Posts

Showing posts from August, 2011

சுடுகாட்டு வெட்டியான்....!

Image
மனதோடு சிந்திய மழைக்காலம்
அங்கு மறவாமல் நின்றேன் தினந்தோறும்..!
சுடரிட்டு எரியும் கனலோரம்
என் சுதந்திர வாழ்க்கை அரங்கேறும்!

எரித்தன் புசித்தன் ஏலனித்தான்
அவன் இறுதி எம்மை அடைவதறியான்..!
என் கை அடி பெறாத வெற்றுடம்பு
காற்றோடு கலந்திடாது என்று அவனறியான்..!

ஆயிரம் ஆயிரம் பெயர் பெறுவான்
என்னடி பணிகையில் ஒற்றை பெயர் கொள்வான்.!
சாதி மத சாத்தான் பிடியறுந்து
கண்ணீர் சிந்தும் உறவிடையே
என்னை நாடி வந்து காத்திருப்பான்...!

வருபவன் எல்லாம் என் சொத்து..!
வாஞ்சையோடு அழைத்து
வர்ண அலங்காரம் பூசி
ஒப்பாரி அலப்பறை நடுவே
ஓயாமல் சிதறிகிடக்கும்
என் வேலை துளிகள்!

என் புனித வேலைகளில்
ஆயிரம் அலறலும் அழுகையும்!
நிம்மதி அற்று தவித்தேன்...

என்று கிடைத்திடுமோ நிம்மதி...?
எனக்கான என் வேலையை
மாற்றான் என் மீதே செய்திடும் போதே
கிடைத்திடும் அவ்வரிய நிம்மதி....!

காத்திருக்கிறேன்...! நிம்மதிக்காக...!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

மனதின் எண்ணங்கள் ஒரு விளையாட்டு பொம்மை...

Image
மனித மனங்கள் ஒரு நேர்கோட்டில் பயணிக்கும் போது அதன் எண்ணங்கள் சீராகவும் என்றும் மகத்தானதாகவும் இருக்கும்....! ஆனால் உண்மையில் பலரும் அறிந்தும் அறியாமல் நடித்திருக்கும் ஒன்று என்னவென்றால் மனித மனங்களால் ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியாது. வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ ஒரு நிலைபாடில் மனம் தளர்ந்து போய் தான் விடும். வாழ்க்கையில் இதை விட பெரிய கொடுமை இல்லவே இல்லை என்று தோன்றவைக்கும் அளவுக்கு அது மிக பெரிய வலியாக இருக்கும்....!


ஒருவனுக்கு மிக பெரிய வலியாக தெரிவது மற்றொருவனுக்கு சாதாரணமாக தெரிய கூடும். அதே அவனுடைய கொடிய வலி இவனுக்கு சாதாரணம் என்று தோன்றும்...! இந்த இடத்திலும் மனங்களே கொடிய விளையாட்டினை விளையாடுகின்றது...!

இந்த மனங்கள் வேற்றுமைபடுவதற்கும் வலிகள் கொண்டு செல்வதற்கும் முக்கிய காரணிகளாக இருப்பன அந்த மனதில் எழும் எண்ணங்கள் மட்டுமே!! அந்த எண்ணங்கள் முதலில் சுகத்தினை தரும், பின் வலியினை தரும் அதன் பின்னர் நீங்காத ரணங்களை தரும்....!

அதற்காக அந்த எண்ணத்தை மனதில் கொள்ளாதீர்கள் என்று நான் சொல்லவில்லை...! ஒவ்வொரு எண்ணங்களும் ஒவ்வொரு பாடம்...! நீண்ட நாள் நாம் ஏக்கத்தில் இருந்து தேவைய…

சுதந்திரத்தின் ருசியை உணர்ந்திருக்கிறேன்.........!

Image
சுதந்திரம் என்பது வாயளவில் மட்டுமின்றி மனதளவிலும் நாம் இங்கு-நம் தேசத்தில் கொண்டிருக்கிறோம். சுதந்திர நாள் என்றதும் என்றுமே மனதில் இல்லாத ஒரு புதுவித உணர்ச்சி மேலெழும்புகிறது..! வாழ்த்து பரிமாற்றம், கொண்டாட்டம், குதூகலம்.....!!

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நாம் கொள்ளும் ஒவ்வொரு கொண்டாட்டமும் பலநூறு ஆண்டுகளின் ஒவ்வொரு இந்தியனின் ஏக்கம்... கனவு...!!! புசிக்கற்குரிய கனி கண்ணில் தெரியுமா என ஏங்கிய விழிகளுக்கு கிடைத்த பரிசு...!

அவன் வாங்கிய ஒவ்வொரு பூட்ஸ் கால் உதையும் தான் இப்போது நம் கழுத்தின் மாலையாக மாறுகிறது..! அவன் மனதில் எழுந்த அக்னியின் சீற்றமே இப்போது நமக்குரிய விடியலாய் ஒளிகூட்டி ஒவ்வொரு இந்தியனின் ரத்தித்திலும் சூடேற்றி திரிகிறது....!!

பொழைக்க இடம் தேடி வந்தவன் நயவஞ்சக சதி மேற்கொண்டான்...! வீரம் கொண்ட, விரிந்த மார்புடைய, கீழ்மண் பார்க்காத என் வீர மன்னன் வரவிருக்கும் வஞ்சகம் அறியாது அகமகிழ்ந்து உள்போர் புரிந்து வெற்றிகொண்டதாய் சிலாகித்திருந்தான். வஞ்சகன் வஞ்சகத்தை ஆரம்பித்தான்...! அடிமையாக்கப்பட்டோம்... வாக்கு தவறா மன்னன் சிலர் வாய் மூடி நிற்க, சிலரை வாய் திறக்க முடியாமல் ஆங…

அடைமழை காதல்

Image
பதிவுலகில் தொடர்பதிவு என்பது பரிட்சயம். இங்கு நாங்கள் நண்பர்களாகிய சௌந்தர்,ரேவா,நான் ஆகிய மூவரும் ஒரு முயற்சி செய்திருக்கிறோம். ஒரே தலைப்பை எடுத்து யார் என்ன எழுதபோகிறோம் என்று சொல்லிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்கு படும் கதை,கவிதை,கட்டூரை என்று எதுவாக வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தோம். இதன் படி ''அடைமழை காதல்'' என்னும் தலைப்பில் எங்கள் கண்ணோட்டத்தில் பதிவு எழுத ஆரம்பித்தோம். அதன்படி கீழே தொடர்வது என்பதிவு..!உலக மனங்கள் இணையும் போது உள்ளுக்குள் புரியாத ஒரு வித உணர்வு ஏற்பட்டு அது பாசமாக மாறிவிடும். அது பாசம் என்பதே பலருக்கு புரியாமல் இருப்பர்..!! பாசம் ஒரு மனிதனை முடியாது என்று சொல்லக்கூடிய ஒரு பெரிய விடயத்தை கூட எளியதாக செய்ய செய்துவிடும்.


இந்த பாசம் அளவுக்கு மீறியும் ஒருவருக்கு ஒப்பற்றதாக இருக்க கூடியதாகவும் இருக்கும் போது அது காதல் என்னும் பெயர் பெருகிறது. ஒருவனுக்கு அளவில்லாமல் காதல் உருவெடுத்திருப்பதையே இங்கு அடைமழை காதல் என்று விளித்திருக்கிறேன்.

பள்ளி சிறுவனை எட்டி உதைத்து, பிரம்பால் அடித்து படிக்க வைப்பதற்கும் அன்பால் படிக்க வைப்பத…