போக்குவரத்தை நிறுத்திவிட்டு அந்த இடத்தை ஆராய நேர்ந்திருக்கிறது. இதனால் தாம்பரத்திலிருந்து ரயில்கள் எதுவும் கிளம்பவில்லை, நிற்பதற்கு இடமிருக்காது என்பதால் தாம்பரம் செல்லும் ரயில்களும் நிறுத்தப்பட்டது. பிரபலமான ஒரு தொலைக்காட்சி தீவிர விசாரிப்பு அற்று ஒளிப்பரப்பிய காட்சியால் எத்தகைய பாதிப்பு பார்த்தீர்களா.!?

அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் முன்னே பிரபல ஆங்கில பத்திரிக்கையில் செய்தியாளர் ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘‘இப்போது நீங்கள் என்ன நடந்தது என்று சொல்கிறீர்களா.? இல்லை என் இஷ்டத்துக்கு ஏதாவது எழுதிடவா’’ என்று மிரட்டியிருக்கிறார். ஒரு அதிகாரி சம்பவ இடத்துக்கு வரும் முன்னே எப்படி அந்த விடயத்தை பத்தி முழுமையாக அறிந்திருக்க முடியும்.!? இஷ்டத்துக்கு எழுத இது என்ன அவர்களது வேஸ்ட் பேப்பரா.!?

ஊடகத்துறையில் வேலை செய்வது என்பது ஒரு சாதாரண விடயமல்ல. அவர் கை எழுதும் ஒற்றை எழுத்து நாளை பலரின் தலை எழுத்தை மாற்றக்கூடியது. இந்த வகையில் நான் எதை வேண்டுமானாலும் எழுதுவேன் படிப்பதற்கு என் மதிக்கெட்ட மக்கள் இருக்கின்றனர் என்று செயல்படுவது சற்றே ஒழுக்கம் கெட்ட செயல் என்பதை எல்லா ஊடக நண்பர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.


நித்தியானந்தாவை கிழி கிழி என்று கிழித்த இதே மீடியா தான் ஒரு காலத்தில் மக்களுக்கு அவரை அறிமுகபடுத்தியது. ஒரு விடயத்தை அறிமுக படுத்திவிட்டு அதன் மீது பலர் மோகம் கொண்ட பின்னர் அது பொய் என்று உரைப்பதை விட, அறிமுகபடுத்தும் முன்பே ஆராயலாம் தானே.! போலீஸ்காரர்களுக்கு அனுமதி மறுக்கும் பல இடங்களிலும் சுலபமாக உள்நுழையும் வாய்ப்பும், பேச்சாலே எல்லாவற்றையும் வாங்கிடும் திறமையும் ஊடக துறை சார்ந்தவர்களுக்கு நிறையவே உண்டு. இதை தங்கள் பேனரின் பெருமைக்கும், அதை பிரபலபடுத்தும் நோக்கில் மட்டும் உபயோகிக்காமல் நாட்டையும் மக்களையும் முன்னேற்ற பயன்படுத்தலாம் தானே.!

சேனல்-4 ஒளிப்பரப்பிய பரப்பரப்பு இலங்கை அரசின் கொடுஞ்செயல்களை ஒளிப்பரப்பாத தமிழ் ஊடகத்திற்கு அரை குறை ஆடை நடிகை உடல் குறைப்பும், பிரபல ரௌடியின் கதையும் ரொம்ப முக்கியம் என்று படுகிறது போல.

சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இருக்கும் இதழ்களில் 10 பக்கத்துக்கு நல்ல கட்டூரை இருந்தால் மீதி 20 பக்கம் அரைகுறை ஆடையும், அலப்பறை கூட்டும் பொழுதுபோக்கு மட்டுமே இருக்கிறது. நாளைய சமுதாயம் மோகமும் கொள்ளும் கோபமும் கொள்ளும். ஊடக நிறுவனமே கோபத்தை விடுத்து மோகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் எங்கிருந்து உருப்புடும்.!? 

சாத்திரம் மறந்து
சூத்திரத்தை ஏந்தி
உக்கிரம் தாண்டி
உயிரில்லா ஜீவனானதடி பெண்ணே.!
நான்-உணர்ச்சி தேடி சென்ற 
என் உயிரான ஊடகமே.!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்

Comments

 1. அன்னா ஹசாரே உயர்ந்ததுக்கும் மீடியா ஒரு பெரிய காரணம், திமுக.,வின் கொடுமையான ஆட்சி மாறுவதற்கும் மீடியா தான் காரணம். >>>>

  செம தத்துவம்...

  ReplyDelete
 2. நண்பா.... உன் கருத்தை வழிமொழிகிறேன்....

  ReplyDelete
 3. ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடும், நடு நிலமையோடும் செயற்பட வேண்டும் எனும் அக்கறையோடு, சம காலத்தில் ஊடகங்களினால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் & தவறுகளைச் சுட்டி எழுதப்பட்ட பதிவு.

  யார் தான் இந்தக் காலத்தில் நடு நிலமையினைக் கடைப்பிடிக்கிறார்கள்?
  எந்த ஊடகம் சரியான செய்தியினைத் தருகிறது என்று அறிய முடியாத நிலமையினை இக் காலத்தில் எல்லா ஊடகங்களும் செய்கின்றன என்று நினைக்கிறேன்.

  வியாபார நோக்கில் பயணிப்பதாலும்,
  தாம் மக்களுக்குச் சேவை செய்கிறோம் என்பதை மறந்த நிலமையும் தான் இதற்கான காரணங்களாகும்.

  ReplyDelete
 4. @ப்ரகாஷ்:நன்றி அண்ணே!

  ReplyDelete
 5. என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள் உறவுகளே..........

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி