Skip to main content

புழுதி காலங்கள்-1


என் சொந்த ஊருன்னு எனக்கு தெரிஞ்சது எங்க 'சாத்தமங்கலம்' என்னும் ஊர் தான். விருத்தாசலம்-சிதம்பரம் இடைபட்ட இடத்தில இருக்கிற ஒரு சின்ன கிராமம். அங்கிருந்து தான் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சேன்.


என் வாழ்க்கையில முதல் முதல்ல நான் ஸ்கூலுனு காலடி எடுத்து வைத்தது எங்க 'செவன்த் டே' (SEVENTH DAY) ஸ்கூல் தான். காலடி எடுத்து வைத்தேன் என்று சொல்வதை விட கால ஒருத்தர் கையை ஒருத்தர் பிடித்து தூக்கி கொண்டு போய் பெஞ்சுல வச்சு அமுக்கிட்டாங்கனு சொல்லலாம். ஸ்கூல் சேத்தியோதோப்புல இருக்கும். அதுக்கு பிறகு பஸ் புடிச்சு தான் தனியா ஓடி வந்திடுவன்.

அப்ப குழந்தைகளுக்கே உரித்தான அரிதான பழக்கங்கள் எனக்கு உண்டு. சட்டை நுனியை கடிப்பது, 'டை' கடிப்பது, பென்சிலை திண்றுவிடுவது, ரப்பரை கிள்ளி போடுவது, மண்ணுல விழுந்து புரண்டு எழுந்து சிரிப்பது போன்ற அந்த காலங்கள் மிக சிறப்பானது.

காலையில வெள்ளை கலர்ல போட்டுட்டு போற சட்டை என்னைக்குமே அதே கலர்ல திரும்ப வந்துச்சுனு சொல்ல முடியாது. எல்லாமே ஒரு வித அனுபவம் தானே.! ஆனா அடுத்த நாளே பாத்தா திரும்ப சட்டை வெள்ளை கலர்ல இருக்கும். என்னடா இதுனு பாத்தா.. அம்மா தினமும் நம்ம உடம்புக்கு சோப்பு போட்டு குளிக்குற மாதிரி துணியையும் குளிக்க வைப்பாங்கனு அப்ப தான் தெரிஞ்சுது.

அட.. செம ல.. அம்மா சொல்வாங்க..! குழந்தையில நான் வெள்ளையா இருப்பேனாம். அப்பரம் மாரியாத்தா என் மேல இறங்கி தான் நான் கருத்து போயிட்டேனு சொல்லுவாங்க. அப்ப நானும் அந்த துணிய குளிக்க வைக்கிற சோப்ப போட்டு குளிச்சா நானும் வெள்ளையாயிடுவேன்லனு யோசிச்சிருக்கேன்.

எங்க ஊர்ல இருந்து ஸ்கூலுக்கு போக பஸ் போற ரோட்ட க்ராஸ் பண்ணி பஸ் ஏறி அடுத்த ஊருக்கு தான் போயாகணும். அந்த ரோட்ட தனியா க்ராஸ் பண்ணிட்டா என் மனசில ஏதோ பயங்கரமா சாதிச்சட்டதா ஒரு பெரிய ஃபீல் இருக்கும். அன்னைக்கு சாயங்காலம் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பெரிய சாதனை போல சொல்வேன். அத்தனையும் அம்மா பொருமையா உக்காந்து கேப்பாங்க.! என் கூட சேர்ந்து என் முக பாவனைக்கெல்லாம் அவுங்களும் முக பாவனை செய்யுற விதம் அடடா அம்மா சூப்பர்ல..!

எனக்கு அப்போ இருந்த ஒரே எதிரி எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டரு. எப்ப பாத்தாலும் சட்டைக்கு கஞ்சி போட்ட போல வெரப்பா திரிவாறு. என்ன தான்யா உன் ப்ராப்ளம்னு சட்டைய புடிச்சு பொலுக்கு பொலுக்குனு கன்னத்துல அறையணும் போல இருந்துச்சு. அந்த ஆளு பத்தாதுனு அவரு பொண்டாட்டி வேற கூட சேர்ந்துகிட்ட கொடுமை படுத்தும்.

நீங்களே சொல்லுங்க.. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போகும் போது எல்லா குழந்தைகளும் சந்தோசமா ஓடுவாங்களா? இல்ல வாயில விரல் வச்சுகிட்டு வரிசையா எறும்பு கூட்டம் போல போவாங்களா..? குழந்தைங்க என்சாய்மண்ட கெடுக்கிறதே வேலையா போச்சு இவிங்களுக்கு. எதிரி அப்படினு பதிஞ்ச முதல் உருவம் அவுங்க ரெண்டு பேர் உருவம் தான்...!

(புழுதி-இன்னும் எழும்பும்)

அன்புடன்,
தம்பி கூர்மதியன்


Comments

 1. சிறுவயது ஞாபகங்கள் கிளறுகின்றன..

  ReplyDelete
 2. அட.. செம ல.. அம்மா சொல்வாங்க..! குழந்தையில நான் வெள்ளையா இருப்பேனாம். அப்பரம் மாரியாத்தா என் மேல இறங்கி தான் நான் கருத்து போயிட்டேனு சொல்லுவாங்க. அப்ப நானும் அந்த துணிய குளிக்க வைக்கிற சோப்ப போட்டு குளிச்சா நானும் வெள்ளையாயிடுவேன்லனு யோசிச்சிருக்கேன்.//

  அவ்....போய்யா ஓவரா லொள்ளு பண்றாய்...

  ReplyDelete
 3. புழுதிக் காலங்கள்: பள்ளிக் கால நினைவலைகளைச் சுமந்து, ஹெட் மாஸ்டரின் கொடூரத்தை மீட்டுப் பார்த்து நடை போடுகின்றது. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. சின்ன வயசு நினைவுகள் என்றும் இனியவைதான் :)

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மெரினாவில் ஓர் இரவு! போராட்டக்களம்..

மாலை 6.30 மணி.
இரண்டு கிலோமீட்டர் முன்னிருந்தே பேரணியாக பலர் சென்றுக்கொண்டிருநனர். அங்கங்கே தன்னார்வாலர்கள் நின்று அறிவிப்புகள் செய்துக்கொண்டிருந்தனர். சட்டையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசக மற்றும் படம் பதிப்பை இலவசமாக நண்பர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்திவிட்டு நாங்களும் இணைந்துக்கொண்டோம் நடைபயணத்தில்.
கோஷங்கள் எழுப்பபட்டன. ஆளும் வர்கத்தை எதிர்த்தும், சர்வதேச அரசியலை கேலியாக விமர்சித்தும் கோஷங்கள் போடபட்டன. அப்பொழுதே கிளப்பிவிட்டன நம் ரோமங்களை. அங்கங்கே சில தகாத வார்த்தைகள் இருந்தாலும், அவை தோழர்களின் கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு முறை என்று உணர்ந்து நடந்தோம். கோபத்தை நாகரீகமாக சொல்லும் தமிழ் இனம் என்பதை தோழர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
எங்கும் நுழைய முடியவில்லை. குடும்பமாக, நண்பர்களாக, தன்னார்வலராக என எங்கினும் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. மத்திம பகுதி விவேகானந்தர் இல்லம் தான் எனினும் கலங்கரை விளக்கத்திலிருந்தே அலைகடலென மக்கள் மட்டும் தான் தெரிந்தார்கள்.
நாங்கள் முன்னேறினோம். அங்கங்கே தோழர்கள் பதாதைகளை பகிர்ந்துக்கொண்டார்கள். கோஷ முழக்கமிடையே நாங்கள் முன்னேறி …

ஏழு நாட்கள்...

என் பெயர் ரகு. அடிக்கடி இரவு வரும்பொழுது ஒரு இனிப்பு என்று வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீடும் ஏறும் அளவுக்கு எனக்கு குடும்பமும் இல்லை. அந்த அளவுக்கு மகிழ்வும் வந்ததில்லை. அதே சமயம், வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என வருந்தும் அளவுக்கும் ஒரு கவலை வந்ததில்லை. வாழ்க்கை என்னும் போக்கில் நாட்களை கடந்து செல்லும் நீங்கள் பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் தான் நான்.
அம்மா ஊரில். இங்கு தனியாக ரூம் எடுத்து தங்கியிருக்கிறேன். கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்னற இக்கால வாழ்க்கை டெக்னாலஜி எதுவும் அண்டாத ஒரு பிரஜை. என்னிடம் இருக்கும் சொத்து என்று சொன்னால் ஒரு மூன்று செட் துணி, ஒரு ஜோடி ஷூ மற்றும் செருப்பு, ஒரு பர்ஸ் மற்றும் ஒரு கைகடிகாரம். இதில் எதில் பாதிப்பு வந்தாலும் உடனே மாற்று வாங்கிவிடுவேன். வேறு எதுவும் செலவு இல்லை. சமீபத்தில் தொலைந்த கடிகாரத்திற்கு பதிலாய் மற்றொன்று குடிக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.
அன்று அலுவலகத்தில் இருந்தேன்.
‘ரகு… உன்ன சார் உள்ள கூப்பிடுறாரு..’ சக அலுவலர் வந்து சொன்னார்.
‘ரகு… நீங்க சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. ஃபீல்ட் சமயம் இப்போ சரியில்ல. வேலைய விட்டு எல்லாரையும் தூக்கிட்டு இருக்காங…

ஒரு அப்பாவின் வாழ்க்கை

நான் கடைசியா இந்தியா வந்து ஒரு வருசம் கடந்துருச்சு. இப்போ நான் கிளம்பிட்டேன். என்னோட இந்தியாவுக்கு, என்னோட ஊருக்கு, என் சொந்த மண்ணுக்கு போறேன். அதைவிட சந்தோசம் நான் என் அப்பாவ பாக்க போறேன். நினைக்கிறப்பவே மனசு சில்லுனு இருக்கு. அப்பா…
என் அப்பா ஒரு கூத்து ரசிகர். ஊருல நடக்குற ஒரு நாடகம் கூத்து எதையும் விடமாட்டார். அன்னைக்கு ஊருக்குள்ள சங்கரன் குழுவோட நாடகம் நடந்துச்சு. மகாபாரத கதை. கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உபதேசம் சொல்லிகிட்டு இருந்தாரு.
’கத்தும் நீதிகூட்டம் காட்டில் ஒரு குரங்காட்டம் ஒன்னு ஆடுது நாட்டில் மழியும் உலகம் ஆட்சி அதை அழிக்கத்தான் புறப்படும் தர்மத்தின் கோட்டை கத்தும் கதமறுக்கும் காட்டில்’
’ஆதாகபட்டது வில்லை ஏந்திக்கொண்டு யோசித்து நிற்கும் அர்ஜூனனிடம் கிருஷ்ணன் சொல்கிறான்.’
‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என நாடகம் உச்சகட்டத்தில் அக்கால உடையோட நடந்துகிட்டிருந்தப்போ மேடையில ஒருத்தர் இக்கால உடையோட நடந்து வந்து கிருஷ்ணன் காதுல ரகசியம் பேசினாரு. இது என்னடா மகாபாரத்ததுல ஒரு திருப்பம்னு கூட்டமே உத்து பாத்துகிட்டு இருந்தப்போ, கிருஷ்ணர் மக்கள் கூட்டம் இரு…