அம்மா


எண்ணம் எழுத்து எமதாயின்
அதன் உரு உனதானதென சொல்வாய்..!

குரலும் கருத்தும் எமதாயின்
அதன் உணர்வு உனதானதாக சொல்வாய்..!

சீற்றமும் சிறகும் எமதாயின்
அதன் செவிகள் என்றும் உனதென்றே சொல்வாய்..!

எல்லாம் உனதென்றாய்...!
இங்கு யாமே உன்னால் தான் என்றாய்...
கவிகள் எனதென்றேன்
அதன் கருப்பொருள் நீயென்றாய்..!
எல்லாம் எனதாக நான்சொல்ல
அவையனைத்தும் உனதானது என்கிறாய்..!

ஒப்புக்கொள்ளாத உண்மையாக
என்றும் உன்னோடு கேலிகளும் சிரிப்புகளும்..!

உள்ளுக்குள் தோன்றும்...!
எனதானதெல்லாம் எனதுதானென்றும்
உனதாக நீ சொல்வதும் எனதுதானென்றும்...
ஆனால்,
யாமே உன்னதாக இருக்கையில்
எம் கருத்தும் உன்னது தானம்மா..!

செல்லதொரு சண்டைகள்
அறியாமை விழிகள்
சின்னதாய் கோபங்கள்
எதிரெதிர் கற்பிப்பு
சில நேரத்து குழந்தை பேச்சு
தினம் தினம் நிகழ்வின் விமர்சனங்கள்
அனைத்தும் பிடித்தமை உன்னது குழந்தையாய்
உனை முழுதும் பிடிக்குமென சொல்கிறேன்...!

அம்மா,
மாறிவரும் காலங்களில்
உன் மாற்றங்களை விரும்பாமல்
ஒரு விலகல் உருவானதோ...!
விலகலற்ற என் பழைய அம்மாவை
விரும்பியவனாக சொல்லி மகிழ்கிறேன்...

என் அன்பு அம்மாவிற்கு-பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. super machi அம்மா கிட்ட என் விஷ் கண்டிப்பா சொல்லிடு...

  ReplyDelete
 2. உங்களோடு சேர்ந்து முதல் வாழ்த்துக்கள் அம்மாவுக்கு.

  ReplyDelete
 3. கவிதைக்கு ஏற்ற படம்.

  ReplyDelete
 4. அருமையான வாழ்த்து கவிதை
  உங்கள் அம்மாவிற்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

  ReplyDelete
 5. அம்மாவை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்....
  கூர் கவிதை வழக்கம் போல சூப்பர்...
  எனக்கு பிடிச்ச இடங்கள்

  உள்ளுக்குள் தோன்றும்...!
  எனதானதெல்லாம் எனதுதானென்றும்
  உனதாக நீ சொல்வதும் எனதுதானென்றும்...
  ஆனால்,
  யாமே உன்னதாக இருக்கையில்
  எம் கருத்தும் உன்னது தானம்மா..! வாழ்த்துக்கள் தம்பி

  ReplyDelete
 6. வணக்கம் சகோ,
  உங்கள் அன்னையை இந் நன் நாளில் மேலும் மேலும் சிறப்பாக வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 7. வாழ்த்துக் கவிதை அன்னையின் பெருமைகளை அழகு தமிழில் சொல்லி நிற்கிறது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!