Posts

Showing posts from October, 2011

பக்தி

Image
செக்காய் சிவனாடி
என் சிந்தை செயலாடி
நித்தம் தினம் நித்திரையிலும்
சொக்கி நீங்காத பரம்பொருளே..!

ஜடாமுடி அந்திமுகமான்
அவனடி என் பணியான்..!
தத்தி தத்தி சிசுவாவேன்
சிவனடியாய் நானாக...!

கங்கை தலைமேலே
அவன் என்னை சுரந்திடுவான்
பிடறிட்ட முடியோடு
யான் அவனாக கசிந்திடுதால்...!

சீறும் புலியாக யான் பிறப்பின்..
அவன் மேனி பற்றிடுவேன்
அற்ப மனிதனாய் யாம் ஜனித்தோம்
இங்கு அவனதாய் அடிபணிந்தேன்..!

உடுக்கை ஒலி சத்தம்
அவன் வலக்கை பிடியாகும்
எந்தன் வலியாதும்-நினைப்பேன்
அவன் இடுக்கை அடியானேனென..!

ஒற்றை காற்சிலம்பு யானேவேன்
அவன் பாதம் என்றடைய
மாற்று சிந்தை கொண்டிலன்
என்றும் யான் அவனது அடியானே..!

உயிர் உயிராக உன்னத சிவனானோன்...
என் பற்று அவனடியாம்
எந்தன் உறவு என்னடியாம்..!
என் சிந்தை அவனுமதில்
என் குடும்பம் வீதி மதில்......

சித்தம் தெளிவுற்றேன்.....

எண்ணம் அவன் கொண்டு
திண்ணம் என் உழைப்பு
அவனற்று வாழ்க்கையாதல்
சிறப்பென்று உணர்கறிந்தேன்...!

செயல் பக்தியற்ற
சிந்தை பக்தியே
என் உணர் பற்றி ஊண்டுவிட்ட
உண்மை நிலையறிந்தேன்.......!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

மழை

Image
கொட்டும் தரங்களிலே
தினம், கீதச் சுரங்கண்டேன்..!
வீதி நடந்திடுவேன் அவள். என்னை தழுவிடுவாள்...
எட்டி நகர்ந்திடுவேன்
கால் தொட்டு பணிந்திடுவாள்..
கைகள் நீட்டிடுவேன்
அதை,
சுத்தி சுகம் தருவாள்...!

உச்சி கை வருடி
நெற்றிவழிப் பற்றி
கண் கருவிழியோரம்
மூக்கோரம் முகம்பொதித்து
உதட்டு முத்தமிட்டு
தொண்டை வழியூடி
உள்ளுக்குள் நித்தம்
நொடி நொடியாய் சுகம்
அவள் தழுவிய சமயமுழுதும்...!

அந்நெகிழ நொடியாவும்-இன்று
நித்தம் தினம் நித்திரையிலே..!

அவள் அன்புண்ட சுகமிழந்தேன்
என் ஆற்றாய பணிக்கிடையில்
எட்டி நகர்கின்றேன்
அவள் என்னை அடைகையிலே
சுகந்தவிக்கும் மனமிடையே
என் பணிச்சுமையின் தடை நடுவே
அவள் என்னை தழுவுமுன்னே
தழுவிக்கொள்கிறான்....
தந்தை எனக்கு அளித்த
மழைச்சட்டை வில்லனவன்..!

இழந்து தவிக்கிறேன்...
என் மழலை மழைக்காதலியை..
என் 'கார்ப்ரேட்' உத்தியோகத்தால்..!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

வெற்றுடம்பு

Image
பகைமைக்கும் சிறகக்கும்-அவை
சிற்பி,ஓவிய முகத்துக்கும்
பேதம் அற்றிக்கும்..!

அறிவொக்கும் புலனற்றிக்கும்
இன்ப மனதிற்கும் செருகுக்கும்..!

செவ்வூடே ஒலிச்செழும்பும்
நெகிழாய் அவ்வூடே மனத்ததும்பும்..!
தொட்டு தொடக்கும் சலனனைத்தும்
அங்கு ஒத்தை பாடம் அகங்கிழிக்கும்...

பார்வை கோலணையா
அங்கு,
பருவம் உயிர் செரிக்கும்........!

யுத்த களம் முளைக்கும்
திட்ட திட்ட உயிர்வலிக்கும்...
ஓங்கிய களனனைத்தும்
மாற்று சிந்தை தகர்த்தெரியும்...!

சிதறல் தரைசுடர-எங்கும்
தாகம் அடங்கொழிய...
தோன்றும் எண்ணம் பயக்கும்
வாழ்க்கை உண்மை பாடம்...!

மோகமொழிந்த வெற்றுடம்பு
வெறும் கானல் தாகமென...!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

செய்கை

Image
அனந்தவேஷங்கள்
அகம்புறம்கோணங்கள்
திரிந்ததேசங்கள்
தவதவயெனதவளைகளாம்..!

மிதியதுசிரத்தினில்
கொடியத்தைஅவிழ்த்தலும்
அலன்றேன் அகன்றேன்
அவ்வாறே சிறத்தேன்..!


இகழறியா யான்
என்றும் புகழ்சரியா
வரம் கொரிய வேண்டி
இப்பிரபஞ்சம் அடைந்தேனோ..?

என்சொல்லி பிறவிபேண.?
என்செய்து வாழ்க்கை வாழ.?
என்னை என்னவாக எண்ண..?

கேள்விகள் பலவாம்
இகழ்ச்சியாதலும் புகழ்ச்சியாதலும்
என்னை ஆள மறக்கையிலே..!
எனை சூழ துடிதுடித்து துவளுகையில்
கைஉயர்த்தி நகர்ந்திடுவேன்
யானும் என் செய்கையும் வேறென..!

ஆனால்,
என்னை அறிய நினைத்தாரோர்
அறியவேண்டி அகலுகையிலே
என் செய்கையுண்டே மதிப்பிடுவார்...!

குழம்பிவிட்டேன்...
யாதும் என்செய்கையும் ஒன்றோ என?
இதை எண்ணுவதும்
என் செய்கையின் செயலன்பேன்
பிறார் எந்தன் செயலென்பார்...!

உண்மையாதலை உணர்ந்தேன்..

இன்று,
செய்கையில் மனமிடுவதே
என் முழு செய்கையாகிவிட்டது..!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

எழுத்துப் புரட்சி

Image
ஜகட ஜகட ஜக
தித்தோம் தித்தோம்..!
உனக்குள் இருக்கும் தீ
பொசுங்கி சிரிக்குதடா..

அகிலம் அகிலமென
குதித்தோம் குதித்தோம்..!
உந்தன் எண்ணம் எனை
எட்டி நகைக்குதடா..

வெட்டி திரித்துடும்
செடிதான் நீயோ..!?
முளைக்க பிறந்த
விதையன்றோ நினைத்தேன்...!

தகட தகட தக
தத்தோம் தத்தோம்..!
உனது வீரம் வெறும்
கானல் தானோ...!?

ஓங்கி ஓங்கி எழும்
கைகள் எங்கே..?
உணர்வை சீண்டி எழ
உரைக்க மறுக்குதடா..!

தண்மை தண்மை கொண்டு
தடைகள் சுமந்தாய்
உன் கண்கள் நரம்பு
இங்கே சிவக்க மறுக்குதடா...!

துகல துகல தினம்
துதித்தோம் துதித்தோம்..!
கண்ட கனவு எல்லாம்
கரைந்து கசியுதடா..!

சுயத்தை மறந்து நீ
சுரமதை நாட
ஆணை துறந்துவிட்ட
பேடியாய் அறிவாய்..

இன்பம் என்று நீ
சொல்லும் அனைத்தும்..
உன் இருண்ட கண்களின்
பார்வை அறியடா...

கொதித்து எழுந்திட
மறந்தாய் நீயோ..!?
அழிவு நோக்கிடும்
குழந்தையிடம் கற்பாய்..

டுகுடு டுகுடு டுகு
தகுடாய் தகுடாய்...!
உந்தன் வீரமதில்
பொதிந்து அழிந்ததடா...

செத்து மடிந்திட
இதுயென்ன மரமா.!?
எந்தன் மனித கூட்டம்
அலன்று திரியுதடா..

எந்தன் ஆயுதமதை
எடுத்தே விட்டேன்..
உலக அநீதியை
எழுத்தால் வெல்வேன்...!

ஜகட ஜகட ஜக
தித்தோம் தித்தோம்..!
எந்தன…

தொண்டர்களாம்..! ரசிகர்களாம்..!

Image
உலகில்உள்ளஅனைவரும்ஏதோஒன்றின்மீதுபற்றுகொண்டுஇருப்பதுஒருசாதாரணவிடயம். பற்றுவந்தபிறகுஅதைபற்றியாரேனும்தவறாகஒருவார்த்தைபேசிவிட்டால்கூடசட்டென்னுஓங்கிவரும்கோபம்அந்தஒருநிமிடம்அவரைஎன்னசெய்கிறோம்என்பதைமறக்கசெய்துவிடும். ஒருமனிதன்தன்னிலைமறப்பதுஎன்பதுஒருமிகபெரியசெயல். அதனை பாசம் என்று சொல்வதா இல்லை அதற்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை.
நான் இங்கே பேசிக்கொண்டிருப்பது ஒரு விசித்திரமான ஆரம்பமாக இருக்கலாம். நான் கூறியனவற்றிர்க்கு பாசம் என்று பெயர் இருந்தாலோ அல்லது பக்தி என்றாலோ அல்லது இன்னும் வேறு என்ன பெயர் சூட்டினாலும் நான் இங்கே அந்த பெயர்களை வைத்து குறிப்பிடபோவது ஒவ்வொரு கட்சி பின்னாலும் ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் தொண்டனை தான். இதற்கு முட்டாள் தனம் என்று பெயரும் சூட்டி நாம் அழைக்கலாம்.

ஒருவனுக்கான வழி தெரியவில்லையா..? அவனுக்கான வழியை அவன் தலைவனிடம் கற்றுக்கொண்டு அந்த வழியில் அவனது பாணியில் நடந்து போவது ஒன்று தான் சிறந்ததாகும். அதை விடுத்து என் தலைவன் சொல்கிறான் அவன் வழியில் நடப்பேன், அவனாகவே நடப்பேன் என்று சொல்வது கொஞ்சம் கேலி கூத்து சர்கஸ் கோமாளி செயலாகவே தோன்றுகிறது.

இங்கு நாம் இப்போது ஒர…

பூரிப்பு

Image
முற்றும் வியர்த்து ஒழுக
கைகள் அதனை துடைக்க
நகங்கள் பல் இடுக்கில் மடிய
பாதங்கள் தரையை தேய்க்க
மனது வேகத்தை தாண்ட
எண்ணங்கள் அதிர்வலைகளை கிளப்ப
உணர்வுகள் தேடி கிடக்க
கண்கள் ஒற்றை திசையை நோக்க
வீல் என்ற சத்தத்துடன் ஓர் அழுகை...!!!
உச்சி இழுத்த மூச்சு
புயலாக வெளி பரவிற்று...
நொடிகள் கடக்கும் நேரத்தில்
வெள்ளை போத்திய மங்கை
கைதாங்கி வந்தாள்
அவன் இரத்தத்தால் உருவான ஓர் உயிரை..!!
அவன் கொடுக்கு மீசை
பாசமுத்தத்தால் சீண்ட
பிஞ்சு கால்கள் மார்பில் உதைத்திட்டதே.!!!
அவன் பூரிப்பை எங்ஙனம் சொல்வான்.!?
அன்புடன், தம்பி கூர்மதியன்.


சுதந்திரப் பறை

Image
விட்டில் பூச்சென்றும்
அதை தாங்கும் செருகென்றும்
கத்தும் கனலென்றும்
கொதித்திடு
ரத்தம் அது ரத்தம்
என் ரத்தம் என் ரத்தம்..!

கொட்ட துணியார்
எனை எட்ட துணியார்-என்றும்
கெட்டி மனம் கொண்டேன்
இங்கு யுத்தம் அது யுத்தம்
மண் யுத்தம் அது யுத்தம்...!

முட்டி முனகற்றேன்
எனை தட்டி சுலுக்குற்றேன்
கட்டி புரண்டிட்டேன்
எங்கும் சத்தம் அது சத்தம்
உயிர் சத்தம் உயிர் சத்தம்...!

எண்ணம் எனதாயோ-அங்கு
செயலும் எனதாயோ
கற்பேன் உனதாக
அது தத்தம் படை தத்தம்
இது தத்தம் படை தத்தம்..!

ஓங்கி விஷமானோம்
உனை எதிர்த்தார் ரணமானார்
எம்மை உரசிற்றால்
அங்கு பத்தும் தீ பத்தும்
உனை சிக்கும் தீ பத்தும்...!

விட்டு விலகற்றேன்
எந்தன் வீதி போராட்டம்
சுதந்திர கொடியேற்றும்
எட்டு திக்கும் எட்டு திக்கும்
கோட்டை கட்டும் அது கட்டும்..!

துன்பம் தலைக்கொண்டு
எனை இறப்பு மடிக்கொண்டு
தட்டி பறித்தாலும்
என்றும் கொட்டும் பறை கொட்டும்
என் சுதந்திர பறை கொட்டும்...!

அன்புடன்,
தம்பி கூர்மதியன்.

பிஞ்சு கையின் வருடல்

Image
அந்தி மறையும் நேரம் ஓய்ந்துவிட்ட சோர்வோடு வீட்டினுள் அயர நேரம் பார்த்து காத்துகிடந்தேன். அப்போது ஒரு அலறல் சப்தம்..! சட்டென பதறுகையில் அது எனது அலைப்பேசியின் அழைப்பொலியாக காதில் பாய்ந்தது. என்ன இது இந்நேரத்து எனக்கு அழைப்பென ஒரு வினாக்குறியோடு கை அந்த பச்சை பொத்தானை அழுத்தி காதுக்கு அலைப்பேசியை எடுத்து சென்றது.

எதிர்முனையில் உண்மை அலறல் சப்தம்-அழுகையோடு...!
''யப்பா தம்பி... அக்காவுக்கு உடம்பு முடியாம போச்சு.. ஆஸ்பத்திரியல சேத்திருக்கோம்... இன்னைக்கே ஆயிடும் போலிருக்கு...!'' என்று அழுதுகொண்டே சொன்ன குரலுக்கு சொந்தம் கொண்டாட தூரத்து ஊரில் என் பாட்டி இருந்தார்.
தமிழகத்தின் அதிசிறந்த தொழில்நுட்ப வசதிகள், அதிபயங்கர சாதனங்கள் என அனைத்தும் கொண்ட இடம் என்று பெருமைபட்டுக்கொள்ளும் சென்னையில் ஏனோ மருத்துவமும் மற்ற தொழில் போன்று தான் ஆக்கப்பட்டது. ஜீவிக்கும் ஒரு சிசுவின் மூலம் கூட பணம் எப்படி பறிக்கலாம் என்று பார்க்கும் கூட்டம் சென்னையில் அதிகமானது தான் இந்த அலறல் தூறத்து ஊரிலிருந்து எனக்கு அலைப்பேசி வழியாக கேட்க காரணம்..!
நாளை மறுநாள் நான் என் புது பணியில் அமர்வதற்காக பிரசவத்திற…