ஒற்றை போராளி
தேங்கிய குட்டை ஒன்றிணைந்து
ஓங்கிய ஓடையானதோ..!?
காற்றிலயர்ந்த இறகிணைந்து
விசிறியாக காற்றை அவதரித்ததோ..!?


தேடிய கணமெதுவோ?
அங்கு தேயாத விடை கண்டேன்..!
சாடியது பாதைதானோ?
அதை ஓயாமல் கடந்துவிட்டேன்..!

நஞ்சிக்கும் கரையானை
நசுக்கிடவே துணிந்துவிட்டேன்..!

உச்சிப்பொட்டில் அடித்ததாரோ..!?
உயிரென்று சுதந்திரத்தை
தேடியதோர் பயணம் கொண்டேன்..!

மாயை மாயை சுற்றிய உலகு
அங்கு மாண்டுவிட்ட உணர்ச்சி கண்டேன்..!
தேயுதோர் தேயுதோர் மனமங்கே
அது நோவுதே நோவுதே என கதறிட்டேன்..!

சீரென சிந்தை சீரழிந்ததோ..!?
என் படை வீரனனைத்தும்
சமூக சிந்தையற்று வீங்கினரோ..!!?

சே! சே! சே!
அற்ப பிறவியே..!
அவதரித்ததேனோ அகலிடம் புகலதானோ.!?

து! து! து!
உனை உமிழ்கிறேன்..!
உணர்வுக்குள் எந்த மாயையை ருசிக்கிறாயோ.!?

சீ! சீ! சீ!
சீண்டிட துணியானே..!
கொள்ளும் சிந்தை மறந்த சீழ்நாயே.!?

அண்டத்தில் அவதரித்ததேனோ..!?
சுகம் கொரித்து சினம் மறந்தாயோ..!?
கொடை கொண்ட நேரத்திலே
படையழித்து நின்றாயே!
சுக்குநூறாய் எதிராளி சீரழிக்கும்
சினங்கொண்ட சூறாவளி என்றிருந்தேன்
ஒற்றை சுவரில் முட்டிய
முட்டாள் வீரன் நீ என்பதை உணர்ந்துகொண்டேன்..!

வேகம் எங்கேடா இழிந்தோனே..!
வீரம் எங்கேடா சிம்மம் மறந்தோனே..!
செயல் மறந்து சீரழிந்து சுகம் காண துடிப்பதேனோ..!?
அவதரித்த காரணம் மறந்தாயோ!?

செல்லரிக்கும் சமூகத்தை
சிந்தையற்று அணைத்துகொண்டாயோ..!?
எங்கே உனது கோபம்..?
ஒன்றிணைவோம் ஒன்றிவாழ்வோமென
உனது ஓங்கிய சினத்தை திண்றுவிட்டாயோ..!?

தனித்து இரு..!
உன்னில் நீயே தனித்து இரு..!
நாம்,
அவதரித்த நோக்கத்தை அகமறந்து
சுகம் சுமந்து
சிந்தை செயலற்று
காட்டாறாய் திரிவதேனோ..!?

உனை தேடி நானில்லை...!
வேட்கை மறந்தோன்
வீரம் மறந்தோன்
சினம் மறந்தோன்
பாரதத்தின் ஆண்மகனென சொல்லிவிடாதே.!!

உச்சிமுதல் பாதம் வரை
உமிழ்தல் தருகிறேன் பூசிக்கொள்ளடா
எச்சை பிறவியே..!

என் வேட்கை பாதை தேடி
மங்கிய பாதையற்று
மாற்றான் பாதை கொள்கின்றேன்..!

உணர்ச்சி உச்சரிப்பில்
அந்த சீரழிக்கும் கரையானை
வஞ்சித்து திரும்புகிறேன்..
ஒற்றை போராளியாக...!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. //செல்லரிக்கும் சமூகத்தை
  சிந்தையற்று அணைத்துகொண்டாயோ..!?
  எங்கே உனது கோபம்..?
  ஒன்றிணைவோம் ஒன்றிவாழ்வோமென
  உனது ஓங்கிய சினத்தை திண்றுவிட்டாயோ..!?//

  வரிகளில் உள்ள ஒவ்வொரு சொல்லிலும்
  தென்படும் காத்திரம் சிலிர்க்க வைக்கிறது...
  கவிதை நல்லா இருக்கு தோழரே....

  ReplyDelete
 2. சமூகத்தின் சீரழிவினைக் கண்டு கொதித்த கவிஞனின் உணர்வலைகள் இங்கே ஒற்றைப் போராளியெனும் கவிதைக்கு ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..