Posts

Showing posts from September, 2011

மனிதன்

Image
விண்ணோடு மிதந்தேன்,
காற்றோடு கலந்தேன்,
இயற்கை எனதானது
எல்லாம் எதனாலே.!?

மரத்தை காதலித்தேன்
மற்ற மனிதரை காதலித்தேன்
வறுமையை காதலித்தேன்
இகழ்ச்சி, புகழ்ச்சி, இன்பம், துன்பம்
என காணும் அனைத்தையும் காதலித்தேன்.!

காரணம் என்னவோ.?
சிந்தனையாளன் என்றனர் சிலர்,
பொதுநலவாதி என்றனர் சிலர்,
மாறுபட்ட விந்தையானவன் என்றனர்,
பித்தன் என்றும் பெயர் வந்தது..

ஆனால்,
உள்ளுக்குள்ளே ஒரு குரல்
'மனிதனானாயடா.!!' என்று உரக்க ஒலிக்கிறது.!!
அன்புடன், தம்பி கூர்மதியன்.

உண்ணாவிரதம்-வலுவான ஆயுதமடா..!

Image
அங்கே வஞ்சிக்கப்பட்டு துடி துடித்துக்கொண்டிருந்த என் வீர இந்திய மகனை துடி துடிக்க தெருக்களில் எச்சம் திண்ணும் நாயைவிட இழிவாக நடத்திய ஆங்கிலேய அடக்குமுறையை எதிர்த்து சினம் கொண்டு நின்றான் என் வீரு கொண்ட இந்திய படை. ' நீ அடித்தால் நானும் அடிப்பேன்.. நீ மிதித்தால் நானும் மிதிப்பேன்.. பூட்ஸ் கால்களுக்கு என் உழைத்து முரடான உள்ளங்கால் சலித்து போகாது' என்று வீரவசனம் பேசி எதிர்த்த ஒவ்வொரு வெள்ளை கைகளையும் வெட்டி அடக்குமுறையை வேறோடு அழிக்கவே துணிந்தான்.

உன்னுடைய எந்த ஒரு அடக்குமுறைக்கும் அடங்கி போக வேண்டியவன் நான் இல்லை. என் கால்களில் நீ பதிக்கும் ஒவ்வொரு அடிக்கும் உன் கன்னங்கள் பழுத்து கொண்டு தான் இருக்கும் என்று ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த வெள்ளையனை வஞ்சிக்க நினைத்து கொண்டிருந்தான் எம் இந்திய மகன்.

அது வரை அது ஒரு சாதாரண எதிர்ப்பாக தான் தெரிந்தது. அதன் பின் காற்றடித்தால் பறந்திடும் அளவிற்கு ஒரு ஆண்மகனை பார்த்தேன். அவன் செய்த செய்கை எல்லாம் ஒரு வித்யாசமான போராட்டமாக என் கண்ணில் பட்டது. என்ன தான் செய்கிறான் என்று நான் அவனை உற்று நோக்கும் முன்னே அவன் பின்னால் மக்கள் திரளாக திரண்டுவிட்ட…

ஒற்றை போராளி

Image
தேங்கிய குட்டை ஒன்றிணைந்து
ஓங்கிய ஓடையானதோ..!?
காற்றிலயர்ந்த இறகிணைந்து
விசிறியாக காற்றை அவதரித்ததோ..!?

தேடிய கணமெதுவோ? அங்கு தேயாத விடை கண்டேன்..! சாடியது பாதைதானோ? அதை ஓயாமல் கடந்துவிட்டேன்..!
நஞ்சிக்கும் கரையானை நசுக்கிடவே துணிந்துவிட்டேன்..!
உச்சிப்பொட்டில் அடித்ததாரோ..!? உயிரென்று சுதந்திரத்தை தேடியதோர் பயணம் கொண்டேன்..!
மாயை மாயை சுற்றிய உலகு அங்கு மாண்டுவிட்ட உணர்ச்சி கண்டேன்..! தேயுதோர் தேயுதோர் மனமங்கே அது நோவுதே நோவுதே என கதறிட்டேன்..!
சீரென சிந்தை சீரழிந்ததோ..!? என் படை வீரனனைத்தும் சமூக சிந்தையற்று வீங்கினரோ..!!?
சே! சே! சே! அற்ப பிறவியே..! அவதரித்ததேனோ அகலிடம் புகலதானோ.!?
து! து! து! உனை உமிழ்கிறேன்..! உணர்வுக்குள் எந்த மாயையை ருசிக்கிறாயோ.!?
சீ! சீ! சீ! சீண்டிட துணியானே..! கொள்ளும் சிந்தை மறந்த சீழ்நாயே.!?
அண்டத்தில் அவதரித்ததேனோ..!? சுகம் கொரித்து சினம் மறந்தாயோ..!? கொடை கொண்ட நேரத்திலே படையழித்து நின்றாயே! சுக்குநூறாய் எதிராளி சீரழிக்கும் சினங்கொண்ட சூறாவளி என்றிருந்தேன் ஒற்றை சுவரில் முட்டிய முட்டாள் வீரன் நீ என்பதை உணர்ந்துகொண்டேன்..!

என்ன வேண்டும் இந்த மனித மனதிற்கு.?

Image
புரியாமல் நீங்கள் எங்கேனும் முட்டிக்கொண்டு நிற்கிறீரா.? நினைத்த காரியத்தை உங்களால் தெளிவுபட முடிக்க முடியவில்லையா.? தெருவில் பார்ப்பவர் எல்லாம் உங்களை ஏதோ வேற்று கிரகத்து வாசி போல பார்த்துக்கொண்டு இருக்கிறானா.? சரியான பாதை என்று தவறான பாதையை தெரிந்தே பயணித்துக்கொண்டிருக்கிறீரா..? இதை வர்ணிக்க மற்றவர் பயன்படுத்துவது உங்கள் 'செய்கைகளை' தான்.

அப்படி ஒரு சூழல் உங்களுக்கு உருவாகும் போது அவனிடம் சென்று அவனை உங்கள் கை வலிக்கும் வரை பொளீர் என்று ஓங்கி அறைந்து கொண்டே இருங்கள். காரணம் என்னவென்று கேட்டால் தைரியமாக சொல்லுங்கள். 
''ஏன்டா.. 'மனம்' பண்ணுறதுக்கெல்லாம் என் 'செய்கை'யை குறை சொல்லுறீங்க..?''
செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு பழைய தமிழ் பட வில்லன் மாதிரி மறைஞ்சு இருந்துட்டு பெக்க பெக்கனு சிரிக்கிறதுக்கு இன்னொரு பெயர் என்னனு கேட்டா தைரியமா சொல்லாம் அதுக்கு பெயர் 'மனம்' என்று.
இது தான் சரி என்று 'மூளை' எடுத்து சொல்லும். அப்போது வரை நம் 'செய்கை'யும் அதன் சொல்படியே கேட்டு வரும். ஆனால், அப்போது முண்டி மோதிக்கொண்டு 'மனம்' என்று ஒ…

புழுதி காலங்கள்-2

Image
எனக்கு என் பள்ளி வெளியுலகத்த சொல்லி கொடுக்க படாத பாடு பட்டுச்சுனு தான் சொல்லணும. ஏன் அப்படி சொல்லுறேன்.? ஏனா நான் வகுப்பறைன்னு அதிகமா உக்காந்தது இல்ல. எங்களுக்கு முழுசா கட்டி முடிக்காத எங்க ஸ்கூலை அலங்கரிக்க காத்துகிட்டு இருக்குற அந்த செங்கல் அடுக்கி வச்சிருக்கிறத இடத்துக்கு பக்கத்துல இருக்குற மரம் தான் எனக்கு க்ளாஸ் ரூம்.


க்ளாஸ் ஆரம்பிச்சு முதல் வகுப்பு பையனுக்கு போர்ட் பக்கத்திலே போகாம க்ளாஸ் எடுத்த ஆசிரியர்கள், என்னை தூக்கி வச்சு கொஞ்சுற டீச்சர்ஸ், என்னோட கூட பழகி முட்டி மோதி கீழ விழுந்து இனிமே உன் கூட பேசமாட்டேன்னு சொல்லி 'கா' விட்ட நண்பர்கள், என்னோட சாப்பாட்டு பையிலிருந்து என்கிட்ட கேக்காம என் பாட்டில எடுத்து தண்ணிய காலி பண்ணின என் எதிரி பொண்ணு எல்லாம் இன்னும் நினைக்க நினைக்க இனிக்குது.


எனக்கு சின்ன வயசுல ஒரு பழக்கம். நடக்கும் போதும் இல்ல ஏதாவது முக்கியமான வேலை செய்யும் போது வாய 'பே'ன்னு திறந்து வச்சுகிட்டே இருப்பேன். அத கிண்டல் பண்ணுறது எங்க வீட்டுலயும் சரி எங்க வாத்தியார்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.


'' டே வாய மூடுடா ஆயிரம் கொசு வாயில போய் மூக்கு காது வழியா வ…

விந்தை

Image
வரிகள் தேடா
வார்த்தைகள் தேடா
விழிகள் தேடா
விந்தையானதோ.!

மனமும் காணா
மார்கமும் காணா
மிகையதும் காணா
சூத்திரமானதோ.!

எண்ணம் மறவா
ஏற்றமும் அறியா
என்ன ஆனதோ
எந்தன் வாழ்க்கைக்கு.!?
அன்புடன், தம்பி கூர்மதியன்.

முடிவு

Image
உணர்வுகள் சிரிக்குதே
ஏளனம் உணருதே
வாழ்க்கை-தேட தோணுதே!!

பாசம் தேடி சென்றிடும்
நானோ கானல் பறவையோ.!?
நெஞ்சம் அகண்டு சுருள்வதேனோ!!?

கண் இமையில் நானும் வைக்கிறேன்
கடல் நடுவே என்னை கொள்கிறாய்
வேற்று பாசமை புரிவதில்லையா.!!?

புரியாத பாசமொன்று
எனக்குள்ளே கொண்டுவிட்டேன்
பிரித்தெடுக்க முடிவதில்லையே!!!
காரணம்-காந்த உணர்வு தானோ.!!!?

என் சொல்லி நானும் அழுகிறேன்
ஏன் இந்த துயரை நானும் கொள்கிறேன்
புரியாமல் இன்றும் பிதற்றினேனே!!!

உள்நெஞ்சம் தேடும் சுகத்தினை
உணர்வோடு பகிர நினைக்கிறேன்
கோப கனலாய் நினைப்பது ஏனடா!?

எங்கோ ஒரு மூலையில்
ஒடுங்கி நிற்க தோன்றவில்லை
கண்ணிலே வைத்து இருக்கிறேனே!

காற்றிலே கலந்து நிற்கிறாய்
உரிமை ஏற்று துடிக்கிறேன்
உணர்வின் உரிமை புரிவதில்லையா.!?

இனி,
கேள்விகள் அற்று நிற்பேன்
உள் கேள்விகள் கொண்டு நிற்பேன்
உனக்காக என்றும் தாங்கி கொள்வேன்.!!
அன்புடன், தம்பி கூர்மதியன்

முகத்திரை மனிதன்

Image
முத்தெடுக்க மூழ்கிட்டேன் நானே!
கண்டெடுத்தேன்-வெள்ளை சிப்பியொன்றை
மகிழ்வுணர்வு உள்தெளித்திட்ட தோரணையில்
கண்கள் மூடி உச்சி நோக்கிட்டேன்..
உச்சி ஆதவன் உள்முகர்ந்தான்
சிப்பிக்குள் முத்தில்லை முகத்திரை என்றான்.!!!!!
உள்ளுக்குள் மீண்டும் இன்னொரு பயணம் தொடர்ந்திட்டேன்
உண்மை முத்தை தேடி...!

அன்புடன், தம்பி கூர்மதியன்.

குழப்பம்

Image
பட்டச்சுவரெங்கும் பூத்துக்குலுங்க
ஒற்றைமரமாக நானோ இங்கு
கண்ணில் துணையற்று
தேடி முற்பட்டு
இன்றும் களைகிறேன்,
அன்று சிரித்து பேசிய ஒற்றை கருப்பாட்டை.!! புதுசொந்தம் கொண்டதுவோ.!? என் சொந்தம் மறந்திடுமோ.!? கூட்டுக்குருவி,ஏட்டுமாணவன் என்றிடமாட்டேன் சிக்குண்ட சிறுபாசம் தான்..!! என்னை சொந்தம் ஏற்றிட மறுத்தாடு புதுசொந்தம் பல கொண்டுள்ளது.!! ஏற்றிட மறுத்த மனம் ஏற்புடையானதோ.!? அந்த ஏற்புமைக்கு தகுதியற்றேனோ.!?
அடுத்த ஆட்டுக்கூட்டம், அந்த அலங்கார கூடத்திலே புன்னகைக்கும் விநாடிகளின் இடையே புதுசொந்தம் கூட அவதரிக்குமாம்.!!! என் உள்ளுக்குள் தேயும் கனலறியா பிதற்றும் என் இனிய கருப்பாடு.!! என் சொந்தம் ஏற்கா ஆட்டை ஒதுக்கிட துணிந்தேன்.. ஆனால், இன்று என் ஆற்றாமையை வெறுக்கிறேன்.!!
என்ன செய்ய.!?

மௌனித்திருக்க விரும்புகிறேன்...!

Image
பரபர கால்கள்
வெளியெங்கும் நடக்க
உள்ளுக்குள் பதற்றம்
என் சொல்ல துடிக்க..!?
ஜீவித்திருக்கும் சிசுவின்
'வீல்'என்ற சப்தம் பின்பு
அங்கெங்கும் கலந்திருக்கும்
புன்னகை மௌனம்.!!!

விட்டில் பூச்சி சிறார்கள்
தவறித்திருக்கும் தருவாயில்
ஆசானின் அதட்டலின் முடிவாய்
அங்கொன்று தோன்றும்
பயமுற்றிருந்த மௌனம்.!!!

உற்றவன் உயிர்நீத்தான்
செய்தி செவிபாய
உணர்வுகள் உணர்ச்சியற்று
அங்கே தோன்றும்
அதிர்ச்சி மௌனம்.!!!

துக்கம் கொண்டிற்று
தூக்கம் தவறிற்று
நினைவுகள் சூழ்கொடியாக
தோன்றி மறையும் அங்கே
அழுகை மௌனம்..!!

மௌனித்திருக்கும் தருவாய்
மௌனத்தை கொண்டிருக்கும்போது
ஆயிர மௌன வார்த்தைகள் பேசுகிறதே.!!
மௌனம்-மௌனிக்காத இன்பம் தான்...

மௌனித்திருக்க விரும்புகிறேன்
மௌனம் என்னை மௌனிக்காதபோதும்.....!!

புழுதி காலங்கள்-1

Image
என் சொந்த ஊருன்னு எனக்கு தெரிஞ்சது எங்க 'சாத்தமங்கலம்' என்னும் ஊர் தான். விருத்தாசலம்-சிதம்பரம் இடைபட்ட இடத்தில இருக்கிற ஒரு சின்ன கிராமம். அங்கிருந்து தான் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சேன்.

என் வாழ்க்கையில முதல் முதல்ல நான் ஸ்கூலுனு காலடி எடுத்து வைத்தது எங்க 'செவன்த் டே' (SEVENTH DAY) ஸ்கூல் தான். காலடி எடுத்து வைத்தேன் என்று சொல்வதை விட கால ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்து தூக்கி கொண்டு போய் பெஞ்சுல வச்சு அமுக்கிட்டாங்கனு சொல்லலாம். ஸ்கூல் சேத்தியோதோப்புல இருக்கும். அதுக்கு பிறகு பஸ் புடிச்சு தான் தனியா ஓடி வந்திடுவன்.
அப்ப குழந்தைகளுக்கே உரித்தான அரிதான பழக்கங்கள் எனக்கு உண்டு. சட்டை நுனியை கடிப்பது, 'டை' கடிப்பது, பென்சிலை திண்றுவிடுவது, ரப்பரை கிள்ளி போடுவது, மண்ணுல விழுந்து புரண்டு எழுந்து சிரிப்பது போன்ற அந்த காலங்கள் மிக சிறப்பானது.
காலையில வெள்ளை கலர்ல போட்டுட்டு போற சட்டை என்னைக்குமே அதே கலர்ல திரும்ப வந்துச்சுனு சொல்ல முடியாது. எல்லாமே ஒரு வித அனுபவம் தானே.! ஆனா அடுத்த நாளே பாத்தா திரும்ப சட்டை வெள்ளை கலர்ல இருக்கும். என்னடா இதுனு பாத்தா.. அம்மா தினமும் …

அம்மா

Image
எண்ணம் எழுத்து எமதாயின்
அதன் உரு உனதானதென சொல்வாய்..!

குரலும் கருத்தும் எமதாயின்
அதன் உணர்வு உனதானதாக சொல்வாய்..!

சீற்றமும் சிறகும் எமதாயின்
அதன் செவிகள் என்றும் உனதென்றே சொல்வாய்..!

எல்லாம் உனதென்றாய்...!
இங்கு யாமே உன்னால் தான் என்றாய்...
கவிகள் எனதென்றேன்
அதன் கருப்பொருள் நீயென்றாய்..!
எல்லாம் எனதாக நான்சொல்ல
அவையனைத்தும் உனதானது என்கிறாய்..!

ஒப்புக்கொள்ளாத உண்மையாக
என்றும் உன்னோடு கேலிகளும் சிரிப்புகளும்..!

உள்ளுக்குள் தோன்றும்...!
எனதானதெல்லாம் எனதுதானென்றும்
உனதாக நீ சொல்வதும் எனதுதானென்றும்...
ஆனால்,
யாமே உன்னதாக இருக்கையில்
எம் கருத்தும் உன்னது தானம்மா..!

செல்லதொரு சண்டைகள்
அறியாமை விழிகள்
சின்னதாய் கோபங்கள்
எதிரெதிர் கற்பிப்பு
சில நேரத்து குழந்தை பேச்சு
தினம் தினம் நிகழ்வின் விமர்சனங்கள்
அனைத்தும் பிடித்தமை உன்னது குழந்தையாய்
உனை முழுதும் பிடிக்குமென சொல்கிறேன்...!

அம்மா,
மாறிவரும் காலங்களில்
உன் மாற்றங்களை விரும்பாமல்
ஒரு விலகல் உருவானதோ...!
விலகலற்ற என் பழைய அம்மாவை
விரும்பியவனாக சொல்லி மகிழ்கிறேன்...

என் அன்பு அம்மாவிற்கு-பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

அன்புடன்,
தம்பி கூர்ம…