புரியாத கனவுகளில் புதைந்துவிட்ட இளையோர்!!

ஒவ்வொரு நிமிடமும் மனிதன் ஆழ்ந்த சிந்தனையோடு தான் தூங்கிகொண்டிருக்கிறான். தூங்கும் ஒவ்வொரு நேரமும் அவன் உள்மனதுக்குள் ஏதோ உணர்த்திகொண்டே இருக்கும். அவ்வாறான சமயத்தில் அவன் உச்சி(மூளை) உள் நோக்கிட துடித்துகொண்டே இருக்கும், உலகத்தில் முடியாது என்று சொல்ல கூடிய அனைத்தும் அங்கு முடிவதாக அமையும். அது ஒரு மனோயியல் நிலை என்றே கூறலாம். இன்று நாம் பேச போவது அதை பற்றி தான்.!


நாம் எப்போது உண்மையானவனாக இருக்கிறோம்.? யாரிடம் உண்மையானவனாக இருக்கிறோம்.?மனதில் பெரிய துக்கம் இருக்கும் போதும் நம் உயிரின் உயிரான ஒருவரிடமே நாம் எப்போதும் உண்மையாக இருக்கிறோம். இவ்வாறு நீங்கள் நினைத்துகொண்டிருந்தால் இப்போதே அந்த எண்ணத்தை எச்சில் தொட்டு அழித்து விடுங்கள். இல்லை வேறு எதுவாக இருந்தாலும் இப்போதே சுக்கு நூறாக ஆக்கி விடுங்கள். உண்மையில் நாம் எப்போது உண்மையானவனாக இருக்கிறோம் என்றால் அது நம் ஆழ்ந்த உறக்கத்தில் தான்.

வெளியுலகத்தில் எவ்வாறாக நடித்துக்கொண்டிருந்தாலும் நம் ஆழ்மனதின் எண்ணங்கள் அனைத்தையும் நமக்கே படம் பிடித்து காட்டி நாம் யார்.? எவ்வகையினர்.? என்பதை தெளிவாக காட்டுவது தான் உறக்கத்தின் குழந்தையான கனவின் வேலை.

ஒவ்வொரு கனவினுக்கும் ஒவ்வொரு விளக்கம் அளிக்க முடியும். ஆனால் அந்த விளக்கங்கள் கனவினுடையதாக இல்லாவிடிலும் ஏதோ ஒன்றை மனதுக்குள் உசுப்பி விட கூடியதாக இருக்கலாம். ஆழ்மனதில் தோன்றுவது எப்போதுமே நாம் அறிந்ததாக இருக்காது. ஆழ்மன எண்ணங்களை நமக்கு அறிய வைக்கும் இன்னொரு வழி தான் இந்த உறக்கத்தில் பிறக்கும் கனவு என்பது.!!

இப்போது கனவுகளை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது? கனவுகளை மெய்யாக்க முயற்சிக்கலாமா? கண்டிப்பாக முயற்சிக்கலாம். அது முடியும் என்று தோன்றும் பட்சத்தில் உறக்கத்தில் தோன்றும் கனவுகளை முயலலாம்.

இது உறக்கத்தில் தோன்றும் கனவு. கனவு உறக்கத்தில் மட்டும் தான் வருமா.? ஆம்.. நிஜவாழ்க்கையில் இருந்து தனிப்பட்டு வேறொரு வாழ்க்கையில் உள்புகுந்தாலே அது கனவு தானே.!

இங்கு கனவு என்பதை எதை சொல்கிறேன் என்று புரிகிறதா.? நீங்கள் நினைப்பது சரியே.! எதிர்காலத்தை பற்றிய கனவு. ஒவ்வொரு இளைய சமுதாயத்தையும் முட்டி மோதி முந்த வைப்பது இந்த கனவு தான். எதிர்காலத்தை தீர்மானிக்கும் இது போன்ற கனவு ஆழ்மனதில் பதிய வைப்பதாக இருக்க வேண்டும், ஆழ்மனதில் புதைந்ததாக இருக்க கூடாது.

இளையோரின் கனவு இப்போது எவ்வகையில் இருக்கிறது.? இளையோரின் கனவு அந்த இளைய வட்டத்திலே அடங்கி விடுகிறது என்றே சொல்ல வேண்டும். ஆம்., இளமை காலத்து காதல் மற்றும் காம மோகங்கள் தான் இப்போதைய பெரும்பால இளைஞர்களின் கனவாக இருக்கிறது. இது கனவா.? இல்லை கண்ட கருமாந்திரமா என்று தெரியவில்லை.

கனவு என்பது ஆழ்மனது எண்ணங்கள் என்று நமக்கு தெரியும். அதாவது ஆசைகள் என்று கூட சொல்லலாம். அது உறக்கத்தில்-ஒரு பொய்யான உலகத்தில் வெளிபடுவது இயல்பு. அதை உண்மையான நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்திவிட்டு தம்மை தானே ஹீரோ என்று நினைத்துகொண்டு கனவில் இருந்து மீளாமல் கனவுக்குள்ளே புதைத்து வைத்திருக்க கூடிய இந்த கொடூரமான கனவு எண்ணங்கள் அவர்களுக்கு எங்கிருந்து தோன்றுகிறது.?

எல்லாம் சினிமா தான் காரணம் என்று சொல்கிறது ஒரு சாரர் குழுமம்,மற்றொரு புரம் அக்கம்பக்கத்து ஆட்கள் தான் காரணம் என்கிறது. இன்னொரு பக்கம் இளமை காலம் இப்படி தான் இருக்கும் என்கிறது. இளமை காலம் சீரழிந்து தான் போகுமா.? காரணம் எதுவாக இருந்தாலும் அதுவே காரியமாக எண்ணி இளையோர் செயல்படாது இருக்கும் வரை என்றுமே தீராது இந்த மோக வாழ்க்கை.!! என்றுமே கிடைக்காது நம் தாக(வெற்றி) வாழ்க்கை!!!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்

Comments

 1. ராஜ நடராஜன்26 July 2011 at 16:28

  நலம்தானே கூர்?

  கனவுகள் ஒரு புரியாத புதிர்.

  உங்களால் ஒரு பதிவு தேறும் போல தெரியுதே!நடை பயிற்சிக்கும் கனவின்மைக்கும் தொடர்பு இருக்கலாம் போல தெரியுது.நடை பயிற்சி செய்யாத நாட்களில் கனவுகள் டிஸ்கோ டான்ஸ் ஆடுவதை முக்கால் தூக்கத்திலேயே உணரமுடியும்.தெப்பமா நனைந்து ஒரு குளியல் போட்டு உண்டு உறங்கினால் கனவு காதலன்,காதலிகள் பக்கத்திலே நெருங்குவதில்லை.ஒரு வேளை வந்து நடனமாடி விட்டுப்போனாலும் உள்ளுணர்வுக்கு தெரிவதில்லை.

  ReplyDelete
 2. அழகான கனவுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. இன்று முடியவில்லை...அடுத்த பதிவுக்கு கட்டாயம் நாளை வருகிறேன்..தமிழ்மண ஒட்டு மட்டும் போட்டேன்...மன்னிச்சு...

  ReplyDelete
 4. //இது போன்ற கனவு ஆழ்மனதில் பதிய வைப்பதாக இருக்க வேண்டும், ஆழ்மனதில் புதைந்ததாக இருக்க கூடாது.//

  தம்பீ!

  கருத்தாழம் மிக்க வரிகள்
  அருமை! தம்பீ! அருமை!

  வலைப்பக்கம் வரவில்லையே

  மூன்று முடிச்சு பாருங்கள்
  கருத்துரை தாருங்கள்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. vaalthukal,,,
  Vetha. Elangathilakam.
  http://www.kovaikkavi.wordpress.com

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!