சுடுகாட்டு வெட்டியான்....!
மனதோடு சிந்திய மழைக்காலம்
அங்கு மறவாமல் நின்றேன் தினந்தோறும்..!
சுடரிட்டு எரியும் கனலோரம்
என் சுதந்திர வாழ்க்கை அரங்கேறும்!

எரித்தன் புசித்தன் ஏலனித்தான்
அவன் இறுதி எம்மை அடைவதறியான்..!
என் கை அடி பெறாத வெற்றுடம்பு
காற்றோடு கலந்திடாது என்று அவனறியான்..!

ஆயிரம் ஆயிரம் பெயர் பெறுவான்
என்னடி பணிகையில் ஒற்றை பெயர் கொள்வான்.!
சாதி மத சாத்தான் பிடியறுந்து
கண்ணீர் சிந்தும் உறவிடையே
என்னை நாடி வந்து காத்திருப்பான்...!

வருபவன் எல்லாம் என் சொத்து..!
வாஞ்சையோடு அழைத்து
வர்ண அலங்காரம் பூசி
ஒப்பாரி அலப்பறை நடுவே
ஓயாமல் சிதறிகிடக்கும்
என் வேலை துளிகள்!

என் புனித வேலைகளில்
ஆயிரம் அலறலும் அழுகையும்!
நிம்மதி அற்று தவித்தேன்...

என்று கிடைத்திடுமோ நிம்மதி...?
எனக்கான என் வேலையை
மாற்றான் என் மீதே செய்திடும் போதே
கிடைத்திடும் அவ்வரிய நிம்மதி....!

காத்திருக்கிறேன்...! நிம்மதிக்காக...!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. இதுக்குதான் இன்னிக்கு என்ன நோண்டுனியா.....

  இவ்ளோ திறமை இருந்தும் என்னா ஒரு நடிப்பு....

  ReplyDelete
 2. ஏளனமா? ஏலனமா ? கவிஞனே

  ReplyDelete
 3. @பிரபு: இதுக்காக நோண்டல.. அது வேற ஒரு மேட்டரு.. அதுல நீ வந்து சிக்கிட்ட.. திறமையா..? எங்க எங்க இருக்கு..?

  இந்த ஸ்பெல்லிங் மட்டும் கரெக்டாவே வர மாட்டேங்குது மச்சி.. வேகத்துல எழுதும் போதெல்லாம் பட்டுனு ஏலனம்னே தான் வருது... கவிஞனா..? ஹி ஹி.. காமெடி காமெடி...

  உன்ன போல தமிழ்ல புலமையா இருக்க முடியலயே!! அவ்வ்வ்

  ReplyDelete
 4. தல சரியாகப் பார்க்காமல் கவிதை படித்த போது பிகாசா!
  ஒட்டியது சுடுகாட்டு வெட்டியான்!

  ReplyDelete
 5. நிம்மதிவிரைவில் கிடைக்கட்டும் கூர்மதியானே! 

  ReplyDelete
 6. நிம்மதிவிரைவில் கிடைக்கட்டும் கூர்மதியானே! 

  ReplyDelete
 7. வணக்கம் நண்பா,
  நல்லதோர் கவிதை...எல்லோரையும் எரிக்கும் ஒருவனிற்கு,
  தான் எப்போது எரிகிறேனோ...அப்போது தான் அவன் மனதில் நிம்மதி கிடைக்கும் என்பதனை சந்தம் கலத்து உரைத்து நிற்கிறது உங்கள் கவிதை.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!