புழுதி காலங்கள்-2

எனக்கு என் பள்ளி வெளியுலகத்த சொல்லி கொடுக்க படாத பாடு பட்டுச்சுனு தான் சொல்லணும. ஏன் அப்படி சொல்லுறேன்.? ஏனா நான் வகுப்பறைன்னு அதிகமா உக்காந்தது இல்ல. எங்களுக்கு முழுசா கட்டி முடிக்காத எங்க ஸ்கூலை அலங்கரிக்க காத்துகிட்டு இருக்குற அந்த செங்கல் அடுக்கி வச்சிருக்கிறத இடத்துக்கு பக்கத்துல இருக்குற மரம் தான் எனக்கு க்ளாஸ் ரூம்.


க்ளாஸ் ஆரம்பிச்சு முதல் வகுப்பு பையனுக்கு போர்ட் பக்கத்திலே போகாம க்ளாஸ் எடுத்த ஆசிரியர்கள், என்னை தூக்கி வச்சு கொஞ்சுற டீச்சர்ஸ், என்னோட கூட பழகி முட்டி மோதி கீழ விழுந்து இனிமே உன் கூட பேசமாட்டேன்னு சொல்லி 'கா' விட்ட நண்பர்கள், என்னோட சாப்பாட்டு பையிலிருந்து என்கிட்ட கேக்காம என் பாட்டில எடுத்து தண்ணிய காலி பண்ணின என் எதிரி பொண்ணு எல்லாம் இன்னும் நினைக்க நினைக்க இனிக்குது.


எனக்கு சின்ன வயசுல ஒரு பழக்கம். நடக்கும் போதும் இல்ல ஏதாவது முக்கியமான வேலை செய்யும் போது வாய 'பே'ன்னு திறந்து வச்சுகிட்டே இருப்பேன். அத கிண்டல் பண்ணுறது எங்க வீட்டுலயும் சரி எங்க வாத்தியார்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.


'' டே வாய மூடுடா ஆயிரம் கொசு வாயில போய் மூக்கு காது வழியா வெளிய வருது''னு கிண்டல் பண்ணுற வாத்தியாருங்க முகம் ஞாபகம் இல்ல. அவுங்க குரல் இன்னும் என் காதில் உலைகளில் புகுந்து கண்ணில் ஏறி கண்ணாமூச்சி ஆடுகிறது.


பள்ளி கூட வாசல தாண்டிட்டா அடுத்தது என் மனசுல தோணுற எண்ணம் என்ன? வீட்டுக்கு போகணும்னு தான். ஆனா நான் கொஞ்சம் வித்யாசமானவன். 1வது படிக்கும் போதே ஸ்கூல் விட்டு வரும் போதே இன்னைக்கு க்ளாஸ்ல என்னென்ன நடந்ததுனு நினச்சு நினச்சு மொனகி கிட்டே வருவேன். காரணம்.? நேரா வீட்டுக்கு போய் அம்மாகிட்ட ஒண்ணு விடாம எல்லாத்தையும் சொல்லணும்.


அட.. அதுல இருக்க சுகம் உங்களுக்கு என்னங்க தெரியும். நான் பஸ்ல வந்து இறங்கும் போதே எங்க பாட்டி வந்து கால் கீழ வைக்கிறதுக்கு முன்னாடி தூக்கிடுவாங்க. வீட்டுக்குள்ள போகும் போதே அம்மா பால் வச்சுகிட்டு நிப்பாங்க. அப்படியே தெரு முனையில பாட்டி என்னைய கீழ இறக்கி விட ஓடி போய் அம்மா மேல ஏறிப்பேன். என்னை அப்படியே வீட்டு திண்ணையில உட்கார வச்சி சிரிச்சுட்டே என் ஷூ சாக்ஸ் எல்லாத்தையும் அவிழ்த்துவிட்டுட்டு வீட்டுக்குள்ள தூக்கிட்டு போய் நல்லா ஆத்துன பாலை டம்ளரில் ஊத்தி கொடுப்பாங்க.


அப்ப வாயில வச்ச டம்ளரை எடுத்திட்டு எடுத்திட்டு இன்னைக்கு ஸ்கூல்ல அது நடந்துச்சு, இது நடந்துச்சுனு சொல்ல சொல்ல அம்மா ஒவ்வொன்னுக்கும் நான் எப்படியெல்லாம் முக பாவனை காட்டுறேனோ அதோட டபுள் மடங்கு காட்டி சிரிப்பாங்க. சிரிப்பே வராத விடயங்களுக்கு கூட விழுந்து விழுந்து சிரிச்ச அம்மா அப்பவே தேசிய விருது வாங்கின நடிகை தான்.


வீட்டுக்குள்ள அப்பா வரும் போதே ''அப்பா............'' அப்படி கத்திகிட்டே ஓடி போய் புடிச்சா அப்பா கையில இருந்து நமக்கு கிஃப்ட் கிடைக்கும். அதுதான் நமக்கு அன்னைக்கு சாயங்காலத்துக்கான தீணி..! படு ஜோரா இருக்கும். அம்மா சமைச்சுட்டு இருக்கும் போது நான் மட்டும் எடுத்து எல்லாத்தையும் திண்ணுட்டேனா நான் காலி..? அம்மா அப்போ வந்து குழந்தை போல என்கிட்ட சண்டை பிடிப்பாங்க.


எல்லாமே நினச்சு பாத்தா ஒரு ஸ்வீட் நினைவுகள் தான். இந்த காலத்துல அம்மாக்கள் எல்லாம் என்னமோ என்னோட அம்மாவின் சொர்க்கமான நாட்களை மிஸ் பண்ணிட்டு இருக்காங்கனு தான் தோணுது. எது எப்படியோ இந்த விசயத்துல சுயநலமா இருக்கதான் பிடிச்சிருக்கு.


இந்த காலத்து குழந்தைகள பாத்து கேலி பண்ணி வாய் விட்டு சிரிக்கணும் போல இருக்கு.............


'' என் அருமை குழந்தை பருவத்தை நினைக்கையில்....''


(புழுதி இன்னும் எழும்பும்)


அன்புடன்,
தம்பி கூர்மதியன்.


புழுதி காலங்கள் 1

Comments

  1. நான் தான் முதல்.நீங்கள் சொன்ன மாதிரி இளமை பருவம் படு ஜோரா இருக்கும்

    நேரடி ரிப்போர்ட்

    இடிந்தகரை உண்ணாவிரத போராட்டம் நாள் 6

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!