கைரேகையை வச்சி காரை ஸ்டார்ட் பண்ணலாம்.!!


 டெக்னாலஜி வளர வளர நம்ம பக்கமும் வளர்ச்சிங்கறது இருந்துகிட்டே தான் இருக்கு. கார்ல ஏறி உட்கார்ந்த பிறகு சாவிய எடுத்து போட்டு ஸ்டார்ட் பண்றதெல்லாம் இப்ப ஓல்டு ஸ்டைலாகிபோச்சு. இங்க்லீஸ் படத்துல காட்டுற மாதிரி கைய வச்சு ஸ்கேன் பண்ணி போகுற ஸ்டைல் வந்தாச்சு.


Cvkp bg04 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம் காரை ஓட்டுவரின் கைரேகையை கொண்டு காரை ஸ்டார்ட் செய்யும் வசதி கொண்டுள்ளது. இதன் மூலம் கார் திருட்டை தடுக்கலாம்.

இந்த சாதனத்தில் கைரேகையை ஸ்கேன் செய்யும் வசதியும் மொபைலுக்கு மெசேஜ் செய்யும் வசதியும் இருக்கிறது. இதில் 9 கைரேகை அச்சுகளை சேமித்து வைக்கலாம். தேவையற்ற போது நீக்கவும் செய்யலாம். கீ செயினில் காரின் கதவுகளை பூட்டவும், திறக்கவும் வசதி இருக்கிறது. எஸ்எம்எஸ் மூலம் எரிப்பொருள் இன்ஜினுக்கு போவதை தடுக்க முடியும். கார் என்ன ஸ்டேடஸில் இருக்கிறது என்பதை எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது. கைரேகையை ஸ்கேன் செய்யும் போது அதை கேன்சல் செய்யும் திறனும் இருக்கிறது. அந்த 9 சேமிக்கப்பட்டவர்கள் கைரேகையை தவிர்த்து வேறு யாராவது காரை இயக்க வேண்டுமானால் தற்காலிகமாக செக்யூரிட்டி சிஸ்டத்தை நிறுத்தி வைக்கலாம். ரிமோட்டின் ரேடியோ ஃப்ரீக்யூன்ஸி 315MHZ.


இதில் சிம் கார்டு போடுவதற்கான இடமும் இருக்கிறது. சம்பந்தமில்லாத நபர் காரை இயக்க நேர்ந்தால் அலாரம் அடித்து, எஸ்எம்எஸ் மூலமும் எச்சரிக்கும். இதில் ரிமோட்டை மட்டும் உபயோகிக்காமல் காரின் சாவியை கொண்டும் காரின் கதவை திறக்கலாம். மேலும் போலியான விரல்கள், பேப்பர் ப்ரிண்ட் போன்ற ஏமாற்று வேலைகளையும் இது சுலபமாக கண்டுபிடித்துவிடும் அளவுக்கு பயோமெட்ரிக் தொழில்நுட்பம் உபயோகபடுத்தப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தை கண்டு பிடித்தவர் ஸ்வபனில் காலே என்னும் பூனே இன்ஜினியர். ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேசன் உதவியுடன் 18 மாதங்கள் உழைப்பில் இதை கண்டுபிடித்திருக்கிறார். இது அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார். விலை 12000 ரூபாய்.

இந்த ஸ்கேனரை உட்புற கதவுகளிலோ, அல்ல ஸ்டீரிங் அருகிலோ எங்கு வேண்டுமோ பொருத்தி சிறப்பாக செயல்படலாம்.!!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்

Comments

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி