Skip to main content

சுதந்திரத்தின் ருசியை உணர்ந்திருக்கிறேன்.........!

சுதந்திரம் என்பது வாயளவில் மட்டுமின்றி மனதளவிலும் நாம் இங்கு-நம் தேசத்தில் கொண்டிருக்கிறோம். சுதந்திர நாள் என்றதும் என்றுமே மனதில் இல்லாத ஒரு புதுவித உணர்ச்சி மேலெழும்புகிறது..! வாழ்த்து பரிமாற்றம், கொண்டாட்டம், குதூகலம்.....!!

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், நாம் கொள்ளும் ஒவ்வொரு கொண்டாட்டமும் பலநூறு ஆண்டுகளின் ஒவ்வொரு இந்தியனின் ஏக்கம்... கனவு...!!! புசிக்கற்குரிய கனி கண்ணில் தெரியுமா என ஏங்கிய விழிகளுக்கு கிடைத்த பரிசு...!

அவன் வாங்கிய ஒவ்வொரு பூட்ஸ் கால் உதையும் தான் இப்போது நம் கழுத்தின் மாலையாக மாறுகிறது..! அவன் மனதில் எழுந்த அக்னியின் சீற்றமே இப்போது நமக்குரிய விடியலாய் ஒளிகூட்டி ஒவ்வொரு இந்தியனின் ரத்தித்திலும் சூடேற்றி திரிகிறது....!!

பொழைக்க இடம் தேடி வந்தவன் நயவஞ்சக சதி மேற்கொண்டான்...! வீரம் கொண்ட, விரிந்த மார்புடைய, கீழ்மண் பார்க்காத என் வீர மன்னன் வரவிருக்கும் வஞ்சகம் அறியாது அகமகிழ்ந்து உள்போர் புரிந்து வெற்றிகொண்டதாய் சிலாகித்திருந்தான். வஞ்சகன் வஞ்சகத்தை ஆரம்பித்தான்...! அடிமையாக்கப்பட்டோம்... வாக்கு தவறா மன்னன் சிலர் வாய் மூடி நிற்க, சிலரை வாய் திறக்க முடியாமல் ஆங்கிலேயன் அடக்க. எழுவான் அங்கொன்றும் இங்கொன்றும் குறுநிலம் முதல் பெருநில மன்னன்.


விநோத ஆயுதங்கள், விசித்தர நாடகங்கள்...!! எம் வீரமன்னனின் ஒற்றை குரல் கர்ஜணையை தாங்கிடுமா அந்த விநோத ஆயுதங்கள். கோப கனலில் தொடங்கும் ஒற்றை ஆக்ரோஷமான குரலில் அவன் பீரங்கி நாலாபுறமும் அடித்து பறந்தோடுமே!! ஆயுதம் ஏற்கும் அவன் எங்கே மன வலிமை ஏற்ற என் மன்னனெங்கே!! மன்னனின் கைக்குள் அடங்கி அமைதிகாத்த என் பாரத மக்கள் அப்போதே வீறுகொண்டிருந்தால்- ஏ ஆங்கில நரிகளே!! தலைதெறித்து அன்றே சிதறி இருப்பீர்கள்.. தெரிவீராக!!

என் தேசத்தை ஒட்டுமொத்தமாய் அந்நியன் ஒருவன் வந்து என்னையே ஆளுமை செய்வதா.? அவனுக்கு அடிமையாய் போக நான் என்ன அவன் எச்சில் பருக்கையை ருசித்து கொண்டிருக்கிறேனா.? என் எச்சில் பருக்கையை ருசிக்க வந்தவன் என்னையே ஆளுமை செய்வதா.? பலவாறு எண்ணங்கள் என் இந்தியன் மனதில் ஆணித்தனமாய் பதிந்து பதிந்து எழுந்தது...! அந்த எண்ணத்தின் விளைவாய் எழுந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாய் எதிர்ப்புகள், போராட்டங்கள்-ஒரு புது புரட்சி...!!

ஓங்கிய கைகள் அனைத்தையும் ஆளுமை கைகள் அடக்கி ஆள நினைத்தன. அவனின் ஒவ்வொரு பூட்ஸ் காலும் என் எழும் இந்தியனின் நெஞ்சை மிதித்து அடக்க நினைத்தது. அடங்க மறுத்த கைகள் நசுக்கப்பட்டது. உள்வலிகள் நெஞ்சை துளைத்தாலும் அவனின் ஒவ்வொரு வார்த்தையும் ''வந்தே மாதரம்'' என்றே வந்தது. அது அந்த ஆங்கிலேயனுக்கு என்ன சொல்ல விழைகிறது..!?

''டே ஆங்கிலேய அடக்குமுறை கையாளும் கொடுமைகாரனே!! எச்சில் ருசிக்க வந்த மாய கொடூரனே... வஞ்சம் கொண்டு எங்களை அழித்திட நினைத்தாயோ!! விட மாட்டோம்.. உமிழ்கிறேன் வார்த்தையாக.. எமது எச்சிலை எடுத்து புசித்து ருசிகாணும் பிச்சைகார கூட்டம் தானடா நீங்கள்'' என்று சொன்னது.

மண்டியிட்டு கிடந்த என் இந்தியன் எழுந்திட்டான். தன் தாயை அடகு வைத்து அடிமை வாழ்க்கை வாழும் இழிவான நிலையில் அவன் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டான். அங்கொன்றும் இங்கொன்றுமாய் போர் கொடி பிடித்தான். எதிர்த்த அனைவரும் சிறை வாசம் கொண்டனர்...!


அந்த ஆங்கிலேயனின் மனதிற்கு தோன்றும் புதுவித தண்டனை அனைத்தும் என் இந்திய உடம்பு மேல் சோதனை செய்யப்பட்டது. அவரது கொடுமைகளில் முளைத்த ஒவ்வொரு கொப்புளங்களும், வேதனைகளும் ஒவ்வொரு படிக்கட்டாய் சுதந்திரம் என்னும் வெற்றிக்கு வழிவகுத்தது. என் இந்தியனின் ஒவ்வொரு துளி அழுகையும் அந்த ஆங்கிலேய கொடியேனை தாங்கும் தடிமண்ணை கரைக்க பயணபட்டது.!!

அங்கொன்றும் இங்கொன்றுமாய் எந்த பலமும் இல்லாமல் மன்றாடி, மறித்து நின்று அழிந்துபோய்கொண்டிருந்த இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைக்கப்பட்டனர்.!!

ஒரு மைய புள்ளியை நோக்கி இரு வேறு சக்திகள் மாற்று திசையில் வழிநடத்தியது. அகிம்சை-வன்முறை என்னும் இரு ஆயுதங்கள் கையாளப்பட்டது.!!

எங்கெங்கோ தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்த வெறிகொண்ட குதிரைகளை ஒன்றாக இணைத்ததற்கு காந்தி மற்றும் சுபாஸ் சந்திர போஸ் இருவரின் பங்கு மிகவும் அலாதியானது...!

அகிம்சையை நாடி காந்தி வழியில் வந்த எம் இந்தியன் என்ன சிந்தித்திருப்பான்.? ஒவ்வொரு அடி விழும் போதும் எதிர்த்து அடிக்காமல் ரத்தம் வழிய வழிய 'வந்தே மாதரம்' என்னும் ஒற்றை வார்த்தையை பிதற்றிய அந்த மனித மனங்கள் எதை தாங்கி கொண்டிருந்தன.? சுதந்திரம் என்னும் ஒற்றை இலக்கை மனதில் நிலைத்து வைத்துக்கொண்டு தேங்கிய கண்களின் கண்ணீரை அடக்கி காத்து கொண்டு வாயில் இருந்து ஒவ்வொரு வார்த்தையாக சொன்னான் ''வந்தே மாதரம்'' என்று...!!

மற்றொரு பக்கம்...! எதிர்ப்பது என்றானால் அவன் வழியிலே போவோம். அவன் அடித்தால் நானும் அடிப்பேன். அவன் மிதித்தால் நானும் மிதிப்பேன். அவன் கொடுப்பதை மட்டும் வாங்க நான் மூடனில்லை என்று விழித்தெழுந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கையாண்ட ஆயுதங்களை ஏந்திய படை. ஒரு மாபெரும் போர் படை ஒன்று வீரு கொண்டு எழுந்தது...........

ஒரு பக்கம் எதிர்க்கிறான்-ஒரு பக்கம் அடிக்கிறான்..! அடிமைபடுத்த இனி இங்கு எவனும் இல்லை.! நாம் விடைபெறுவோம் என்று ஆங்கிலேயன் தன் மூட்டை முடிச்செல்லாம் கண்டிக்கொண்டு ஓடுவதாய் அறிவித்தான். அதற்கு அவன் நிர்ணயித்த தேதி தான் ஆகஸ்ட் 15...!

பல நாட்களாய் காலை சுற்றியிருந்தா பாம்பு நஞ்சை ஏற்றி பலரை கொன்று குவித்த பாம்பு திரும்பி வந்த இடத்துக்கே ஓடியது..!


ஆயிரம் ஆயிரம் மக்களின் இரத்தங்களால் கழுவப்பட்ட என் பாரத மாதா கண்களில் வழியும் ஆனந்த கண்ணீரை துடைத்துகொண்டே சிரிக்கிறாள். கோடிகணக்கான உயிர்கள் அங்கே சுதந்திரம் என்னும் ஒற்றை வார்த்தையை மனதில் இறுக பிடித்திருந்த பயனாய், காற்றற்ற இருட்டான அந்த சிறை வாசலில் முத்தமிட்டுகொண்டு சொல்கிறான் எனக்கு சுதந்திரம் கிடைத்ததென்று...!!

வெட்டுண்ட சொந்தங்களின் பிணகிடங்கு சமாதியில் நின்று உச்சி பார்த்து உரக்க கத்துகிறான் நாம் சுதந்திரம் பெற்றோம் என்று..! தோள் மீது துண்டு போட்டு மார்பை விரித்து ஆங்கிலேயனுக்கு கை கட்டி கொண்டிருந்த சாலையிலே ஒவ்வொரு இந்தியனும் கம்பீர பயணம் மேற்கொண்டான்.

ஒவ்வொரு கண்ணிலும் ஆனந்தம்... கண்ணீர்...!! முகத்தில் சிரிப்பு... 300 வருட ஏக்கங்கள்..! ருசிகண்ட நரிகளை நஞ்சித்துவிட்ட சந்தோசங்கள்... அந்த ஆகஸ்ட் 15...!! இன்று...

இந்திய தாயே!! உனை முத்தமிட்டு சொல்கிறேன்.... என் சுதந்திரத்தின் ருசியை உணர்ந்தவனாய்.... வந்தே மாதரம்.........!

Comments

 1. வணக்கம் மச்சி,

  முதலில் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. வீருகொண்டிருந்தால் ஏ ஆங்கில நரிகளே!! தலைதெறித்து அன்றே சிதறி இருப்பீர்கள்.. தெரிவீராக!!//

  வீறு கொண்டிருந்தால்.............

  ReplyDelete
 3. உரை நடைத் தமிழோடு கூடிய கவி நடையில், சுதந்திரத்திற்கு முன்னரான வலிகளையும், சுதந்திரத்திற்குப் பின்னரான மகிழ்ச்சியின் பூபாள ராகத்தினையும் மீட்டியிருக்கீறீங்க.
  அருமையானதோர் தொகுப்பு,

  ReplyDelete
 4. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…