உண்ணாவிரதம்-வலுவான ஆயுதமடா..!

அங்கே வஞ்சிக்கப்பட்டு துடி துடித்துக்கொண்டிருந்த என் வீர இந்திய மகனை துடி துடிக்க தெருக்களில் எச்சம் திண்ணும் நாயைவிட இழிவாக நடத்திய ஆங்கிலேய அடக்குமுறையை எதிர்த்து சினம் கொண்டு நின்றான் என் வீரு கொண்ட இந்திய படை. ' நீ அடித்தால் நானும் அடிப்பேன்.. நீ மிதித்தால் நானும் மிதிப்பேன்.. பூட்ஸ் கால்களுக்கு என் உழைத்து முரடான உள்ளங்கால் சலித்து போகாது' என்று வீரவசனம் பேசி எதிர்த்த ஒவ்வொரு வெள்ளை கைகளையும் வெட்டி அடக்குமுறையை வேறோடு அழிக்கவே துணிந்தான்.

உன்னுடைய எந்த ஒரு அடக்குமுறைக்கும் அடங்கி போக வேண்டியவன் நான் இல்லை. என் கால்களில் நீ பதிக்கும் ஒவ்வொரு அடிக்கும் உன் கன்னங்கள் பழுத்து கொண்டு தான் இருக்கும் என்று ஒவ்வொரு வார்த்தையிலும் அந்த வெள்ளையனை வஞ்சிக்க நினைத்து கொண்டிருந்தான் எம் இந்திய மகன்.

அது வரை அது ஒரு சாதாரண எதிர்ப்பாக தான் தெரிந்தது. அதன் பின் காற்றடித்தால் பறந்திடும் அளவிற்கு ஒரு ஆண்மகனை பார்த்தேன். அவன் செய்த செய்கை எல்லாம் ஒரு வித்யாசமான போராட்டமாக என் கண்ணில் பட்டது. என்ன தான் செய்கிறான் என்று நான் அவனை உற்று நோக்கும் முன்னே அவன் பின்னால் மக்கள் திரளாக திரண்டுவிட்டனர். அவனை புரிந்துகொள்ளும் முன்னே அவனே முதற்கண் தலைவன் என்னும் பெயரை பெற்றுவிட்டான். நாளடைவில் அவனை அனைவரும் மகாத்மா என்றும் தேச தந்தை என்றும் கூப்பிட தொடங்கிவிட்டனர். சுதந்திரத்துக்கு யார் காரணம் குழந்தைகள் வாயில் வரும் முதல் பெயர் இவனுடையதாக தான் இருக்கும்.


இவனிடம் இருந்து நான் என்ன கற்று கொண்டேன்? ஒரு தண்டனைக்கான சக்தியை உணர்ந்துகொண்டேன். 'உண்ணாவிரதம்' என்பதை ஒரு தண்டனையாகவோ அல்லது பக்தி மெச்சில் தனது இஷ்ட தெய்வத்துக்காக ஒரு ஆன்மீக வாதி கொள்ளும் பக்தியாக தான் என் கண்ணில் அதுவரை பட்டது. ஒருவன் இவ்வகையில் தம்மை தானே வருத்திக்கொண்டால் அது எழுச்சி மிகு கூட்டத்தை உருவாக்கிவிடும் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது.

அன்று அந்த உண்ணாவிரதத்தின் மகிமையை உணர்ந்தேன். கடவுள் என்ற பெயரிலோ அற்று வேறு எந்த விடயத்திற்காகவும் இனி அந்த அறியதொரு கருவியை பயன்படுத்த கூடாது என்பதை முடிவெடுத்து அதில் விழிப்போடு இருந்தேன்.

அதன் பின்னர் ஒரு நாள் கட்சி தலைவர்களாக கூடி அங்கே பந்தல் போட்டு உண்ணாவிரத கூட்டம் என்று கூறினர். அடடா..! மீண்டுமொரு புரட்சி வெடிக்க தயாராகிவிட்டதென மகிழ்ந்தேன். ஆனால் அப்படியென்ன கொடுமை நடந்துவிட்டது பாரத மக்களுக்கென ஒரு ஐயம் என்னுள் எழுந்தது. அங்கே கூடியிருந்த மக்களிடம் சென்று எதற்காக உண்ணாவிரதம் என்று வினவினேன்.

'' அதெல்லாம் எனக்கு தெரியாது. என் தலைவன் இருகரம் கூப்பி அழைத்தாரு.. அதான் வந்துட்டோம்.. என் தலைவனுக்காக உயிரையே கொடுப்போம்..'' என்றான்.

அடப்பாவி குடிமகனே.! நம் நாட்டின் சுதந்திரத்தின் ருசியை புரியவைத்து அதற்கான சரியான பாதை இது தான் என்று அனைவரையும் இழுத்து வர அந்த சட்டை போடாத கிழவன் பயன்படுத்திய வலுவான ஆயுதத்தை கையில் வைத்துகொண்டு ' ஏன்.? எதற்கு?' என்று தெரியாமல் முழிக்கிறாயே..! சரி என்ன தான் சங்கதி என்று தலைவனிடமே கேட்டால் அது கூட்டணி தகராறோ அல்லது இடஒதுக்கீடு பிரச்சனையாக இருக்கும். ஏனயா..? உங்களுக்குள் முடிக்க வேண்டிய விடயத்திற்கு ஏனயா உண்ணாவிரதம் என்று கேட்கும் கேட்கமுடியா பிரஜையாய் வாயை மூடிக்கொண்டு பந்தல் பின்னால் போனால் ஒவ்வொரு தலைவனாய் உணவை கட்டு கட்டு என கட்டிக்கொண்டிருந்தனர். வலுவான ஆயுதமாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த உண்ணாவிரதம் சினிமாவில் கேலிக்கு பயன்படுத்துவதாய் அமைந்தது.

இது போன்ற செய்கை எங்கே கொண்டு விடும்.? எங்கோ ஒரு மூலையில் ஒரு நல்லதொரு முன்னெடுப்புக்காய் போராடிக்கொண்டிருக்கும் உண்மையான உண்ணாவிரத போராட்டங்களும் கேலி கூத்தாய் சித்தரிக்க படுகின்றன. ஒரு ஆயுதம் பெரும்பாலும் உபயோகிக்கபடாமல் இருந்தால் தானே அதற்குறிய பயம் அவர்களுக்கு தெரியும். அதை அடிக்கடி உபயோகித்து 'புஸ்'ஸென ஆக்கிவிட்டால் அது என்ன ஆயுதம்.? அதை எடுக்கும் நீ தான் என்ன போராளி டா.?

வீட்டுல காப்பி கொடுக்கல, எதிர் வீட்டு பொண்ணு பாக்கல இதற்கெல்லாம் போராட்டம் பண்ணிவிட்டால் எமது இந்திய குடிமகன் மேற்கொள்ளும் உண்மையான போராட்டம் உப்புசப்பில்லாமல் போய் விடாதா?


ஒண்ணுமே புரியலப்பா.. பிதற்றி கொண்டே காலங்கள் எனக்குள் கடந்தது..! லோக்பால் என்று ஒன்றை எனக்கு கற்பித்து அதன் சிறப்புகளை எடுத்துரைத்து அடடா ஊழலுக்கு எதிராய் உண்ணாவிரதத்தை சிறப்பான ஆயுதமாக பயன்படுத்த இன்னொரு காந்தியவாதி வந்துவிட்டாரென சுருங்கி ஓய்ந்து போயிருந்த என் கண்கள் மெல்ல திறந்திட்டது. அவனது விடாத உண்மையான போராட்டம் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மைதான்..! ஊழல் ஒழிக்கபட வேண்டிய ஒன்று தான் அதற்காக போராட்டம் செய்வது எல்லோரும் ஒன்று கூட வேண்டியவை தான். மிக சிறப்பு..! மெச்சுகிறேன்.

ஆனால் இடதுசாரிகள் 80களில் இருந்து இதையே தானே வலியுறுத்தி வந்தனர் என்று எனக்குள்ளே ஒரு கேள்வி எழுந்தது. ஆனால், அதுவும் அரசியல் இதனுள் புகுத்திட வேண்டாம். இப்போதாவது ஒரு விடிவு பிறந்தால் சரி தான் என்று அந்த போராட்ட கூட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பின்னர் என்னை நானே ஈடுபடுத்திக்கொண்டேன்..! அதற்கு வெற்றி கண்ட போது எனக்கே எனக்கான வெற்றியாய் உணர்ந்தேன்.

ஆனால் அதையும் அங்கே சிலர் எதிர்ப்பதை கண்டேன். அரசியல் சார்புடையவராய் இருந்தால் சரி.. ஆனால் பொதுமக்களே எதிர்ப்பது ஏன்.? இந்த கேள்வியை கொண்டு அலசி ஆராய தொடங்கினேன். லோக்பாலை எதிர்த்து அவர்கள் சொல்லும் கருத்தும் எனக்கு சரி என்றே தோன்றியது. ஆனால் என் மனதை போட்டு நான் குழப்பி கொள்ளவில்லை. அன்னா ஹசாரேவுக்கு பொறுப்பு வாங்கி கொடுத்துவிட்டோம். இனி நம் நாட்டின் கரையானாகிய ஊழல் மெல்ல சாகும் என விட்டம் பார்த்து கனவு கண்டு கொண்டிருந்தேன்.

அப்போது மீண்டும் ஒரு அறிக்கை என் கண்ணில் பட்டது. ஆம்..! நான் கேட்டதை அரசாங்கம் செய்யவில்லை மீண்டும் போராட்டம் என்று உட்கார்ந்தார். அட இது என்ன? மீண்டும் மீண்டும் உண்ணாவிரதம் என்றால் அது ஒருவித மிரட்டுதல் போல இல்லை. அங்கீகாரம் பெற்று தந்தால் போராடி வெற்றி காண வேண்டுவது உன் திறமை தானே..!? அதை விட்டுவிட்டு பள்ளிகூடத்தில் விட்டுவந்த குழந்தைபோல ஒவ்வொன்றுக்கும் உண்ணாவிரதம் ஏந்தி என்னை தேடி வருவதில் என்ன லாபம்..?

இதனால் எனக்குள்ளே பெரிய வருத்தங்கள் எழுந்தது. அதன் பின்னரும் பல உண்ணாவிரதங்கள்..! இப்போது சமீபத்தில் மோடி வரை சில காமெடிகள் சில தேவையானவை..! நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள ஒரு வருகைபதிவேடு போல ஆகிவிட்டதா உண்ணாவிரதம்.? இப்போது மோடி அடுத்து யார்.? வாருங்கள் பார்த்திடுவோம்.

ஆனால், என் பாரதத்தின் வால் பிடியில் ஒரு போராட்டம் நடக்கிறது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அணு உலைகளை எதிர்ப்பது பற்றி தான் சொல்கிறேன். 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் என்று 10வது நாளாக உட்கார்ந்து இருக்கின்றனர். எல்லாவற்றிர்க்கும் மாற்று கருத்து இருக்கும் தானே..!? அதுபோல இங்கும் எழும்புகிறது. 20 ஆண்டுகளுக்கு மேலாக வாயை பொத்திக்கொண்டு இப்போது ஏன் குதிக்கிறீர்கள், இது ஒரு அரசியல் தூண்டுதல் நாடகம் என்றும்...!

இவ்வாறு பேசுபவர் அனைவருக்கும் என்னிடமிருந்து ஒரு கேள்விகள். மூடிய கண்கள் என்றுமே திறக்க கூடாது என்கிறீர்களா.? அல்லது எம் மக்கள் விழிப்புற்று எழவே கூடாது என்கிறீர்களா.? இத்தனை நாள் ஏன் செய்யவில்லை என்று கேட்கும் முன்பு இப்போதாவது செய்கிறார்களே என்று மகிழ்ந்திருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

இதை எதிர்க்கும் எந்த ஒரு மனிதனாலும் அணு உலை என்றுமே மனிதனுக்கு ஆபத்தை ஒரு சிறிய பங்கு கூட விலைவிக்காது என்று மனதை தொட்டு உறுதி கூற முடியுமா? வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கையில் இதுபோன உண்மையான போராட்டத்தை நான் கண்ட வலுவான ஆயுதத்தை கொண்டு போராடிகொண்டிருக்கும் மக்களை எச்சிக்காமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள்.

தெளிவும் பாதையும் நாம் வழிவகுப்பவையே..! அதை எட்டி மிதித்து விளையாடிக்கொண்டிருந்தால் அவை நம்மை ஏளனித்து சிரித்துவிடும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். உண்மை ஆயுதத்தை அதன் வீரியம் குறையாமல் அதன் சிறப்பு குளையாமல் உபயோகபடுத்தும் இடம் சில கண்டேன். சில பொய்மையில் அகபட்டு திரியும் இந்த ஆயுதம் வாய்மைக்காகவே என்றும் வெற்றிகனியை பறித்திடவேண்டும் என்னும் கோரிக்கையை உங்கள் முன் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறேன். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு பார்வையாளனாக..!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. இருபது ஆண்டுகளாய் வாய் மூடி இருக்கவில்லை, அவ்வப்பொழுது எழுந்து அடங்கிய கூக்குரல் தான், இப்பொழுது உரக்க ஒலிக்கிறது... மேலும் செய்திகளுக்கு பாமரனின் புத்தர் சிரிக்கிறார் என்ற புத்தகத்தை பார்க்கவும், அதை அவரது வலைபதிவில் தொடராகவும் போட ஆரம்பித்துள்ளார்...

  http://pamaran.wordpress.com/2011/09/16/

  ReplyDelete
 2. @surya: நன்கு பலர் காதுபட உரக்க சொல்லுங்கள் தோழரே...! இதில் அழசியல் சாயம் பூசி மழுங்கடிக்க நினைக்கின்றனர்.

  ReplyDelete
 3. நான் மதியம் சாப்பிடவில்லை என்றால் கூட உண்ணாவிரதம் என்று சொல்லிக் கொள்ளலாம். நானும் ஒரு கட்சிக்கு தலைவனாக இருந்தால். எம் மக்களின் உண்மைப் போராட்டம் கண்டுகொள்ளப்படவே இல்லை. மனம் வலிக்கிறது.

  ReplyDelete
 4. வலுமிக்க ஆயுதம்...
  மாற்றானை புண்படுத்தாது
  தன்னிலை வருத்தி
  தான்கொண்ட கொள்கையை
  நிலைநிறுத்தும் முயற்சி இது...
  இதை எடுத்தால்
  வெற்றி நிச்சயம்...

  ReplyDelete
 5. வணக்கம் பாஸ்
  கடந்த சில நாட்கள் கொஞ்சம் பிசியாகிட்டேன்.
  வர முடியலை...

  எல்லோர் வலையும் மீண்டும் இன்று தான் மேயத் தொடங்கினேன்.

  மன்னிக்க வேண்டும்!

  ReplyDelete
 6. உண்ணாவிரத்தினை யார்...யார் எதற்காக யூஸ் பண்ண வேண்டும் என்ற நோக்கமின்றித்
  தம் சுய லாபங்களுக்காய் கையிலெடுத்துக் குளிர்காய்வதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது உங்களின் இக் கட்டுரை.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..

பைக் ஓட்டுபவர்கள் கண்டிப்பா பாக்கவும்..!!

அதிகாரி சாமி