Posts

Showing posts from July, 2011

புரியாத கனவுகளில் புதைந்துவிட்ட இளையோர்!!

Image
ஒவ்வொரு நிமிடமும் மனிதன் ஆழ்ந்த சிந்தனையோடு தான் தூங்கிகொண்டிருக்கிறான். தூங்கும் ஒவ்வொரு நேரமும் அவன் உள்மனதுக்குள் ஏதோ உணர்த்திகொண்டே இருக்கும். அவ்வாறான சமயத்தில் அவன் உச்சி(மூளை) உள் நோக்கிட துடித்துகொண்டே இருக்கும், உலகத்தில் முடியாது என்று சொல்ல கூடிய அனைத்தும் அங்கு முடிவதாக அமையும். அது ஒரு மனோயியல் நிலை என்றே கூறலாம். இன்று நாம் பேச போவது அதை பற்றி தான்.!


நாம் எப்போது உண்மையானவனாக இருக்கிறோம்.? யாரிடம் உண்மையானவனாக இருக்கிறோம்.?மனதில் பெரிய துக்கம் இருக்கும் போதும் நம் உயிரின் உயிரான ஒருவரிடமே நாம் எப்போதும் உண்மையாக இருக்கிறோம். இவ்வாறு நீங்கள் நினைத்துகொண்டிருந்தால் இப்போதே அந்த எண்ணத்தை எச்சில் தொட்டு அழித்து விடுங்கள். இல்லை வேறு எதுவாக இருந்தாலும் இப்போதே சுக்கு நூறாக ஆக்கி விடுங்கள். உண்மையில் நாம் எப்போது உண்மையானவனாக இருக்கிறோம் என்றால் அது நம் ஆழ்ந்த உறக்கத்தில் தான்.

வெளியுலகத்தில் எவ்வாறாக நடித்துக்கொண்டிருந்தாலும் நம் ஆழ்மனதின் எண்ணங்கள் அனைத்தையும் நமக்கே படம் பிடித்து காட்டி நாம் யார்.? எவ்வகையினர்.? என்பதை தெளிவாக காட்டுவது தான் உறக்கத்தின் குழந்தையான கனவின் வ…

வலி என்று தெரியவில்லை.!! ஆனா வலிக்குது...

Image
அன்புள்ள அப்பாவுக்கு.!


உங்க இரத்தித்தில இருந்து உருவான ஒரு கரு தான் நான். என்னை அம்மா வயித்துல இருந்து எடுத்ததும் நேரா உங்க கையில தான் கொண்டு வந்து கொடுத்தாங்க. என்னால கண்ணை கூட திறக்க முடியல. நான் கத்தி கத்தி அழுதுகிட்டே இருந்தன். என்னை அப்படியே உங்க நெஞ்சோட அணைச்சு புடிச்சீங்க. அழுகை கொஞ்சமா குறைச்சுகிட்டு கண்ணை கொஞ்சமா திறந்து பார்த்தேன். ''அடேடடே.!! அம்மொம்மா..'' என்று கொஞ்சுனீங்க. அது என்னனு எனக்கு அப்போ புரியல. எல்லாம் விசித்திரமா தெரிஞ்சுது.


புரியாத போது நான் சிந்திச்சுட்டிருந்தேன். அப்போது உங்க முகத்தை என் அருகில் கொண்டு வந்து என் கன்னத்தில முத்தமிட்டீங்க. வழிக்கப்படாத உங்கள் முள் தாடியும் மீசையும் என்னை சீண்டிச்சு. அது வலி என்று எனக்கு தெரியல.! ஆனா வலிச்சது. யார் சொல்லி கொடுத்ததுனு தெரியல சட்டென அழுகை வந்துடுச்சு. உங்கள் தாடி தான் குத்தியிருக்கும்னு தெரிஞ்சும் நீங்க என்கிட்ட ''தாடி குத்துச்சாடி செல்லம்.!'' என்று கொஞ்சுனீங்க. எனக்கு அப்போ பயங்கர கோபம்.!! தெரிஞ்சுகிட்டே நம்மை கொடுமை செய்கிறாரே என்று.

அடுத்த நாள் வீட்டுக்கு போய் நீங்க குளிச்சுட்ட…

கைரேகையை வச்சி காரை ஸ்டார்ட் பண்ணலாம்.!!

Image
டெக்னாலஜி வளர வளர நம்ம பக்கமும் வளர்ச்சிங்கறது இருந்துகிட்டே தான் இருக்கு. கார்ல ஏறி உட்கார்ந்த பிறகு சாவிய எடுத்து போட்டு ஸ்டார்ட் பண்றதெல்லாம் இப்ப ஓல்டு ஸ்டைலாகிபோச்சு. இங்க்லீஸ் படத்துல காட்டுற மாதிரி கைய வச்சு ஸ்கேன் பண்ணி போகுற ஸ்டைல் வந்தாச்சு.

Cvkp bg04 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம் காரை ஓட்டுவரின் கைரேகையை கொண்டு காரை ஸ்டார்ட் செய்யும் வசதி கொண்டுள்ளது. இதன் மூலம் கார் திருட்டை தடுக்கலாம்.
இந்த சாதனத்தில் கைரேகையை ஸ்கேன் செய்யும் வசதியும் மொபைலுக்கு மெசேஜ் செய்யும் வசதியும் இருக்கிறது. இதில் 9 கைரேகை அச்சுகளை சேமித்து வைக்கலாம். தேவையற்ற போது நீக்கவும் செய்யலாம். கீ செயினில் காரின் கதவுகளை பூட்டவும், திறக்கவும் வசதி இருக்கிறது. எஸ்எம்எஸ் மூலம் எரிப்பொருள் இன்ஜினுக்கு போவதை தடுக்க முடியும். கார் என்ன ஸ்டேடஸில் இருக்கிறது என்பதை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது. கைரேகையை ஸ்கேன் செய்யும் போது அதை கேன்சல் செய்யும் திறனும் இருக்கிறது. அந்த 9 சேமிக்கப்பட்டவர்கள் கைரேகையை தவிர்த்து வேறு யாராவது காரை இயக்க வேண்டுமானால் தற்காலிகமாக செக்யூரிட்டி சிஸ்டத்தை நிறுத்தி …