குழப்பம்
பட்டச்சுவரெங்கும் பூத்துக்குலுங்க
ஒற்றைமரமாக நானோ இங்கு
கண்ணில் துணையற்று
தேடி முற்பட்டு
இன்றும் களைகிறேன்,
அன்று சிரித்து பேசிய ஒற்றை கருப்பாட்டை.!!
  
புதுசொந்தம் கொண்டதுவோ.!?
என் சொந்தம் மறந்திடுமோ.!?
கூட்டுக்குருவி, ஏட்டுமாணவன் என்றிடமாட்டேன்
சிக்குண்ட சிறுபாசம் தான்..!!
  
என்னை சொந்தம் ஏற்றிட மறுத்தாடு
புதுசொந்தம் பல கொண்டுள்ளது.!!
ஏற்றிட மறுத்த மனம் ஏற்புடையானதோ.!?
அந்த ஏற்புமைக்கு தகுதியற்றேனோ.!?

அடுத்த ஆட்டுக்கூட்டம்,
அந்த அலங்கார கூடத்திலே
புன்னகைக்கும் விநாடிகளின் இடையே
புதுசொந்தம் கூட அவதரிக்குமாம்.!!!
என் உள்ளுக்குள் தேயும் கனலறியா
பிதற்றும் என் இனிய கருப்பாடு.!!
  
என் சொந்தம் ஏற்கா ஆட்டை
ஒதுக்கிட துணிந்தேன்..
ஆனால்,
இன்று என் ஆற்றாமையை வெறுக்கிறேன்.!!

என்ன செய்ய.!?
ஒருவழி பாசத்தால் மட்டுறுத்தப்பட்ட
மதிக்கெட்ட மடையன் தானோ.!!

 புரியவில்லை.!!!!!!! குழம்பியிருக்கிறேன்.!!

[தன்னை ஒதுக்கி வைத்து வேறு உறவை தேடி சென்ற அம்மாவை நினைத்து பிள்ளை எழுதுவதாக படிக்கவும்]

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

  1. உணர்வுகளைச் சொல்லி நிற்கும் கவிதை, நீ இறுதியில் விளக்கம் கொடுத்தாலும்
    புரிந்தும் புரியாததுவாய் இருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!