என்ன வேண்டும் இந்த மனித மனதிற்கு.?


புரியாமல் நீங்கள் எங்கேனும் முட்டிக்கொண்டு நிற்கிறீரா.? நினைத்த காரியத்தை உங்களால் தெளிவுபட முடிக்க முடியவில்லையா.? தெருவில் பார்ப்பவர் எல்லாம் உங்களை ஏதோ வேற்று கிரகத்து வாசி போல பார்த்துக்கொண்டு இருக்கிறானா.? சரியான பாதை என்று தவறான பாதையை தெரிந்தே பயணித்துக்கொண்டிருக்கிறீரா..? இதை வர்ணிக்க மற்றவர் பயன்படுத்துவது உங்கள் 'செய்கைகளை' தான்.

அப்படி ஒரு சூழல் உங்களுக்கு உருவாகும் போது அவனிடம் சென்று அவனை உங்கள் கை வலிக்கும் வரை பொளீர் என்று ஓங்கி அறைந்து கொண்டே இருங்கள். காரணம் என்னவென்று கேட்டால் தைரியமாக சொல்லுங்கள். 

''ஏன்டா.. 'மனம்' பண்ணுறதுக்கெல்லாம் என் 'செய்கை'யை குறை சொல்லுறீங்க..?''

செய்யுறதெல்லாம் செஞ்சுட்டு பழைய தமிழ் பட வில்லன் மாதிரி மறைஞ்சு இருந்துட்டு பெக்க பெக்கனு சிரிக்கிறதுக்கு இன்னொரு பெயர் என்னனு கேட்டா தைரியமா சொல்லாம் அதுக்கு பெயர் 'மனம்' என்று.

இது தான் சரி என்று 'மூளை' எடுத்து சொல்லும். அப்போது வரை நம் 'செய்கை'யும் அதன் சொல்படியே கேட்டு வரும். ஆனால், அப்போது முண்டி மோதிக்கொண்டு 'மனம்' என்று ஒன்று முன்னால் வரும் பாரு..! அப்படியே அல்லாக்கா கட்சி மாறிடும் இந்த 'செய்கை'. பல சமயங்கள்ல 'மூளை'யின் விசுவாசமான வேலைகாரனாய் இருக்குற 'செய்கை'கள் 'மனம்' என்னும் மாயக்காரி வந்ததும் விசுவாசம் மறந்து போய்விடுகின்றன என்று தான் சொல்ல வேண்டும்.

மனதை இறுக பிடித்து கட்டி வந்து மரத்தில் வைத்து அடித்தாலும் அது நம் பிரியமானவராக இருந்தால் மீண்டும் சீண்டாதே என்று தான் செய்கைக்கு கற்பிக்கும். ஆனால் எவ்வளவு நாள் தான் அடிவாங்குவது போட்டு தாக்குடா என்று சொல்லும் மூளை.

இதை எப்படி பார்க்கலாம்.? இந்திய சுதந்திர போராட்டத்தோடு கூட இதை முட்டி முனகி பேசலாம். உண்மைதான்...! காந்தியை மனம் என்றும் சுபாஷ் சந்திர போஸை மூளை என்றும் சொல்லலாம். மூளை எவ்வளவு முட்டி மோதி செயல்பட்டாலும் போன இடம் தெரியாமல் தான் போகும். ஆனால், மனம்...? உலகில் மனம் கொண்டு செயல்படுபவர் சிலர்.. ஆனால் மூளை கொண்டு செயல்படுபவர் பலர்..! மூளை கொண்ட அனைவரையும் அறிந்திருக்க முடியாது ஆனால் மனம் கொண்டு செயல்பட்ட அனைவரையும் அறிந்திருக்க முடியும்.

அந்த காலத்தில் இருந்தே இந்த மனம் ஒரு ஜகஜால வேலையை காட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்..! சரி மனதின் இந்த முகம் ஓகே.. இப்படி இருந்தாலும் நலம் தான் என்று பயிற்றுவிக்கிறது..!

ஆனால், மனதிற்கு இன்னொரு முகமும் இருக்கிறது. யாருப்பா அங்க சத்தம் போடுறது..!? அத பத்தியும் சொல்லி தான் தீருவேன். மூளைக்கு பச்சோந்தி வேடம் தெரியாது. ஆனால் மனதிற்கு இன்னொரு வேடம் இருக்கு. 

அதாங்க பிரியமானவங்க கிட்ட இந்த மனம் பச்சோந்தி வேடம் மட்டும் தாங்க போடும். என்ன தான் கோபம் வந்தாலும் வராத போலவே காட்டிக்கும். அதே சமயம் எதையும் தைரியமா அணுகுற மனதால பிடிச்சவங்களால ஏதோ ஒரு சின்ன சங்கடம் வந்திட்டா.. போச்சு..! சுக்கு நூறா உடைஞ்சிடும்.

சின்ன சின்ன விடயங்களுக்கெல்லாம் எதிர்பார்க்கும். என்ன தான் எதிர்பார்க்குற நீ என்று எட்டி எட்டி உதைக்கணும் இந்த மனதை. அவுங்களுக்கு புடிச்சத அவுங்க பண்ணுறாங்க உனக்கு எங்க நோவுதுனு எட்டிகிட்டு மிதிக்கணும். 

மனதை எதாலங்க சமாதான படுத்த முடியும்..? அது இன்னொரு மூளையால முடியாது. மனது ஒரு மனிதனின் உடம்பில் சர்வாதிகார ஆட்சி நடத்தும். அதை அடக்க இன்னொரு மனது தான் வரவேண்டும். மனதோடு மனம் மனதுக்கு பிடித்ததுபோல மனமுவந்து இருந்தால் மனதை மண்ணாக்கிவிட்டு மூளை செழிக்க தொடங்கிடும். ஆனால், இந்த மனதை அம்புட்டு சீக்கிரம் அடக்கிட முடியாது. அதே சமயம் அதுக்கு என்ன வேணும்னும் தெரிஞ்சுக்கே முடியாது..!

இந்த போல சமயங்கல்ல தான் அந்த மனதை நிக்க வச்சு உதை உதைன்னு உதைச்சு கேக்கணும்..

''என்ன தான்டா வேணும் உனக்கு..?''

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

  1. என்ன வேண்டும் இந்த மனதிற்கு, அனுபவ பார்வையோடு அழகான பதிவு..ஆரம்பத்தில் அதிகம் சுவாரசியம் இருந்தது பதிவில், போக போக பேச்சு வழக்கில் பதிவு இருந்ததால், கட்டுரையின் வீரியம் குறைந்ததாய் ஒரு உணர்வு தம்பி..ஆனாலும் வார்த்தை பிரயோகம் அருமை சகோ... வாழ்த்துக்கள்.... :-)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

GST – நான் அறிந்தவை!