Skip to main content

மனதின் எண்ணங்கள் ஒரு விளையாட்டு பொம்மை...

மனித மனங்கள் ஒரு நேர்கோட்டில் பயணிக்கும் போது அதன் எண்ணங்கள் சீராகவும் என்றும் மகத்தானதாகவும் இருக்கும்....! ஆனால் உண்மையில் பலரும் அறிந்தும் அறியாமல் நடித்திருக்கும் ஒன்று என்னவென்றால் மனித மனங்களால் ஒரே நேர்கோட்டில் பயணிக்க முடியாது. வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் ஏதோ ஒரு நிலைபாடில் மனம் தளர்ந்து போய் தான் விடும். வாழ்க்கையில் இதை விட பெரிய கொடுமை இல்லவே இல்லை என்று தோன்றவைக்கும் அளவுக்கு அது மிக பெரிய வலியாக இருக்கும்....!


ஒருவனுக்கு மிக பெரிய வலியாக தெரிவது மற்றொருவனுக்கு சாதாரணமாக தெரிய கூடும். அதே அவனுடைய கொடிய வலி இவனுக்கு சாதாரணம் என்று தோன்றும்...! இந்த இடத்திலும் மனங்களே கொடிய விளையாட்டினை விளையாடுகின்றது...!

இந்த மனங்கள் வேற்றுமைபடுவதற்கும் வலிகள் கொண்டு செல்வதற்கும் முக்கிய காரணிகளாக இருப்பன அந்த மனதில் எழும் எண்ணங்கள் மட்டுமே!! அந்த எண்ணங்கள் முதலில் சுகத்தினை தரும், பின் வலியினை தரும் அதன் பின்னர் நீங்காத ரணங்களை தரும்....!

அதற்காக அந்த எண்ணத்தை மனதில் கொள்ளாதீர்கள் என்று நான் சொல்லவில்லை...! ஒவ்வொரு எண்ணங்களும் ஒவ்வொரு பாடம்...! நீண்ட நாள் நாம் ஏக்கத்தில் இருந்து தேவையே இல்லை என்று தூக்கி போட்ட ஒன்று அளவுக்கு அதிகமாக நமக்கு வந்து கிடைக்கும் போது கண்டிப்பாக அதை மனம் நாடும். கொண்டாட தோன்றும்...! அது உண்மையானதாக தோன்றிவிட்டால் நம் பயணித்த நேர் கோடு குறுக்கு கோடு எல்லாம் சுக்கு நூறாக நாம் ஏங்கியதை நாடியே நம் பயணம் சீராக அமையும்.

அந்த பயணம் சீராக அமைந்திருக்கும் வரையில் மகிழ்ச்சி தான். ஆனால் அதுவே சில சஞ்சலங்களுக்கு உள்ளாகி பாதை சீரழியும் வகை சென்றுவிட்டால் என்ன ஆகும்.? விரும்பியது... கிடைக்காமல் போனது.. வேண்டாம் என்று நினைத்தது.. கையில் கிடைத்தது... மீண்டும் கைவிட்டு போனது.. இந்த நிலை ஒருவனின் மனதை எந்த அளவுக்கு ரணம் கொள்ள செய்திடும்..?

இந்த இடத்திலும் மனதில் எழும் எண்ணங்கள் விளையாடுகின்றன...! மீண்டும் கிடைத்த நினைவலைகளை எல்லாம் அந்த மனம் தட்டி எழுப்பி ஒருவனை கொலையாய் கொன்று தீர்க்கும். அப்போது அவன் கையறு நிலையில் இருப்பான் என்று தான் சொல்ல வேண்டும். வெறுக்கவும் முடியாமல் நெருங்கி வரவும் வழியில்லாமல் நடைபிணமாக தான் மாறிவிடுவான்....!

சில நாட்களுக்கு முன்னர் அடைமழை காதல் என்னும் தலைப்பின் கீழ் பொசசிவ்னஸ் என்னும் பேயை பற்றி பார்த்தோம். அதை ஒரு எடுத்துகாட்டாக வைத்துகொள்வோம். பொசசிவ்னஸ் வரும் போது அவர் நம்மை விட்டு போய்விடுவாரோ என்னும் பயத்தை மனம் எண்ணமாக நம்மிடம் திணிக்கிறது. மூளை அப்படி எதுவும் நடக்காது என்னும் பொழுதில் கூட பாசத்தின் இடையே நம்மை ஆட்டி படைப்பது மனமே!! தெரிந்தே நாம் அந்த பேயின் பிடியில் சிக்கிவிடுவோம்.

பின் நம் ஆசைகள்...! நம்மவர் தானே நம் விருப்பத்தினை சொல்வதில் என்ன தவறிருக்கிறது என்று அவரிடத்தில் நமக்கு பிடித்தது பிடிக்காதது என்று அனைத்தையும் சொல்ல துணிவோம். அவர் நமக்காக எதையும் செய்வேன் என்று வாக்கு கொடுத்துவிட்டால் போதும் உடனே நம் எண்ணங்களை அழுத்தி சொல்ல ஆரம்பித்துவிடுவோம் அதுவே உறவுகளின் பிரிவுகளுக்கான அழுத்தமாக மாறிவிடும். இந்த அழுத்தம் எங்கு கொண்டு போய் விடும்.? அவனுக்கே தெரியாமல் அவனுக்காக எதையும் செய்வேன் என்று சொன்னவரை அவனை விட்டு விலக செய்துவிடும்.

இது கொடிய வலி தான். அச்சமயத்தில் அதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அவனிடத்தில் எழாது. ஏனென்றால் அந்த அழுத்தத்தை ஏற்றவருக்கு இது முன்னரே சலித்து வெறுத்து எடுத்த முடிவு. ஆனால் நம் வாழ்க்கை, நம்மை விட்டு என்றுமே பிரியமாட்டார், நம் சுக துக்கங்களுக்கு தோள் கொடுப்பவர் என்று நாம் நினைத்திருக்கும் ஒருவர் சட்டென விலகி செல்வது அவன் என்ன ஒரு தைரியசாலி, பக்குவபட்டவனாக இருப்பினும் ஏற்புடையதல்ல.


அதுவும் தனிமையை மட்டுமே ரசித்து, தனிமைக்காகவே வாழ்க்கையை வாழ்பவன் தனக்கென்று அலாதியான சொந்தம் கிடைத்தால் எவ்வாறு நடந்துகொள்வான் தெரியுமா....? முழு வாழ்க்கையே அவர் தான் என்பது போல நடப்பான். அத்தகைய சமயத்தில் அவர் அவனை விட்டு பிரிந்து போனால்-தனிமை என்னும் சொந்தம் கொண்டிருந்தவன் கண்ணீர் விட்டு அழும் அநாதை ஆகிவிடுவான். தனிமையும் அவனை எட்டி மிதிக்கும்-வந்த சொந்தமும் தூர துரத்தும்.

அவன் அந்த சொந்தம் விட்டு பிரிந்தது என்று குறை சொல்லி மட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை. உடனிருக்கும் போதே அதை புரிந்து நடந்திருக்க வேண்டும் தானே..! ஆனால், தனிமையில் வெளியுலகம் மீது பற்றற்று திரிந்தவனுக்கு சொந்தங்களோடு பழக்கங்கள் எவ்வகையில் அமைத்திட வேண்டும் என்று தெரிவது கடினம் தான்.! அதனால் அவன் மீது தவறற்று இருக்கிறது என்று சொல்லவில்லை. அது தவறு என்று அவன் உணருதலே கடினம் என்கிறேன்...!

தனிமையை நாடியோர் மிகவும் கோபமுள்ளவராக அல்லது ரசனை உள்ளவராக இருப்பர். ஆனால் அவர்கள் சொந்தம் என்னும் கோட்டினுள் அடைபடாது இருந்திருப்பர். அத்தகைய சூழலில் சொந்தம் வேண்டும் என்று ஒரு உறவினுள் அவருக்கு அலாதி பிரியம் ஏற்பட்டுவிட்டால் எத்தகைய சக்தி ஆனாலும் அவரை அந்த மனதில் இருந்து மாற்றுதல் முடியாது. அந்த சொந்தம் மீண்டும் கிடைக்க என்ன மாதிரி செய்கைகள் வேண்டுமானாலும் செய்ய துணிவர். தனக்கு இழிவு என்று நினைப்பதையும் இங்கு அவர் செய்ய தயங்கிட மாட்டார். ஒரு சிலர் இருப்பர்...! யாருக்காகவும் தன் செய்கையில் இருந்து மாறுபடாது ஒருவித கட்டுக்கோப்புடன் ஒருவித கம்பீரத்துடன் வாழ்பவர். அத்தகைய நபரே சொந்தம் மற்றும் பாசம் என்னும் கோட்டுக்குள் வந்தால் உடைந்து சுக்கு நூறாக போய் தமக்கு இழிவு தரகூடிய எத்தனை செய்கையை வேண்டுமானாலும் பாசத்திற்காக தருவர்.

உண்மையில் பாசத்தில் திளைத்திருப்பவரை விட அதன் அறியாமல் வாழ்ந்வனுக்கே பாசத்தின் உண்மை ருசி தெரியும். அவனின் நிலையிலிருந்தே பார்ப்போம். பாசமே வேண்டாம் என்றும் தனிமையை நாடி இருந்தவன் என்றும் இருந்தவன் தன் நேசத்துக்கு உரியவரிடம் எனக்கு நீ இப்படி இருப்பது பிடிக்கவில்லை என்று இம்போஸ் செய்வதில் தவறிருக்கிறதா.? அது ஒரு நேசத்தில் எழுந்த வார்த்தை போல தெரியலயா.? இத்தகைய செய்கைகளை அவர் ஏன் செய்கிறார்.? அவர் நம்மை விட்டு போய்விடுவாரோ என்னும் பயத்தில் தானே!! அத்தகைய சமயத்தில் அந்த பாசத்துக்குரியவர் நான் உன்னை விட்டு போய்விடமாட்டேன் என்று நிரூபிக்கும் வகையில் அதிக பாசத்தை தருவது தானே சிறப்பு.. அதை விடுத்து உன் பாசமே என் வாழ்க்கைக்கு முட்டுகட்டை என்று சொல்வது அவரையும் காயபடுத்தி நம்மையும் காயபடுத்திகொள்ளும் செயல் இல்லையா.?

நார்மலான மனிதர்கள் கூட பரவாயில்லை. இந்த தனிமையை விரும்பி உலகத்தை வெறுத்தவர்கள் எல்லாம் ஒரு குழந்தை போல தான் என்று சொல்லவேண்டும். பேச்சுகளும் நடைகளும் கற்றறிருந்தோர் போல இருந்தாலும் பாசம் என்னும் பிடியில் மட்டும் அவர் என்றுமே குழந்தை தான். அத்தகைய பாசம் தன்னை விட்டு போகும் போது அவருக்கு என்ன செயவதென்றே தெரியாமல் விழிப்பது உறுதி. அதுவரை போர்க்கள களிறு போல இருந்தவன் புறமுதுகிட்ட மன்னனாக மாறிடுவான். உலகில் இன்னும் கொடிய சூழல் அதிகம் இருந்தாலும். இதுதான் கொடிய சூழல் என்று நினைத்திடுவான். ஏனென்றால், தனிமையை பழக்கப்பட்டவன் எத்தகைய கொடிய சூழலையும் சந்திக்கும் மனோபக்குவம் பெற்றிருப்பான்- இந்த பாசத்தை தவிர்த்த...!

உண்மையில் இம்மாதிரியான உணர்ச்சிவசப்படும் மூடர்கள் தான் தற்கொலை என்னும் கொடிய இடத்தை பிடித்து தொங்குகின்றனர். உணர்ச்சிவசப்பட்டு தன்னிலை மறந்து அவர்கள் இம்மாதிரியான முடிவுகளை எடுப்பர். இதே பாணியில் இருப்பவர் இன்னொரு முடிவையும் எடுப்பர். அது மீண்டும் உலகம் மேல் வெறுப்பு. நாளை பின்னர் மீண்டும் ஒருவர் வந்து பாச மழை பொழிந்தாலும் அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகத்துனூடே பெறும் வெறுப்பு வந்துவிடும்.

தனிமையை ரசித்தவன் வாழ்க்கையில் பாசம் வந்து மீண்டும் விலகிவிட்டால் மற்ற எந்த சாரரை விட அவனுக்கு வலி அதிகம் தான். கண்டிப்பாக அதன் பின்னர் அவன் வாழ்க்கை சீராக அமைந்திடாது...! இது தனிமை விரும்பிகளாக இருந்து பாசத்தில் அகபட்டவனுக்கு மட்டும் பொருந்தும். அதே சமயம் எதையும் விளையாட்டாக எடுத்துகொள்பவரும், வாழ்க்கையின் நியதியை உணர்ந்தவர்களுக்கும் இது வலியை தரும். ஆனால் இதுவும் கடந்து போகும் என்னும் நிலையில் சீக்கிரமே அவர் புகுந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிடுவர்.

தனிமையில் இருந்தவன் கையறு நிலை கொள்ளும் போது அவன் ஒரு நிமிடம் தெளிவாக சிந்திப்பான ஒரு நிமிடம் முட்டாள் தனமாக சிந்திப்பான். அவனை ஒரு கட்டுக்குள் அடக்க முடியாது. அந்த முட்டாள் தன சிந்திப்பு ஒரு முடிவாக அமையாத வரை அவன் மீண்டு வரும் வரை அவனது வாழ்க்கை நரகம் தான்..! ஆனால் அவனால் மீண்டு வருவது எளிதல்ல என்பது மட்டும் உண்மை...

மனித மனங்களும் அவை ஏற்படுத்தும் எண்ணங்களும் ஒரு விளையாட்டு பொம்மை போல... பார்ப்பதற்கு விளையாட்டாக இருக்கும்....  ஆனால் அந்த எண்ணங்கள், அதான் அந்த பொம்மை உடைந்து விட்டால் ஹி ஹி ஹி...... நாராம்சம் தான்................!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்

Comments

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…