மௌனித்திருக்க விரும்புகிறேன்...!பரபர கால்கள்
வெளியெங்கும் நடக்க
உள்ளுக்குள் பதற்றம்
என் சொல்ல துடிக்க..!?
ஜீவித்திருக்கும் சிசுவின்
'வீல்'என்ற சப்தம் பின்பு
அங்கெங்கும் கலந்திருக்கும்
புன்னகை மௌனம்.!!!

விட்டில் பூச்சி சிறார்கள்
தவறித்திருக்கும் தருவாயில்
ஆசானின் அதட்டலின் முடிவாய்
அங்கொன்று தோன்றும்
பயமுற்றிருந்த மௌனம்.!!!

உற்றவன் உயிர்நீத்தான்
செய்தி செவிபாய
உணர்வுகள் உணர்ச்சியற்று
அங்கே தோன்றும்
அதிர்ச்சி மௌனம்.!!!

துக்கம் கொண்டிற்று
தூக்கம் தவறிற்று
நினைவுகள் சூழ்கொடியாக
தோன்றி மறையும் அங்கே
அழுகை மௌனம்..!!

மௌனித்திருக்கும் தருவாய்
மௌனத்தை கொண்டிருக்கும்போது
ஆயிர மௌன வார்த்தைகள் பேசுகிறதே.!!
மௌனம்-மௌனிக்காத இன்பம் தான்...

மௌனித்திருக்க விரும்புகிறேன்
மௌனம் என்னை மௌனிக்காதபோதும்.....!!

Comments

 1. அழகான கவிதை, மௌனத்தைப் போலவே ஆழம் அதிகம்!

  ReplyDelete
 2. உலகப்பொதுமொழியாம் மெளனத்துக்கும் புதுமொழி சொல்லி மெளனத்தருணங்களையும் மெளனமாக்காத மனவியல்புகளை அழகாய்ச் சொன்ன கவிதை,நன்று. தொடருங்கள்.

  ReplyDelete
 3. மௌனமும் ஒரு மொழிதான்...
  போகிற போக்கில் புரிதல்கள்
  நமக்கு புகட்டும் புது மொழி இந்த மௌனம் என்பதை
  அழகாய் வார்த்தை ஓவியங்களால் வரைதிருக்கிறாய்..
  படிக்க படிக்க மௌனம் ஆட்கொள்கிறது....
  இந்த மௌனம் பெருமிதம்....
  வாழ்த்துக்கள் சகோ, மௌனத்தின் பின், உனக்கான தேடல்கள், நீ விரும்பிய தேடலை உனக்கு கொண்டு வந்து சேர்க்கட்டும்....இன்னும் மௌனத்தின் பின், அதிகம் எதிர்பார்க்கிறேன்

  அதிகம் ரசித்தது

  துக்கம் கொண்டிற்று
  தூக்கம் தவறிற்று
  நினைவுகள் சூழ்கொடியாக
  தோன்றி மறையும் அங்கே
  அழுகை மௌனம்..!!

  மௌனித்திருக்கும் தருவாய்
  மௌனத்தை கொண்டிருக்கும்போது
  ஆயிர மௌன வார்த்தைகள் பேசுகிறதே.!!
  மௌனம்-மௌனிக்காத இன்பம் தான்...

  மௌனித்திருக்க விரும்புகிறேன்
  மௌனம் என்னை மௌனிக்காதபோதும்.....!!

  சான்ஸ்லெஸ்...அழகனா வரிகள்....வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 4. //மௌனம்-மௌனிக்காத இன்பம் தான்...
  மௌனித்திருக்க விரும்புகிறேன்
  மௌனம் என்னை மௌனிக்காதபோதும்.....!!//

  அழகான கவி வரிகள் சகோ வாழ்த்துக்கள் :)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!