மனிதன்விண்ணோடு மிதந்தேன்,
காற்றோடு கலந்தேன்,
இயற்கை எனதானது
எல்லாம் எதனாலே.!?

மரத்தை காதலித்தேன்
மற்ற மனிதரை காதலித்தேன்
வறுமையை காதலித்தேன்
இகழ்ச்சி, புகழ்ச்சி, இன்பம், துன்பம்
என காணும் அனைத்தையும் காதலித்தேன்.!

காரணம் என்னவோ.?
சிந்தனையாளன் என்றனர் சிலர்,
பொதுநலவாதி என்றனர் சிலர்,
மாறுபட்ட விந்தையானவன் என்றனர்,
பித்தன் என்றும் பெயர் வந்தது..

ஆனால்,
உள்ளுக்குள்ளே ஒரு குரல்
'
மனிதனானாயடா.!!' என்று உரக்க ஒலிக்கிறது.!!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

Comments

 1. உள்ளுக்குள்ளே ஒரு குரல்
  'மனிதனானாயடா.!!' என்று உரக்க ஒலிக்கிறது.!!

  அருமையான பகிர்வு!

  ReplyDelete
 2. அது தான் மனிதன் என்ற வார்த்தைக்கு சமூகம் கொடுக்கும் அர்த்தம்...

  ReplyDelete
 3. மண்ணில் மரமதை நேசித்தால்
  மரமண்டை என்பார்கள்...
  இயற்கையதை நேசித்தால்
  கழண்டுபோச்சு என்பார்கள்.....

  கூவிச் சொல்வோம் நண்பரே...
  மாறுபட்டவன் அல்ல
  மாற்றம் செய்ய வந்தவரென்று....

  கவிதை அருமை.

  ReplyDelete
 4. கவிதை நல்லாயிருந்தது...நண்பரே...

  ReplyDelete
 5. சூப்பர்!
  புதிய வலைத்தளமா பாஸ்....!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிட்லபாக்கத்தில் தொடரும் வாழ்வியல் போராட்டம்!

ஏழு நாட்கள்...

பிஞ்சிலே பழுத்தது-2 வயதில் ஒரு நாளைக்கி 40 சிகரட்..