முடிவுஉணர்வுகள் சிரிக்குதே
ஏளனம் உணருதே
வாழ்க்கை-தேட தோணுதே!!

பாசம் தேடி சென்றிடும்
நானோ கானல் பறவையோ.!?
நெஞ்சம் அகண்டு சுருள்வதேனோ!!?

கண் இமையில் நானும் வைக்கிறேன்
கடல் நடுவே என்னை கொள்கிறாய்
வேற்று பாசமை புரிவதில்லையா.!!?

புரியாத பாசமொன்று
எனக்குள்ளே கொண்டுவிட்டேன்
பிரித்தெடுக்க முடிவதில்லையே!!!
காரணம்-காந்த உணர்வு தானோ.!!!?

என் சொல்லி நானும் அழுகிறேன்
ஏன் இந்த துயரை நானும் கொள்கிறேன்
புரியாமல் இன்றும் பிதற்றினேனே!!!

உள்நெஞ்சம் தேடும் சுகத்தினை
உணர்வோடு பகிர நினைக்கிறேன்
கோப கனலாய் நினைப்பது ஏனடா!?

எங்கோ ஒரு மூலையில் 
ஒடுங்கி நிற்க தோன்றவில்லை
கண்ணிலே வைத்து இருக்கிறேனே!

காற்றிலே கலந்து நிற்கிறாய்
உரிமை ஏற்று துடிக்கிறேன்
உணர்வின் உரிமை புரிவதில்லையா.!?

இனி,
கேள்விகள் அற்று நிற்பேன்
உள் கேள்விகள் கொண்டு நிற்பேன்
உனக்காக என்றும் தாங்கி கொள்வேன்.!!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்

Comments

 1. என்னாச்சு தங்கத்துக்கு...:-)) ஒரே சோகம் :-(((

  ReplyDelete
 2. இனிய மதிய நேர வணக்கம் நண்பா,

  //
  ஏலனம் உணருதே//

  இங்கே ஏளனம் என்று வந்தால் சிறப்பாக இருக்குமே.

  ReplyDelete
 3. கடல் நடுவே என்னை கொள்கிறாய//

  என்னய்யா...தூக்கத்திலயா எழுதியிருக்காய்..
  அவ்....
  கொல்கிறாய்...

  ReplyDelete
 4. எதிர்பார்ப்போடு ஏங்கி நிற்கும் மனதின் உணர்வுகளை இந்தக் கவிதை தாங்கி வந்திருக்கிறது.

  பாடல் வடிவில் இக் கவிதை எழுதப்பட்டிருப்பது மேலும் இக் கவிக்குச் சிறப்பினைத் தருகின்றது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி