அடைமழை காதல்

பதிவுலகில் தொடர்பதிவு என்பது பரிட்சயம். இங்கு நாங்கள் நண்பர்களாகிய சௌந்தர்,ரேவா,நான் ஆகிய மூவரும் ஒரு முயற்சி செய்திருக்கிறோம். ஒரே தலைப்பை எடுத்து யார் என்ன எழுதபோகிறோம் என்று சொல்லிக்கொள்ளாமல் தங்கள் மனதுக்கு படும் கதை,கவிதை,கட்டூரை என்று எதுவாக வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்று முடிவு செய்து எழுத ஆரம்பித்தோம். இதன் படி ''அடைமழை காதல்'' என்னும் தலைப்பில் எங்கள் கண்ணோட்டத்தில் பதிவு எழுத ஆரம்பித்தோம். அதன்படி கீழே தொடர்வது என்பதிவு..!உலக மனங்கள் இணையும் போது உள்ளுக்குள் புரியாத ஒரு வித உணர்வு ஏற்பட்டு அது பாசமாக மாறிவிடும். அது பாசம் என்பதே பலருக்கு புரியாமல் இருப்பர்..!! பாசம் ஒரு மனிதனை முடியாது என்று சொல்லக்கூடிய ஒரு பெரிய விடயத்தை கூட எளியதாக செய்ய செய்துவிடும்.


இந்த பாசம் அளவுக்கு மீறியும் ஒருவருக்கு ஒப்பற்றதாக இருக்க கூடியதாகவும் இருக்கும் போது அது காதல் என்னும் பெயர் பெருகிறது. ஒருவனுக்கு அளவில்லாமல் காதல் உருவெடுத்திருப்பதையே இங்கு அடைமழை காதல் என்று விளித்திருக்கிறேன்.

பள்ளி சிறுவனை எட்டி உதைத்து, பிரம்பால் அடித்து படிக்க வைப்பதற்கும் அன்பால் படிக்க வைப்பதற்கும் வித்யாசம் இருக்கிறது. அராஜக முறைபடி படிக்க வைத்தால் அது நாவளவில் மட்டுமே நசுங்கி போய்விடும். அன்பின் வழி படிக்க வைப்பது மனதில் இறுகமாக படிந்துவிடும்.!!!!

புரியாத உலகில் இந்த காதல் நினைத்ததை முடிக்க கிடைத்த ஒரு கம்பசூத்திரம் என்றே சொல்லலாம்.!! காதல் அதுவே உருமாறி அடைமழை காதலாகும் போது தான் அங்கு பிரச்சனை எழுகிறது.!!


அழகான ஒரு விடயத்தை பிடித்து உலுக்கும் பேயை போல காதலை 'பொசசிவ்னஸ்' என்னும் பேய் பிடித்து ஆட தொடங்கிடும். உலகத்தின் மூலையில் அனைத்து சாஸ்திரம், மந்திரம் படித்த எவ்வளவு பெரிய ஞானியானாலும் யோகியானாலும் இந்த பேயை அடித்து விரட்ட முடியாது. இங்கு அந்த அழகான காதலால் மட்டுமே அதை பிடித்திருக்கும் பேயை அடித்து விரட்ட முடியும்.

நாம் ஆசையாக அலைபேசியில் அழைக்கும் போது அங்கே அவர் வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்தால், நாம் பல முறை அழைத்தும் குறுஞ்செய்தி அளித்தும் பதில் இல்லை என்றால், சந்திக்க வருகிறேன் என்று சொன்ன நேரத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் சந்திக்க முடியாமல் போய்விட்டால், இன்னும் பல இதுபோன்ற சமயங்கள் தான் அந்த பொசசிவ்னஸ் என்னும் பேய்க்கு உகந்த நாள். தலையை விரித்து போட்டு ஆடும்.!!

அப்போது அந்த அழகான காதலும் பேய் ஆட்டம் போடாமல் அதன் அழகின் ருசிகளை சற்று அதிகமாக அள்ளி தெளிப்பது ஒன்று மட்டும் போதும் அந்த பேயை அடித்து விரட்ட.! ஆனால் அழகு இருக்கும் இடத்தில் அறிவு இருக்காது என்பது போல பல இடங்களில் இந்த அழகான காதல் முட்டாளாகவே இருந்திருக்கிறது. இருவருக்கும் தெரியும் யார் மீதும் இல்லாத அளவு இருவரும் இருவர் மீதும் அளவற்ற அதாவது நாம் சொல்லும் அடைமழை காதல் கொண்டிருக்கின்றனர் என்று.!! ஆனால், பிடித்த பேய் என்ன சும்மா விட்டிடுமா.? காதல் முந்தி முன்னர் வர துடித்தாலும் தன் அடியாளாகிய ஈகோ என்னும் பேய் கொண்டு எட்டி உதைத்து பின்னுக்கு தள்ளிவிடும் ஒரு ஜகதால கில்லாடி தான் நான் சொல்லிய பேய்.!!

நான் சொல்லிய அழகிய காதலை சீரழிக்க வந்த பேயின் இராட்சச உருவம் பார்த்திருக்கிறீர்களா.? சொல்கிறேன்.. அதையும் சொல்கிறேன்.! அது நாம் அன்றாடம் வாழ்க்கையில் சந்தித்து வரும் சந்தேகம் என்னும் பெரிய பேய். அதாவது நான் சொன்ன முந்தைய பேயின் அப்பா என்று சொல்லலாம்.!!!

இந்த இரண்டு பேயும் சேர்ந்துகொண்டு ஒன்று பாசமாகவும் ஒன்று வெறுப்பாகவும் அந்த காதலை படுத்தும் பாடு இருக்கிறதே!! காதலில் சிக்கி சின்னாபின்னமான ஒவ்வொரு வாயும் இதை வைத்து ஆயிரம் வாசகங்கள் பாடும்...!!

காதலில் திளைத்திருக்கும் இருவரும் பாசம் பொழிவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை.! இது இருவருக்குமே தெரிந்திருக்கும். இருப்பினும் அவர் நம்மை விட்டு போய்விடுவாரா.? நாம் பாசம் கொடுப்பது மற்ற எவர் வகையிலும் கம்மியாக போய்விடுமா.? என்று பயந்து பயந்து ஒருவர் செய்யும் நடவடிக்கையே அவர்கள் பயத்துக்கு தீணியாக மாறி பொய்யான பயத்துக்கு உண்மை சாயல் பூசியதாக காட்டப்படும்.

இங்கே உண்மை சாயல் பூசியதாக நான் சொல்லப்படுவது அவரின் 'பொசசிவ்னஸ்'சால் அவரை வெறுப்பது போல நடந்துகொள்வர். அடைமழை காதலில் திளைத்த எவராலும் அந்த காதலுக்கு உரியவரை வெறுத்திட முடியாது.

அளவுக்கு மிஞ்சிய காதல்-அந்த அடைமழை காதலை ரசிக்க தோன்ற வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் அந்த காதலோடு லயித்திருக்க தோன்ற வேண்டும். பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வார்த்தைகளுக்கு வாசிப்பவர் மேல் பொறாமை கொள்ள செய்ய வேண்டும். அனுபவிக்கும் ஒவ்வொருவர் ரசனையை பார்க்கும் போதும் அந்த அனுபவத்துக்கு அலுத்து போக வேண்டும். காதல் உணரும் வரை ருசீகரமானது. தூரத்தில் நின்றாலும்-அவளால் கொண்ட துயர் தாங்கி நின்றாலும் காதல் என்றும் காணாமல் போய்விடாது.

இதை அந்த அடைமழை காதலில் நனைந்திருக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும். சந்தேகம் என்னும் பேயால் பிரிந்த காதல்!! அது பிரிந்ததா??? இல்லை...! காதல் என்றும் பிரிவை சந்திக்காது.!!

அளவற்ற காதல் எவ்வகையில் ஒருவனை சிறப்பாக வழிநடத்துமோ அதே நேர்மாறான வகையில் அவனை பள்ளத்துக்கும் தள்ளிடும். அந்த அடைமழையாகிய காதலின் ஆசையோடு நனைவதை விடுத்து அது ஆசிட் மழையாக இருக்குமோ என்று சந்தேகித்தால் நாம் ரசிக்க வேண்டிய ரசனையும் ஒரு விழிபிதுங்கி, நகம் நீண்ட, தலை விரித்தாடும் பேய் போல தான் காட்சி அளிக்கும்!!

காதலை உணருங்கள்.!! அடைமழை காதலை உணருங்கள்.!! அதை காதலாக மட்டுமே உணருங்கள்!!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்

இதே தலைப்பில் எழுதிய நண்பர்கள் பதிவின் சுட்டிகள்- சௌந்தர்-  ரேவா

Comments

 1. இதை எழுதியதை பார்த்தா ரொம்ப அனுபவம் மாதரி தெரியுது..உண்மையா....

  ReplyDelete
 2. Your comment has been saved and will be visible after blog owner approval.///

  அவனா நீ .....!!!

  ReplyDelete
 3. அனைவரும் கதை எழுத தான் யோசிப்போம் ஆனால் நீங்கள் ஒரு அழகிய காதல் கட்டுரையை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு பூங்கொத்து :-)

  அருமையாக எழுதி உள்ளீர்கள் பல விசயங்களை அலசி ஆராய்ந்து.

  possessiveness அதிகமாக ஆகும் போது தான் அது சந்தேகம் என்னும் பேயாக மாறிவிடுகிறது....

  ReplyDelete
 4. காதலை உணருங்கள்.!! அடைமழை காதலை உணருங்கள்.!! அதை காதலாக மட்டுமே உணருங்கள்!!

  பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. ஒருவனுக்கு அளவில்லாமல் காதல் உருவெடுத்திருப்பதையே இங்கு அடைமழை காதல் என்று விளித்திருக்கிறேன்.

  கூர் டைட்டில் விளக்கம் இதவிட தெளிவா யாராலையும் கொடுக்க முடியாது பா

  ReplyDelete
 6. அழகான ஒரு விடயத்தை பிடித்து உலுக்கும் பேயை போல காதலை 'பொசசிவ்னஸ்' என்னும் பேய் பிடித்து ஆட தொடங்கிடும்.


  பொசசிவ்னஸ் அவர் அவர் கையாடலில் தானே இருக்கிறது...தனக்கான ஒன்றின் மீது பொசசிவ்னஸ் odu இருக்கிறது தப்பா?

  ReplyDelete
 7. பொசசிவ்னஸ் என்னும் பேய்க்கு உகந்த நாள். தலையை விரித்து போட்டு ஆடும்.!!

  அனுபவமா? ஹ ஹா

  ReplyDelete
 8. காதல் முந்தி முன்னர் வர துடித்தாலும் தன் அடியாளாகிய ஈகோ என்னும் பேய் கொண்டு எட்டி உதைத்து பின்னுக்கு தள்ளிவிடும்


  i accept this.........

  ReplyDelete
 9. நம்மை விட்டு போய்விடுவாரா.? நாம் பாசம் கொடுப்பது மற்ற எவர் வகையிலும் கம்மியாக போய்விடுமா.? என்று பயந்து பயந்து ஒருவர் செய்யும் நடவடிக்கையே அவர்கள் பயத்துக்கு தீணியாக மாறி பொய்யான பயத்துக்கு உண்மை சாயல் பூசியதாக காட்டப்படும்.


  உண்மை உண்மை உண்மை

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. அளவற்ற காதல் எவ்வகையில் ஒருவனை சிறப்பாக வழிநடத்துமோ அதே நேர்மாறான வகையில் அவனை பள்ளத்துக்கும் தள்ளிடும்.


  சகோ இது அவர்கள் நடக்கும் விதங்களை பொறுத்தது தானே...

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. காதலை உணருங்கள்.!! அடைமழை காதலை உணருங்கள்.!! அதை காதலாக மட்டுமே உணருங்கள்!!


  கூர் காதல் பற்றிய அழமான பார்வையோடு உன் தெளிவான விளக்கம் அருமை....வழக்கம் போல் வித்யாசமான சிந்தனைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. இவிங்கலாவே எழுதிகிறானுங்க, இவிங்கலாவே கமெண்ட் போட்டுகிறான்க. நான் என்ன பண்றது ?

  ReplyDelete
 15. நல்லா இருக்குது......

  ReplyDelete
 16. //காதலை உணருங்கள்.!! அடைமழை காதலை உணருங்கள்.!! அதை காதலாக மட்டுமே உணருங்கள்!!//
  அருமையான பதிவு உங்கள் பாணியில் கலக்கி இருக்கீறீர்கள் சகோ
  மூவரின் பதிவையும் படித்தேன் அருமை :)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!